சனி, 22 ஏப்ரல், 2017

இறுதி ஆழ்வார் நாயன்மார் கொலை கோயில்கள் பிராமணர் வசம் நாயக்கர் ஆட்சி

aathi tamil aathi1956@gmail.com

20/8/15
பெறுநர்: எனக்கு
அரசனைக் கைக்குள் வைத்து இருந்தால் அவனை மட்டுமே கட்டுப் படுத்த
முடியும், ஆனால் ஆன்மீகத்தினை கையில் வைத்து இருந்தால் யாரை வேண்டும்
என்றாலும் கட்டுப்படுத்தலாம் என்ற உண்மை ஆரியர்களுக்கு நன்கு தெரிந்து
இருந்தது. அதனால் அரசனின் துணையுடன் ஆன்மீகத்தினை தங்களின் பிடிக்குள்
கொண்டு வர முயல்கின்றனர்.
ஒரு நாட்டினைப் பிடிக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசனை வெல்ல
வேண்டும். அதனைப் போன்று ஆன்மீகத்தை தங்களுக்கு உரிய ஒன்றாக மாற்ற
வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
ஆன்மீகத் தலைவர்களைக் கொல்ல வேண்டும். அது தான் தமிழக வரலாற்றில்
நிகழ்ந்து இருக்கின்றது. சித்தர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
பிராமணர்களை எதிர்த்த சித்தர்கள் காடுகளுக்குள் விரட்டப்படுகின்
றனர். பின்னர் அதுவும் போதாதென்று உயிருடன் குகைகளுள் அடைக்கப்பட்டு கொலை
செய்யப்படுகின்றனர். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்க
ளுக்கு 'ஜீவ சமாதி' அடைந்தார் என்று பட்டத்தையும் தந்து சிறப்பித்தனர்
என்பது வரலாறு. மேலும் சிலரை உயிருடன் எரித்து விட்டு அவர் முக்தி
அடைந்து விட்டார் என்றப் பட்டத்தையும் தந்து அவர்கள் கொலை செய்யப்பட்டதை
மறைத்த செயல்களும் இங்கே நிகழத் தான் பெற்று இருக்கின்றன.
அதனைப் போன்றே இறுதி நாயன்மாரான நந்தனாரின் கொலையும், இறுதி ஆழ்வாரான
திருப்பாணாழ்வாரின் கொலையும் நிகழப் பெற்று சைவ கோவிலின் தலைமையிடமான
சிதம்பரமும், வைணவக் கோவிலின் தலைமையிடமான திருவரங்கமும் பிராமணர்களின்
வசம் செல்லுகின்றது.
பிராமணர்களின் முழு செல்வாக்கினைப் பெற்ற விசய நகரப் பேரரசு ,இதை செய்கிறது.
கோவில்கள் பிராமணர்களின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன...
"அபிசேகப் பண்டாரம் என்னும் பார்ப்பனர் அல்லாத சாமியார் நிர்வாகத்தில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. பார்பனர் தம் பாதம்
தாங்கியான திருமலை நாயக்கன் அப்பண்டாரத்தை அச்சுறுத்தியும் நிலம் பணம்
முதலியன கொடுத்தும் மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகையினைப் பறித்துக்
கொண்டான். பரிதாபத்துக்குரிய பண்டாரமும் அரசு ஆணைக்குக் கட்டுப்பட்டுப்
பயந்து ஒதுங்கிக் கொண்டார்.
திருமலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினை ஏற்றுக் கொண்ட பின் முதல்
வேலையாகக் கோவில் வழிபாட்டிற்கு என்று பார்ப்பனர்களான குலசேகரப் பட்டன்
வகையறாவினரையும் விக்கிரம பட்டன் வகையறாவினரையும் நியமித்துக் கொழுக்க
வைத்தான்" என்றே பார்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் என்ற
நூலினில் புலவர். கோ. இமயவரம்பன் கூறுகின்றார்.

கோயில் கோவில் வந்தேறி தெலுங்கர் வடுகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக