வீரயுக நாயகன் வேள்பாரி - 28
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முறிந்த காலிலும் திருகிய கையிலும் கட்டுப்போடப்பட்ட அவன், ஊர் மந்தையில் படுக்கவைக்கப்பட்டிருந்தான்.
‘இரு மாதங்கள் கடந்துவிட்டன. இதுவே பறம்பின் வைத்தியனாக இருந்தால், பாதி நாள்கள்கூட ஆகியிருக்காது. திரையர்கள் உடல்வலிமையில் இணையற்றவர்கள்தான். ஆனால், அறிவுநுட்பத்தில் பறம்பு மக்களுக்கு ஈடுசொல்ல முடியாது’ என்று தோன்றியது சூலிவேளுக்கு.

கட்டுகள் கழட்டப்படும் நாளுக்காகக் காத்திருந்தான். தூதுவையின் குரல் அவனுக்கு மிகவும் தேவைப்பட்டது. அவள் அருகில் வரும்போதெல்லாம் தேக்கன்தான் நினைவுக்கு வந்தான். காட்டில் மனிதன் எந்தச் சவாலையும் எதிர்கொண்டு வாழும் பயிற்சியை அளித்தது தேக்கன்தான். எந்தச் சூழலையும் வெல்லும் வித்தையை அவன்தான் கற்றுக்கொடுத்தவன். ஆனால், தன்னைச் சுற்றி எதுவும் நிகழாமல் மனம் ஏன் ஒடிந்து விழுகிறது. சிதைந்த மனம் கணநேரத்தில் எப்படித் துளிர்த்தெழுகிறது? இதைப் பற்றி தேக்கன் எதையும் சொல்ல வில்லையே! இயற்கையின் ஆதிரகசியத்தை, செடிகொடிகளிலிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமா? வழுக்குப்பாறையாக பார்வை மாறினால், பற்றி ஏற விழுது ஏது? நினைவு ஏன் கட்டுப்பட மறுக்கிறது? செடிகொடிகளுக்கும் விலங்குகளுக்கும் இப்படித்தான் நிகழுமா அல்லது மனிதனுக்கு மட்டுமானதா? மனதுக்குள் அடர்ந்துகிடக்கும் காதலின் ரகசியங்களை யார் சொல்லித்தருவது? வினாக்கள் வினாக்களாகவே இருந்தன.
திரையர்களின் உடல்வாகு, கண்களுக்கு எப்போதும் மிரட்சியை உருவாக்குபவையாகவே இருந்தது. அவர்களின் பல செயல்களை சூலிவேளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவனுக்குள் என்ன நடக்கிறது என்பதையே அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் எப்படி திரையர்களைப் புரிந்துகொள்வான்.
இடையிடையே ஊரின் நினைவு வந்து போய்க்கொண்டிருந்தது. நடுகாட்டுக்குள்தான் இப்போதும் இருக்கிறோம். ஆனாலும், `நம் காடு' என்று தோன்றாமல் இருக்கிறது. `தேக்கனும் மற்றவர்களும் பயிற்சி முடித்து எப்போது ஊர் திரும்புவார்கள்? நாம் அதற்கு முன் திரும்பி விடுவோமா?' என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது, பெரும் சத்தத்துடன் ஓர் இளைஞனைத் தோளில் வைத்துத் தூக்கி வந்தனர். மேலெல்லாம் குருதி சிந்தியபடி இருந்தது. அவன் கைகளில் ஏதோ ஓர் இலையை வைத்திருந்தான். மந்தையில் பெரியவர்கள் உட்கார்ந்தனர். ஊரே கூடியது. உள்ளே என்ன நடக்கிறது என்று சூலிவேளுக்குத் தெரியவில்லை. ஆனால், எல்லோர் முகங்களிலும் பெருமகிழ்ச்சி இருந்தது. நல்ல செயல் நடைபெறுகிறது என நினைத்துக்கொண்டான்.
மறுநாள் காலையில் தூதுவை அவனைப் பார்க்க வந்தபோதுதான் சொன்னாள், “அவன் காட்டெருமையை வீழ்த்தி, வெற்றிலையைப் பறித்துவந்தான். அதனால் ஊரே அவனைக் கொண்டாடியது.”
“எத்தனை பேர் சேர்ந்து வீழ்த்தினார்கள்?” எனக் கேட்டான்.
“ஒரே ஆள்தான் வீழ்த்தினான்” என்று சொன்னாள்.
“ஒரே ஆள், ஒரு காட்டெருமையை எப்படி வீழ்த்த முடியும்? நீ சொல்வது நம்பும்படியாக இல்லையே” என்றான்.
“எந்த ஆயுதமும் வைத்துக்கொள்ளலாம். ஆனால், தனியொருவனாகக் காட்டெருமையை வீழ்த்தி, மலைமுகட்டில் இருக்கும் வெற்றிலையைப் பறித்து மந்தைக்கு வந்து சேரும் வீரனைத்தான் திரையர் குலப்பெண் ஏற்றுக்கொள்வாள். இல்லையென்றால், எந்தப் பெண்ணும் அவனை ஏற்க மாட்டாள்” என்றாள்.
சூலிவேளால் நம்ப முடியவில்லை. “தனியொருவனாக எப்படி காட்டெருமையை வீழ்த்த முடியும்? நீ பொய் சொல்கிறாய்” என்றான்.

“இதே மந்தையில்தான் நான் வந்து சொன்னேன், `ஒருவன் பச்சைச்செடியை எரியவைக்கிறான்', `பறவையை மயங்க வைக்கிறான்' என்று. `நம்பும்படியாகவா இருக்கிறது?' ” என்று கேட்டார்கள். அதுதானே உண்மை. அதேபோல்தான் இதுவும். அப்போது அவர்கள் நம்ப மறுத்தார்கள். இப்போது நீ நம்ப மறுக்கிறாய்” என்றாள்.
சூலிவேளால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `எவ்வளவு வலிமை வாய்ந்தவனாக இருந்தாலும், தனியொருவனாக எப்படி காட்டெருமையை அடக்க முடியும்?' என்று தன்னைத்தானே மீண்டும், மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தான்.
நீண்டநேரம் கழித்து, அவள் மண்வட்டியில் ஊன்சோறு கொண்டுவந்து கொடுத்தாள். மலையரிசிச் சோற்றுக்கு ஊடே பெரும்பெரும் கறித்துண்டங்கள் கிடந்தன. மிகவும் சுவைத்துச் சாப்பிட்டான்.
“சோற்றுக்குள் கிடப்பது அவன் வெற்றிகொண்ட காட்டெருமையின் கறி” என்றாள்.
அவள் சொன்ன உண்மை, சூலிவேளின் வயிறு வரை வந்து சேர்ந்தது. ஆனாலும், அவனால் நம்ப முடியவில்லை. ‘காட்டெருமைகளிடமிருந்து விலகிச் செல்லவும், விரட்டினால் தப்பிக்கவும்தானே நமக்குத் தெரியும். அதை எப்படி வீழ்த்த முடியும்?’ என்று காட்டெருமையின் கறியைச் சாப்பிட்டுக்கொண்டே சிந்தித்தான். சாப்பிட்டு முடித்ததும், அவள் தான் கொண்டுவந்த வெற்றிலையைக் கொடுத்தாள்.
“காட்டெருமையைச் சாப்பிட்டால் அதைப்போலவே நாமும் இலை, தழைகளைச் சாப்பிட வேண்டுமா?” எனக் கேட்டான்.
“காட்டெருமையின் கறி மிகவும் வலிமை வாய்ந்தது. அது செரிக்க வேண்டுமானால், வெற்றிலையை உண்ண வேண்டும்” என்று சொல்லியபடி நீட்டினாள். வெற்றிலையை வாங்கி மெல்லத் தொடங்கினான்.
அதன் காரச்சுவை மிகவும் பிடித்துப்போனது. அவன் மெல்வதை நிறுத்தவேயில்லை. கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். அவனுக்குக் கொடுப்பதில் அவளுக்குள் ஒரு மகிழ்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாகச் சிவக்கத் தொடங்கும் அவன் உள்ளுதடுகளைப் பார்க்கும் ஆர்வத்தில் இருந்தன அவள் கண்கள்.
அவன் மீண்டும் மீண்டும் கை நீட்டினான். “காட்டெருமையைவிட அதிகமாகவே தின்றுவிட்டாய்... போதும்” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
உடல் நன்கு தேறிவிட்டது. எழுந்து நடக்கவும் ஓடவும் தாவிக்குதிக்கவுமாக உடலைத் தயார் செய்தான். உள்ளம்தான் அதற்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. தில்லைமரத்தின் புகை இல்லாமலே காதல் கண்ணைக் கட்டியது. ஒரு மாலை வேளையில், தான் வந்துசேர்ந்த அந்தப் பாறையைப் பார்த்தபடி ஆற்றோரம் உட்கார்ந்திருந்தான். தூதுவையும் அந்த இடத்துக்கு வந்தாள்.
இருவரும் பேசிக்கொள்ளாமல் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தனர். அமைதி, பெரும்பாறையாக உருத்திரண்டு நின்றது. இப்போது இருவரும் அதன் இடுக்கில் சிக்கியிருந்தனர். பாறையை நகர்த்தி வெளியேற, இருவருக்கும் விருப்பமில்லை. எண்ணங்கள் எங்கெங்கோ போயின. அதுவும் சுகமாகத்தான் இருந்தது. பேசிக்கொள்ளாமலேயே அவள் எழுந்தபோதுதான் அவன் கவனித்தான், அவளின் வலது தோள்பட்டையின் மேல்புறத்தில் உள்ளங்கை அளவுக்குக் கரும்பச்சை நிற மச்சம் ஒன்று இருந்தது. அதன் ஒரு பகுதியை அவளது மேலாடை மறைத்திருந்தது. அதைப் பார்த்தபடி, “என்ன இது?” என்று கேட்டான்.
“அதுவா... `வெற்றிலை மச்சம்' என்று சொல்வார்கள். எங்கள் குலத்தில் நிறைய பேருக்கு இது இருக்கும்” என்று சொல்லியபடி அவள் புறப்பட்டாள். மனதுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் உரையாடலை, பேச்சுக் கொடுத்துக் கலைக்க அவள் விரும்பவில்லை.
நாள்கள் சென்றன. அடுத்த இளைஞன் காட்டெருமையை வேட்டையாடுவதைப் பார்க்க வேண்டும் என்று அவன் காத்திருந்தான். அந்த நாளும் வந்தது. ஊராரோடு சேர்ந்து அவனும் காட்டின் உச்சிப் பகுதிக்குச் சென்றான். எல்லோரும் முகட்டின்மேல் இருந்த பாறையில் ஏறி உட்கார்ந்தனர்.
இரு மலைகள் சரிந்து இணையும் பகுதி, நடுவில் நீர் சிறுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதில் தண்ணீர் குடிக்கக் காட்டெருமை வரும் என்று ஓடைக்கரையில் அந்த இளைஞன் காத்திருந்தான். நீண்ட நேரத்துக்குப் பிறகு, காட்டெருமை ஒன்று ஓடை நோக்கி வந்துகொண்டிருந்தது.
மலைமுகட்டிலிருந்து ஊராரோடு சேர்ந்து சூலிவேளும் அதைப் பார்த்தான். உண்மையிலேயே தனித்தொருவன் காட்டெருமையின் அருகில் போய்க்கொண்டிருக்கிறான் என்பதை அவன் கண்கள் நம்பவில்லை. போகிறவனின் இடுப்பில் இருபெரும் ஆயுதங்கள் இருந்தன. அவன் காட்டெருமையை நீர் குடிக்கவிடாமல் குறுக்கே போய் மறிக்க முயன்றான். பார்த்துக்கொண்டிருந்த சூலிவேளுக்கு மெய் சிலிர்த்தது.

அந்தக் காட்டெருமையின் உயரம் மலை முகட்டிலிருந்து பார்க்கும்போதே அச்சம் தருவதாக இருந்தது. திருகியிருக்கும் அதன் கொம்புகள் பாறையை நொறுக்கக்கூடியன. அதன் முன்நெற்றி எந்த மரத்தையும் முட்டிச் சாய்க்கும் வலுக்கொண்டது. அதை ஒருவன் தன்னந்தனியனாகச் சந்திக்கப்போகிறான். சூலிவேளால் நிற்க முடியவில்லை.
அதன் பாதையில் குறுக்கிட்ட அந்த இளைஞன் ஏதோ ஒன்று செய்து அதைச் சீண்டினான். அது அவனை விரட்ட, பாயத் தொடங்கியது. நீரோடையைத் தாண்டி மலையின் எதிர்புறம் ஓடத் தொடங்கினான். அது நான்குகால் பாய்ச்சலில் வீறுகொண்டது. அவன் மலைப்புதருக்குள் படுவேகமாக மேலேறினான். காட்டெருமையின் ஓட்டத்தைவிட அவனுடைய ஓட்டத்தின் வேகம் கூடுதலாக இருந்தது. அது காட்டெருமையை மேலும் வேகப்படுத்தியது.
சூலிவேளால் பார்க்கும் காட்சியை நம்ப முடியவில்லை. ஒருவன் காட்டெருமையைவிட வேகமாக ஓடுகிறான். அதுவும் மலைச்சரிவில் மேல்நோக்கி ஓடுகிறான். அதுவும் பாதை இல்லாமல் புதர்களுக்குள் பிய்த்துக்கொண்டு ஓடுகிறான். எப்படி இது முடிகிறது? நம்பவே முடியவில்லை.
பலமுறை பார்த்துப் பழக்கப்பட்ட ஒன்றை, திரையர்கள் இயல்பாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். சூலிவேளால் ஒரு கணம்கூட தாங்க முடியவில்லை. திரையர்களின் உடல்பலத்தையும் வேகத்தையும் வந்த நாள் முதல் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறான். ஆனால், மலையில் விலங்கைப்போல செடிகொடிகளுக்கு இடையில் அறுத்தெறிந்து எப்படி ஓட முடிகிறது? அவன் அருகில் இருக்கும் திரையர்களின் உடல் அமைப்பை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினான். அவர்களது காலடி, ஒரு சுளகுபோல விரிந்து இருந்தது; சூலிவேளின் காலடியைவிட இருமடங்கு அகலமாக இருந்தது.
வேகமாக மேலே ஏறிக்கொண்டிருந்தவன், சட்டென ஓரிடத்தில் வளைவுகொண்டு கீழ்நோக்கித் திரும்பி சரசரவென ஓடைநோக்கி இறங்கினான். காட்டெருமையின் ஆத்திரம் இன்னும் அதிகமானது. இறங்கத் தொடங்கியதும் அதன் வேகம் கூடுவதுபோலிருந்தது. இரண்டாவது முறை குதித்து பெரும்புதரைத் தாண்டி அவன் முதுகுக்கு நேராக அதன் தலை இறங்கிக்கொண்டிருந்தது. எந்தக் கணம் அதைவிட அதிகமான தொலைவை அவன் தாவிக் கடந்தான் என்பதை சூலிவேளின் கண்கள் கண்டுணரவில்லை. மிக வேகமாக முன்னால் வந்து ஓடையைத் தாண்டி எதிர்புற மலையின் மீது ஏறினான்.
அதன் மூச்சில் அனல்காற்று சீறியது. கொம்புகளில் அடிபட்டு மரக்கிளைகள் முறிந்துகொண்டிருந்தன. அவன் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தான். நம்ப முடியாத காட்சிகளை வாழ்க்கை சூலிவேளுக்குக் காண்பித்துக்கொண்டிருந்தது. திரையர்கள் உற்சாக ஒலியெழுப்பியபடி இருந்தனர்.
அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் வீரவிளையாட்டு, சூலிவேளின் அறிவுக்குப் புலப்படவில்லை. ஓடுபவன் மேலும் கீழுமாக மூன்றுமுறை ஓடையைக் கடந்து ஓடினான். காட்டெருமையும் வெறிகொண்டு ஓடியது. அவனைத் தாக்கப்போகும் கணமும் தப்பிக்கும் கணமும் மிகமிக அருகில் இருந்தன.
ஓடையை நோக்கி வேகமாக இறங்கிக் கொண்டிருந்தபோது, ஏதோ ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துப் போக்குக்காட்டி ஒரு சுற்று சுற்றினான். அது குதித்துக் கீழே இறங்கிக்கொண்டிருந்தது. அவன், அதன் பின்புறம் இறங்கிக்கொண்டிருந்தான். புதர் அசைவில் என்ன நிகழ்ந்தது எனத் துல்லியமாகத் தெரியவில்லை. அவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த திரையர்கள், எழுந்து நின்று உற்சாக ஒலியெழுப்பினர்.
அவன் மீண்டும் முந்திக்கொண்டு ஓடையைக் கடந்து மேலே ஏறத் தொடங்கினான். வந்த வேகத்தில் அது ஓடையைக் கடந்து மேலே ஏற முடியாமல் தவித்தது. அதன் ஓட்டம் குறையத் தொடங்கியது.
திரையர்களின் கூச்சல் ஒலி பெருகியது.
ஒருகட்டத்தில் காட்டெருமையின் ஓட்டம் முழுமுற்றாக நின்றது. இப்போது அவனும் ஓட்டத்தை நிறுத்திவிட்டு, இடுப்பில் இருந்த இரண்டு ஆயுதங்களையும் கைகளில் ஏந்தத் தொடங்கினான். ஒரே இடத்தில் நின்றபடி அது அவனை நெருங்கவிடாமல் குத்த தலைப்பட்டது. அவன் விலகி விலகி, சரியான வேளைக்காகக் காத்திருந்தான்.
திரையர்களின் கூட்டம் பேரொலியோடு ஓடையை நோக்கி இறங்கத் தொடங்கியது. என்ன நடக்கிறது என்று சூலிவேளுக்குப் புரியவில்லை. அவனும் சேர்ந்து இறங்கினான். அவர்கள் அந்த இடத்தை அடையும்போது, அவன் காட்டெருமையை முழுமையாக வீழ்த்தியிருந்தான். வந்த வேகத்தில் ஒரு கூட்டம் அவனைத் தோளில் தூக்கியது. மேலெல்லாம் மரக்குச்சிகளும் கொடிகளும் விளார்விளாராக சீவியிருந்தன. அவன் கதிரவனைப் பார்த்து நரம்பு முறுக்கிச் சிலிர்த்தான்.
வெற்றிலையைப் பறிக்க அவன் தன் தோழர்களோடு போனபோது, மற்றவர்கள் காட்டெருமையை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். காட்டெருமையை அடக்கியவன், மாலைக்குள் மந்தையில் வெற்றிலையை வைத்து மணமுடிக்க வேண்டும். எனவே, அடுத்தகட்ட வேலைகள் வேகமாக நடந்தன.
பொழுது சாய்வதற்குள் ஊர் மந்தைக்கு வந்து அவன் வெற்றிலையை வைத்தான். பெரியவர்கள் என்னவென்று கேட்டார்கள். அவனுக்குரியவளைச் சொன்னான். அவளும் வெற்றிலையோடு மேலேறினாள். ஊர்வட்டியில் இருவரும் வெற்றிலையை மாற்றி எடுத்துக் கொண்டனர். ஊன் தயாரானது. கொண்டாட்டம் தொடங்கி இரவு முழுவதும் நீண்டது.
வழக்கம்போல் மந்தையில் இருந்த அவனுக்கு ஊன்சோறும் வெற்றிலையும் கொண்டுவந்தாள் தூதுவை. அவன் எதுவும் சொல்லாமல் வாங்கிச் சாப்பிட்டான். “நான் சொன்னதை, நேரில் பார்த்த பிறகுதான் ஊர் நம்பியது. நீயும் அப்படித்தானே?” என்று கேட்டாள்.
அவன் பதிலேதும் சொல்லாமல் இருந்தான். வாழ்வில் முதன்முறையாகத் தன்னால் ஒன்றைச் செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் அவன் தடுமாறிக்கொண்டிருந்தான். அந்தத் தடுமாற்றத்தை அவள் உணர்ந்தாள். ஆனாலும் அவளின் நம்பிக்கையை, வெற்றிலையைக் கொடுக்கும்போது கை தொட்டுக் கடத்திவிட்டுத்தான் எழுந்தாள்.
நாள்கள் சென்றன. அந்த மலைச்சரிவுக்குப் பல நாள்கள் போய் வந்துகொண்டிருந்தான். எப்போதாவது காட்டெருமைகள் வந்து நீர் குடிப்பதைத் தொலைவிலிருந்து பார்ப்பான். அதன் உருவ அமைப்பும் வலிமையும் முன்னெற்றியில் திரண்டிருக்கும் எலும்பின் திரட்சியும் பார்க்கவே அச்சம்தருவனவாக இருந்தன.
ஒருமுறை அதைச் சீண்டிப்பார்க்க அருகில் போக முடிவெடுத்த கணமே அது விரட்டத் தொடங்கி, படுவேகமாக மலைமேல் ஏறினான். அதன் வேகம் என்ன என்பது அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. மேல்நோக்கி ஏறும்போது அதன் வேகம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. ஏதேதோ வித்தைகாட்டி இறுதியில் உயிர்பிழைத்து ஊர்வந்து சேர்ந்தான்.
மேலெல்லாம் செடிகளும் கொடிகளும் குச்சிகளும் கிழித்து எடுத்திருந்தன. வரும்போதே பச்சிலைகளைப் பறித்துக் கொண்டு வந்தான். அறைத்துப் பூசிக்கொண்டு படுத்தான். மனம் முழுவதும் காட்டெருமையின் பாய்ச்சலும் தூதுவையின் மீதான காதலும் சரிசமமாக இருந்தன.
கிழவி ஒருத்தி அவன் அருகே வந்து உட்கார்ந்தாள். “காட்டெருமையை வீழ்த்தப் போகிறவர்கள் வெற்றிலையோடு வருவார்கள். நீ என்ன பச்சிலையோடு வந்திருக்கிறாய்?”
அவமானப்படுதல் அவனுக்கு அறிமுகமாகிக் கொண்டிருந்தது. “பால்கொறண்டியை எரிக்கவும் பறவையை மயக்கவும் வித்தை தெரிந்தால் போதும். இதற்கு வீரம் வேண்டும்'' என்றாள்.தொடர்ந்து மனம் சீண்டப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த இடம் கடந்துபோன தூதுவை, கிழவி இவனோடு இருந்ததைப் பார்த்து சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுப் போனாள்.
இவனது கோபம் மேலும் கூடியது. கிழவியும் விடுவதாக இல்லை. “காட்டுக்கோழியைக்கூடப் பிடிக்க முடியாதவன், காட்டெருமையை எப்படிப் பிடிப்பான்?” என்று அவளாகக் கேள்வி கேட்டுவிட்டு, எழுந்து போய்விட்டாள்.
இவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மறுநாள் அந்த மலைச்சரிவை நோக்கி மீண்டும் போனான். காட்டுக்கோழிகளின் கூவல் சத்தத்தைக் கடந்த அவனுக்குக் கிழவி சொன்னது நினைவுக்கு வந்தது. `ஏனோ காட்டுக்கோழியைப் பிடித்துப் பார்ப்போம்' என்று தோன்றியது.
மரக்கொப்புகளின் மீதேறி தாவி சென்று கொண்டிருந்தது. அது மீண்டும் பறக்கும் வேளைக்காகக் காத்திருந்தான் சூலிவேள். படபடத்து மேலெழுந்த காட்டுக்கோழி, அவன் வீசிய கல்லால் சுருண்டு விழுந்தது. அதைப் போய்ப் பார்த்துவிட்டு எடுக்காமல் போய்விட்டான்.
‘கிழவி நம்மை இவ்வளவு எளிதாக நினைத்துவிட்டாளே!’ என்று தோன்றியது. மாலையில் மந்தைக்குத் திரும்பியதும் கிழவி அவன் அருகில் வந்தாள்.
“கோழி எங்கே?” என்று கேட்டாள்.
` ‘நான் கோழியை அடித்துவிட்டேன்' என்று சொல்வது வீரனுக்கு அழகல்ல. அதே நேரத்தில் ‘கோழியைக்கூடப் பிடிக்க முடியாதவன்’ என்று இவள் நம்மை பற்றி நினைத்திருப்பதையும் மாற்ற வேண்டும், என்ன செய்வது?’ என்று சிந்தித்தான்.
“எறிந்த இடத்தில் கிடக்கிறது. வேண்டுமென்றால், போய் எடுத்துக்கொள்” என்றான்.
“எடுக்கவேண்டியது நீதான். ஏன் எடுக்காமல் வந்தாய்?” எனக் கேட்டாள்.
அவளது கேள்வியின் நோக்கம் அவனுக்குப் புரியவில்லை.
“அதன் கால்களைப் பார்த்தாயா?” என்றாள்.
“காட்டுக்கோழியின் காலின் பின்புறம் சிறுவிரல் ஒன்று இருக்கும். அதைப்போலவே காட்டெருமையின் பின்னங்கால் குளம்பின் பின்புறம் சிறுதசை ஒன்று வளர்ந்திருக்கும். சரியாக அந்தத் தசையை அடித்துவிட்டால், அதன் பின்னங்கால் நரம்புகள் இழுத்துக்கொள்ளும். அதனால் காலை நகர்த்த முடியாது. இருந்த இடத்தில் இருந்துதான் போராடும். அதன் பிறகு, அதை ஆயுதம்கொண்டு வீழ்த்திவிடலாம்” என்று குறிப்பு சொன்னாள் கிழவி.
சூலிவேள் அன்று பார்த்த காட்சியை நினைத்தான். ‘மூன்றுமுறை மலைச்சரிவின் மேலும் கீழுமாக ஓடியவன், மூன்றாம்முறை இறங்கும்போது சட்டென ஓரிடத்தில் விழுதைப் பிடித்து சுழன்று காட்டெருமையின் பின்புறம் தாக்கியது இதைத்தானா?’ எனத் தோன்றியது. அவனின் கோபத்தைக் கிழவி தூண்டியபோது தூதுவைச் சிரித்துக்கொண்டே போனதற்கான காரணம் இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது.
மறுநாள் பொழுது மறைவதற்குச் சிறிது நேரத்துக்கு முன், சூலிவேள் மந்தையை நோக்கித் தட்டுத்தடுமாறி நடந்து வந்தான். அவன்மேல் பழையபடி கீறல் காயங்கள் இருந்தன. குருதி கசிந்துகொண்டிருந்தது. ‘மீண்டும் ஆற்றில் விழுந்து, பாறையில் அடிபட்டு வருகிறானா?’ என்று பார்ப்பவர்கள் எண்ணினர். ஆனால், அவன் கைகளில் வெற்றிலை இருந்தது. ‘இதை ஏன் பறித்து வருகிறான்?’ என்பது புரியவில்லை.
வந்தவன் மந்தையில் ஏறி அமர்ந்தான். ஊர்வட்டியில் வெற்றிலையை வைத்தான். எல்லோரும் கூடினர். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘வெற்றிலையைப் பறிக்கப்போய் ஏன் இவ்வளவு காயங்களுடன் வந்திருக்கிறான்?’ என்று ஒருவர் மாற்றி ஒருவர் கேட்டுக்கொண்டிருந்தனர். மூன்று இளைஞர்கள் மந்தை நோக்கி வந்து சொன்னார்கள், “அவன் காட்டெருமையை வீழ்த்தி, வெற்றிலையைப் பறித்து வருகிறான்” என்று.
ஊர் அதை நம்பவில்லை. “நீங்கள் சொல்வது உண்மையா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டனர். அந்த இளைஞர்கள் சொன்னார்கள், “நாம் பலமுறை மேலும் கீழும் ஓடவிட்டுத்தான் காட்டெருமையின் பின் நரம்பை அடிப்போம். இவனோ முதல்முறையே அடித்துவிட்டான்.”
ஊரார் அதிர்ந்துபோனார்கள்.

சூலிவேள் ஊர்வட்டியில் வெற்றிலையை வைத்தபடி பேசாமல் இருந்தான். ஊராருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. சூலிவேள் எதுவும் பேசவில்லை.
‘இவன் என்ன கேட்க வருகிறான்?’ என்பதும் ஊராருக்குப் புரியவில்லை. ஊரின் வயது முதிர்ந்த கிழவன் கூட்டத்தை விலகச்சொல்லி உள்ளே வந்தார். அவன் ஊர்வட்டியில் வைத்திருந்த வெற்றிலை ஒன்றை எடுத்து திருப்பிப் பார்த்தார். அவர் கண்கள் வியப்புக்கொண்டு விரிந்தன. அடுத்த வெற்றிலையை எடுத்து பின்புறம் திருப்பிப் பார்த்தார். ஊரார்கள் அவரையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ அவன் வைத்த அனைத்து வெற்றிலைகளையும் எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டார்.
“இவன் முன்வைத்துள்ளது அனைத்தும் ஆண் வெற்றிலை” என்றார். திரையர்கள் திகைத்துப்போனார்கள். மிகச்சிலருக்கு மட்டும்தான் வெற்றிலையில் உள்ள வேறுபாடுகள் தெரிந்தன. வெற்றிலையின் பின்புறம் இருக்கும் நரம்புகள் மூன்றும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒன்றுபோல் இறங்கியிருந்தால், அது ஆண் வெற்றிலை. மேலே இருப்பது இறங்கியும் மற்ற நரம்புகள் விலகியும் இறங்கியும் இருந்தால்
அது பெண் வெற்றிலை.
சூலிவேள் ஊர்வட்டிலில் ஆண் வெற்றிலைகளைக் கொண்டுவந்து வைத்துவிட்டான். இப்போது எதிர் வெற்றிலையாக, பெண் வெற்றிலையை ஊர் வைத்தே ஆக வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தனர். இனி புறப்பட்டு வெற்றிலைக்கொடி இருக்கும் மேல் காட்டுக்குப் போவதற்குள் இருட்டிவிடும். அதன் பிறகு, பெண் வெற்றிலையாகத் தேடிப் பறித்து வருவதெல்லாம் இயலாத செயல். ஆனால், பொழுது மறைவதற்குள் எதிர் வெற்றிலையை வைக்க வேண்டும் என்பது ஊரின் மரபு. என்ன செய்யலாம் என்பதறியாது எல்லோரும் திகைத்துக்கொண்டிருக்கையில், தூதுவை மந்தை நோக்கி வந்தாள்.
இவள் ஏன் உள்ளே வருகிறாள் என்பது யாருக்கும் புரியவில்லை. அனைவரையும் விலகச் சொல்லியபடி நடுமந்தைக்கு வந்த அவள், ஊர்வட்டிலில் எதிர் வெற்றிலையை வைக்கவேண்டிய இடத்தில் கால் மடக்கி அமர்ந்தாள்.
வலது தோள்பட்டையில் கிடந்த ஆடையை மெள்ள விலக்கியபடி சூலிவேளின் கண்களை நேர்கொண்டு பார்த்தாள்.
அவளின் தோளில் கரும்பச்சை நிற வெற்றிலை மச்சம் இருந்தது. அதற்குள் ஓடிய நரம்புகள் ஒன்றுபோல் இல்லாமல்தான் இருந்தன. வியப்படைந்த கண்களில் மகிழ்ச்சி பூக்கத் தொடங்கியது. ஊருக்கு, பின்னங்கால் நரம்பில் அடிவிழுந்து சரிந்ததுபோல் இருந்தது. எல்லோருக்கும் செய்தி புரிந்தது.

திரையர்களுக்கு இணையான வீரன் என்பதை சூலிவேள் மெய்ப்பித்துவிட்டான். இனி மறுத்துச் சொல்வதற்கு எதுவும் இல்லை. கொண்டாட்டம் தொடங்கியது. காட்டெருமையின் கறியை ஊன்சோற்றில் பிசைந்தனர் திரையர்கள்.
அந்தப் பெருங்கிழவன் மட்டும் கிழவியை முறைத்துப் பார்த்தபடி போனான். காட்டெருமையோ வெற்றிலையோ பின்னால் இருக்கும் நரம்பில்தான் எல்லாம் இருக்கிறது என்று சொல்லிக்கொடுத்தவள் அவளாகத்தான் இருக்கும் என்பது அவருக்குப் புரிந்திருந்தது.
ஊன்சோறு பரிமாறப்பட்டது. பச்சைக்கொடி பற்றி எரிய, பறக்கும் பறவைகள் மயங்கிச் சரிய, அந்த இரவு முழுவதும் பெண் வெற்றிலையை விரும்பி உண்டான் சூலிவேள். ஆண் வெற்றிலையின் காரம் தூதுவைக்கு மிகவும் பிடித்திருந்தது. நாக்குக்குள் சுழலும் வெற்றிலை நாக்குகளைச் சுழற்றியது. சிவப்பேறிய இதழ்களுடன் பல இரவுகளைக் கடந்து, ஒரு நற்பகலில் எவ்வியூர் வந்தடைந்தனர்.
பாரி, கதையை முடித்தபோது இருள் சூழ்ந்து இறங்கத் தொடங்கியது. அவர்கள் எவ்வியூருக்குள் நுழைந்தனர். “திரையர்களின் கதைதான் இவ்வளவு வேகமாக இழுத்துவந்தது. இல்லையென்றால், நாம் ஊரடைய நள்ளிர வாகியிருக்கும்” என்றான் பாரி. கதையின் மயக்கத்திலிருந்து மீளாதவராக கபிலர் இருந்தார்.
பாரி சொன்னான், “இது எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் நடந்த கதை. அதன் பிறகு, திரையர்களுக்கும் வேளீருக்குமான திருமண உறவுகள் பெரிதாக நடக்கவில்லை. காரணம், அவர்களின் நாடு இந்த மலைத்தொடரின் ஏதோ ஓர் எல்லையில் இருக்கிறது. எப்போதாவது ஒருமுறை ஊர்வழிபாட்டுக்கு வந்து அழைத்துச் செல்வார்கள் என்று என் தந்தை சொல்வார். அதுவும் அவரின் தந்தையார் காலத்துக்குப் பிறகு வரவில்லை என்பார்.”
“நிலப்பரப்பால் ஏற்பட்ட இடைவெளி அல்லவா?”

“ஆம். ஆனால் உயிருக்குள் கலந்துவிட்டால், நிலவியல் இடைவெளியால் என்ன செய்ய முடியும்?” என்றான் பாரி.
அவன் சொல்லவருவது கபிலருக்குப் புரியவில்லை.
“இளையவளை நன்கு கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டான்.
“சங்கவையையா?”
“ஆம்.”
“என்ன?”
சின்ன புன்னகையுடன் பாரி சொன்னான், “அவளின் வலது தோள்பட்டையின் முன்புறம் கரும்பச்சை மச்சம் ஒன்று இருக்கிறது. அவள் வளர்ந்து பெரியவளானால், அது வெற்றிலையின் வடிவம்கொள்ளும்.”

கபிலர் திகைத்துப்போனார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. வாய் மட்டும் முணுமுணுத்தது. “கதைகள் ஒருபோதும் முடிவதில்லை.”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக