|
30/12/15
| |||
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016
1-ஆம் பதிவு
30.12.2015
பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் முதல்
முழு நிலவு மிகத் தெளிவாகத் தோற்றது. 26.12.2015-ல் முறை முற்றித் தோன்ற
வேண்டிய முழுநிலவு, இரவு 07.20-க்கு வெளிப்பட்டு, நள்ளிரவில் 01.30-க்கு
உச்சியை கடந்து, விடியும் வேளையில் தேய்ந்தும் தோன்றியது.
25.12.2015-ல் வளர்பிறையின் 14-ஆம் நாளில் தோன்றிய நிலவு மாலை
06.17-க்கு மிகவும் பெரிதாக வெளிப்பட்டு வெளிச்சம் மிகுந்த நிலவாகத்
தோன்றி நள்ளிரவில் சற்றுப் பிந்தியது.
நிலவின் புறப்பாட்டுப் புலத்தை மால்வைத்துப் பார்த்து அறிந்த
வகையில் 14-ஆம் நாளில் வடக்கே ஆடுதலையாக விலகி எல்லை மிதித்த நிலவு,
15-ஆம் நாளில் ஒரு வட்ட அளவிற்கு தெற்காகத் திரும்பியும் வந்து விட்டது.
ஆண்டின் முதல் முழு நிலவு தடுமாறுவது என்பது வரவேற்கத்தக்கது அல்ல.
அது தைப் பூச நிலவு. எந்த நிலவின் இரவில் வாகை மரம் இரவில் கண் விழித்ததோ
அந்த நிலவு தோற்றது.
எந்தத் தைப்பூச முழுநிலவில் திருமணங்கள் நடந்தேறினவோ
அந்த முழுநிலவு தோற்றது. எந்தத் தைப்பூச முழுநிலவில் ஆட்டைப் பெரிய
திருவிழா நிறைவுற்றதோ அந்த முழுநிலவு தோற்றது. நெடுவெண் நிலவு என எந்த
முழு நிலவு போற்றப்பட்டதோ அந்த முழு நிலவு தோற்றது.
இவ்வாறாகப் பட்டியலிடுவது ஒப்பாரி வைப்பதற்காக அல்ல. உள்ளதை உள்ளபடி
புரிந்து கொள்வதற்காக. இந்த நிலவின் தோல்வியைக் கணக்கில் கொள்ளும்
முறையில் தமிழர்களுக்கே உரிய வல்லுநர் அறிவு புதைந்திருக்கிறது.
அவுணர்களால் மட்டுமே இத்தகைய செயலைத் தாங்க இயலும். அவுணர் என்போர் தமிழ்
மரபின் தொழில்நுட்ப வல்லுநர்கள். அவ்வளவே.
எந்த அவுணர்கள் மீது தமிழ்க் கடவுள் முருகனே வேல் எறிந்ததாக ஆரிய
வைதிகம் பாடித் தீர்த்ததோ?
எந்த அவுணர்களைத் திருமால் எனும் ஒருவன் அழித்ததாக ஆரிய வைதிகம் புராணம் பாடியதோ?
எந்த அவுணர்களை அருணகிரி நாதர் வரை பொல்லாதவர்கள் என்று பாடினரோ?
எந்த அவுணர் என்ற சொல்லைத் தேடித் தேடி ஓலைச் சுவடிகளில் இருந்து
உ.வே.சா. சுரண்டினாரோ?
அந்த அவுணர்கள்தான் இந்த நிலவைக் காப்பாற்றும் ஆற்றல் உடையவர்கள்.
அவர்கள் முதல் நிலவைக் கழற்றி விடுகிறார்கள் என்றால் அது உயிர்களின்
நன்மைக்கேயன்றி அழிவிற்கு இல்லை என்று தமிழின் பெயரால் நம்பலாம்.
அணங்குடை அவுணர் ---- (புறம் – 174)
அணங்குடை முருகன் கோட்டம் --- (புறம் – 299)
அவுணர்களுக்கு அணங்கு உரியவள், முருகனுக்கு அணங்கு உரியவள், பிறகு எப்படி
அவுணர் முருகனுக்கு எதிராவர்? இதுவே ஆரியப் புரட்டு.
அவுணர் என்போர் மூச்சை உள்ளடக்கி நினைவு அலைகளில் வாழும் ஆற்றலை
வளர்த்துக் கொண்டு உடலைப் புறக்கணிக்கும் வலிமை பெற்றோர். இத்தகையோர்
தமிழர் மரபில் உள்ளனர். தமிழ்ப்புத்தாண்டு அவர்களுக்கு உரியது. அதனால்
அவுணர்களின் பகைவர்கள் தமிழ்ப்புத்தாண்டின் பகைவர்களாகவும் இருப்பார்கள்.
அவுணர் நல்வலம்‘திருந்தக்’ கவிழ் இணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் --(திருமுருகாற்றுப்படை 60-62)
அவுணர்களின் வெற்றி மென்மேலும் சிறக்க வேண்டி மாமரங்களை வேரோடு பிடுங்கி
எறிந்து புத்தாண்டு வெற்றி பெற்ற தென்பாண்டிய மரபின் முதல் அரசன் முருகன்
என்ற உண்மையை மறைத்து,
அவுணர் நல்வலம் “அடங்க’என்று திருமுருகாற்றுப் படையைத் திரித்த அயன்மை
இனத்தார், மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு துலங்கும் போது ஒழிந்து போவர்
என்பது வரலாற்றுப் புரிதல்.
அத்தகைய அவுணர்கள் கட்டிக் காக்கும் ஆண்டின் முதல் முழு நிலவு இம்முறை
தோற்றுப் போயிருக்கிறது எனில் அதனில் ஆழ்ந்த பொருள் இருப்பதாகவே கணக்கில்
கொள்ள வேண்டும். அதாவது அது அவர்களால் ஒளிக்கப்பட்டிருக்கலாம்.
ஒருநாள் குறைவு:-
ஆண்டு நாட்களில் ஒருநாள் குறைவுற்றது. தொடர்ந்து வரும் மறைநிலவு
நாளை 09.01.2016 அன்று கணக்கிட வேண்டும். ஒவ்வொரு நாளும் தேய்பிறை
தோன்றும் இடம் மற்றும் நேரம் இவற்றைக் கணக்கிட்டாலும் 14-ஆம் நாளில்
பிறையின் கடைசிக் கீற்றை விடியற் காலையில் காண இயலும்.
விளக்கேற்றுதல்:-
நாளும் கிழமையும் பொருந்த வேண்டும் என்ற நல்ல உள்ளம் கொண்ட யாரும்
மறைநிலவு நாளில் விளக்கேற்றலாம். அது நிலவின் ஆற்றலை ஊக்கும். மற்றபடி
முழுநிலவு நாளைக் குறித்துத் தீட்டுச் சண்டியை வருந்தி அழைப்பது நிலவின்
வரவைத் தடுக்கும் தீய செயல் ஆகும். உண்மைத் தமிழர் யாரும் அதனைச் செய்ய
மாட்டார்கள்.
தூமையும் சாண்டையும்:-
தூமையும் சாண்டையும் தமிழில் பூப்புக் குருதியைக் குறிக்கும்
சொற்கள். மறைநிலவும் முழுநிலவும் தூய பெருநாள்கள் ஆகும். ஆதலினால்
அவற்றின் தகுதியறிந்து எவரும் கையாள வேண்டும்.
சதயம் வென்றது:-
பெருந்தச்சு நிழல் நாள் காட்டியின்படி இவ்வாண்டின் தொடக்கநாள்
சதயத்தில் பொருந்தியது. சரியாக 11 நாள் மட்டுமே நாளும் கிழமையும், நாள்
சூழ் திறமும் பொருந்தின. 12-ஆம் நாளில் முதல் தடுமாற்றம் நேர்ந்தது.
கடந்த ஆண்டில் 131 நாள்கள் சீராக வந்தன. 132-ம் நாள் தடுமாறியது. இம்முறை
சதயம் முதல் புணர் பூசம் வரையில் மட்டுமே சீர்மை இருந்தது. பூசம்
தடுமாறியிருக்கிறது.
பிழையறிதலும் திருத்த முயற்சியும்:-
இதுவரை மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் பிழையறிவிப்பும்
விழிப்புணர்வுக்கான மாற்றுப் பார்வையும் கொண்ட செய்திகளையே பகிர்ந்து
வந்துள்ளது. இனிவரும் காலங்களில் பிழைகளைத் திருத்திக் கொள்வது
பற்றியும், தமிழர்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்வது பற்றியும் கருத்துப்
பகிர்வு செய்யும்.
தன் நிகர் இல்லாத் திருமுருகாற்றுப்படை:-
தமிழ்ப் புத்தாண்டு பற்றிய தேடலைத் தொடங்கிய பிறகு
திருமுருகாற்றுப்படையைப் பயன்படுத்த மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார்
அவையம் கற்றுக்கொள்ளவில்லை, மாறாகத் திருமுருகாற்றுப்படை கற்றுக்
கொடுக்கும் வழியிலேயே தமிழ்ப் புத்தாண்டினை விளங்கிக் கொண்டு வருகிறது.
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை:-
‘செல்’ என்றால் மின்னல். செல்வி என்றால் மின்னலைத் தோற்றுபவள்.
முருகனின் வலிமையான கைகள் எதிரிகளின் மீது இடி போல் இறங்கும். கறுவுகொள்
நெஞ்சமொடு களம் வேட்கும் முகம் ஒன்று முருகனின் ஐந்தாவது முகம் ஆகும்.
இவையெல்லாம் முறை நவின்று முறை நவின்று ஞாயிறு, திங்கள், செவ்வாய்,
அறிவன், வியாழன், வெள்ளி என நாட்காட்டி முறையில் செயல்படத் தொடங்கி
விட்டதன் முதல் அறிகுறியே தமிழ்ப்புத்தாண்டு புரிதல்.
தென்புலத்தார்:-
தென்புலத்தார், தென்புலம் வாழ்நர், அவுணர் இவர்கள் யாரும் இறந்தோர்
அல்லர். தவக்குட்டம் உடையார். அதாவது ஆசான் மாணாக்கன் மரபில் முழு
உணர்வோடு நினைவலைகளை எழுப்பிக் கொண்டு மொழுப்பாகக் கூட்டாக இயங்கும்
பண்புடையவர்கள். இவர்களது தென்புலம் என்பது பாவைப் பண்புடையது. தமிழால்
இயங்குவது. அவர்கள் அரசாங்கத்து ஆட்கள்.
பகையோடு பாசறையுளான்:-
பழந்தமிழ் அரசர்களில் தென் பாண்டியர் மட்டுமே ஆசான்களால் பருமம்
தீண்டப் பெற்றவர்கள். போருக்குச் செல்லும் முன்பாகப் பருமம் தீண்டப்
பெற்றால் போர் நிறைவுறும் வரையில் அந்தப் பருமம் களையப் படமாட்டாது.
அதுவரை அவர்களுக்கு ஓய்வும் இல்லை. உறக்கமும் இல்லை. அந்த வகையில்
இன்னும் பகை முடிக்காத தென்பாண்டியரின் பருமம் களைந்து வெற்றியைக்
கொண்டாடும் நோக்கில் ஆசான்மார் அணியமாகி வருகின்றனர் என்பதன் அறிகுறியே
தமிழ்ப் புத்தாண்டுப் புரிதல். அதனால் உண்மைத் தமிழர் ஒவ்வொருவரும் ஒரு
தமிழ் ஆசானின் உண்மை மாணாக்கனாக தம்மை ஒப்புவித்துக் கொள்வது காலத்தின்
தேவையாகும்.
பருமம் களையாப் பாய்பரி:-
பருமம் என்ற சொல் குதிரையின் கடிவாளம், சேணம், வடிம்பு, மணி
போன்றவற்றைக் குறிப்பதாகக் கருதுவோர் உள்ளனர்.
பருமம் களையாப் பாய்பரிக் கலிமா – நெடுநல்வாடை-179
உண்மையில் வர்மம் அல்லது பிரம்மம் என்ற சொற்களும் இவற்றோடு தொடர்பு
பெற்றிருக்கலாம். அனைத்தையும் தமிழ்ப் புத்தாண்டு உடைத்துப் பேசும்.
பாண்டிய மன்னன், பாய்பரி, பகடு, களிறு அனைத்துக்கும் பருமம் ஒன்றே.
தேவை வல்லுநர்கள்:-
தமிழ்ப்புத்தாண்டு எனக்குப் புரிகிறது அல்லது புரியவில்லை. இவ்வளவு
புரிகிறது, அல்லது இன்னின்ன ஐயம் தோன்றுகிறது என்று மனத்தூய்மையுடன்
முயற்சி செய்யும் யாரும் திருத்தகுதியைத் தமிழால் மெள்ள மெள்ள வளர்த்துக்
கொள்ளலாம்.
...---111---...
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 இன் வெளியீடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக