வெள்ளி, 14 ஜூலை, 2017

இராசராசன் பெருந்தச்சு நாட்காட்டி 360 தென்னன் மெய்ம்மன் புத்தாண்டு வானியல் இலக்கியம் பண்டிகை


கோரமுகமுடையாள் ஆண்டு - துர்முகிஆண்டு

    1 post in this topic

    இந்த சித்திரை பிறப்பை தமிழ்ப் புத்தாண்டு என்கின்றனர் சிலர்.
    இது துர்முகி ஆண்டாம். அப்படியானால் துர்முகி என்றால் கோரமுகமுடையாள் என்பது தானே பொருள்.
    தமிழர்களின் புத்தாண்டானால் அது எப்படி கோரமுகமுடையாள் ஆண்டாக இருக்க முடியும். அப்படியானால் இது தமிழர்களின் புத்தாண்டு அல்லவே. அப்படியானால் தமிழர் புத்தாண்டு எது.

    புரிதலுக்காக மீள்பதிவு செய்யப்படுகிறது.
    மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்
    12-ஆம் பதிவு
    தமிழ்ப் புத்தாண்டு புரிதல் – முன்னோட்டம்
                                               நாள்: 17.09.2015

        அழகிய இளம் பாடினி ஒருத்தியைக் களிறுகள் வழங்கும் காட்டு வழியில் இசைக் குழுவினருடனும் ஆள் உயர யாழுடனும் நடத்திச் செல்கிறான் பாணர் குழுத் தலைவன் ஒருவன். பேரூர் ஒன்றில் விழாவினை முடித்துக் கொண்டு அங்கே தங்கி ஓய்வெடுக்காமலும் விருந்துணவை ஏற்காமலும் மிகவும் பொறுப்பாக எங்கோ செல்கிறான். வழியில் இன்னொரு பாணன் எதிர்ப்படுகிறான். நல்லவேளை வழியில் என்னைச்  சந்தித்தாய். நீ வேறெங்கும் சென்று விடாதே! ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கும் கரிகாலனைச் சென்று பார்! என்று அறிவுரை கூறுகிறான்.
     பீடுகெழு திருவின் பெரும்பெயர் நோன் தான்
    முரசு முழங்கு தானை மூவரும் கூடி
    அரசவை இருந்த தோற்றம் போல
    பாடல் பற்றிய பயனுடை எழா அல்
    கோடியர் தலைவ! கொண்டது அறிந
    அறியாமையின் நெறிதிரிந்து ஒராஅது
    ஆற்றெதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே
                                          பொருநர்-(53-60)
     பத்துப்பாட்டில் ஒன்றான பொருநர் ஆற்றுப் படையில் இப்படி ஒரு காட்சி விரிகிறது.
     அறிவுத்துறை:-
              பெருந்தச்சன், பெருங்கொல்லன், பெருங்கணி, பெருந்தகை மறவன் என்ற வரிசையில் பெருந்தகு பாடினி எனப் போற்றப்படும் அந்தப் பெண்ணைப் பற்றி நன்கு அறிந்த அந்தப் பாணன், கோடியர் தலைவனே! நீ கொண்ட குறிக்கோளை மறந்து விடாதே! என்று கூறுகிறான்.
              என்ன குறிக்கோள்? அரசுருவாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளான் அந்தக் கோடியர் தலைவன். அரசுதான் இருக்கிறதே! கரிகாலனின் அரசு, பிறகு வேறெந்த அரசைக் கட்டமைக்க வேண்டும்? மூவேந்தர்களையும் ஒன்று சேர்த்தால் உண்டாகும் பெருமை பற்றிப் பாடல் மூலம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற பெருநோக்கம் இங்கே பேசப்படுகிறது.
              அந்தப் பெருந்தகு பாடினியின் கொடிவழி வந்த பாடினியர் இன்னும் தமிழ் மரபில் இருக்கலாம். அவள் பாடிய பண்ணின் கொடிவழி இன்று இருக்கிறதா என்றால் இல்லை, பறிகொடுத்து விட்டோம் என்றே கூற வேண்டும்.
              அந்த வகையைச் சேர்ந்த இன்னொரு செய்திதான் தமிழ்ப்புத்தாண்டு வரைவும் பெருந்தச்சு நிழல் நாள்காட்டியும். இன்று கரிகாலனும் இல்லை. எந்தப் பாணனும் எதிர்ப்படவும் இல்லை. காடு மட்டும் இருக்கிறது நாடு என்ற வடிவத்தில். களிறுகள் வழங்கவில்லை கயவர்கள் திரிகிறார்கள். இது இன்னொரு மரபு வழிப்பட்ட அறிவுத்துறை. யாரிடம் பகிர்ந்து கொள்வது?
    தமிழ்த் தேசிய ஆளுமைகள் ஆக இளம் தலைமுறை:-
              ஆயினும் அறிஞர்களைத் தேடியும் புரவலர்களைத் தேடியும் குறிப்பாகத் தமிழ்த் தேசிய ஆளுமைகளைத் தேடியும் ஆள் திரட்டி வருகிறது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்.
              பண் மீட்புக்கும் மண் மீட்புக்கும் உறுதுணையாய் ஊற்றமாய் நிற்கும் அறிவுத்துறை ஒன்று கனிந்து வரும் காலத்தில் இன்றையத் தமிழ்த் தலைமுறை நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதனை ஒவ்வொரு தமிழரும் நன்கு உணர வேண்டும்.
              வேந்துறு தொழிலே யாண்டினது அகமே
    (தொல்காப்பியம் – 1142)
              தொல்காப்பியத்தில் இப்படி ஒரு நூற்பா உள்ளது. வேந்தன் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்து ஆண்டு நாட்களைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும், இந்த நூற்பா ஒருவேளை அதனைக் குறிக்கலாம் என்றும் இதுவரை ஒருவரும் கருதவில்லை. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அவ்வாறு கருதுகிறது.
    திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட
    தன்னெழில் வளர் ஊழியுள் எல்லா
    யாண்டும் தொழுதக விளங்கும் யாண்டேய்’
    என்று மன்னன் இராஜராஜன் தஞ்சைக் கோயில் கல்வெட்டுகளில் தனது மெய்க் கீர்த்தியில் குறிப்பிடுகிறான்.
              தொல்காப்பியத் தொன்மை தொட்டுச் சற்றொப்ப ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு வரை – ஆண்டு நாட்களை மன்னர்கள் முயற்சி செய்து கட்டுப்படுத்தி இருக்கலாம் என்று இதுவரை ஒருவரும் கருதிப் பார்க்கவில்லை. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அவ்வாறு கருதுகிறது.
              தமிழர்களின் மரபு வழிப்பட்ட தமிழ்ப்புத்தாண்டு பற்றி அறிந்திட மேற்கொண்ட முயற்சியில், உயர் ஆய்வுக்கு உரிய தரவுகளையும் ஒரு பெருந்தச்சு நிழல் நாள்காட்டியையும் ‘மாநாகன் இனமணி 1 முதல் 120 வரை’ என்ற சிறிய கையேடாக மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன் முன்னோட்டமாகக் கடந்த 14.01.2013 முதல் 23.06.2015 வரையிலும் 890 நாட்களில் 120 தனித்தனி ஏடுகளாக மின்னஞ்சல் பகிர்வாக இணையதளக் கலந்துரையாடல்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
    நிலவைத் தொடர்தல்:-
              2015-ஆம் ஆண்டுக்கு இணையான தமிழ் ஆண்டின் தொடக்க நாளை அறிவித்து முழுநிலவுகளைத் தொடர்ந்து நாட்களை எண்ணி 06.01.2015 முதல் இதுநாள் வரையிலும் 11 செய்திப் பதிவுகளை மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் பகிர்ந்துள்ளது. இது ஒரு கூட்டு முயற்சி.
              ஆகையால் பதிவுச் செய்திகளின் தொடர்ச்சியாகவும் நெருங்கி வரும் தமிழ்ப் புத்தாண்டினை எப்படிக் கையாள்வது என்ற தேடலிலும் 12-வது பதிவாகவும் ஓய்வான மனநிலையில் அசைபோடும் செய்திகளோடும் விளையாட்டாக வெளிவருகிறது இந்தப் பதிவு.
    எஞ்சியுள்ள நிலவுகள்:-
              பெருந்தச்சு நிழல் நாள் காட்டியின் படி இன்னும் மூன்று நிலவுகள் மட்டுமே இவ்வாண்டுக்கு உரியவையாக எஞ்சி உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நாள் வரையிலும் காத்திருந்து அதன் அடுத்த நாளில் தொடங்கி 18 நாட்களைக் கூட்டி எண்ணினால் இந்த ஆண்டுக்குரிய கடைசி மறை நிலவு நாளும் மூன்று பிறைநாட்களும் அதனுள் அடங்க, இந்த ஆண்டு சரிந்து சுருண்டு விடும்.
    தடுமாறும் ஊழி:-
              அறம் தவறிய காலங்களில் ஆண்டு நாட்கள் அரசத் தகைமையில் நடப்பது இல்லை என்பதனைக் கண்கூடாகக் காணலாம். நிலவுகளின் ஆடுதலைத் தடுமாற்றத்தைக் கணக்கிட்டு அறியலாம். ஆட்டை நிமிர்வின் பிழையை, அது பற்றிய தேடலை, அறிவைப் புதுப்பிக்கும் முயற்சியே இன்று தேவைப்படுகிறது.
    கோத்தொழில் இன்று இல்லை:-
            இயற்கையின் ஒழுங்கு செம்மையாக இருந்தால் ஆண்டின் உட்கூடு 360 நாட்களில் அமைவதும், அந்த நாளில் கதிரவனின் தென்செலவு விலகல் நிறைவு பெற்று அழகாகவும் அருமையாகவும் வடக்கு நோக்கித் திரும்புவதும், மூன்றாம் பிறையானது பொருத்தமான வடிவத்தில் மேற்கு வானில் தோன்றுவதும் நிகழும் என்று பழந்தமிழ் இலக்கியச் செய்திகளில் இருந்து தெரிய வருகிறது - என்று இதுவரை ஒருவரும் கருதிப் பார்க்கவில்லை. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அவ்வாறு கருதுகிறது.
              ஆண்டு நாட்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் வல்லுநர்கள் ஆகக் கோத்தொழிலாளர் என்றொரு வகையினர் தமிழ் மரபில் இருந்தனர் என்றும், கோத்தொழில் நடத்தப்பட்டது என்றும் இன்று அது தமிழர்களால் முற்றாக மறக்கப்பட்டு விட்டது என்றும் இதுவரை ஒருவரும் கருதிப் பார்க்கவில்லை. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் கருதிப் பார்க்கிறது. அது பற்றிய புரிதலை, விழிப்புணர்வை, உயர் ஆய்வை ஊக்கப்படுத்த விழைகிறது.
    புதியவர்கள் – புதிய முயற்சி:-
            கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியில் 2015-ஆம் ஆண்டுக்கு இணையான தமிழ் ஆண்டின் நாள்முறைமை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொண்ட தமிழ் அறிஞர்கள் பலரும் தமிழ் இளைஞர்களும் முதன் முறையாக வடசெலவு தென்செலவின் விலகலையும், நிலவின் வரவு செலவையும், வானத்து மீன் கூட்ட நகர்வுகளையும் நிமிர்ந்து பார்க்கப் பழகியிருக்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியங்களின் துணையோடும், நல்ல உள்ளங்களின் புரிந்துணர்வோடும் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் சீராகக் கட்டமைவு பெற்று வருகிறது.
    ஆட்டை நிமிர்வும் அதன் துன்பமும்:-
              அண்டவெளியில் எத்தனையோ உருண்டைகள் நில்லாமல் சுழல்வதைப் போல, இந்த உலக உருண்டையும் தன் அச்சில் சுழல்வதை அறிவோம். தன் அச்சி்ல் சுழல்வதாலும் நில்லாமல் சுழல்வதாலும் அதனை உல்குதல் என்ற செயலாக வகைப்படுத்தி உலகம் என்று அழைத்தனர் போலும் பழந்தமிழர். அதில் புதுமை ஏதும் தெரியவில்லை.
              நாம் வாழும் இந்த உலகில் உயிர்கள் தொகுப்பாகவும், முற்றுமொழுப்பாகவும் வாழ்வதாலும் அவற்றுக்கு வாழ்வியல் நோக்கம் உண்டு என்பதாலும் அதனைக் கோள் என்று வகைப்படுத்தினர் போலும் பழந்தமிழர். அதிலும் புதுமை ஏதும் தெரியவில்லை.
              கதிரவனை நடுவப்படுத்திச் சுற்றிவரும் இந்தக் கோள், கிழக்கு நோக்கிக் குட்டிக் கரணம் அடித்துப் பாய்வதும் அதன் மறுதலையாகக் கதிரவன் மேற்கு நோக்கிச் செல்வதும், 6 திங்கள் வலப்புறமாகவும் 6 திங்கள் இடப்புறமாகவும் விலகி விலகித் தோன்றுவதும் நன்கு அறியப்பட்டதே. அதிலும் எந்தப் புதிய புரிதலும் இல்லை. வடசெலவும் தென்செலவும் சேர்ந்த காலத்தை ஓராண்டு என்று கருதுவதும்  மரபு வழிப்பட்டதே. அதிலும் புதுமை இல்லை.
              ஆனால் இந்த விலகல் நாட்களைக் கணக்கிட்டு உலக உருண்டையின் ஆட்டையை மாந்த முயற்சியினால் தமிழர்கள் கட்டுப்படுத்தி அதன் வழியே ஒரு நாளைச் செதுக்கி முறையாக முரசறைந்து அறிவித்தனர் என்பது மட்டுமே புதிய செய்தியாகத் தெரிகிறது. அதுவே ஆட்டை என்று அழைக்கப்படுகிறது. அந்த அறிவை ஆரோ களவாடிச் சென்று தொலைத்து விட்டனர். அன்றைய நாளில் இருந்து எல்லாக் களவுகளும் ஆட்டையைப் போடுதல் என்று அழைக்கப்பட்டு வருகின்றன போலும். உலக உருண்டையின் நிலையும் படிதமும் நன்றாகவே விளங்கிக் கொள்ளப்பட்ட தமிழர் மரபில் ஆண்டுக் கணக்கே தடுமாறிப் போனது ஒட்டு மொத்த மாந்த இனத்திற்கும் அதனைச் சார்ந்த அனைத்து உயிர்களுக்கும் பேரிழப்பு ஆகிறது. பிற உயிர்களுக்கும் பேரிழப்பு ஆகிறது. பிற உயிர்களுக்கும் புத்தாண்டு மீட்பு முயற்சியில் பங்கு இருக்கிறது என்பதனை மறுப்பதற்கில்லை.
    தெருத்தெருவாக இருக்கைகள்:-
              ஒவ்வொரு நாளும் கதிரவனின் வரவை அதன் தோன்று புள்ளியை உற்று நோக்கினால் அது விலகி விலகி ஒரு பெரும் தொலைவை வடக்கு தெற்காக அலசுகிறது என்பது கண் கொள்ளாக் காட்சியாகும். அது தலைக்கு மேல் குறுக்கு மறுக்காகச் செல்லாமல் தெருத் தெருவாக இணையாக இடைவெளிவிட்டுப் போர் யானைகள் அணிவகுத்துச் செல்வது போலச் செல்லும் என்பதும் மகிழ்ச்சியான புரிதலைத் தரும். அந்த இடைவெளிகளே இருக்கை என்றும் அவை 30 நாட்களின் விலகல் அளவு என்றும் தெரிகிறது.  6+6=12 என இரு வசமாக மடங்கி அமைவதும் அந்த இருக்கைப் பாதைகளில் தலைக்கு மேல் இரவு வானத்தில் 12 வகை மீன் கூட்டங்கள் நகர்வதும் அவற்றில் ஓர் ஒழுங்கு இருப்பதும் மிக நன்றாகத் தமிழர்களால் விளங்கிக் கொள்ளப் பட்டிருப்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் உறுதி செய்கின்றன. பெருந்தச்சு மரபு, நிழலின் அளவுகளையும் நீளக் குறுக்கம் மற்றும் விலகலையும் திரிபு இன்றியும் ஒரு புள்ளியில் இருந்து கோணம் பார்க்கும் முறையை முற்றாகத் தவிர்த்தும் தெளிவான வரையறைகளைத் தந்திருக்கிறது.
    கிரேக்க வானவியல் அறிவு:-
              ஒரு புள்ளியில் இருந்து வெவ்வேறு கோணங்களில் மீன் கூட்டங்களைக் கணக்கிடும் வழக்கம் எங்கிருந்து வந்து தமிழர்களைத் குழப்பியது என்று தெரியவில்லை. பழந்தமிழ்ப் பரப்பில் அது இல்லை என்று கூறலாம். பெருந்தச்சு மரபில் இல்லவே இல்லை. !
    அசையாத வடமீனும் நகரும் மீன் கூட்டங்களும்:-
              இரவில் வடதிசையின் தொடு வானத்தில் இருந்து ஒரு பனை உயரத்தில் மிகச் சிறியதாக ஒரு மீன் அசைவு அற்று இருப்பதும், இரவு முழுவதும் ஆண்டு முழுவதும் அது மாறாமல் இருப்பதும் பழந்தமிழர்களால் வியக்கப்பட்டுள்ளது. அதற்கு நேர் எதிர் தெற்கில் ஒரு மிகப் பெரிய வானத்து மீன் கூட்டம் நகர்வதும், அது நெருங்கியும் புறந்தள்ளியும் குனிந்தும் நிமிர்ந்தும் தென்பகுதி வானம் முழுவதையும் அலசுவதையும் நன்கு புரிந்து கொண்டு அதனை மகரம் என்று அடையாளப் படுத்தி இரவு நேர மகர இருக்கையில் பகல் நேரக் கதிரவனின் ஓடு பாதை 30 நாட்கள் பொருந்துவதை அச்சாகக் கணக்கிட்டு அருமையான ஆண்டுக் கணக்கை வடிவமைத்து இருக்கிறார்கள் பழந்தமிழர்.
              தென்செலவின் திருப்பத்தின் போது தான் மகர வெளியில் கதிரவன் நுழையும் அக்கால இடைவெளியின் முழு நிலவு மிகவும் வெளிச்சமாக இருக்கும் என்றும் நள்ளிரவில் அறுமீன் இணைந்து செல்லும், அன்று வாகை மரத்து இலைகள் கண் விழிக்கும் என்றும் வானவல்லிக் கொடி குடம் குடமமாய் நீர் சொரியும் என்றும் செய்திகள் உள்ளன.
              தமிழில் உயிரெழுத்து மெய்யெழுத்துக் கட்டமைப்பில் மகர எழுத்தின் இடமும் இதனை ஒட்டியே அமைக்கப்பட்டிருப்பது யாப்பு, செய்யுள், புலமை உடைய பிரிவினரின் இன்னொரு அறிவுத்துறையாகும். அதிலும் ஆண்டுக் கட்டுமான நுட்பம் பொதிந்துள்ளது.
    பிற இருக்கைகள்:-
              மகரத்தைப் போலவே பிற இருக்கைகளும் 30 நாள் இடைவெளியைக் கடைப் பிடிக்கின்றன. வெவ்வேறு கால இடைவெளிகளில் வெவ்வேறு வடிவில் ஆன மீன் கூட்டங்கள் வெவ்வேறு கதிகளில் செல்வதும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
              மகரம் முதலாக மிதுனம் ஈறாக ஒரு வசமாகவும் கடகம் முதலாக வில் ஈறாக மறு வசமாகவும் வகை செய்யப்பட்டுள்ளன.
              பழந்தமிழ் நூல் மரபில் இவை வேறு தூய தமிழ்ச்சொற்களால் அழைக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய பதிவுகள், தொழில் மரபு நூல்கள் தூய வடிவில் இன்று நம்மிடையே இல்லை.
    கைவளையல்கள்:
              செறிவாக அடுக்கப்பட்ட கைவளையல்கள் வரிசையாக இருந்து தனித்தனியே சுழல்வது போல இருக்கைப் பாத்திகளில் மீன் கூட்டங்கள் ஆண்டு முழுவதும் சுழல்வதையே தமிழர்கள் மிக எளிமையாகப் புரிந்து கொண்டுள்ளனர். ‘கோள் நேர் எல்வளை’ என்றும் குறிப்பிடுகின்றனர். இதனால் அறிவது வானத்து மீன் கூட்டங்கள் ஒன்றையொன்று குறுக்கிடுவதில்லை என்றும், அவை ஒழுங்காகத் தோன்றினால் உலக உருண்டையின் ஆட்டை தன்னை தகைவகை செய்து தகவமைத்து ஒழுங்கில் இயங்குகிறது என்பதும் ஆகும்.
    மானசாரம்:-
              சமற்கிருத மொழியில் திரித்து எழுதப்பட்ட மானசாரம் என்ற தமிழரின் பெருந்தச்சு நூல் பல அரிய உண்மைச் செய்திகளைத் தாங்கியுள்ளது. பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின் நிழல் வசம், விலகல் அளவுகள் ஆகியன அதிலிருந்தே பெறப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ளவாறு மகரம் முதலான பெயர்கள் ‘படிநிலை-1’ என்றவாறு ‘மாநாகன் இனமணி-10’ ஆகத் தரப்பட்டுள்ளன.
              கடந்த இரண்டு ஆண்டுகளில் அதனில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. தோன்றவும் இல்லை. எவரும் கருத்துத் தெரிவிக்கவும் இல்லை. ஊன்றிப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்கிடவும் இல்லை. தடுக்கவும் இல்லை. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அதற்குத் தக உழைக்கவும் இல்லை. ஆயினும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்ட ‘படிநிலை-2’ நாட்காட்டியை எதிர்காலத்தில் வடிவமைத்து வெளியிடலாம்.
    நாள்காட்டி அட்டை:-
              கிழக்கில் தோன்றும் கதிரவனை நாம் வெறும் கண்ணால் பார்த்துத் தலையை வலப்புறமும் இடப்புறமும் ஆக அசைத்து எப்படி அதன் தென்செலவு, வடசெலவினைக் காண்கிறோமோ அதே வசம் மாறாமல் உள்ளது உள்ள படியே நாட்காட்டி அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு நேர வானத்து மீன் கூட்டங்களையும் அவ்வாறே வகைப்படுத்திக் கால இடைவெளி பகுக்கப்பட்டுள்ளது.
    ஒரே ஒரு புதுமை:-
              விளங்கிக் கொள்வதில் ஒரு புதுமையாக விலகல் வசம் மடக்கு முறையில் இல்லாமல் ஒரே நீட்சியாகத் தரப்பட்டுள்ளது. காண்போர் மனக்கண்ணில் அவற்றை வளைத்துப் பொருத்திக் கொள்ள வேண்டும்.
              கண்ணை மூடிக் கொண்டு பார்த்தால் இந்த நாள்காட்டி வெட்ட வெளியிலும் அவரவர் மனத்திரையிலும் உள்ளது உள்ளபடி தெரியும். தனியாக நாட்காட்டி அட்டையே தேவைப்படாது.
              கிழக்கு நோக்கி நின்றுகொண்டு தலை அசையாத நிலையில் கண் பார்வையை எவ்வளவு தொலைவுக்கு விலகல் செய்து பார்க்க முடியுமோ அந்த எல்லைகளில் தான் மகரமும் மிதுனமும் எல்லை கொண்டுள்ளன என்பது புரியும்.
    கூட்டு முயற்சி:-
              ஆண்டு முழுவதும் இதனைப் பார்க்க விரும்புவோர் தரையில் குச்சி அறைந்து அதைச் சுற்றி வட்டம் வரைந்து நிழலின் அடி அளவையும் ஆட்டத்தையும் பார்க்கலாம். இவ்வாறான அடியின் அளவுகளுக்கும் கால இடைவெளிக்கும் ஏற்பப் பணுவல் இயற்றும் ஆற்றலைப் பழந்தமிழ்ப் புலமை மரபினர் பெற்றிருந்தனர் என்று தெரிகிறது. இவ்வகையிலான ஆண்டுக் கணக்குப் புரிதலை ஒரே நாளில் கண்டறிந்திட இயலாது. ஓரிருவர் மட்டும் முயன்றும் பயன் இல்லை. இது ஒரு கூட்டு முயற்சி. மனத் தூய்மையும், தொடர்ந்த  தேடலும் உழைப்பும் மட்டுமே பயன் தரும். பரிவான அரசுப் பார்வை தேவை என்பதில் ஐயமில்லை. இந்தச் செய்திகளின் பின்புலத்தில் நெருங்கிவரும் புத்தாண்டினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி அக்கறை கொள்வோம்.
    1.   இந்த ஆண்டின் இறுதிநாள் எது என்பதனை மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அறிவித்து விடும். அதில் ஐயம் ஏதும் இல்லை.
    2.   இது ஒரு பிழை அறிவிப்பு முயற்சியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியும் ஆகும். அதனால் திறனாய்வுகள் பற்றியும் மாற்றுப் பார்வைகள் பற்றியும் எவரும் ஆர்வம் கொள்ளல் இயல்பே.
    3.   அடுத்த ஆண்டின் தொடக்க நாள் மற்றும் முதல் 12 நாட்கள் எவை என்றும், அந்த நாட்களில் தமிழர்கள் தாராளமாகப் புத்தாண்டு நடைமுறையைத் தொடங்கிடலாம் என்றும், அந்தப் பன்னிரெண்டு நாட்களுக்கு முன்னதாக 7 நாட்களைக் கணக்கிட்டுக் கைகுத்தல் அரிசியை ஊற வைத்துப் புத்தாண்டு நாளின் காலையில் புதுப்பானையில் உலை நீராகக் கழுநீரை ஊற்றி, நாற்ற உணவை முன்னோர் படையலாக அளித்திடவும் முனையலாம் – என்றும் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அறிவித்து விடும். அதிலும் ஐயம் இல்லை.
    அந்த நாள் அறிவியல் அடிப்படையில் ஆன தென் செலவுத் திருப்பத்தில் இருந்து வேறுபடுகிறதா? அல்லது மரபு வழிப்பட்ட கணக்கீட்டின்படி அடிநிழல் இற்றுப் போகும் இறுதி அளவை இவ்வுலகிற்கு எடுத்துச் சொல்கிறதா என்பன மட்டுமே வல்லுநர்களின் கூட்டு முயற்சியால் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
    நெடுங்காலமாக மறந்து போன அறிவுத்துறை ஒன்று இப்போது துலங்குகிறது என்றால் அது உடனே முழுமை பெற்றுவிடும் என்று எதிர்பார்க்க இயலாது. அனைத்தையும் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளவும் இயலாது. அதே நேரம் மரபு வழி நம்பிக்கைகளில் மாற்று மரபினரையும் படிப்பறிவு இல்லா மக்களையும் குழப்பி விடவும் கூடாது.
         ஆய்வாளர்கள், உயர் ஆய்வில் ஆர்வம் உடையோர் சார்பற்ற நடுநிலையாளர்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் எந்த இனத்தில் இருந்தாலும் தமிழர்களின் இந்த முயற்சிக்குப் பங்களிப்புத் தரலாம். மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அதனை வணங்கி வரவேற்கும்.
         தமிழர்களின் இம் முயற்சிக்குத் தீங்கு விளைவிப்போரிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் இறங்கி அடிப்போரைத் தகர்க்கவும் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் தயங்காது.  ஏனெனில் புத்தாண்டு பற்றிய அறிவு நுட்பங்கள் மொழிக்குள் பதுங்கியிருக்கின்றன.
         தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் புலமை மரபினர், தமிழ் இசைக் கலைஞர்கள், தமிழரின் மரபு வழிப்பட்ட நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், பண்மீட்பாளர்கள், கூத்துக் கலைஞர்கள், ஓவியக் கலைஞர்கள், படிமக்கலை, பாவைக்கலை வல்லுநர்கள், பெருந்தச்சர், பெருங்கணியர், அறிவியல் அறிஞர்கள், மென்பொருள் வல்லுநர்கள், மேலாண்மை வல்லுநர்கள் இவர்களோடு தமிழ்த் தேசிய அரசியல் ஆளுமைகள் ஆகியோர் ஒன்று கூடி மீட்டெடுப்பதுவே தமிழ்ப்புத்தாண்டு ஆகும்.
    அரசியல்:-
              தமிழில் அரசு, அரைசு என்ற சொற்களே நிலவை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் கொண்ட ஓர் அமைப்பின் பெயர் என்று தெரிகிறது.
              நிலவை அரவு தீண்டவிடாமல் ஆண்டு நாட்களை ஒழுங்கு செய்யும் நுட்பம், அறம், முரசு, அரச யானைகள், வேல், வேத்தியல் கூத்து, கோத்தொழில், சூருள்ளியாடும் மகளிர், பொருநர் காணாச் செரு எனப் பழந்தமிழரின் புரிதல் விரிகிறது. இன்றையக் காலத்திற்கேற்பப் புரிந்து கொள்வதிலும் பிறருக்குப் புரியும்படி எடுத்துச் சொல்வதிலும் புதிய அரசியல் கட்டாயம் இருக்கிறது.
    தமிழக அரசின் தமிழ்ப் புத்தாண்டு:-
              ஐயா வந்தால் ‘தை’யென்றும் அம்மா வந்தால் ‘சித்திரை’யென்றும் ஒரே பஞ்சாங்கத்தைப் பின்பற்றும் இரண்டு துருவப் பூச்சாண்டிகளும் தமிழ்ப் புத்தாண்டின் பகைவர்களாக இருக்கிறார்கள்.
              ஒரு வேளை தமிழ்த் தேசியக் கருத்தியலின் அடித்தளத்தில் ஓர் அரசு தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தால் தமிழக அரசே இம் முயற்சியை முன்னெடுக்கலாம்.
              வழக்கமாக ஆண்டு நாட்களில் சரிவு நிகழும் காலக் கட்டங்களில் கொண்டாடப்படும் தகுதியில் தமிழ்ப்புத்தாண்டு இருப்பதில்லை.
              இன்று அந்த நிலைமைதான் நீடிக்கிறது என்று புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்டு நாட்களைச் சரிசெய்யும் முயற்சியிலும், அந்த முயற்சிக்குப் பரிவு காட்டும் அரசைக் கட்டியெழுப்புவதிலும் தமிழ் அறிஞர்களும் வல்லுநர்களும் ஈடுபட்டால் வேற்றினத்தார் எவரும் குறுக்கே நிற்கப் போவதில்லை என்பது உண்மை.
    தமிழ் தேசியக் கருத்தியல் அடித்தளம்:-
              அறத்தின் வழியில் அரசு அமைப்பதில் தமிழர்கள் மாபெரும் மரபறிவு உடையவர்கள். ஒருபோதும் அடிமைப் பட்டதே இல்லை. அடிமையாகத் தமிழ் உணர விட்டதே இல்லை. ஆனால் பன்னெடுங்காலமாக வயிற்றில் அடிக்கப்பட்டுத் துவண்டு போன வாழ்வும், தலையில் அடிக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட அறிவு மயக்கமும் நீங்கும் காலம் இன்று கனிந்து வருவதை உணரலாம்.
              கைக்குழந்தையுடன் ஒரு தாயை ஒருவன் அடிமைப் படுத்தி வேலை வாங்கலாம். அந்தத் தாயின் மடியில் உள்ள குழந்தை தன்னை அடிமையாக உணர்வது இல்லை. தமிழர்களுக்குத் தாய்மடியே தமிழ் என உணரப்பட்ட படியால் அந்தத் தமிழின் இருத்தல் நொறுங்கும் போதுதான் உணர்கிறான், அடிமைப்பட்டது தான் அல்ல! தாய் என்று! தாயின் விடுதலையும் தாய் மண்ணின் விடுதலையும் ஒத்த பண்புடையன. அயன்மை இன அரசுகளின் காலத்தில் தன் மரபுக்குள்ளேயே புதைந்து போகும் வல்லுநர் அறிவு. அரசு மீண்டால் மட்டுமே துலங்கும். தமிழ்ப் புத்தாண்டு அந்த வகையைச் சேர்ந்தது.
    தையா சித்திரையா:-
              தமிழர், தமிழர் அல்லாதார் என்ற இன வரைவின் அடிப்படையில் ஒரு விளையாட்டாகத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டியதெல்லாம், அக்காலத்தில் தொழூஉப்புகுத்தல் என்ற மஞ்சுவிரட்டில் ஏறுகளும் காளைகளும் என்ன செய்தனரோ அதையே தான் என்று உணர வேண்டும்.
              மேய்கிற மாடுகளெல்லாம் விலக்கி விடப்படும். பாய்கிற மாடுகளுக்கு முன்னே நெஞ்சைக் காட்டி நிற்பர் மள்ளர். அதே போல இன்றும் மேய்கிற மாடுகளைச் சித்திரைக்கும் பாய்கிற ஏறுகளைத் தைக்கும் வகைப்படுத்துகிற முருகற் சீற்றத்துக் குரிசில் போன்ற இளம் தலைமுறையினர் தமிழ்ப்புத்தாண்டு முயற்சியைக் கையில் எடுக்க வேண்டும்.
              ஏறுகளுக்கும், ஆண் யானைகளுக்கும், தென் பாண்டிய மரபின் காளையருக்கும் அந்த அறிவும் ஆற்றலும் மரபணுவில் உள்ளது என்று தெரிகிறது. அது வெளிப்படுகிறதா என்று தெரிந்து கொள்ளவும் தமிழ்ப்புத்தாண்டு முயற்சி உதவி செய்யும் என்று நம்பலாம்.
     மக்களிடம் கொண்டு செல்வது:-
              அறிஞர்களும் உணர்வாளர்களும் ஒன்று கூடித் தெளிவாகத் திட்டமிட்ட பிறகு மக்களிடம் கொண்டு செல்லும் தமிழ்ப்புத்தாண்டு பற்றிய கருத்து ஆழமாக ஊன்றி நிற்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. தமிழ் அறிஞர்களிடையே கருத்தொற்றுமை இன்னும் காணப்படாத இவ்வேளையில் செய்ய வேண்டியவை சில உள.
    1.   இன்றையத் தமிழக அரசின் சட்டப்படியான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வழக்கம் போல நடை பெறட்டும். தடுக்க வேண்டாம். கலந்து கொள்ளவும் வேண்டாம். யாரெல்லாம் அதனை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று தள்ளி இருந்து பார்த்துக் கணக்கிட்டால் போதும்.
    2.   எந்தப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சித்திரை முதல் நாளைப் புத்தாண்டு என்று குறிப்பிடுகிறார்களோ அதே பஞ்சாங்கம் சொல்லும் தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடுவோரும் அதே நாளைத் திராவிடப்புத்தாண்டு என்று கூற முயற்சிப்போரும், அவரவர் விருப்பம் போலவே செயல்படட்டும். தடுக்க வேண்டாம். யாரெல்லாம் அதனை அவ்வாறு உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று தள்ளி இருந்து பார்த்துக் கணக்கிட்டால் போதும்.
    3.   இனத்தால் தமிழர்கள் ஆன கிறித்தவர்களும், இனத்தால் தமிழர்கள் ஆன இசுலாமியர்களும் இனத்தால் தமிழர்கள் ஆன பிற நம்பிக்கையுடையோரும் இனத்தால் தமிழர்கள் ஆன கடவுள் மறுப்பாளர்களும் தமிழ்ப்புத்தாண்டு நாளைத் தமிழ்த் தேசியர்களோடு சேர்ந்து கொண்டாட முற்றிலும் தகுதியானவர்களே. தற்போது தள்ளி இருக்கும் அவர்களைத் தமிழ்த் தேசியத்தின் பெயரால் உரிமையுடன் அழைக்கலாம். சிக்கலைப் புரியும்படி எடுத்துச் சொல்லலாம். உதவிடவும் கோரலாம். தமிழின் தையியத்தை, தமிழின் முதன்மையை, ஆளுமையை, விசும்பு உருவத்தை விளங்கச் செய்திடலாம் இந்த உலகத்திற்கு அவர்களின் ஒத்துழைப்போடு.
    முன்னறிவிப்பு:-
              தமிழ்த் தேசிய அரசியல் ஆளுமைகள் ஒன்று கூடித் தமிழ்ப்புத்தாண்டின் நிலைமையினை அரசியல் ஒழுங்கினை முறைப்படி முன்னறிவிப்புச் செய்யலாம்.
              இவ்வாண்டின் 12-வது முழு நிலவு நாள் நிறைவுற்ற அன்றே அதனில் 18 நாட்களைக் கூட்டி இவ்வாண்டின் இறுதி நாளைக் கணித்திடலாம். அந்த நாளைக்கு 7 நாட்களுக்கு முன்பாகவே கைக்குத்தல் அரிசியை ஊறவைத்து ஏழாவது நாளின் இறுதியில் அதாவது மூன்றாம் பிறையின் நாளில் பிறை பார்த்து அன்று இரவு கழிந்ததும் மறுநாள் காலையில் தோன்றும் புத்தாண்டுக் கதிரவனை வரவேற்றுப் பொங்கல் இடலாம்.
         உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
        பலர் புகழ் ஞாயிறு (திருமுருகாற்றுப்படை-1)
            நெற்றியடியாகப் பலர் புகழ் ஞாயிறு என்று குறிப்பிடும் திருமுருகாற்றுப்படை தமிழர்களின் மந்திர மரபில் முதன்மையான நூல். பலரும் கதிரவனை அந்த ஒருநாள் தான் புகழ்வர். வரவில்லையென்றால் வருந்துவர் என்று புரிய வைக்கிறது.
              இவ்வாறாகத் தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பதில் சில உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. புத்தாண்டை விடவும் அதனை அறிவிக்கும் ஆளுமை முகாமையானது.
    குத்து மதிப்பாக அறிவிப்பு:-
    இன்றைய நிலையில் குத்து மதிப்பாக அந்த நாள் டிசம்பர் 13-ல் அமையலாம். அன்றில் இருந்து 12-வது நாளில் முழுநிலவு அமைய வேண்டும். அதாவது இவ்வாண்டின் கிறித்துப் பிறப்பு நாளான டிசம்பர் 25க்கும் முன்னதாகவே 24.12.2015-ல் அந்த நிலவு அமையலாம். அன்று வரை தமிழ்ப்புத்தாண்டு விழாக்களைக் கொண்டாடலாம்.
    இவ்வாறாக ஆண்டின் தொடக்கம் தென் செலவின் திருப்பத்திலிருந்து பின் வாங்கிச் செல்வது போலத் தோன்றும். அது ஆங்கில நாள் காட்டியினால் உருவான தோற்றப் பிழையே. தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பில் 30 நாள் இடைவெளியில் ‘ஒருவகை அலைக்கழிப்பு’ என்பது ஆண்டு நாட்களின் சீர்மை தடுமாறிய காலக் கட்டங்களில் தவிர்க்க இயலாதது.
    இவ்வாண்டு டிசம்பர் 13 ஆகவுள்ள ஆண்டின் தொடக்க நாள் அடுத்த ஆண்டு சனவரியிலும் மாறி வரலாம். இதில் வல்லுநர் தொழில் நுட்பம் பொதிந்துள்ளது. எது எப்படியாயினும் அறிவிப்பை ஏற்கும் தமிழர்களின் உளவியல் சில மாற்றங்களை ஏற்றாக வேண்டும்.
    துப்பு:-
              இதுபற்றிய தமிழரின் மரபறிவே தமிழரின் நெருங்க முடியாத துப்பு ஆகும்.
    மார்கழிப் பாவை நோன்பும்
    கழுநீர் கொண்ட எழுநாள் அந்தியும்:-
              மார்கழி முழுநிலவின் மறுநாளில் தொடங்கி தைத்தைங்கள் முழுநிலவு நாள் வரையில் ஆன 30 நாட்களில் சரியாக நடுவில் அமையும் மறைநிலவை முன்னும் பின்னும் மும்மூன்று நாட்களைக் கண்ணி கட்டி அமையும் நோன்பு மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
    அக்க வாய்ப்பாடு:-
              ஆண்டு நாட்களை 8-ன் மடங்காகப் பிரித்து 45 அக்கங்களில் ஆண்டு நிறைவு செய்யப்படும் நுட்பம் தமிழரிடையே உள்ளது. கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. அவை முறையாகப் பயன்படுத்தப்படும்.
    ஆங்கில நாள்காட்டியும் பஞ்சாங்கமும்:-
              ஆங்கில நாள் காட்டியையும் பஞ்சாங்கத்தையும் படிப்படியாகக் கைவிடப் பழகிக் கொள்ள வேண்டும். தற்போது ஆங்கில நாள் காட்டியைத் தொடர் நாட்களைக் கணக்கிடவே பயன்படுத்துகிறோம். ஆனால் நெடுங்காலம் அதனை நீட்டிக்க இயலாது. எதிர்காலத்தில் தமிழ் ஆண்டு நாட்களை 1 முதல் 360 வரை தொடர் நாட்களாகப் பயன்படுத்தப் பயிற்சி எடுக்க வேண்டும்.
              மன்னன் இராஜராஜன் இதனை நடைமுறைப் படுத்தியிருக்கின்றான்.
    நன்மைகள்:-
              வடசெலவு, தென்செலவு, 12 இருக்கைகள், 12 திங்கள், 12 முழுநிலவு, 12 மறைநிலவு , 12 தேய்பிறை, 6 நாள் கொண்ட வாரம், 60 வாரம் கொண்ட ஆண்டு, வாரத்தின் தொடக்கம் திங்களின் தொடக்கம் ஆண்டின் தொடக்கம் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமையும் நேர்த்தி, வெள்ளிக்கிழமைகளில் முழு நிலவு, செவ்வாய்க் கிழமைகளில் மறை நிலவு, குறித்த நாளில் முதல் மழை, பெண் கோள் ஒழுக்கம், மலர் செடி கொடி மரங்கள் உரிய நாளில் பூத்துக் குலுங்குதல் இவையெல்லாம் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உவப்பானவைதான்.
              இவற்றுக்காகத் தமிழர்கள் செய்ய வேண்டியது எல்லாம் தமது மரபறிவைப் போற்றுதல். இந்தச் சனிக்கிழமையை அவிட்டப் பாதையில் விரட்டுதல் அவ்வளவே.  அதன் வழியே ஒரு திருந்திய பார்வையை ஏற்று எடுத்து, அறம் சார்ந்த வாழ்வியலைப் புதுப்பித்துக் கொற்றம் எய்துதல்.
              எந்த உள்ளூர்ச் சட்டத்தையும் மீறாமல் தமிழர்கள் இதனை எளிதாகவும் விளையாட்டாகவும் செய்து விடுவார்கள், எப்போது என்றால் அழகாக அமைதி காக்கும் தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி இனவரைவு செய்து வழிநடத்தினால். அறிஞர்களின் அத்தகைய முயற்சிகட்குத் தமிழ்ப்புத்தாண்டு படிக்கட்டுகள் அமைத்துத் தரும் என்று நம்புவோம். நல்லதை எதிர்பார்ப்போம்! வருவதை எதிர் கொள்வோம்!.

    ...---ooo000OOO000ooo---...

     இது தமிழ்த் தேசிய தக்கார் அவைய வெளியீடு.

    [கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன thakkar.avaiyam@gmail.com ]
    Posted 
    மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015
    17-ஆம் பதிவு
    11.12.2015
        
                    இடியுடைப் பெருமழை எய்தாது ஏகப்
          பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
          மழை பிணித்தாண்ட மன்னவன் வாழ்க எனத்
          தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி.......
      (சிலம்பு-காடுகாண் காதை 27-30)
    இந்த நாளில், இந்த இடத்தில், இந்த அளவு மழை பெய்ய வேண்டும் என ஆணையிடும் அமைப்பாகப் பழந்தமிழ்ப் பேரரசு இருந்தது என்ற இலக்கிய வியப்பைப் புறந்தள்ளி விட முடியாது.

         அடி இற்றன்ன அளவு அரசர்க்கு உணர்த்தி
          வடிவேல் எறிந்த வான் பகை ...... (சிலம்பு-காடுகாண் காதை-15-22)
                                         (காண்க மாநாகன் இனமணி-25)

         நிழலின் அளவு இற்றுப் போகும் இறுதி அளவைக் கணித்து அறிந்து, பிற அரசர்களுக்கு எடுத்துச் சொல்லி உயிர்களை இடப்பெயர்வு செய்து கதிரவனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து வான்பகை முடித்தனர் பாண்டிய மரபினர் என்ற பார்வையைப் புறக்கணிக்க இயலாது. அன்று முடியாட்சி. தமிழர்கள் பேரரசர்கள். இன்று தமிழர்கள் நாடற்றவர்கள். ஆயினும் அதே மதிநுட்பம் இனக்கட்டும் மொழி நுட்பமும் மரபறிவும் மூதாதையர் வழிச் சொத்து. அவ்வகையில் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய புரிதலில் ஒரு மாற்றுப் பார்வையை முன் வைக்கிறது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 2015.

    1.   24.12.2014 முதல் 14.12.2015 வரையில் ஆன 356 நாட்களில் இந்த ஆண்டு சுருண்டு விட்டது. ஓராண்டின் 12 முழுநிலவுகளும் 12 மறைநிலவுகளும் தென் செலவின் திருப்பத்தை உறுதி செய்யும் பிறைநாள் மூன்றும் உள்ளடக்கமாக அமைகிறது.
    2.   ஆங்கில ஆண்டு 2015-க்கு இணையான இந்தத் தமிழ் ஆண்டில் மொத்தம் 4 நாட்கள் குறைவுற்று ஆண்டுச் சரிவை உறுதி செய்திருக்கிறது.
    3.   கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு இணையான தமிழ் ஆண்டு 353-நாட்களில் சுருண்டது. கடந்த ஆண்டை விடவும் 3 நாட்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது வரவேற்கத்தக்கது.
    4.   எவ்வகையிலோ இயற்கை தன்னைத் தகவமைத்துக் கொண்டு 360 நாட்களில் ஆண்டுக் கட்டு அமையுமானால் அது ஒட்டு மொத்த உலகத்தார்க்கும் உவப்பானது.
    5.   தமிழ்ப்புத்தாண்டு தொடர்பான ஐயங்களைத் தீர்த்து வைத்துப் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு வியப்பான, மலைப்பான செய்திகளைப் பழந்தமிழ் தந்திருக்கிறது.
    6.   இனி வரும் காலங்களில் தமிழில் உயராய்வு என்பது தமிழ்ப்புத்தாண்டுப் புரிதலின் ஊடாகவே அமையும் என்பது தவிர்க்க இயலாதது.
    7.   தமிழர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடினால் அதனை விளையாட்டு என்று புறந்தள்ளும் இந்த உலகம், தமிழர்கள் தம் மயிரைக் கூட இழக்காமல் முன்னெடுக்கும் ஒரு விளையாடைக் கண்டு நடுக்கம் கொள்ளும் என்றால் அந்த விளையாட்டு தமிழ்ப்புத்தாண்டு பற்றியதே என்பதனை உண்மைத் தமிழர்கள் நன்கு உணர வேண்டும்.
    8.   இந்த உலகில் தமிழர்கள் யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அடிமை நிலையில் இல்லை. ஆனால் தன் இனத்தைத் தெளிவு படுத்த வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கிறது.
    9.   ஆண்டுச் சரிவு நாட்களில் தமிழர்கள் யாரும் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை. ஆனால் பிழையறிவிப்புச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அதைத்தான் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் செய்து கொண்டிருக்கிறது.
    10. தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு என்ற மரபு வழி நம்பிக்கையை உறுதி செய்தும் தமிழ் அறிஞர்களின் கருது கோளை உறுதி செய்தும், அந்த நாளை வானவியல் அடிப்படையில் செதுக்கி எடுக்கும் முயற்சியில் ஒரு நாளை அடையாளம் கண்டு அறிவித்து  வருகிறது தக்கார் அவையம்.
    11. சமண, பவுத்த, ஆரிய வைதிக நம்பிக்கைகளை மறுதலித்தும், ஆங்கில ஆண்டு, இசுலாமிய ஆண்டு போன்றவற்றைத் தள்ளி வைத்தும் தமிழர்களுக்கே உரிய புத்தாண்டு நாளை இன வரைவின் அடிப்படையிலும், தமிழ்த் தேசியக் கருத்தியலின் அடிப்படையிலும் செதுக்கி எடுக்கும் முயற்சியில் முன்னேறிவருகிறது பணியா மரபு.
    12. அடுத்து வரும் 2016-ஆம் ஆண்டில் தமிழ்ப்புத்தாண்டு பற்றிய உண்மைகளை உடைத்துப் பேசும் ஆற்றலைத் தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
    13. 15.12.2015-ல் தொடங்க விருக்கும் அடுத்த தமிழ்ப்புத்தாண்டு பற்றிய ஒரு மாற்றுப் பார்வையில் பழந்தமிழர் அறிவை மீட்கும் முயற்சி என்ற புரிதலில் தமிழர்கள் உரிய பங்களிப்புச் செய்திட வேண்டும்.
    14. 15.12.2015-ல் வீட்டுப் பொங்கலிடுவது, மனையுறை அணங்கைப் பரவும் நிகழ்வாகவும், எதிர்காலத்தில் திருமகளை வரவேற்கும் நிகழ்வுக்கு ஒத்திகையாகவும் அமைந்திடத் தக்கார் அவையம் வாழ்த்துகிறது.
    15. இனிய தமிழ்ப்புத்தாண்டு! பொங்கல் திருநாள்! தென்செலவின் திருப்பம்! தைத் திருநாள் அனைத்தும் தமிழ்த் தேசிய அரசில் தைத்து நிமிர்ந்திடத் தவம் இயற்றவேண்டிய காலவேளை இதுவே.

    ....---000OOO000---...


     இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015: இன் வெளியீடு



      நம் முன்னோர்கள் அதாவது தமிழ் மரபு வழியிலான புத்தாண்டு இன்று பிறந்து விட்டது. அதாவது 15.12.2015.
      அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்து.
      இது ஒரு இயற்கை புத்தாண்டு. அதாவது இன்று சூரியன் தன் தென்செல்வை முடித்து, தெற்கே தைக்கப்பட்டு தன் வடசெலவை ஆரம்பிக்கிறது. சூரியன் தெற்கே தைக்கப்படுவதனால்தான் அது 'தை' எனப் பெயர் பெற்றது. தமிழர்கள் தை புத்தாண்டை கொண்டாடலாம். இது பஞ்சாங்கம் சொல்லும் தை அல்ல. இயற்கை நமக்கு உணர்த்தும் தை.
      அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்து மறுபடியும்.
      https://www.yarl.com/forum3/topic/167038-17-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/#comment-1151642

      18 வடசெலவு (உத்தராயணம்) திருப்பமும் தைப்புத்தாண்டும்

        1 post in this topic


        மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015
        18-ஆம் பதிவு
        23.12.2015
            
                        பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, ஆங்கில ஆண்டு 2015-க்கு இணையான தமிழ் ஆண்டு கடந்த 14.12.2015 அன்றுடன் சரியாக 356 நாட்களில் முடிந்து விட்டது. அன்றுடன் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 2015 கலைக்கப்பட்டு விட்டது. அந்த நாள்வரையில் தமிழ்ப் புத்தாண்டு மீட்பு முயற்சியில் ஈடுபட்டு எதிரும் புதிருமான பார்வையில் பல புதிய புரிதல்களை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி.
             14.12.2015 மாலையில் வெளியிடப்படவிருந்த 18-ஆம் பதிவு அன்று வெளியிடப்படவில்லை. 15.12.2015-ல் வீட்டுப் பொங்கல் இடுவதில் உறுப்பினர்கள் அனைவரும் முனைப்புடன் ஈடுபட்டிருந்தபடியால் கலந்து பேசி முடிவு செய்ய ஒருவருக்கும் நேரம் இல்லை. அந்தப் பதிவு இன்று வெளி வருகிறது. இதுவரை வெளிவந்துள்ள 17 பதிவுகளின் பட்டியலில் இந்தப் 18-ஆம் பதிவையும் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். 1 முதல் 18 வரையிலான இப்பதிவுகள் அச்சு வடிவம் பெற்று அடுத்த ஆண்டில் திறனாய்வுக்கு உட்படுத்தப்படும். அடுத்த ஆண்டில் மரபு வழித் தமிழ் தேசியத் தக்கார் அவையம்-2016 புதிய உறுப்பினர்களுடன் பொலிவு பெற்று நாள் வரிசை மாறாமல் பல விளக்கச் செய்திகளை அறிவுலகில் எடுத்து வைக்கும்.
        கதிரவனின் தென்செலவுத் திருப்பம்:-
             நிழலைத் தெளிவாகப் பார்த்தும், வெயில் முகத்தைக் கண்ணைச் சுருக்கி பார்த்தும் கதிரவன் வடக்கு நோக்கித் திரும்பி விட்டான் என்று எவரும் எளிதாகச் சொல்லிவிட இன்று இயலும். ஆனால் 14.12.2015 அன்று நண்பகல் வரையில் தான் கதிரவனின் தென்செலவு தெற்கு நோக்கிச் சீராகச் சென்றது என்று கூற, மரபறிவும் வல்லுநர் அறிவும் தேவைப்பட்டது.
             15.12.2015-ல் தான் மழை நீங்கி வெயில் தெரியத் தொடங்கியது. இன்று வரையில் ஆன கணிப்பில் திருப்பம் உறுதி செய்யப் படுகிறது.
        சுவற்றில் அடித்த பந்து:-
             கதிரவனின் வடசெலவு, தென்செலவு என்பது சுவற்றில் அடித்த பந்து போலத் திரும்பி விட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி விலகும் போது எந்தச் சிக்கலும் இல்லாமல் அது நிகழ்கிறது. அதிலும் கடந்த ஆண்டு ஒரு நாள் பின்னடைவு இருந்தது.
        ஆனால்  தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்பும் போது சிக்கல் ஏற்பட்டுப் பலநாள் போராட்டம் நடக்கிறது. அதன் விளைவு தான் ஆண்டு நாட்களில் ஏற்படும் குறைபாடு. அவ்வாறு இந்த ஆண்டும் சிக்கல் ஏற்பட்டது. சிக்கலில் இருந்து விடுபட்டு வடசெலவு மீண்டு விட்டது.
        இது பற்றிய நுட்பங்களை அடுத்த ஆண்டில் புரியும் படி எடுத்துச் சொல்ல, ஆண்டு முழுவதும் நிழலைத் தொடரும் வல்லுநர்களை மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்-2016 கட்டமைக்கும்.
        கடந்த ஆண்டு நடத்திய தேடலில் சில வல்லுநர்கள் அரிதாகக் கிடைத்துள்ளனர். தக்கார் சிலரும் தென்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இன்னார் என்பதையும் அவர்கள் வசப்படுத்தியுள்ள அறிவுத்துறைகள் இன்னது என்பதையும் உரிய முறையில் அடுத்த ஆண்டில் வெளியிடும் திட்டம் உள்ளது.
        அழகு, அருமை, ஏர்:-
              சுவற்றில் அடித்த பந்தைப் போல தெற்கில் இருந்தும் வடசெலவு மீண்டு விட்டால் அது அனைவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடியது தான். அதைத்தான் அழகு, அருமை, ஏர், திரு என்றெல்லாம் பழந்தமிழ் வியக்கிறது. அது எப்போது வாய்க்கும் எனில் 360 நாட்களில் ஆண்டு அமையும் போது வாய்க்கும் என்று நம்பலாம்.
        என்றூழ்:-
             ஊழி என்ற சொல் கருக்கு வீச்சுப் போலவும் கள்ளியின் கிளை போலவும் உழவு மாட்டின் கொம்பு போலவும் தன் போக்கில் செல்லக் கூடியது. அது தடுமாறும் போது அன்றூழ் எனவும், அதுவும் யன்றூழ் ஆகி என்றூழ் எனவும் திரிந்திருக்கலாம். ‘சுடர் வழக்கற்றுத் தடுமாறு காலை’ என்றும் ‘தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும்’ என்றும் மணிமேகலை குறிப்பிடும் செய்திகளின்படி தமிழ்த் தேசிய அரசுதான் அதன் மீது  அக்கறை எடுக்கும் என்ற வரலாற்று உண்மையை நன்கு விளங்கி கொள்ள வேண்டும்.
        பஞ்சாங்க உத்தராயணம்:-
             15.01.2016 அன்று உத்தராயண புண்ணிய காலம் என்றும் அன்றுதான் தை முதல் நாள் என்றும், அன்றுதான் கதிரவன் மகர இராசிக்குள் நுழைகிறான் என்றும் நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்.
             வானத்தை நிமிர்ந்து பார்த்து மாற்றங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் தமிழர்கள் மாற்றுப் பார்வையை முன்னெடுக்கிறார்கள். அவ்வளவே.
        இனிய தமிழ்ப் புத்தாண்டு:-
             ‘ஓர் யாட்டுக்கு ஒருகால் வரவு’ என்ற புதிய செய்தியை அரிதாக ஒரு வல்லுநர் கடந்த ஆண்டில் பதிவு செய்துள்ளார். ஒரு புரிதல் என்பது பல ஆயிரம் ஆண்டுகட்கு ஒரு முறைதான் வரும். அப்போது அதனைத் தவற விட்டு விடக் கூடாது.
             பழந்தமிழின் ஊடாக ஏற்படும் தமிழ்ப் புத்தாண்டுப் புரிதல் என்பது தமிழ்த் தேசியக் கருத்தியலின் கடைகால் ஆகும்.
        வருக நீ யாண்டும்:-
             எம் தமிழ் மொழி பேணி வருக நீ யாண்டும்! என்று பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் எழுதியுள்ளார். ஆனால் அவர் காலத்தில் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய புரிதல் கூர்மையடையவில்லை. இன்று அவர் நம்முடன் உடலால் இல்லை. ஆனால் வலிமையான நினைவு அலைகளைக் கிளப்பிக் கொண்டு கடுவிசை அவுணரில் அவுணராகித் தமிழின் உயிர்ப்பாற்றலாக விளங்கிக் கொண்டிருக்கிறார். பாவலர் ஏறு அவர்களின் வாழ்வும், தொண்டும், செய்தியும் அரிய வகை அளவு கோலாகச் செங்குத்தாகக் காலத்தால் ஊன்றி நிற்கிறது. அதனை எட்டித் தொடுவோரும், தாண்டுவோரும் ஐயா அவர்களைத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டுப் புரிதலுக்குப் பங்களிப்புச் செய்திட வேண்டும். அதுவே 2016 ஆம் ஆண்டின் எதிர்பார்ப்பு.
        அடுத்த முழுநிலவு:-
             ஆங்கில ஆண்டு 2016-க்கு இணையான தமிழ் ஆண்டின் முதல் முழுநிலவு நாளை வரும் 26.12.2015 அன்று மாலையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அது இவ்வாண்டின் 12 வது நாள். தைப்பூச முழுநிலவு. ஆனால் எது நிகழ்ந்தாலும் உள்ளது உள்ளபடியே பதிவு செய்வோம்.
             ஆண்டுக்கு ஒரு முறை அறுமீன் அருகில் முழுநிலவு நள்ளிரவில் பொருந்திச்செல்லும் காலம் தான் முழுவெற்றி பெற்ற காலம் ஆகும். ஆயினும் அறுமீனுக்கு அருகில் இந்த முழுநிலவு நெருங்கித் தோன்றுவதும் சிலநாள் இடைவெளி இருப்பதும் வெறுங்கண்ணால் பார்க்கக் கிடைக்கிறது.
             பழந்தமிழ்ச் சான்றுகளை ஒப்பிட்டுப் பார்த்து நூல் மரபுகளைப் புதுப்பித்து வல்லுநர்களை வகைப்படுத்தும் முயற்சியில் தமிழ் இனம் தன்னைப் புத்தாண்டு மீட்பில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

        இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்-2015 இன் வெளியீடு




           Sign in to follow this  
          Followers 0
          jdlivi

          2. தமிழ்ப் புத்தாண்டு - தை முதல்நாள் – பொங்கல் – தொழூஉப்புகுத்தல்

            1 post in this topic


            3(2015) தமிழ்த்தேசியம் உருப்பட - தமிழ்ப்புத்தாண்டு

              2 posts in this topic


              மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015
              3-ஆம் பதிவு
              20.04.2015
              இன்றையத் தமிழக அரசு 14.04.2015-ல் கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு
                   பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு, அரசு விடுமுறை, மக்கள் வரிப் பணத்தில் பரிசுகள், விழாக்கள், விருதுகள் என்று இவ்வாண்டின் தமிழ்ப் புத்தாண்டினைச் சட்டப்படி கொண்டாடியிருக்கிறது இன்றையத் தமிழக அரசு.
                   அதனை நம்புகிறவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். மறுப்பவர்கள் கறுவிக் கொண்டு இருக்கிறார்கள். அறிஞர்கள் அழகாக அமைதி காத்து வருகிறார்கள். ஊடகங்கள் இது பற்றிக் கூச்சல் எழுந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றன. திராவிடக் கழகத்தினர் தாலியை முன் வைத்து மக்களைத் திசை திருப்பி, சித்திரை மீது கல்விழாமலும் எக்குத்தப்பாகச் சொல்விழாமலும் காத்து வருகின்றனர்.
                   வாழ்த்துச் சொன்னவர்களைச் சித்திரைக் கூட்டணியாகவும், வாய்மூடி இருந்தவர்களைத் தைக் கூட்டணியாகவும் ஒதுக்கிப் பிரித்து வைக்க முடியாது. ஆரிய வைதிகச் சார்பும் எதிர்ப்பும் துருவ அரசியலை மட்டுமே செய்து வரும் இவ்வேளையில், தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழ்த் தேசியக் கருத்தியலை முன் வைக்கிறது என்பது இருவருக்குமே தலைவலி.
                   தமிழர்கள் என்றுமே ஆரிய வைதிக வாழ்வியலை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. ஆரிய வைதிகர்கள் விரும்பும் பாதையில் அவர்கள் செல்வதைத் தமிழர்கள் குறுக்கே விழுந்து தடுத்ததும் இல்லை. அப்படி இருக்க, ஆரிய வைதிக நம்பிக்கைகளைப் பொதுமைப்படுத்துவதும், அரசியல் வலிமையைப் பயன்படுத்திச் சட்டமாக்குவதும் தமிழர்களை முட்டாள்களாக்கும் செயல்கள்.
                   அம்பலம் மளிகைக்கடையில் கண்ணன் வேலை செய்தார். ஓலைப் பெட்டியில் இருந்த புளியை வெள்ளிப் பெட்டியில் வைக்கச் சொன்னார் என்று கதை சொல்லிவிட்டு, அதனைத் தொழில் இரகசியம் என்று குறிப்பிட்ட முன்னாள் முதல்வர், அம்மையார் அவர்கள் சித்திரை முதல் நாளை முதன்மைப் படுத்திய சட்டம் ஒன்றை இயற்றி முறையாக நடைமுறைப் படுத்திக் கட்டிக் காப்பாற்றி வருகிறார்.
                   நக்கீரன் சொல்லியிருக்கிறார் மேழ ராசி பற்றியென்றார் விவேக சிந்தாமணியில் உள்ளது சித்திரை என்றார். ஒவ்வொரு முழு நிலவிலும் ஒரு நட்சத்திரம் பொருந்திவரும் என்றார். அவருக்கு எடுத்துச் சொல்ல அறிஞர்கள் எவரும் முன்வரவில்லை போலும்!. ஆரிய வைதிகக் கட்டுக் கதைகளைப் புதுப்பித்துக் கொண்டு தன்னையும் ஏமாற்றிக்கொண்டு அடுத்த தலைமுறையைத் தவிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்.
                   தமிழ்ப்பல்கலைக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், இணையத் தமிழ்க் கல்விக் கழகம், தமிழ் வளர்ச்சித் துறை இவற்றின் வரிசையில் தமிழில் உயர் ஆய்வு மேற்கொள்ளும் அனைத்து நிறுவனங்களும் இந்தச் சட்டத்தை மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளுமா? வல்லுநர்களைக் கொண்டு அலசலாமா? கருத்துக் கணிப்பு நடத்தலாமா? உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களைக் கேட்கலாமா?
                   எது எப்படியோ ! இன்றைய இளைஞர்கள் அடுத்த தலைமுறைக்கு உரியவர்கள். முறையாக ஆய்வு செய்த பிறகே எதனையும் ஏற்றுக் கொள்வர்.
                   தமிழ்ப் புத்தாண்டு பற்றிய புரிதல் என்பது தமிழ்த் தேசியக் கருத்தாளர்களை மிக நெருக்கமாக ஒன்றிணைக்கும் கோட்பாட்டு அடிப்படை கொண்டது என்ற உண்மையானது கூர்த்த உயர் ஆய்வின் வழியே வெளிப்படும். அறிவுக்கு முதன்மை தரும் இக்காலம், அறிவால் இதனை வென்றெடுக்கும்.
                   மற்றையோர் எவருக்கும் அச்சவுணர்வு இருந்தால் விருப்பத்தின் அடிப்படையில் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளலாம். தெலுங்குப்புத்தாண்டு, மலையாளப்புத்தாண்டு, கன்னடப்புத்தாண்டு வரிசையில் ஆரியவைதிகப் புத்தாண்டு, திராவிடப் புத்தாண்டு என்று பட்டியல் இடலாம். தமிழ்ப் புத்தாண்டு இந்த வரிசையில் வராது.
                   வானவியல் அடிப்படையில் உரிய நாளைக் கணித்துத் தைத்திங்கள் முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடினால், தமிழ்த்தேசியக் கருத்தியல் வலிமை பெறும் என்பது தமிழ்த் தேசியர்களின் நம்பிக்கை.
                   தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் இளைஞர்கள் காலூன்றும் முதற் படிக்கட்டே தமிழ்ப் புத்தாண்டுதான். தமிழ்த் தேசியம் குரல் உயர்த்தும் போது தமிழ்த் தேசம் குடை பிடிக்கும். அது தமிழர்களுக்கு மிகவும் பிடிக்கும். அறிவு மோசடி செய்யும் கூட்டத்தார்க்கெல்லாம் கிறுக்குப் பிடிக்கும்.
                   தமிழ்க் குடும்பத்துப் பெற்றோர் அனைவரும் தத்தம் பிள்ளைகள் தமிழ்த் தேசியப் புரிதல் உடையவர்களாக விளங்க உதவி செய்து பாருங்கள்!. வேலை பார்க்கும் இளைஞர்கள் யாவரும் படிக்கும் இளைஞர்களுக்கு உதவிடுங்கள்!. தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல், தனி நபர்களை உரசிப் பார்த்து ஒன்றிணைக்கும்! குழுக்களைக் கட்டி உருட்டி ஒன்றிணைக்கும்! இனம் கூவி அழைக்கும்.
              ___---ooo000OOO000oooo---___

               இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015இன் வெளியீடு
              மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016
              2-ஆம் பதிவு
              நாள்: 13.01.2016
                                  பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் முதல் முழு நிலவு நாள் கடந்த 09.01.2016-ல் செவ்வனே அமைந்தது. 08.01.2016 விடியற்காலை 06.30-க்கு மெல்லிய கீற்றாகப் பிறை கீழ்வானில் தெரிந்தது. ஆண்டின் 27-ஆம் நாளில் அமைய வேண்டிய முதல் மறைநிலவானது சரியாக 26-ஆம் நாளில் பொருந்தியிருப்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். கடந்த முதல் முழுநிலவு ஒரு நாள் தடுமாறியதன் விளைவே இதுவாகும்.
                   09.01.2016-ன் மறைநிலவை அச்சாகக் கொண்டு அடுத்து வரும் 15-ஆம் நாளில் இரண்டாவது முழுநிலவானது முறைமுற்றியும் நாள் முதிர்ந்தும் தோன்ற வேண்டும். அதாவது 24.01.2016 அன்று தோன்றிட வேண்டும்.
                   மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 இனி ஒவ்வொரு நாளையும் உள்ளது உள்ளபடி ஆவணப்படுத்தும் வல்லுநர்களைப் பயிற்றுவிக்கும். தொடர் நாள்களை விடாது கணக்கிடும்.
              பட்டி பல்கப் பல்க:-
                   15.01.2016-ல் பொங்கல் நாள் என்றும் அன்றே தை முதல் நாள் என்றும் பஞ்சாங்கம் சொல்கிறது. தமிழர்கள் இதுவரை நம்பியது போதும். இனிமேல் உண்மையான தை முதல் நாளில் பொங்கல் இட்டு அன்றே புத்தாண்டையும் கொண்டாட முன் வர வேண்டும். பொங்கல் நாள் வேறு, புத்தாண்டு நாள் வேறு என்று கருத வேண்டாம். மஞ்சு விரட்டுக் கூட்டும் நாளும் அந்தப் புத்தாண்டு நாளிலேயே அமைந்திடப் பெரு முயற்சி தேவை.
              நாளும் கிழமையும்:-
                   நாளும் கிழமையும் பொருந்துவது என்பது இயற்கை நிகழ்வு அல்ல. அது இயற்கையைத் திறம்படக் கையாளும் அரச கொற்றம். இந்த ஆற்றல் இவ்வுலகில் தமிழர்களைத் தவிர எவரிடமும் இல்லை. இருப்பதாக எவரும் நம்பினால் அது பேதைமை. இந்த அறிவுக்குத் தமிழர்களைத்தான் இவ்வுலகம் சார்ந்து இயங்க வேண்டும்.
              தை முதல்நாள் – பொங்கல் – தொழூஉப்புகுத்தல்:-
                   வானவியலின் அடிப்படையில் தை முதல் நாளும், பொங்கல் நாளும், தொழூஉப் புகுத்தல் எனும் மஞ்சு விரட்டுக் கூட்டும் நாளும் ஒன்றே என்பதில் தமிழர்களுக்கு எந்த ஐயமும் தேவையில்லை. தமிழ்த் தேசியத் தலைவர்கள் எவரும் தொடை நடுங்கவும் தேவை இல்லை.
                   மாநாகன் இனமணி 2 மற்றும் 56, முல்லைக்கலியில் இருந்து வலுவான அகச் சான்றுகளை எடுத்து வைத்திருக்கிறது. அந்த வகையில் 15.01.2016-ல் இவ்வாண்டின் 32-ஆம் நாள் கணக்கிடப்பட வேண்டும். இவற்றுள் முதல்நிலவின் ஒருநாள் தடுமாற்றம் போக 11 நாள், முதல் மறைநிலவுக்கு 15 நாள் அதிலிருந்து 15.01.2016 வரையில் 6 நாள்கள் ஆக 11+15+6=32 நாள்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
                   ஒருவேளை பஞ்சாங்கத்தைத் திருத்தி, பார்ப்பனர்க்குத் தீச்சை கொடுத்து எல்லோரும் வரட்டும் பொங்கல் வைக்கலாம் என்று சிறுபிள்ளைத்தனமாக எவரும் கற்பனை செய்தால் அது அவர்களது மூளை வளர்ச்சியில்லாத அவலத்தையே குறிக்கும்.
              தமிழ்ப் புத்தாண்டு அரசியல்:-
                   தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவதில் அரசியல் இருக்கிறது. அரசியல் தான் இருக்கிறது. இதுதான் அரசியல். தமிழ்த் தேசிய நுண் அரசியல்.
                   கொல்லேறுகளின் நெற்றிக்கு நேரே ஆரத்தி எடுக்கும் தமிழ் மரபும், பசுமாடுகளின் பின்புறம் சூடம் காட்டிக் கோ பூசை செய்யும் பார்ப்பு இனப் பண்பாடும் ஒன்றல்ல. வெவ்வேறானவை.
                   மஞ்சு விரட்டை, விரட்டி விரட்டித் தடை செய்ய முயலும் இந்திய அரசின் உச்சதம நியாய ஆலயம் (Supreme court of India) மற்றும் மஞ்சு விரட்டின் மேன்மையை மறைக்கும் பாரத சம்ஸ்கிருதி மந்த்ராலயம் (Ministry of Culture – Govt. of India) இரண்டும் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல், மஞ்சு விரட்டு இவற்றோடு தமிழ்த் தேசியம் பூண்டுள்ள ஆழமான உணர்வைத் தீண்ட முடியாது. என்பதனை உண்மைத் தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
              இனவரைவின் அடிப்படையில் தமிழ்ப்புத்தாண்டு:-
                   தமிழர்களின் முன்னோரில் ஆழ்ந்த நினைவு அலைகளை எழுப்பும் அவுணர் ஒர் கூட்டியக்கமாகக் கோட்டை கட்டியும் முருகனை முதன்மைப் படுத்தியும், தமிழ்த்தேசிய அரசைக் கட்டியெழுப்பும் தவமுயற்சியே தமிழ்ப்புத்தாண்டுப் புரிதல் ஆகும். உரிய முறையில் தக்கார் இனம் தலையெடுக்கும். தலையெடுத்துச் சில அடிப்படை வேலைகளைச் செய்யும். அவற்றுள் முதன்மையானது இனவரைவு ஆகும்.
                              தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
                              செற்றார் செயக்கிடந்தது இல்    -- (திருக்குறள்-446)

                   வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
                    தகை மாண்ட தக்கார் செறின்   -- (திருக்குறள்-897)

                              தெரிந்தஇனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
                    அரும்பொருள் யாதொன்றும் இல் – (திருக்குறள்-462)

                   இவற்றுள் தக்கார் இனம், தகை மாண்ட தக்கார், தெரிந்த இனம் என்பதெல்லாம் திருத்தகுதியுடைய திருத்தக்கார் ஆவர்.
              திருக்குறளும் தமிழ்ப்புத்தாண்டும்:-
                   சங்க இலக்கியங்களின் அகப்புறச் செய்திகளின் பிழிவாகவே திருக்குறள் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கை தமிழறிஞர்களிடையே இருக்கிறது. திருக்குறள் ஆக்கப்பட்ட காலத்தில் வேறு வேறு நூல் மரபுகளும் தொழில் மரபுகளும் தமிழ்ப்புத்தாண்டினைப் புரியும் படி உணர்த்தியிருக்க வேண்டும். எல்லாம் அறிந்தும் தமிழ்ப்புத்தாண்டுப் புரிதலை திட்ட மிட்டு மறைத்தாரா வள்ளுவர் என்று எவரும் ஐயப்படலாம்.
                              அழுக்காறு என ஒருபாவி திருச்செற்றுத்
                              தீயுழி உய்த்து விடும்  - (திருக்குறள்-168)
                  
                   ஊழி என்பது ஆண்டுத் தொடர்ச்சி அதன் சீர்மையே திரு. அதனை மறைத்து ஊழ் என்ற கருத்தியலை அயன்மை இனப் பார்வையில் வலிந்து திணித்தாரா என்றும் ஐயப்படலாம். ஒருவேளை தமிழ்ப் புத்தாண்டுப் புரிதலில் வள்ளுவன் குற்றவாளி என்று தெரிந்தால் வள்ளுவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் துணிச்சல் எவருக்கு வருமோ அவரே தக்கார். தம் கொம்புகளால் தன்னை அடக்க வரும் வீரனை குத்தித் தூக்கி எறிந்து கால்களால் மிதித்து துவைக்கும் கொல்லேறுகள் போன்றோர் தக்கார். அதனால் தூக்கி போட்டு மிதிக்கும் ஆற்றல் என்பது அறச் சீற்றத்தின் வெளிப்பாடு. அது தமிழ்ப் புத்தாண்டின் சீற்றமும் ஆகும். எந்த வள்ளுவனை விடவும், வல்லவனை விடவும் தமிழ் தமிழ் உயர்ந்தது.

              திருக்குறளை உயர்த்திப்பிடிக்கும் அயன்மை இனம்:-
                   திருக்குறளை உயர்த்திப் பிடித்துத் தமிழ் இனவரைவுக்கு உலைவைக்கும் அயன்மை இனம் இன்று பெருகி வருகிறது. இவர்களை விழிப்போடு கையாள வேண்டுமானால், வள்ளுவனுக்குச் சிலை எடுப்பது, பிறந்த நாள் கொண்டாடுவது, வாழ்க்கை வரலாறு எழுதுவது போன்ற எற்று வேலைகளில் ஈடுபடாமல், திருக்குறள் என்ன கூறுகிறது? மாங்குடி மருதனார் என்ன கூறுகிறார்? நக்கீரன் சொல்வது என்ன என்பது போன்ற திறனாய்வுப் பார்வையைத் தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்ப்புத்தாண்டுப் புரிதல் என்றுமே பகைச் சீற்றம் உடையதுதான்.

                   மனத்தால் மறுஇலரேனும் தாம் சேர்ந்த
                    இனத்தால் இகழப்படுவர் ---(நாலடியார் – 18-10)

                   தமிழர் தமிழர் அல்லாதார் என்ற இன வரைவின் முதல் அடையாளமே தமிழ்ப்புத்தாண்டுதான். தமிழ்ப்புத்தாண்டின் பகைவர்களைத் தமிழர்கள் தம் இனத்தின் பகைவர்களாகவே கருதுவர்.
              இவ்வாண்டின் முதல் ஒன்று கூடல்:
                   09.01.2016 அன்று இவ்வாண்டின் முதல் மறைநிலவு நாளில் வள்ளியூருக்கு அருகில் உள்ள தெற்கு கள்ளிகுளம் என்ற இடத்தில் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 2016-ன் முதல் ஒன்று கூடல் மற்றும் முழுநாள் கலந்தாய்வு இனிதே நடந்தது.
                   பணியா மரபின் உறுப்பினரும் தக்கார் அவையத்தின் உறுப்பினருமான தென்னவன் பனிவளன் அவர்களின் அழைப்பின் பேரிலும் ஒருங்கிணைப்பின் பேரிலும் ஏற்பாட்டின் பேரிலும் நடந்த அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. உணவு அளித்த திரு தென்னவன் பனிவளன் அவர்களுக்கு நன்றி.
                   தமிழ்ப் புத்தாண்டுப் புரிதலில், ஓராயிரம் தமிழறிஞர்களோடு வகைப்படுத்திக் கொண்ட அறிவுத்துறை வல்லுநர்களை இணைத்து இயங்கும் அமைப்பாக மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தினை வடிவமைத்திடும் ஆண்டுத் திட்டம் பற்றிப் பேசப்பட்டது. சில முடிவுகள் எட்டப்பட்டன. தமிழ்த் தேசியத்தின் எழுச்சி என்பது தமிழ்ப் புத்தாண்டினை முதல் படிக்கட்டாக கொண்டுள்ளது என்பதனைப் புரியும்படி எடுத்துச் சொல்ல இவ்வாண்டில் பல உத்திகள் வகுக்கப் பட வேண்டியிருக்கிறது. அது பற்றிய அக்கறை உள்ளவர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது.
              >>>OOO000OOO<<<
                   மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 இன் வெளியீடு

              2 (2015) தமிழ்த்தேசியமும் -தமிழ்ப்புத்தாண்டும் - தைப்பொங்கலும்- வானவியலும்

                1 post in this topic


                தமிழ்த்தேசியமும் - மகாமகம், சமணமும்

                  1 post in this topic


                  மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016
                  4-ஆம் பதிவு
                  நாள்: 16.02.2016
                                      
                  பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் மூன்றாவது முழு நிலவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
                  ஆண்டின் முதல் நாள் ................15.12.2015
                  முதல் முழுநிலவு ........................25.12.2015 ................................. தோல்வி
                  முதல் மறைநிலவு.........................09.01.2016 ................................. வெற்றி
                  இரண்டாவது முழுநிலவு ........ 23.01.2016  ................................ தோல்வி
                  இரண்டாவது மறைநிலவு ....... 07.02.2016 .................................. வெற்றி
                  இவ்வாண்டின் இரண்டு முழுநிலவுகளான தைப்பூசமும், மாசிமகமும் முறையே ஒவ்வொரு நாள் குறைவுபட்டு 14-ஆம் நாளில் அமைந்து விட்டபடியால் மூன்றாவது முழுநிலவாகிய பங்குனி உத்தரமானது 22.02.2016-ல் அமைந்தால் வெற்றி பெற்றதாகக் கொள்ளலாம்.
                  எண்ணாட் திங்கள்:-
                       15.02.2016-ல் எட்டாம் நாள் வளர்பிறையானது சரியாக அரைவட்டமாகச் சரியாக மாலை 6-மணிக்குச் சரியாகத் தலை உச்சிக்கு மேல் தோன்றியிருக்க வேண்டும்.
                  இதுவரை பிழையில்லை:-
                       15.02.2016 மாலை 6 மணிக்கு அரைவட்டம் சரியாகப் பொருந்தியிருந்தாலும் 45 மணித்துளிகள் பிந்தித் தோன்றியபடியால் இம்முறையும் முழுநிலவு பதற்றத்துடனேயே நெருங்கி வருவதாகக் கருதலாம். எட்டாம் நாளுக்குப் பிறகு வரும் 7 நாட்களிலும் தடுமாற்றம் நிகழ்கிறது என்று தெரிகிறது.

                  மகாமகம் என்ற நிகழ்வு:-
                       கதிரவன் தனது தென்செல்வினை முடித்து 15.12.2015-ல் திரும்பத் தொடங்கிய பின் 12+30=42-ஆம் நாளில் மகம் அமைய வேண்டும். ஆனால் இன்று 12+30+30=72-ஆம் நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இதுவரை இரண்டு நாட்கள் குறைவு பட்டதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
                  பிழை:-
                        இது தான் பங்குனி உத்தரம் என்று எடுத்துச் சொல்லும் துப்பு ஒருவரிடமும் இல்லாது போன படியால், மந்தைகள் போல தமிழ் மக்கள் கிழடு கெட்டைகளை அள்ளிக் கொண்டு போய் குளம் குட்டையில் மூழ்கடிக்கும் கோமாளிக் கூத்து நிகழ்ந்து வருகிறது, அரசின் முழு அக்கறையோடு. இது தவறு. நெருங்கி வரும் முழுநிலவு மகம் இல்லை. உத்தரம்.
                  தமிழ்ப்புத்தாண்டு:-
                       தமிழ்ப்புத்தாண்டு என்பது ஆண்டுக்கு ஒரு முறை தெரிந்து கொள்ள வேண்டியது என்று கருதினால் அது தவறு. ஒவ்வொரு வளர்பிறையும் அதன் நிறைவில் முழுநிலவும், ஒவ்வொரு தேய்பிறையும் அதன் நிறைவில் மறைநிலவும், வடசெலவும், தென்செலவும், பன்னிரு இராசி மண்டலங்களின் இருக்கையும் தெளிவாகச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றன நாளும் கிழமையும் பொருந்துவதையும், முரண்படுவதையும்.
                  நாம்தான் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம்.
                  தலை மயங்கிய தமிழர்கள்:-
                       பார்ப்பனர்கள் மற்றும் தமிழர் அல்லாத அயன்மை இனங்கள் பலவும் தமிழின்பால் ஈர்க்கப்பட்டும், மதிப்புக் கொண்டும் தமிழர்களாக வாழ முயற்சி செய்யலாம். அனால் தமிழர்கள் ஒரு போதும் பார்ப்பனர்களையோ அல்லது தமிழர் அல்லாத அயன்மை இனங்களையோ பின்பற்றி வாழ முயற்சிக்கக் கூடாது. அது உலகத்தாரைக் குழப்பி விட்டு விடும்.


                  தமிழ்ப்புத்தாண்டு வழிநடத்தும்:-
                       தமிழ்ப்புத்தாண்டு என்பது தமிழர்களின் அனைத்து வாழ்வியல் நிகழ்வுகளையும் வழிநடத்தும் ஆற்றல் உடையது. அந்தப் புரிதலில் தற்போது அறம் தடுமாறி ஆண்டுச் சரிவு நிகழ்ந்து கொண்டு இருப்பதை உணர்ந்தும் உலகுக்கு உணர்த்தியும் பல்லுயிர்களையும் காக்கும் பெரும் பொறுப்பு தமிழர்களுக்கு இருக்கிறது.
                  மன்னன் இராசராசனின் விழிப்புணர்வு:-
                       ஆண்டு நாட்களை 360 என மீட்டெடுத்து ஒவ்வொரு 30 நாளிலும் சங்கராந்தி கடைப்பிடித்த ராசராசன் 12 திருச்சதையத் திருவிழாக்களையும் கொண்டாடி 13வது திருச்சதையமாகத் தைத்திங்கள் முதல்நாளை ஆட்டைப் பெரிய திருவிழாவாகத் திருப்பறையறைந்து கொண்டாடினான்.
                       அந்த அறிவு இன்று மீண்டு எழுகிறது. அதற்கு ஓகியர் கூட்டு முயற்சி செய்திட வேண்டும். மரபு வழி அறிவுத்துறைகள் துலக்கம் பெற்று வல்லுநர்கள் அணிவகுக்க வேண்டும். அதுமட்டும் அல்லாமல் பழந்தமிழ் மரபு துலங்கி வருவதைக் கண்காணிக்க வேண்டும்.
                  பழந்தமிழ் வழிகாட்டுகிறது:-
                        இன்று தமிழ்ப்புத்தாண்டுப் புரிதலைப் பழந்தமிழ் ஏற்படுத்தி வருகிறது. இது பழம் பாண்டியர்களின் நிலையான நினைவு அலைகளில் இருந்து மீண்டு எழுகிறது என்று கருத இடம் இருக்கிறது. இது ராசராசனின் பின்னடைவை ஈடுகட்டும் என்று நம்பலாம்.
                  அடுத்தடுத்த முழுநிலவுகள்:-
                       22.02.2016-ல் வரவேண்டிய முழுநிலவு பங்குனி உத்தரம் என்றால் அதனை அடுத்து வரும் ‘4’-வது முழுநிலவானது சித்திரை முழுநிலவாகும்.
                  தூக்கி எறிய வேண்டும்:-
                       சித்திரை முழுநிலவுக்கு முன்னதாகவோ பின்னதாகவோ பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஒரு நாளைப் புத்தாண்டு என்று அறிவித்து அதனைத் தமிழ்ப்புத்தாண்டு என்று வற்புறுத்த மகாமகக் கோமாளிகள் முழு அரச முயற்சியையும் மேற்கொள்வர். அதனை ஒவ்வொரு தமிழனும் சிறாவயல் மஞ்சுவிரட்டுக் காளைகளைப் போலத் தூக்கி எறிய வேண்டும்.
                  மாற்று உருவில் சமணர்:-
                       குமார், நந்தன், கோவிந்தன், அந்தணர், பகவான், இலக்குமி, இப்படியாக, இப்படியாக சமணர்களின் கருத்துருவாக்கம் நீள்கிறது. இவையெல்லாம் தமிழர்களின் செவ்வேற்சேய் முருக வழிபாட்டை ஆட்டையைப் போட்ட சமண, ஆசிவக மாறாட்டங்கள். இவர்களே மகாமகம், தீபாவளி போன்ற நிகழ்வுகளைக் கொண்டு தமிழர்களை மூளை ஊடறுப்புச் செய்து வருகிறார்கள். இவர்களிடமிருந்து முற்றாகத் தமிழர்கள் விடுபடப் பழந்தமிழைப் பற்ற வேண்டும்.
                  ...---000OOO000---...

                  இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 இன் வெளியீடு

                    பொங்கு தமிழ்மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015
                    2-ஆம் பதிவு
                    10.01.2015
                    இனிய தமிழ்ப் புத்தாண்டு எப்போது?
                              சித்திரைத் திங்கள் முதல்நாளைப் புத்தாண்டு என்று கருதுவது ஆரிய வைதிக நம்பிக்கை. அதனைத் தமிழ்ப்புத்தாண்டு என்று வற்புறுத்துவது அரசியல். அன்று வருடை இராசி பிறப்பதாகக் கருதுகிறது பஞ்சாங்கம். வருடை இராசி பிறந்தது என்பதை வானவியல் அடிப்படையில் உறுதி செய்ய வல்லுநர்கள் இல்லை. சித்திரையில் குழந்தை பிறப்பதைக் கூட விரும்பாத தமிழர்கள் மீது சித்திரையில் ஆண்டுப் பிறப்பைச் சுமத்துவது வன்முறை.
                              அதே பஞ்சாங்கத்தின் படியான தைத்திங்கள் முதல் நாளைப் பொங்கல் நாள் என்று தமிழக அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. அந்த நாள் இந்த ஆண்டிற்கு சனவரி 15 என்று தெரிகிறது. பஞ்சாங்கம் சொல்கிறது என்பதைத் தவிர வேறெந்த அடிப்படையும் இல்லாத இந்த வரையறை உண்மையான தைத்திங்கள் முதல் நாளைத் தொட்டுக் காட்டுவதாகக் கொள்ள இயலாது.
                              தைத்திங்கள் முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு நாளும் பொங்கல் நாளும் ஆகும் என்ற மரபு வழி நம்பிக்கைக்குப் பிறரின் நற்சான்றிதழ்கள் தேவையில்லை. ஆனால் பஞ்சாங்கப் பாசத்தால் அது குறிப்பிடும் நாளைத்தான் ஏற்றுக் கொள்வேன் என்று யாரும் கூறினால் அது தள்ளத்தக்கது.
                    அண்மைக்கால ஆய்வுகளின்படி தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு  என்றும், அந்த நாள் வானவியல் நிகழ்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிகிறது.
                    அவ்வாறு உறுதிசெய்ய முற்பட்டபோது தெரிந்த அதிர்ச்சியான உண்மை யாதெனில் என்றூழ்
                    (...என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
                    ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும....    பரிபாடல் 19 : 47-48)
                    எனப்படும் ஆண்டுச் சரிவு தற்போது நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது தான். இவ்வாறான காலக் கட்டங்களில் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை. மாறாக உண்மை நிலையைக் கண்டறிந்து அதனைச் சரிசெய்ய முற்பட்டு இருக்கின்றனர்.
                              உண்மைத் தமிழர்களைத் தவிர வேறுயாரும் உரிய நாளில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட முன்வர மாட்டார்கள் என்பது வரலாறு தரும் படிப்பினை.
                              பார்ப்பனர்கள் ஏமாற்றியது பாதி, பஞ்சாங்கம் ஏமாற்றியது மீதி என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. உண்மையைப் புரிந்து கொள்ள சங்க இலக்கியங்கள் உதவிக்கு வருகின்றன. மாநாகன் இனமணி (1-50) என்ற ஒற்றைப்பக்க ஓவியச் சிற்றேடு தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான பழந்தமிழ் சான்றுகளின் ஒரு பகுதியை முன்வைத்திருக்கிறது.
                              ஆங்கில ஆண்டு 2015-க்கு இணையான தமிழ் ஆண்டு, வானவியல் அடிப்படையில் 24.12.2014 அன்று பிறந்து விட்டது. 15.01.2015 அன்று மக்கள் கொண்டாடவிருக்கும் பொங்கல் என்பது தமிழ்ப்புத்தாண்டின் 23-வது நாள் என்பதனை உண்மைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
                              ஆடு துவன்று விழவு, ஆடியல் விழவு, ஆட்டைப் பெரிய திருவிழா என்றெல்லாம் பழந்தமிழர்கள் கொண்டாடிய தமிழ்ப்புத்தாண்டு நாளை முரசு அறைந்து அரசே அறிவிக்கும் நாள் விரைவில் வரும் என்று நம்பலாம். அந்த அரசு தமிழ்த் தேசிய அரசாக இருக்கும் என்பது கோட்பாட்டு அடிப்படையிலானது. அதாவது, தமிழ்த் தேசிய அரசு அமைந்தால் உரிய நாளில் தமிழ்ப்புத்தாண்டினை அறிவிக்கும் என்பதும், உரிய நாளில் தமிழ்ப்புத்தாண்டினை அறிவித்தால் தமிழ்த் தேசிய அரசு அமையும் என்பதும் உண்மையும் உண்மையின் மறுதலையும் ஆகும்.
                     தமிழ்த்தேசியம் தழைக்க தேவை - தைக்கூட்டணி

                      1 post in this topic


                      மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016
                      3-ஆம் பதிவு
                      நாள்: 27.01.2016
                          
                                      பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் இரண்டாவது மறை நிலவு தோல்வியுற்றது. வளர்பிறையின் முறை முற்றாமல், நாள் முதிர்வு எய்தாமல், நாளும் கிழமையும் ஒரு சேரப் பொருந்தாமல் 14-ஆம் நாளில் முழு நிலவானது முந்திக் கொண்டு வந்து விட்டது.
                           23.01.2016 அன்று மாலை 06.15-க்குக் கீழ்வானில் ஒரு பனை உயரத்தில் தோன்றி அன்று இரவு 12.15-க்குத் தலை உச்சியைக் கடந்து விடியும் வரையில் தாக்குப் பிடித்தது. இவை முழுநிலவு நாளுக்கான அறிகுறிகள். ஆனால் அன்றைய நாள் முழுநிலவின் முதல் நாள்.
                           முறையாக முழுநிலவு தோன்ற வேண்டிய 15-ஆம் நாளான 24.01.2016 அன்று முன்னிரவு 7.30-க்குத் தோன்றியதுடன் வளர்பிறை விலகல் என்ற ஆடுதலைப் போக்கின் 14-ஆம் நாள் எட்டிய வட எல்லையிலிருந்து மீண்டு தெற்கு நோக்கி விலகித் திரும்பி விட்டது. இவை முழு நிலவின் மறுநாளுக்கான அறிகுறிகள்.
                           இவ்வாண்டில் இதுவரையில் இரண்டு முழுநிலவுகள் முறையே ஒவ்வொருநாள் தோற்றுள்ள படியால் ஆண்டு நாள்களின் எண்ணிக்கையில் இரண்டு நாட்கள் குறைந்து விட்டன என்பது கவலையளிக்கிறது.
                      கேடு வரும்!
                            கேடு வரும் பின்னே! மதிகெட்டு வரும் முன்னே!
                      என்று ஒரு பழமொழி தமிழில் வழங்கி வருகிறது. இது தனியொருவரைக் குறிக்கலாம் என்ற கருத்து இதுவரை இருந்தது. காலம் கெட்டுக் கிடக்கிறது. இது கேடு காலம், என்றூழ் என்ற பார்வையில் மதியுறழ் மரபின் முதியோர் அறிவின்படி அது நிலவைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த மதி கெட்டு வருகிறது இன்று. எந்தக் கேடு எதிர் வருமோ நாளை என்று கலங்க வேண்டிய நிலைமை அறநெஞ்சம் கொண்ட அனைவருக்கும் இருக்கும். இருக்க வேண்டும்.
                      வளர்பிறையில் சரிவு:
                           தக்கார் அவையத்தார் கடந்த நான்கு ஆண்டுகளாக நாளெண்ணிப் பிறை கணக்கிட்ட அளவில் சரிவுகள் அனைத்தும் வளர்பிறையில் மட்டுமே நேர்வது தெரிய வருகிறது. தேய்பிறையின் 15 நாள்களில் சரிவுகள் நேர்வது இல்லை.
                           இதனால் ஐயப்பட வேண்டியது யாதெனில் இந்தக் கேடு மாந்த முயற்சியினால் விளைகிறதா என்பது தான். குறிப்பாக யாகங்களும் ஓமங்களும் வளர்பிறையிலேயே செய்யப்படுகின்றன. இவை நிலவைத் தடுமாறச் செய்யும் முயற்சிகளா என்பதனை அக்கறையோடு ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
                      அந்தணர் வேள்வியா? அவுணர் வேள்வியா?
                                      முருகனின் ஆறு முகங்களுள் மூன்றாவது முகம் கிழமை வரிசையில் செவ்வாய்க் கிழமையைக் குறிப்பதாகும். செவ்வாயில் நடத்தப் பெற்ற அவுணர் வேள்வியைச் சிதைத்து வெள்ளியில் அந்தணர் வேள்வி நடத்திவிட்டனரோ சமணர் என்ற ஐயம் எழுகிறது. அந்தணர் என்ற சொல் சீவக சிந்தாமணியில் சமணர் தலைவனைக் குறிக்கிறது. அந்தணர் தாதை! மேலும் இன்று தரையில் அமர்ந்து கொண்டு குழிதோண்டித் தீ வளர்த்து தருப்பையைப் பொசுக்கி மந்திர ஒலிப்புகளை முணுமுணுக்கும் அனைத்துக் கிரிசைகளும் சமணக் கிரிசைகள் என்பது ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் உண்மை.
                           இந்தச் சமணர் வேள்வியை, அந்தணர் வேள்வியைப் பார்க்க முருகன் தனது ஒரு முகத்தை ஒதுக்கி வைத்துள்ளான் என்பதும் நம்ப இயலாதது.
                      “ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அவுணர் வேள்வி ஓர்க்கும்மே”(திருமுருகாற்றுப்படை – 95,96)
                      ஓலைச்சுவடிகளில் இந்த அடி அந்தணர் வேள்வி என்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
                      செவ்வாய் சரியாக இருக்கிறது:-
                           செவ்வாய்க் கிழமையாகிய மறைநிலவு நாள் சரியாக இருக்கிறது. வெள்ளிக் கிழமையில் பொருந்த வேண்டிய முழுநிலவு மட்டும் தடுமாறுகிறது. இது சண்டாளர்களின் செயலா இல்லையா என்று ஏன் ஐயப்படக் கூடாது. சண்டாளக்குச்சி என்பது கருக்கலைப்பு செய்யப் பயன்படுத்தும் எருக்கலைக் குச்சி. அடி சண்டாளப் பாவி என்றால் ஈவு இரக்கம் இல்லாமல் கருக்கலைப்பு செய்கிறவளே என்று புரிந்து கொள்ளப்படுகிறது. முழுநிலவைத் தடுமாறச் செய்து விட்டு மூடி மறைக்கும் சண்டாளர்கள் எங்கே? முழுநிலவை அரவு தீண்டி விடாமல் பொத்திப் பொத்திக் காப்பாற்றிய தமிழ் அரசர்கள் எங்கே? ஆரிய வைதிக வாழ்வியல் தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல. நிலவுக்கும் எதிரானது என்று தெரிகிறது.
                      மண்ணை அள்ளிப் போட்டது பஞ்சாங்கம்:-
                           இது சரி அது தவறு என்று சுட்டிக் காட்டத் தவறிய பஞ்சாங்கம் கள்ளம் இல்லாத தமிழர்களின் மரபறிவை, வாழ்வியலை முற்றாகச் சிதைத்து விட்டது.
                           அரச மரபின் முன்னோன் முருகனின் மீது தமிழர்கள் கொண்டிருந்த அடங்காப் பற்றின் விளைவாகப் பார்த்துப் பார்த்துக் குமட்டில் வேல் குத்திக் கொள்ளும் எவரும் அந்த நாள் சரியானது தானா என்று பார்ப்பதில்லை. கடந்த பங்குனி உத்தரம் முடிந்த பிறகு மறுநாளில் வந்தது முழுநிலவு. பூசம் வரும் நாளைக் காத்திருந்து எதிர்பார்த்துக் காவடி எடுக்கின்றனர். இவ்வாண்டின் முதல் நாளே முந்தி விட்டது முழுநிலவு. இந்த நிலவே மக நிலவு என்பது வேறு செய்தி. தை முதல் நாளைப் பஞ்சாங்கப்படி எதிர்பார்த்துப் பொங்கலிடுகின்றனர், கதிரவன் என்றோ திரும்பிச் சென்ற பிறகு.
                           அப்படியே பொங்கலிடப்பட்டாலும் அதை மொட்டைப் பொங்கலாக வைத்துக் கொள்! புத்தாண்டு என்று சொல்லாதே என்று அலறுகிறது ஆரிய வைதிகம்.


                      கடந்து சென்றது தைப்பூசம் அல்ல!
                           கடந்த 24.01.2016 அன்று பஞ்சாங்கத்தின் படி தைப்பூசம் கொண்டாடப் பட்டது. உண்மையில் அது தைப்பூசம் அல்ல. மாசிமகம்.
                                      மழை நீங்கிய மாவிசும்பில்
                                      மதி சேர்ந்த மக வெண்மீன்
                            உருகெழு திறல் உயர் கோட்டத்து
                            முருகு அமர் பூமுரண் கிடக்கை (பட்டினப்பாலை – 34-37)
                          
                           கரிகாலனின் அரண்மனையில் மாசி முழுநிலவு மக வெண் மீனுடன் தோன்றியதாகக் குறிப்பு இருக்கிறது. இன்று மக வெண்மீன் பொருந்தி வரவில்லை. ஆண்டு நாட்களில் சரிவு நீங்கிச் சீரடைந்தால் மட்டுமே தைப்பூசத்தில் அறுமீன் நள்ளிரவில் பொருந்துவதை, மாசியில் மகவெண்மீன் பொருந்துவதை, சித்திரையில் சித்திரை மீன் சேராமல் செல்வதை ஒவ்விப் பார்த்து உறுதி செய்ய இயலும்.

                      அடுத்த மறைநிலவு:-
                                      கடந்த 23.01.2016-ல் முழுநிலவு தோற்றுக் கடந்து விட்ட நிலையில் அந்த நாளைத் தவிர்த்துச் சரியாக 15-ஆம் நாளில் அதாவது 07.02.2016 அன்று மறைநிலவு நாள் அமையும். அன்றைய நாளைச் செவ்வாய்க்கிழமையாகக் கணக்கிட்டு ஒவ்வொரு நாளையும் உரிய முறையில் கட்டியெழுப்பினால் அடுத்த 15-வது நாளில், அதாவது 22.02.2016 அன்று முழுநிலவை எதிர்பார்க்கலாம். அன்று பங்குனி உத்தரம் ஆகும்.

                      பெருந்தச்சு நிழல் நாள்காட்டி:
                           ஆண்டு நாட்களை 360 என வரைவு செய்து, வாரநாட்களை 6 என வரைவு செய்து, சனிக்கிழமைக்குப் பாடைகட்டி, அவிட்ட நட்சத்திரத்தை முற்றாக நீக்கித் தமிழின் 41 செவ்விலக்கிய வியப்புகளைப் பலநூறு முறை பார்த்துச் சில ஆண்டுகள் காத்திருந்து வடிவமைக்கப்பட்ட பெருந்தச்சு நிழல் நாள்காட்டி என்பது எந்தத் தமிழனாலும் புரிந்து கொள்ள இயலும் எளிமையான வாய்ப்பாடு ஆகும்.

                      குப்பையும் நெருப்பும்:-
                           பெருந்தச்சு நிழல் நாள்காட்டியானது பஞ்சாங்கத்தைச் சுட்டெரிக்கும் நெருப்பாக எழுமேயன்றி பஞ்சாங்கத்தோடு கூட்டு வைத்துக் கொண்டு ஒரு போதும் புகையாது.

                      தமிழர்கள் செய்ய வேண்டியது:-
                           உண்மைத் தமிழர்கள், தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் தங்களுக்குள் வழிகாட்டும் ஒரு குழுவைக் கட்டமைத்து அதன் வழியே நடக்க வேண்டுமேயன்றிக் கடைத்தெருவில் விற்கப்படும் பஞ்சாங்கத்தைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றக் கூடாது. பின்பற்றச் சொல்லி எவர் வற்புறுத்தினாலும் பணியவும் கூடாது.

                      பஞ்சாங்கத்தை உடைப்பதும் திருத்துவதும்:-
                           தற்போது கண்டெறியப்படும் பிழைகளுக்கெல்லாம் தீர்வாகப் பஞ்சாங்கத்தில் ஒரு திருத்தம் போட்டு விட்டால் சரியாகிப் போகாதா? என்ற பார்வை எவருக்கும் வராது. வந்து விடக் கூடாது. அது அயன்மை இனப் பார்வை. மாறாகத் தற்போது கண்டெறியப்படும் பிழைகளுக்கெல்லாம் தீர்வாக ஒரு மாற்றுப் பார்வையைத் தமிழர்கள் வளர்தெடுப்பதும், மரபு வழியில் வாழ்வியலைப் புதுப்பித்துக் கொள்வதுமே பொருத்தமான புரிதலைத் தரும். பஞ்சாங்க நம்பிகளையும் அவிட்டப்பாதை அம்பிகளையும் அம்போவெனக் கைவிடுவதே சரியான முடிவாகும். பஞ்சாங்கத்தை உடைப்பது திருத்துவது இவற்றை விடுத்து ஒதுக்கி வைப்பது மட்டுமே அடுத்த தலைமுறையை வாழ வைக்கும்.

                      அரைசு எனப்படுவது தைக் கூட்டணி அரசு:-
                           தமிழர்களின் அறம் சார்ந்த அரசு, தமது அறிவுத் துறைகளை வகைப்படுத்தி முழுநிலவைத் தடுமாற விடாமல் அரவணைத்து அரவு தீண்ட விடாமல் அணைத்து,ஆடுகொள் நேமி கொண்டு அரவு அணை அசை இய முன்னோன் கலித்தொகையில் உள்ளான். இருக்கட்டும். இன்று மீண்டும் தைக்கூட்டணி அமைத்து ‘அரைசுதல்’ எனும் மொழிவினையின் மூலமாகக் காப்பாற்றும் கடப்பாடு உடையது.

                      இதில் தமிழர்கள் நேரடியாக ஈடுபட இன்றே, இன்னே, இப்பொழுதே பொருத்தமான நாளும் பொழுதும் ஆகும்.
                      தமிழர் அல்லாத அரசுகள்:-
                            இன்றைய நிலையில் இவ்வுலகில் தமிழர் அல்லாதாரின் அரசுகளே பரவிக் கிடக்கின்றன. இவற்றில் எவையேனும் நிலவை ஒழுங்கு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறுவதாக அறிவிப்புச் செய்தால் அந்த அரசுக்குப் பிற அரசுகள் அனைத்தும் கிளை அரசுகள் ஆகும். அதாவது கப்பம் கட்டும் அரசுகள் ஆகும்.
                                      கப்பத்து இந்திரன் காட்டிய நூலின்
                            மெய்ப்பாட்டு இயற்கையின் விளங்கக் காணாய்
                                                      (சிலம்பு – காடுகாண் காதை – 144, 45)

                           தெளி உச்சியை ஒருவன் கவ்வி விட்டால் அல்லது கப்பி விட்டால் அவனது முயற்சியைப் பிறர் வலுப்படுத்துவது என்பதே இதன் வழியே விளங்கிக் கொள்ள வேண்டிய உண்மை.
                           அப்படி ஏதும் எங்கும் தென்படாத நிலையில், அந்த முயற்சியில் ஈடுபடவும், எடுத்து நிறுத்தவும், துப்பும் துணிச்சலும் உடைய அரசு என்பது தமிழர்களின் அரசுதான். அந்த அறிவைத் தாங்கியுள்ள மொழி தான் தமிழ்மொழி.
                           நெடுநீச்சால் எடுத்த அவுணர் மூச்சாக அந்த மொழியின் மூச்சுக் காற்றை ஏந்தி வரும் இனம் தமிழ் இனம். அதற்குக் கொம்பு முளைக்கும்! கோலோச்சும்! கொற்றமும் கொள்ளும்.

                      தேங்கிய இடத்தில் அதிர்வு:-
                           தேங்கிய இடத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றல் என்பது தமிழ்ப் புத்தாண்டுப் புரிதலுக்கு இருக்கிறது.
                           சித்திரையைக் கட்டிக்கலாம். தையை வைச்சுக்கலாம். அதை அதை அப்படி அப்படியே வைச்சுக்கலாம். அரிப்புக் கண்ட இடங்களில் மட்டும் குரங்குகள் போல் தொட்டுக் கொள்ளலாம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
                           சித்திரைதான் புத்தாண்டு! அதுவும் தமிழ்ப்புத்தாண்டு! என்று சட்டமியற்றித் தமிழர்களை முட்டாள்களாக்கும் எவரது முயற்சியும் இனி எடுபடாது.
                           தமிழ்ப்புத்தாண்டு என்பது தை முதல் நாள் தான். ஆனால் அதைப் பஞ்சாங்கம் தான் சொல்ல வேண்டும். பழந்தமிழ் சொல்லக் கூடாது என்று பசப்புகிறவர்களின் பம்மாத்து வேலைகள் இனி எடுபடாது.
                           தமிழ்ப்புத்தாண்டு என்னவோ தை முதல் நாள்தான். ஆனால் ‘பயந்து வருதே’ என்று தொடை நடுங்கிக் கொண்டு பூசத்தைப் பற்றிக் கொள்ளும் பேதைமைக்கு இனி வேலை இல்லை.
                           எரிந்து வரும் கதிரவனையும், சரிந்து வரும் ஆண்டு நாட்களையும் புரிந்து கொள்ளும் இளைய தலைமுறை ஊற்றமாய்ப் பாயும். தமிழர் மரபில் பாயும் காளைகளுக்குத் திமிலையும், பாயும் காளையர்க்குத் திமிரையும் தரும் பணியாமரபின் பேராண்மையே தமிழ்த் தேசியத் தமிழ்ப் புத்தாண்டு ஆகும். அது அதன் பண்பு.


                      மண்ணைப் போட்டு மூடலாம்:-
                           தமிழ்ப் புத்தாண்டுப் புரிதல் என்பது தமிழ்த் தேசியப் புரிதலுக்குப் பயன்படவில்லையென்றால் இன்னும் சில காலத்திற்கு அதன் மீது மண்ணைப் போட்டு மூடலாம். தமிழ்த் தேசியப் பகைவர்களின் இயற்கை மாரணங்கள் நிகழும் வரை.

                      தமிழ் உயர் ஆய்வில் அயன்மை இனப்பார்வை:-
                           தமிழ்மொழி ஒன்றும் பொது மொழி இல்லை. ஓர் இனத்தின் மொழி.
                          
                           தண்தமிழ் பொதுஎனப் பொறாஅன் (புறநானூறு-51-5)

                           தமிழர்களின் அறிவு நுட்பத்தின் மீது மதிப்புக்கொண்டு பலரும் ஆய்வுப் பங்களிப்புச் செய்து வருகிறார்கள். அவர்களது பார்வையில் தன்னினப் பார்வையும் அயன்மை இனப் பார்வையும் கலந்தே காணக் கிடக்கிறது. ஆனால் தமிழ்ப்புத்தாண்டு பற்றிய உயர் ஆய்வில் மட்டும் அயன்மை இனப் பார்வையை மிக அழுத்தமாக எடுத்து வைக்கிறார்கள். இதனை உண்மைத் தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

                      தைக் கூட்டணி:-
                           தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டாக ஏற்பதும், தமிழர்களை மட்டுமே தமிழர்களின் தலைவர்களாக ஏற்பதும் கோட்பாட்டு அடிப்படையில் ஆன தமிழ்த் தேசியப் புரிதல்கள் ஆகும். இரண்டுக்கும் அடி நிழல் என்பது இன வரைவே. அந்த அடி நிழலே அடிப்படையும் ஆகும். எந்தத் தமிழ்ச் சொல்லும் வலுவற்ற ஓர் எழுத்தை முதல் எழுத்தாகக் கொள்ளாது. தமிழர்களும் வலுவற்ற கொச்சையர்களைத் தலைவர்களாக ஏற்றுப் பல்லிளிக்க மாட்டார்கள்.

                      தமிழ்த் தேசிய ஆளுமைகள்:-
                           தலைவர் நெடுமாஅறனார் தமிழ்ப்புத்தாண்டு பற்றி என்ன செய்யச் சொல்லுகிறார்? தோழர் தியாகு என்ன சொல்கிறார்? தோழர் மணியரசன் என்ன சொல்லுகிறார்? தமிழறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? தமிழில் உயராய்வு மேற்கொள்ளும் நிறுவனங்கள் தீர்மானமாக என்ன சொல்கின்றன என்ற வினாக்களின் பட்டியல் என்னவோ நீளமாகத் தான் உள்ளது. சற்றொப்ப ஒரு நூறு வினாக்கள் உள்ளன. ஒரு நூறு விடைகளும் இருக்க வேண்டும். ஆனால் அது ஒற்றையாக அரசியல் அரங்கில் ஒலித்தால் அது தைக்கூட்டணியாக ஒலிக்கும் என்று கருதலாம்.


                      தோழர் மணியரசன்:-
                           தமிழ்த் தேசியக் கருத்தியலை அரசியல் முழக்கமாக முன்வைத்துக் கடந்த பத்தாண்டுகளில் புரியும்படி எடுத்துச் சொன்னவர்களில் தோழர் மணியரசன் முதன்மையானவர். அவர் ஓட்டு அரசியலை மறுக்கிறவர். அவரிடம் ஓட்டு அரசியலைப் பற்றி நோண்டி நோண்டிக் கேட்டால் தப்பாகவும் சொல்லுவார், குழப்பியும் விடுவார். ஓட்டுப் போடும் உரிமையைக் கொடுத்து விட்டு நீ தலைமை ஏற்காதே என்று சொன்னால் அது என்ன நேர்மை என்று கேட்கும் மணியரசன், தமிழர்களைத் தமிழர் அல்லாதாரின் தலைமைக்குப் பணிந்து போகச் சொல்லுகிறார். இந்தச் சூதாட்டத்தில் இது தான் விதி. நீ புறக்கணி என்கிறார்.
                           தெலுங்கர்களோடு பல்லைக் காட்டிப் பழகி விடுவது, கொடுக்கல் வாங்கலில் சிக்கிக் கொள்வது நாணயத்திற்குக் கட்டுப்பட்டு இருப்பதையெல்லாம் கொடுத்து விட்டு இழப்பை வெளியில் சொல்லாமல் நொந்து சாவது. இது தானே தமிழர்கள் ஓராயிரம் ஆண்டுகளாகப் பட்டு வரும் பாடு. தமிழர்களை மூளை ஊடறுப்புச் செய்து, இனம் கலைத்து, வயிற்றில் அடித்து, அறிவைச் சிதைத்து முட்டாள்களாக்கி மன்னன் இராசராசன் மீட்டெடுத்த ஆட்டைப் பெரிய திருவிழாவைக் களவாடி இன்றளவும் ரவுடித்தனம் செய்யும் தெலுங்கர்களுக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் என்னையா தொடர்பு இருக்க முடியும்?
                           துருவ அரசியல் என்பது கோழைகளின் அரசியல் உத்தி. கருணாநிதியும், செயலலிதாவும் செய்யலாம். ஆனால் தோழர் மணியரசனும், தம்பி சீமானும் செய்யக் கூடாது. இவர்கள் இருவரும் ஒரே மேடையில் பேசினார்கள் என்பதற்காகவே சிறையிடப்பட்டனர் என்பது வரலாறு. இன்று இருவரும் இரு துருவங்களை உருவாக்குகின்றனர் என்றால் அவர்கள் இருவருமே தெலுங்கர்களைப் பின்பற்றுகிறார்கள் என்பது தான் பொருள்.
                           ஒரு பயலும் ஓட்டுப் போடாதே! எல்லாரும் என் பின்னாடி ஒளிஞ்சுக்கலாம் என்று சொல்லும் தோழர் மணியரசன் அவர்களும், ஒரு பயலும் ஓட்டுப் போடாமல் இருந்து விடாதே எம் முப்பாட்டன் முருகனுக்கு அடுத்து நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறும் தம்பி சீமானும் தொடைநடுங்கும் இடம் தமிழ்ப்புத்தாண்டாக இருந்தால் அங்கே தான் பிழை என்பதைத் தமிழறிஞர்கள் நன்கு அறிவார்கள்.  அழகாக அமைதி காப்பார்கள். பேயாமலும் இருப்பார்கள்.
                           தைக் கூட்டணி என்பது தமிழ்த் தேசிய நுண்ணரசியலை உறுதியுள்ள கருத்தியல் கடைகாலாகக் கட்டமைக்கும். அறிஞர்களையும்,  வல்லுநர்களையும் இன உணர்வாளர்களையும் இனிதே போற்றும்.


                      எண்ணெய்ச் சீலை:-
                           தமிழர்களை முட்டாள்களாகவும், ஏமாளிகளாகவும், அரசியல் வலிமையற்றவர்களாகவும் கருதித் தப்புக் கணக்குப் போடும் அயன்மை இன அரசியல் தலைவர்கள், எண்ணெய்ச் சீலையை நாய் பிய்த்துக் கொள்வது போலத் தங்களுக்குள் அடித்துக் கொள்ள வேண்டுமானால், தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிப்பதும், வெற்றியைத் தட்டி எடுப்பதும் ஒற்றை அதிர்வில் ஏற்பட வேண்டும். அந்தச் செயலைத் தான் தைக்கூட்டணி களப்பணியாகவும், வேலைத்திட்டமாகவும் மேற்கொள்ளும்.

                      பருத்திக்கொட்டை:-
                           பச்சைப்புல், பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, வைக்கோல், கடலைக்கொடி, கிட்டிப் பிஞ்சு, வாகை இலை, பனங்குருத்து, குருத்தோலை, ஈச்சங்குருத்து இவற்றை, இவற்றை அன்றாட உணவாக உட்கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழ் இளைஞர்களை, தமிழினப் போராளிகளை, காளைகளைச் செல்லமாக வளர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
                           ஊருக்கு ஊர் காளை மன்றங்கள் அமைத்து, கொல்லேறு திரிதரு மன்றங்களை அமைத்து அவற்றோடு அன்றாடம் உழலை மரங்களைத் தொடுவது போன்ற பயிற்சியில் இளைஞர்கள் ஈடுபட்ட சான்றுகள் உள்ளன. ஏறு கோட்டைத் தொட்டுத் திரும்பும் ‘கபடியே’ ஒரு காலத்தில் தொகுப்பாகக் கட்டப்பட்ட காளைகளோடு இளைஞர்கள் மேற்கொண்ட விளையாட்டாக இருக்கலாம். காளைகளை வரிசையாக நிறுத்தி அவற்றின் கழுத்தோடு கழுத்தைப் பிணைகயிறு கொண்டு பிணைத்து இரு முனைகளையும் இரு மரங்களுக்கு இடையில் வலுவாகப் பிணித்து விட்டு ஒரு நேர்கோடு வரைந்து குறிப்பிட்ட தொலைவில் இருந்து ஒவ்வொருவராக மூச்சைப் பிடித்து ஏறு கோட்டைத் தொட முயல்வதும், ஏப்புக் காட்டுவதும், வெற்றி பெறுவதும், தோற்றுப் போவதும் விளையாட்டு. இடையில் பறையோசை வேறு. பாண்டிய மன்னனின் போர்ப்படையில் எதிரிகளின் வேலிகளையும் மண்சுவர்களையும் தகர்த்தெறியும் பணியைச் செய்திருக்கின்றன ஏறுகள். தமிழர்களின் அகவாழ்வுக் காவலனாக விளங்கி, ஓகியரைப் போல ஊர்சுற்றி, முரசுக்குத் தோல் தந்து, காயடிக்கப்பட்டால் பகடாகப் பாடுபட்டு, ஆண்மைக்கும், அஞ்சாத உழைப்பிற்கும் குறியீடாக விளங்கிய காளைகள் தமிழ் இனத்தின் கிளைப் பிறப்பாகவே போற்றப்பட்டு வந்திருக்கின்றன.

                      மஞ்சு விரட்டு:-
                           ஏறு தழுவுதல் என்ற சொல் உரையாசிரியர்களால் கையாளப்பட்ட சொல். ஏறுகளைக் கட்டிப் போட்டுக் கூட எதிரிகளால் தொட்டுப் பார்க்க முடியாது. கலித்தொகையில் மார்புறத் தழீஇ, தார்போல் தழீஇயவன் என இரண்டு செய்திகள் தன் காதலனை அடையாளம் காட்ட ஒரு பெண் பயன்படுத்துகிறாள். மற்றபடி தொழூஉப்புகுத்தல், கொல்லேறு கோடல் என்பது தான் இலக்கியச் சான்று. மஞ்சு விரட்டு, மஞ்சிவெருட்டு இரண்டும் வழக்குச் சொற்கள்.
                           மஞ்சு என்ற சொல் வெண் முகிலைக் குறிக்கும். ஓராண்டுக்கான மழையை முற்றாகக் கொட்டித் தீர்த்த பிறகு கொண்மூ ஏறு எனப்படும் தலைமைப்பண்புள்ள கருமுகில் கலைந்து விடும். ஆனால் அதன் எச்சமாகப் பஞ்சுப்பொதி  போன்ற வெண்முகில் மட்டும் இங்கும் அங்கும் அலையும். பரிசில் தேடி அலையும் பாணனைப் போல.
                           வெள்ளி மீனோடு கந்தகப் பொடித் தொடர்புடைய அந்த வெண்மஞ்சுக் கூட்டம் தெற்கே சென்று அடையுமே தவிர மீண்டும் கதிரவனோடு சேர்ந்து வடக்கே செல்லாது.சீர்சால் வெள்ளி வறிது வடக்கு இறைஞ்சி ஆடியல் நிற்கும் போது, மண்ணில் இருந்து அந்தப் பஞ்சுக்காற்றை விரட்டும் ஆற்றல் கொண்ட ஒரு போர்ப்படையைத் தமிழர்கள் போற்றினர். அதுவே மஞ்சு விரட்டுக் காளைகள். சில்வர் நைட்ரேட் (Silver Nitrate) வெள்ளி மீன் இவை மழையோடு தொடர்புடையன என்று இன்றைய அறிவியலும் நம்புகிறது. இந்த மஞ்சுக்கூட்டம் மீண்டும் பருவக்காற்றோடு சேர்ந்து அடுத்த ஆண்டின் மழையை அழைத்து வருகின்றன என்று தெரிகிறது.

                      தெண்கண் மாக்கினை:-
                           பறைக்கருவியில் ஒரு நுண்கோல் செருகப்பட்ட வடிவமாகத் தெண்கண் மாக்கினை என்ற கருவி இலக்கியங்களில் பேசப்படுகிறது. அக்கருவியை இசைத்தால் காளைகள் ஓடிவரும் என்று சான்றுகள் உள்ளன.
                           காளைகளின் கொம்புகளும், கொம்புகளின் இடைவெளியும், திமிலும், கொம்புகளுக்கும் திமிலுக்கும் ஆன இடைத்தொலைவும், சீறிப்பாயும் போது அத்தொலைவின் விரிவும், விரிவும் பெண்ணியல்பான பாவைக் கூறுகளோடும், பெண்களின் உடற் கூறுகளோடும் ஒத்த அளவு உடையன. இவற்றுக்கு வலுவான சான்றுகளைத் தமிழ் மரபின் ஓவிய நூல் காப்பாற்றி வந்திருக்கிறது. இவற்றுக்குத் தமிழ் சொற்களோடும். செய்யுள் கட்டமைப்போடும் தொடர்புகள் உள்ளன. இவை அரச கமுக்கம் சார்ந்த உயர்வகை அறிவு ஆகும்.

                      குடியரசு விழாவில் மஞ்சுவிரட்டுக் காளைகள்:-
                           நாய் வருகிறது, ஒட்டகம் வருகிறது, குதிரைகள் வருகின்றன. ஏன் தமிழ்நாட்டுக் கொல்லேறுகள் அணிவகுத்துப் பறையடிக்கு நடந்தால் என்ன தவறு நேர்ந்து விடும்? பார்ப்பனன் குடுமியில் நரைத்த மயிர் உதிர்ந்து விடுமா?
                           ஒரு காலத்தில் பாண்டியர்களின் போர்ப்படையில் நெடுநல் யானையும், கடும்பரிப் புரவியும், தேரும் மாவும் அணிவகுத்தபோது நாய்களும் ஒட்டகங்களும் எங்கே இருந்தன?
                           தொன்மையும், நுண்ணறிவும், அரசத் தகைமையும் கொண்ட மஞ்சு விரட்டுக் காளைகள் என்றுமே தமிழினம் தான். அவை விலங்குகள் என்றால் தமிழர்களும் விலங்குகளாகவே இருந்து விட்டுப் போகலாம். தமிழர் என்போர் உலக மாந்தரில் ஒரு பிரிவினர் அல்லர். காளைகளையும் தம் இனத்தில் சேர்த்துக் கொண்டவர்கள். ஒரு போதும் ஆண்மைப் பண்பு இல்லாத கோழைகளைத் தன் இனத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

                      கடைசி மாடு அவிழ்ப்பு:-
                           மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்-2016 இவ்வாண்டில் வழக்கம் போல
                      1.   நிலவைத் தொடரும்
                      2.   நிலழைத்  தொடரும்
                      3.   மறைநிலவை உறுதி செய்யும்
                      4.   வளர்பிறையில் திருத்த முயற்சியில் ஈடுபடும்
                      5.   திருமுருகாற்றுப் படையில் சில திருத்தங்களை மேற்கொண்டு அதனை உயர்த்திப் பிடிக்கும்
                      6.   வேலின் வடிவத்தை மீட்கும்
                      7.   தைக்கூட்டணி அமைக்கும்
                      8.   தமிழ்த் தேசிய நுண்ணரசியலை மரபு வழியில் அச்சமின்றி நகர்த்தும்
                      9.   மஞ்சு விரட்டை உலக அரங்கில் எடுத்துச் செல்லும்
                      10. காளை மன்றங்கள் அமைக்கும்.
                      11. தமிழர் தமிழர் அல்லாதார் என்ற இன வரைவை இறுகப் பற்றும்
                      12. தமிழில் உயர் ஆய்வைப் புரக்கும்.

                      ...::::>>>ஓஓஓ<<<:::...


                       இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 இன் வெளியீடு

                        GO TO TOPIC LISTINGபொங்கு தமிழ்

                          1 post in this topic


                           மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016
                          5-ஆம் பதிவு
                          நாள்: 24.02.2016
                                
                          பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் மூன்றாவது முழுநிலவு கடந்த 22.02.2016 அன்று மாலை 06.20-க்குத் தோன்றி நள்ளிரவை 12.25-க்கு இனிதே கடந்தது. இது இழு பறியான நிலைதான். அதற்கு முதல் நாள், நிலவு மாலை 06.10-க்குத் தோன்றி நள்ளிரவு 11.41-க்குக் கடந்த நிலையில் இந்த முழுநிலவு 14-ம் நாளிலேயே வந்து விட்டது என்ற கணிப்பை மாற்றி வியப்பிலும் வியப்பாகவும் விரைந்து இழப்பை ஈடுசெய்தும் வெற்றி பெற்றுள்ளது. நிலவு 23.02.2016 அன்று மாலை 07.20-க்குத் தோன்றியது. இந்த ஒரு மணி நேர இடைவெளி அதற்கு முதல் நாளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

                          கடந்து சென்ற நிலவு பங்குனி உத்தரம்:
                              இவ்வாண்டின் வெற்றி பெற்ற முதல் முழுநிலவாகப் பங்குனி உத்தரம் அமைந்தது தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். இதைத் தொடர்ந்து இவ்வாண்டின் மிச்சமுள்ள ஒன்பது முழுநிலவுகளும் முறையே 15+15 கணக்கு முறையில் வெற்றி பெற்றால் நாம் தமிழ்ப்புத்தாண்டின் மீட்பை நோக்கிச் செல்வதாகக் கருதலாம்.

                          பிரித்து விடுக:-
                              கடலாடுதலும், புதுப்புனலாடுதலும் தமிழர் மரபில் வெற்றி பெற்ற முழு நிலவு நாட்களில் அமைந்தன என்ற செய்திகள் இலக்கியச் சான்றுகளாக உள்ளன. முங்கிக் குளிக்கவும் துப்பில்லாமல் முக்காலியில் உட்கார்ந்து கொண்டு தலை முழுகும் ஆரிய வைதிகம் தமிழர்களுடையது அல்ல. வளர்பிறை நிலவைச் சல்லியம் வைத்துச், சண்டாளஞ் செய்து, சண்டி ஓமம் நடத்தி, சமற்கிருதத்தால் திட்டி விரட்டும் பீடைகளையெல்லாம் எல்லா முழுநிலவு நாட்களிலும் குளம் குட்டைகளில் படிய முக்கினால் இயற்கை சீர்படும் போலும்.
                              இவரைப் பிரித்து விடுக! என்று கோப்பில் எழுதினால், இந்தப் பணியாளரை, அரசு ஊழியரை இன்று முதல் வேறு நிறுவனத்திற்கு மாற்றி விடுக! என்று பொருள், என்றவாறு ஒரு மரபை உருவாக்கியிருக்கிறார் பெருமைக்குரிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாண்பு நிறைந்த முதல் துணை வேந்தர் வடசேரி ஐயம் பெருமாள் சுப்பிரமணியம் அவர்கள். அவரிடம் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிய தஞ்சைக் கவிராயர் இச்செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
                              தமிழர் வாழ்வியலில் இருந்து ஆரிய வைதிகச் சடங்குகளைப் பிரித்து விடுக! என்று எழுதும் தகுதிவாய்ந்த தமிழ்த் தக்காரைத்தான் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் தேடிக்கொண்டிருக்கிறது.

                          மஞ்சு விரட்டுக்குத் தடை:-
                              மஞ்சு விரட்டுக்குத் தடை! மகாமகத்திற்குப் பாதுகாப்புப் படை! இது என்ன நேர்மை?
                              தமிழர்களின் மரபு வழிப்பட்ட அனைத்து அறிவுத்துறைகளிலும் ஊடுருவி, வகை மாறாட்டம் செய்து அறிவு மோசடி செய்து எற்றிப் பிழைத்து வந்த ஆரிய வைதிகம் இன்று சட்டம் இயற்றித் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுமாம்! மற்றையோர் அவர்களின் வாழ்வியலின்படி ஒழுக வேண்டுமாம்! இது எந்த வகை நேர்மை?

                          கட்டம் கட்டி ஒழித்தது யார்?
                              தமிழர்களின் நுண்ணறிவை ஒருபோதும் தமிழர் அல்லாதார் கையாள இயலாது. அது அவர்களை நேரம் பார்த்துப் பிரித்து விடும். அந்த வகையில் முழுநிலவு வழிகாட்டும் என்று நம்பலாம்.
                              திருமுருகாற்றுப்படையில் உள்ளவாறு முருகனின் ஒருமுகம் முழுநிலவின் தோற்றம் ஆகும்.
                              ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
                              திங்கள் போலத் திசை விளக்கும்மே ............(திருமுருகு ... 97-98)
                              எந்தெந்த அறிவுத்துறையின் முதன்மைக் கூறுகள் எல்லாம் தமிழ் இனத்தாரை விழிப்படையச் செய்யுமோ அந்தந்தக் கூறுகளையெல்லாம் கட்டம் கட்டி ஒழித்தவர்கள் யார் யார் என்பதில் உண்மைத் தமிழர்கள் முழு விழிப்புப் பெற்றாக வேண்டும். தமிழ்ப் புத்தாண்டுப் புரிதல் அவற்றுள் முதன்மையானது. 

                          அடுத்த மறைநிலவு:-
                              22.02.2015-ல் முழுநிலவு வெற்றிபெற்றுள்ள நிலையில் அந்த நாளைத் தவிர்த்து அடுத்து வரும் 15-ம் நாள் ஆகிய 08.03.2016 அன்று அடுத்த மறை நிலவு அமையும் 07.03.2016 விடியற்காலையில் 06.30 மணியளவில் தேய்பிறையின் கடைசிக் கீற்றைக் காண இயலும். 

                          வருடைப் பிறப்பு:-
                              08.03.2016-ல் மறைநிலவைச் செவ்வாய்க் கிழமையாகப் பொருத்தி 11.03.2016 மாலையில் தோன்றும் மூன்றாம் பிறையக் கணக்கிட்டு அன்று இரவு வானத்தை நிமிர்ந்து பார்த்து விடியற் காலையில் அதாவது 12.03.2016 அன்று ஆட்டு வடிவில் ஆன மீன் கூட்டத்திற்குள் கதிரவன் நுழைகிறானா என்று பார்க்கலாம். ஏனெனில் அன்று தான் உண்மையான வருடைப் பிறப்பும் சித்திரை முதல் நாளும் ஆகும். அன்றிலிருந்து 12-ஆம் நாள், அதாவது 23.03.2016 அன்று தான் ‘சித்திரா பவுர்ணமி’ என்ற சித்திரை முழு நிலவு நாள் அமைய வேண்டும். அந்த நிலவைக் கிரகணம் தீண்டாமலும், அந்த நிலவு இரட்டை மீன்களுக்கு இடையே சிக்கி விடாமலும் செல்லத் தமிழர்கள் கவலைப்பட்டாக வேண்டும் இனி! 

                          முருகனை முன்னெடுக்கும் தமிழ்த் தேசிய அரசியல்:-
                              முருகனை முதன்மைப் படுத்தும் தமிழ்த் தேசிய நுண்ணரசியல் என்பது தமிழ்ப்புத்தாண்டினை உவந்து வரவேற்கும் என்பது கோட்பாட்டு அடிப்படை கொண்டது.
                              தமிழ்ப் புத்தாண்டின் அருமை தெரிந்து அரசியலைக் கையில் எடுப்போர் இமைப்பொழுதும் அயராமல் அயன்மை இனங்களை விரட்டி அடித்து மொழித்தூய்மை, இனத்தூய்மையைக் கட்டிக் காப்பாற்றும் ஆற்றலை வளர்த்துக் கொள்வர் என்று வரலாற்று வழியில் நம்பிக்கை பெறலாம். 

                          ‘ஆங்கில ஆண்டு 2016-க்கு இணையான தமிழ் ஆண்டு’
                          நாள் வர வேண்டியது    நாள் வந்தது    நாள்-சிறப்பு    நாள் சூழ்திறம்    ஆங்கில நாள்    நாள் முறை    நாள் தகுதி
                          -    1    தமிழ்ப் புத்தாண்டு
                          தைத்திங்கள் முதல்நாள்    சதயம்    15.12.2015    -    வெற்றி
                          12    11    முதல் முழுநிலவு    பூசம்    25.12.2015    14-வது நாள்    தோல்வி
                          27    26    முதல் மறைநிலவு    -    09.01.2016    15-வது நாள்    வெற்றி
                          42    40    இரண்டாவது முழுநிலவு     மகம்    23.01.2016    14-வது நாள்    தோல்வி
                          57    55    இரண்டாவது மறைநிலவு    -    07.02.2016    15-வது நாள்    வெற்றி
                          72    70    மூன்றாவது முழுநிலவு    உத்தரம்    22.02.2016    15-வது நாள்    வெற்றி
                          87    85    மூன்றாவது மறைநிலவு    -    08.03.2016    -    -
                          91    -    வருடைப் பிறப்பு சித்திரை திங்கள் முதல் நாள்    -    12.03.2016    -    -
                          102    -    நான்காவது முழுநிலவு    சித்திரை    23.03.2016    -    -
                          குறிப்பு: கதிரவன் தென்செலவை முடித்து விலகித் திரும்பி வடக்கே நகரத் தொடங்கிய நாளில் இருந்து சரியாக ‘91’வது நாளில் வருடைப் பிறப்பு ஆகிய சித்திரைத் திங்கள் முதல் நாள் அமைய வேண்டும். இதுவரை இரண்டு முழுநிலவுகள் ஒவ்வொரு நாள் குறைவுற்றபடியால் முறையே இரண்டு நாட்களை இழந்து 89-வது நாளில் 12.03.2016 அன்று அமையவிருக்கிறது.
                          ...---000OOO000---...
                          © இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 இன் வெளியீடு

                            கருத்துகள் இல்லை:

                            கருத்துரையிடுக