ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ரயில்வே வேலைவாய்ப்பு கேட்டு தமிழர் தீக்குளிப்பு வேலைவாய்ப்பு கேட்டு தொடர்வண்டி கண்ணையா நாயுடு srmu

aathi tamil aathi1956@gmail.com

27/12/15
பெறுநர்: எனக்கு
Icf Act App 3 புதிய படங்கள் இணைத்துள்ளார்.
ஐ.சி.எஃப் மற்றும் தென்னக இரயில்வே 7000 அப்ரண்டீசு மாணவர்களின்
வேலைக்காக 10-12-2015 அன்று ஐ.சி.எஃப் பொது மேலாளர் அலுவலகம் முன்பு
தீக்கிரையாக்கி தன்னுயிர்நீத்த தோழன் வி.ஏமந்த்குமாரை நினைவு கூர்ந்தோம்
அவரின் அகால மரணம் இன்றும் அனைத்து அப்ரண்டீசு மாணவர்கள் மனதில் ஆறாத
வடுவாக பதிந்துள்ளது.
எங்கள் வேலையுரிமைத் தீ !
என்பது எளிதில் அணைந்து விடாது !
யாரும் அணைக்கவும் முடியாது !
அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும் வரை தொடர்ந்து எரிந்து
கொண்டே இருக்கும் எங்கள் மனதில்.
அப்ரண்டீசு மாணவரின் உயிரை மைராய் மதித்த நிர்வாகிகளே..! ஆதிக்க வர்கமே..!
இனியேனும் திருந்துங்கள் இல்லையேல் ! திருத்தப்படுவீர்கள் !
தன்மானம் உள்ள உறவுகளே !
செத்து மடிந்தது போதுமடா !
குட்டக்குட்ட குனிந்தது போதுமடா !
வாய் பொத்திக்கிடந்தத
ு போதுமடா !
ஒதுங்கி ஒதுங்கி போவதேன் !
ஒன்று சேரடா ஓற்றுமையாகவே ! ஓரணியய் நின்று !
கிளர்ந்தெழு !
சினந்தெழு !
ரௌத்ரம்பழகு !
அடங்கமறு !
போராடாமல் எதுவும் கிடைப்பதில்லை.
நமது வேலையுரிமை என்பது அடுத்தவர் போடும் பிச்சை அல்ல அது நாமே போராடி பெறுவது.
"மறுக்கப்பட்ட நீதி அநீதியை விட கொடியது".



சென்னை பெரம்பூர், திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் ஹேமந்த்குமார், 35; மனைவியுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். 1999 - 2001ல், சென்னை ஐ.சி.எப்., ஆலையில், 'வெல்டர்' பிரிவில் தொழில் பயிற்சி பெற்றார்; அங்கு அவருக்கு இது நாள் வரை வேலை கிடைக்கவில்லை.
விரக்தியில் இருந்த அவர், நேற்று காலை, 8:30 மணியளவில், ஐ.சி.எப்., அலுவலகம் முன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்; அங்கேயே தரையில் அமர்ந்து, 'தர்ணா' போராட்டமும் செய்தார். ரயில்வே போலீசார், அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இருப்பினும், சிகிச்சை பலனின்றி, பகல், 1:45 மணியளவில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, ஐ.சி.எப்., போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, 'நீதி கிடைக்கும் வரை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள, ஹேமந்த்குமார் உடலை பெற மாட்டோம்' எனக் கூறி, சில தமிழ் அமைப்புகளின் துாண்டுதலின் படி, இன்று போராட்டம் நடக்க உள்ளதாக, போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோர்ட் உத்தரவு படி செயல்படுகிறோம்: ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐ.சி.எப்., ஆலையில் இருக்கும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப, 2006க்கு முன், தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலையளித்து வந்தோம்.ஜெய்கணேஷ், நீலகண்டன் ஆகியோர், சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், 'இந்த முறையில் தொழிலாளர்களை நியமிக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டது.
தெற்கு ரயில்வே, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதிலும், ஜெய்கணேஷ், நீலகண்டன் ஆகியோருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. 2010ல், 'ஐ.சி.எப்., ஆலையில் நியமிக்க வேண்டியவர்கள், ரயில்வே தேர்வு குழு மற்றும் ரயில்வே தேர்வு வாரியம் மூலமாக எடுக்கப்பட வேண்டும்' என, ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்தது.ரயில்வே வாரிய உத்தரவை மீறி, பணி அமர்த்துவது சாத்தியமில்லை. இந்த தகவல்களை பயிற்சி முடித்தவர்களிடம் தௌிவாக கூறி விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
நியமனம் நடக்கவே செய்கிறது: ஐ.சி.எப்., தொழிற்பயிற்சி முடித்த மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜீவா கூறியதாவது: ஐ.சி.எப்., பயிற்சியில், ஆண்டுக்கு, 500 பேர் சேர்கின்றனர். பொது மேலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ், 2006 முதல், 2009 வரை, 634 பேரை பணி அமர்த்தினர். 
1998 முதல் இன்று வரை, ஐ.சி.எப்., தொழிற்பயிற்சி முடித்து விட்டு, 200 பெண்கள் உட்பட, 5,000 பேர் பணிக்காக காத்திருக்கிறோம்.
எழுபது நாட்களாக தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறோம். இருந்தும், ஐ.சி.எப்., எங்களுக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2010ல்,' ரயில்வே தேர்வு குழு மூலமாக தான் ஊழியரை நியமிக்க வேண்டும்' என ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்ததாக, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது.
ஆர்.சி.எப்., உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள, பிற ரயில்வே தொழிற்சாலைகளில், 2010க்கு பின், தொழிற்பயிற்சி முடித்தவர்களை பணி நியமனம் செய்து உள்ளனர்; இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆகையால், எங்களுக்கு பணி அளிப்பதை, அவர்கள் தவிர்த்து வருகின்றனர். 
தற்போது, 11 ஆயிரம் பணியாளர், ஐ.சி.எப்., ஆலையில் உள்ளனர்; 7,000 காலி பணியிடங்கள் உள்ளன. ஆகையால், தொழிற்பயிற்சி முடித்த, 5,000 பேரை, பணி நியமனம் செய்ய நிர்வாகம் முன் வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1407090&Print=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக