சனி, 8 ஜூலை, 2017

வடக்கெல்லை மீட்பு மங்கலங்கிழார் மண்மீட்பு 1956 திருத்தணி

aathi tamil aathi1956@gmail.com

31/8/14
பெறுநர்: எனக்கு
"திருத்தணிகை மீட்பு முதல் போராளி"
மங்கலங்கிழார்
நினைவு நாள்
31.8.1953
இன்று தமிழ்த் தொண்டு புரியும் தமிழறிஞர்
கூட்டம் தமிழ் நாட்டில் நாளுக்கு நாள்
அருகி வருகிறது. ஆங்கில வழிக்
கல்வி மயக்கமே இதற்கு காரணம் என்பதை தமிழர்
பலரும் உணர்ந்ததாக தெரியவில்லை.
அன்றைக்கு தமிழ்ப்புலவர் படிப்பை வளரும்
தலைமுறை மாணாக்கர்களுக்க
ு அளிக்கா விட்டால் தமிழை வாழ வைக்க
முடியாது என்று தொலை நோக்கோடு சிந்தித்தார்
ஒரு தமிழர். அவர் தான் 'மாத்தமிழர்'
மங்கலங்கிழார்.
வட ஆற்காடு மாவட்டம்
அரக்கோணத்தை அடுத்து ஒரு கல் தொலைவில்
புளியமங்கலம் எனும் சிற்றூர் உள்ளது.
அவ்வூரில் ஐயாசாமி- பொன்னுரங்கம்மாள்
இணையருக்கு மகனாக 1897ஆம் ஆண்டில்
பிறந்தார். குப்புச்சாமி என்று பெற்றோர் இட்ட
பெயர் அவருக்கு நிலைக்க வில்லை. அவர் பிறந்த
ஊராகிய 'மங்கலம்' எனும் பெயரோடு 'கிழார்'
இணைக்கப்பட்டு நாளடைவில் மங்கலங்கிழார்
என்றே அழைக்கப்பட்டார்.
1911ஆம் ஆண்டிற்கு முன்னர் வடவேங்கடம்,
திருக்காளத்தி உட்பட பல்வேறு பகுதிகள்
தமிழ்நாட்டின் வடவெல்லையாக இருந்து வந்தது.
அப்போது பிரித்தானிய அரசு நிர்வாக
வசதிக்காக புதிய
மாவட்டங்களை உருவாக்கியது. 1911ஆம்
ஆண்டு ஏப்ரல் முதல் நாளன்று வட
ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தமிழர்
பகுதிகளான திருத்தணிகை, புத்தூர்,
திருக்காளத்தி, சந்திரகிரி, சிற்றூர், பலமேனரி,
புங்கனூர் ஆகிய வட்டங்களைப் பிரித்தும்,
கடப்பை மாவட்டத்தில் உள்ள தெலுங்கர்
பகுதிகளான மதனப்பள்ளி, வாயல்பாடு ஆகிய
இரண்டு வட்டங்களைப் பிரித்தும் புதிதாக
சித்தூர் மாவட்டம் உருவாக்கப்படும்
என்று அறிவித்தது.
இதன் காரணமாக சிறுபான்மை இனத்தவராகிய
தெலுங்கர்கள் பெரும்பான்மையாக மாற்றப்பட்டனர்.
பனகல் அரசர்,
பொல்லினி முனிசாமி நாயுடு போன்றோர்
சென்னை மாகாண முதல்வராக இருந்த
காரணத்தால் சித்தூர் மாவட்ட அதிகார
மையங்களில் தெலுங்கர்களே ஆதிக்கம்
செலுத்தினர். பெரும்பான்மை தமிழர்கள்
மீது தெலுங்குமொழி கட்டாயமாக
திணிக்கப்பட்டது. சித்தூர் மாவட்டம் தெலுங்கர்
மாவட்டமென்று பொய்யான பரப்புரை செய்தனர்.
அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.
சித்தூர் மாவட்டத்தில் ஆந்திரர்கள் தந்த
நெருக்கடி காரணமாக
தமிழ்மொழி மீது தமிழர்களே பற்று கொள்ளாமல்
தடுத்து நிறுத்துப்பட்டது. ஆந்திரர்களின்
தெலுங்கு தேசிய உணர்வு அங்குள்ள
தமிழர்களை தெலுங்கு மொழியை பேச
வைத்தது. அத்தகைய சூழ்நிலையில் தமிழைப்
பாதுகாப்பதற்காக 'அறநெறித் தமிழ்ச்சங்கம்'
என்னும் அமைப்பை மங்கலங்கிழார் நிறுவினார்.
அவர் ஊதியம்
பெறாமலே எல்லா கிராமங்களுக்கும்
கால்நடையாகவே சென்று தமிழின் அரும்பெருஞ்
சிறப்பை எடுத்துக் கூறினார்.
தனது கெழுதகு நண்பர்
வ.உ.சி.யை அழைத்து வந்து திருக்குறள்
வகுப்புகளை நடத்தினார். இத்தகைய தமிழ்
விழிப்புணர்ச்சி பரப்புரைக்கு பலனாக 14
கிராமங்களில் 'அறநெறி தமிழ்க்கழகம்'
கிளை பரப்பியது.
1946இல் தமிழறிஞர்கள்
தொ.ப.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார்
ஆகியோரை அழைத்து வந்து கழகத்தின் முதல்
மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். இதனால்
சித்தூர் பகுதியில் பலநூறு தமிழ் மாணவர்கள்
தமிழ் பயின்று தமிழ்ப்புலவர் பெற்று ஆசியர்
பணிக்கு அமர்த்தப்பட்டனர். அடுத்த கட்டமாக
திருத்தணிகையில் தமிழ் வளர்ச்சிக் கழகம்,
பொதட்டூரில் தமிழாசிரியர் பயிற்சிப்
பள்ளி என்று அவரின் தமிழ்ப்பணி விரிவடையத்
தொடங்கியது.
தமிழ்ப்பணி ஒரு கண்ணென்றால், 'தமிழ்நில
மீட்புப் பணி'
தனது மறு கண்ணென்று அறிவிக்கை விடுத்தார்.
சித்தூர் மாவட்டத் தமிழர்களிடம் சென்று,
"தமிழர்களே! உங்களை உணருங்கள். நீங்கள்
இன்று தெலுங்கு பேசினாலும் உங்கள்
உடல்களில் ஓடுவது தமிழ்க்குருதி, உங்கள்
பாட்டனும் பூட்டனும் ஊட்டி வளர்த்தது தமிழ்,
அதனால் தமிழுக்குத் திரும்புங்கள். தாய்த்
தமிழ்நாட்டோடு இணைந்திருக்க குரல்
கொடுங்கள்" என்றார். அதன் பின்னர் தமிழ் மண்
மீட்கும் போராட்டத்தில் தமிழர்கள்
பங்கேற்று தெலுங்கைப் புறந்தள்ளும் துணிச்சல்
பெற்றனர்.
அப்போது தந்தை பெரியார்
வடக்கெல்லை மீட்புக்கு ஆக்கமும் ஊக்கமும் தர
மறுத்ததோடு, ஆந்திரா-தமிழ்நா
டு பிரிவினை என்பது 1921ஆம்
ஆண்டிலேயே முடிந்து விட்டது என்றும்,
தமிழ்நாட்டு எல்லைக்காகப் போராடுபவர்கள்
முப்பது ஆண்டுகளாக என்ன செய்தார்கள்
என்றும், குமரி முதல் வேங்கடம் வரை என்கிற
அறிவு இன்றைக்கு மட்டும் வருவானேன்...
என்றெல்லாம் பேசி வெந்தபுண்ணில் வேல்
பாய்ச்சினார்.
அப்போது தமிழ்நாடு பேராயக் கட்சியும் கூட
தாயக உரிமைக்கு போராடாமல் செத்த பிணமாய்
கிடந்தது. அதில் பேராயக்கட்சி சட்டமன்ற
உறுப்பினர் தளபதி விநாயகம் என்பவர் மட்டும்
விதிவிலக்காக இருந்தார். அவர் தான் மங்கலங்
கிழார் தந்த ஊக்கத்தால் வடக்கெல்லைப்
போருக்கு முதல் தளபதியாய் நின்றார்.
ஏற்கெனவே மொழிவழி மாகாணக் கிளர்ச்சியில்
ஈடுபட்டு வந்த ம.பொ.சியும் மங்களங்கிழாருக்
கு தோள் கொடுக்கலானார். ம.பொ.சி,
கோல்டன் சுப்பிரமணியன், விநாயகம் மற்றும்
மங்கலங்கிழார் தலைமையில்
வடக்கெல்லை மீட்புக் குழு அமைக்கப்பட்டது.
அக்குழு ஊர் தோறும் பரப்புரை செய்து வந்தது.
அப்போது வெறி கொண்ட காவல்துறை அதில்
பங்கேற்ற மங்கலங்கிழாரை திருப்பதி சிறையில்
அடைத்து வைத்தது. 1953ஆம் ஆண்டில் ஆந்திர
மாநிலம் உருவாக்கப்பட்ட போது 'ஆசிய
(ஜோதி) தீவட்டி' பிரதமர் நேரு சித்தூர்
மாவட்டத்தை புதிய ஆந்திர
மாநிலத்தோடு இணைக்கப்படும் என்றார்.
இதற்கு ம.பொ.சி.யும் மங்கலங்கிழாரும் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான்
உடல் நலம் குன்றி 1953இல் மங்கலங் கிழார்
இறப்பு நேரிடுகிறது. அவரின் மறைவிற்குப்
பின் ம.பொ.சி. உள்ளிட்ட ஏனைய தலைவர்கள்
போராட்டத்தை முன்னெடுத்து திருத்தணிகையை 1960இல்
மீட்டெடுத்தனர்.
மங்கலங்கிழார் உயிரோடு இருந்திருந்தால் வட
வேங்கடம் மீட்புக்கான போராட்டம்
தீவிரமடைந்திருக்கும். காமராசர் வழி நடத்திய
பேராயக் கட்சியின் இரண்டகப் போக்கால்
திருத்தணிகை மட்டுமே நமக்கு கிடைத்தது.
திருத்தணிகை மீட்பின் முதல் போர்
முரசு மங்கலங்கிழாரின் நினைவு நாளான
இந்நாளில் சித்தூர் தமிழ் பேசும் பகுதிகள்
தமிழகத்தோடு இணைத்திட குரல்
கொடுப்போம்!

search 

திருத்தணியைத் தமிழகம் மீட்ட வரலாறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக