ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

வன்னியர் தரப்பு நியாயம் மரம்வெட்டி பறையர் இணக்கம் பாமக மாரிமுத்து ஜவஹர் முழு

aathi tamil aathi1956@gmail.com

9/12/15
பெறுநர்: எனக்கு

ஒரு மரம் வெட்டியின் கேள்வி….? – மாரிமுத்து ஜவகர்

வணக்கம்,
நீண்ட நாளாவே என்னோட மனசுல அரிச்சிக்கிட்டு இருந்த கேள்விய இப்போது கேட்கிறேன்…..
அதற்கு முன்னால், நிறைய முகநூல் நண்பர்கள் தனிச்செய்தியிலும் நிலைத்தகவல்களிலும் உங்கள் சமீபத்திய பதவுகள் கவலை அளிக்கிறது என்றும், நீங்கள் எடுத்த நிலைப்பாடு ஆச்சரியமாக இருக்கிறது என்றும், சாதி குறித்த உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே வருவதால் இந்தப் பதிவு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதி என்பது நீடித்து நிலைத்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற எண்ணமோ, என் சாதி உயர்ந்தது மற்றவையயல்லாம் தாழ்ந்தவை என்ற வெறியோ எனக்கு சிறிதும் கிடையாது. இதை என்னுடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் நன்கு அறிவார்கள். எங்கள் குடும்பத்தில் கூட சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெற்று இருக்கின்றன. நாங்கள் அவர்களுடன் தாயாய் பிள்ளையாய்த்தான் பழகி வருகிறோம். (இந்த பில்ட் அப் எல்லாம் கூட எதுக்கு என்றால், கட்டுரை முழுவதையும் படித்து விட்டு டமார் என்று சாதி வெறியன் முத்திரை குத்தி நாம் கேட்கும் கேள்விகளை திசை திருப்பி விட்டுவிடுவார்கள் “தோழர்கள்” அதற்குத்தான்)
கட்டுரையின் தேவை கருதி சில சாதிகளையும் சில தனி மனிதர்களையும் இயக்கங்களையும் குறிப்பிட நேர்ந்து இருக்கிறதே தவிர, எந்த குறிப்பிட்ட சாதி மீதோ இயக்கம், கட்சிகள் மீதோ தனி மனிதர்கள் மீதோ எனக்கு எள்ளளவும் காழ்ப்பு கிடையாது. இது என் மனசாட்சிக்குத் தெரியும்.
இந்தக் கட்டுரை எழுத வேண்டியதற்குக் கூட இப்போது அவசியம் வந்திருக்காது.. ஒரு டாக்டர் ராமாதாசையும், ஒரு காடுவெட்டி குருவையும் கேட்கிறோம் என்னும் போர்வையில் ஒட்டு மொத்த வன்னியர் சமூகத்தையே நீங்க கழுவி கழுவி ஊத்துவதும்… மரம் வெட்டி என்று போற வர்ற பொறம்போக்கு எல்லாம் கேவலப் படுத்துவதும்.. அதற்கு எல்லா முற்போக்கு முகமூடிகளும் கைதட்டி சபாஷ் போடுவதும். உங்கள் வஞ்சக நெஞ்சத்தை மட்டுமே காட்டுகிறது. தாங்கள் சார்ந்த சாதி மீது வெறி இருப்பது மட்டுமல்ல, குறிப்பிட்ட மாற்று சாதி மீது காழ்ப்பு கொண்டிருப்பதும் கேவலமான சாதி வெறிதான். அந்த வெறி உங்களில் எல்லோருக்குமே இருக்கிறது என்பது தான் இந்த சம்பவங்களில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்ட பாடம். நிற்க.
முதலில் நீங்கள் எங்களை எண்ணவெல்லாம் சொல்லி கேவலப்படுத்துகிறீர்கள் அது எந்த அளவு யோக்கியத்தனமானது என்று குறிப்பிட்டு விடுகிறேன்.
வன்னியன் வாக்கு வன்னியனுக்கே.
விழுப்புரத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பெரியாரியல் அறிஞர் அய்யா ஆனைமுத்து (வன்னியர்) ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டார்.
“1920‡47 ஆண்டுகளில் அரசியல் பதவிகள் என்பவை, ஊராட்சிமன்றம், நகராட்சி மன்றம், வட்ட ஆட்சி மன்றம் (தாலுக்கா போர்டு), மாவட்ட ஆட்சி மன்றம் (ஜில்லா போர்டு) மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாகவும் தலைவராகவும் வருவதுதான்.
இவையயல்லாவற்றிலும் (அன்றைய) தென்னாற்க்காடு, வடஆற்காடு, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் பேராதிக்கம் செலுத்தியவர்கள் காங்கிரசின் பேரால், தென்னாற்காட்டில் சீத்தாராம ரெட்டியார், வெங்கடகிருஷ்ணா ரெட்டியார், பாஷ்யம் ரெட்டியார், இலட்சுமிநாராயண ரெட்டியார், மற்றும் மார்க்கண்டம்பிள்ளை, வேணுகோபால்பிள்ளை, கனகசபை பிள்ளை முதலானவர்களே. திருச்சியில் பெருவளப்பூர் இராசா சிதம்பரம் ரெட்டியார், துறையூர் கிருஷ்ணசாமி ரெட்டியார், அரும்பாவூர் நாட்டார் மற்றும் அரியலூர் பி.வெங்கடாசலம் பிள்ளை உடையார்பாளையம் பி.நடேசம்பிள்ளை, காடூர் நடராசம் பிள்ளை இவர்களே ஆதிக்கம் பெற்றிருந்தனர்.
இவர்கள் அனைவரும் மேல்சாதிக்காரர்கள் – ரெட்டியார், கார்கார்த்தார் (பிள்ளை) வகுப்பினர். வடஆற்காட்டிலும் செங்கற்பட்டிலும் ரெட்டியார், தொண்டைமண்டல முதலியார், கம்மவார் நாயுடு இவ்வகுப்பினரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது……….
மேலே கண்ட பார்ப்பனரல்லாத நாலைந்து மேல்சாதிக்காரர்கள் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் ஏழெட்டு விழுக்காடு உள்ளவர்களே. ஆனால், இவ்வகுப்பினர் 100க்கு 14 விழுக்காடு அளவுக்கு உள்ள வன்னிய வகுப்பினரின் பேரில் கி.பி 1800 முதலே ஆதிக்கம் செலுத்திய வகுப்பினர். அத்தகைய ஆதிக்கத்திற்கு எதிராக கடலூரில் அரசர்குல வாலிபர் சங்கம் என்ற அமைப்பை வன்னிய வகுப்பு இளைஞர்கள் நிறுவினர். அதன்விளைவாகத்தான் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரைத் தலைவராகக் கொண்டு கடலூர் ஆ.கோவிந்தசாமி பி.ஜி.நாராயணசாமி ஆகியோரைச் செயலாளர்களாகவும் கொண்டு கடலூரில் வன்னியகுல சத்திரிய சங்கம் மலர்ந்தது.
அன்று தொடங்கி 1958 பிப்ரவரியில் தந்தை பெரியார் “வன்னியர்களுக்கு ஒரு நல்ல தலைவன் இல்லை. அச்சமூகம் முன்னேறாததற்கு அதுவே காரணம்” என மனம் வெதும்பி அறிக்கை வெளியிடுகிற வரையில் நான் திராவிடர் கழகத்தில் இருந்து கொண்டே வன்னியர் சங்கத்திலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டேன்…………
வெள்ளையனை வெளியேற்றியபிறகு நடந்த முதல் பொதுத்தேர்தலில் வன்னியகுல சத்திரியர் சங்கம் என்ற பெயராலேயே பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலைமை தோன்றியது. அதன் விளைவாகவே தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற பெயரில் வன்னியர் சங்கத்தாரால் ஓர் அரசியல் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
தேர்தல் பணி தொடங்கியது.
காங்கிரஸ் வேட்பாளர்களுள் அதிகம் பேர் ரெட்டியார் வகுப்பினர் எல்லோரும் பெரும் பணக்காரர்கள், பேருந்து முதலாளிகள்.
“வெள்ளிப் பூச்சியைத் தூண்டிலில் போட்டால் பள்ளிக் கெண்டை தானாக விழும்” என்று இளக்காரமாக அப்பணக்காரர்கள் பேசினர்.
அதற்கு மறுமொழியாகத்தான்….
“வன்னியர் வாக்கு வன்னியருக்கே!” என்ற முழுக்கம் எழுந்தது.
ஆனாலும் மிக அறிவுடைமையோடு தமிழ்நாட்டில் நல்ல எண்ணிக்கையில் உள்ள ஆதிதிராவிட (பறையர்) வகுப்பினரை மனமார இணைத்துக்கொண்டு, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி தென்னாற்காடு, திருச்சி, தஞ்சை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் போட்டியிட்டு 19 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்த 19 பேர்களுள் 13 பேர் வன்னியர்; 6 பேர் ஆதிதிராவிட வகுப்பினர் இதுவே தமிழக அரசியலில் சாதி அடிப்படையிலான முதலாவது கூட்டணி என்றால் பிழையாகாது”
இவ்வாறு அறிஞர் ஆனைமுத்து பேசியதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
மேல்சாதிக்காரர்கள் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த வேளையில் வன்னியருக்கு நல்ல தலைவன் இல்லை அதனால் அச்சமூகம் முன்னேறவில்லை என்ற பெரியார் பேச்சை கேட்டுக் கொண்டு கொஞ்ச நஞ்சம் செய்து வந்த வன்னியர் அரசியல் வேலைகளையும் விட்டு விட்டு பகுத்தறிவு பேசி கடவுளை ஒழிக்க இவர்களைப் போன்ற மெத்தப் படித்த அறிவாளிகளே போய்விட்டார்கள் என்னும் போது.. படிக்காத பாமர வன்னியன் என்ன செய்வான்? உண்மையில் வன்னியருக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்த பொறுப்பை இவர் போன்றவர்கள் அல்லவா கையில் எடுத்திருக்க வேண்டும்? இன்னும் கடினமாக உழைத்து இச்சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வந்து ஆதிக்க சாதிக்காரர்களின் திமிரை அடக்கி இருக்க வேண்டும்?
ஆனைமுத்து மட்டுமல்ல.. இன்னும் இப்படி பல அறிவாளிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் வன்னியரில் இருக்கின்றார்கள்.
“வெள்ளிப்பூச்சியைத் தூண்டிலில் போட்டால் பள்ளிக் கெண்டை தானாக விழுவான்’ என்று சாதி வெறியர்கள் ஏளனமாகப் பேசியதன் விளைவுதான் “வன்னியர் வாக்கு வன்னியருக்கே’ என்ற முழுக்கம்.. அதுவும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட முழக்கம். பள்ளிப் பயல் என்று இழித்து பேசிய ரெட்டியாரும் முதலியாரும், பிள்ளையும் சாதி வெறியனா? என் வாக்கு எங்கள் சமூகத்துக்கே என்று பதில் அளித்தவன் சாதி வெறியனா?
மரம் வெட்டி……
இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் தீண்டத்தகாத மக்களை பட்டியல் வகுப்பினர் என தொகுத்து அவர்களுக்கு உரிமை வேண்டும் என்று முழங்கினார் அண்ணல் அம்பேத்கர். தான் பிறந்த சாதியைச் சேர்ந்த மக்கள் அரசியலில், கல்வியில், வேலைவாய்ப்பில், சமூகத்தில் ஒதுக்கப்படுவதை எதிர்த்து தான் அண்ணல் அம்பேத்கார் அம்மக்களை உயரச் செய்ய அரும்பாடு பட்டார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். போராடினார். அது மிகப் பெரிய வரலாறு.. அதன் விளைவாக கிடைத்ததே பட்டியல் வகுப்பினர் இட ஒதுக்கீடு. இந்திய அரசியல் சாசனப்படி பிற்பட்ட வகுப்பாருக்கு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்றே எழுதப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டடோரும் பிற்பட்ட பிரிவினரே. அதனால் தான் அவர்கள் தவிர்த்த பிற்பட்டோர் ஓபிசி (other backward class) எனக் குறிப்பிடப் படுகின்றனர். சமூக நிலையில் மேல்தட்டில் உள்ள கொங்கு வேளாளர்கள் அரசியல் காய்களை நகர்த்தி தாங்களையும் பிற்பட்ட வகுப்பில் சேர்த்துக் கொண்டனர். இப்படி கொங்கு வேளாளர்களும் அவர்களைப் போன்ற தமிழ்நாட்டில் பெரிய நிலவுடையாளராக உள்ள உடையாரும், நாயுடுவும், செட்டியாரும், வணிகம் செய்து தனவந்தராகிய சாதியாரும், பிற்பட்ட வகுப்பினராம்.
விவசாயக் கூலிகளாயும், 2 ஏக்கர் 3 ஏக்கர் நிலங்களை வைத்து விவசாயம் செய்து வயிற்றைக் கழுவும் வன்னியரும் பிற்பட்ட சாதியாம் என்றால்-
இது என்ன சமூக நீதி? எங்களால் அவர்களுடன் போட்டி போட முடியுமா?
பட்டியல் சாதி (தலித்) வகுப்பாருக்கு தனித்தொகுதி முறை உள்ளதால் அவர்களின் அரசியல் இருப்பு புறக்கணிக்க முடியாதது. ஆனால் வன்னியருக்கு திராவிடக் கட்சிகள் எதாவது பிச்சை போட்டால்தான் உண்டு. அந்த ஒன்றிரண்டு பதவிக்கே நாயாய் நன்றியுடன் காலத்திற்கும் அவர்கள் காலில் விழுந்து கிடக்க வேண்டும்.
வெள்ளைக்காரன் ஆண்ட காலம் வரை பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது சாதி வாரி கணக்கு எடுத்து வருவதை பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இதனால் எந்தெந்த சமூகம் எவ்வளவு இருக்கிறது என்ற புள்ளி விபரம் இருந்து வந்தது. அது மட்டுமல்லாமல், அரசுப் பணியில் உள்ளவர்களின் விபரம் கெஜட்டில் சாதி வாரியாக வெளியிடப்பட்டது.
தலித்துகளை பொருத்த வரை விடுதலைக்குப் பிறகும் அவர்களுக்கு மட்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. அது எதற்கு என்றால், அந்த மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை மறு சீரமைத்துக் கொள்ளவே. ஆனால் மற்ற சமூகங்களின் நிலை?
எங்களில் பெரும்பாலும் பள்ளிப் படிப்பையே தாண்டியறியாதவர்கள். அரசியலைப் பொறுத்தவரை ஒதுக்கி ஓரம்கட்டப் படுகிறோம். பள்ளிக்கு வீடு கொடுக்க முடியாது என்று மறுத்த காலமே உண்டு. இதனைப் பார்த்து பல வன்னியப் பெரியவர்கள் மனம் வெதும்பி உள்ளனர். இப்படி ஒதுக்கப்படும் ஒரு சமுதாயம் அந்த ஒடுக்குமுறையை எதிர்த்து கிளர்ந்தெழுவது என்பது இயல்பானதே.
இந்த நிலையில் தான், நாங்களும் பிற்பட்டவர்களா? எங்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வன்னியர் சங்கங்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். அந்த கூட்டுக் குழுவின் தலைவராக மருத்துவர் ராமதாசு நியமிக்கப்படுகிறார். அன்றைய முதல்வர் மலையாளியான எம்.ஜி.ஆரிடம் வன்னியர் சங்க தலைவர்கள் சென்று நாங்கள் பெரும்பான்மை சமூகம் இத்தனை கோடி இருக்கிறோம் எங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தபோது, “ஒவ்வொரு ஜாதிக்காரனும் இப்படித்தான் சொல்கிறான். உங்கள் கணக்குப்படி பார்த்தால் தமிழ்நாட்டின் ஜனத்தொகையே பத்தாது’ என்று நக்கலடிக்கிறார் அவர்.
ஒரு பொறுப்புள்ள முதல்வர் பேசும் பேச்சா இது. இவரிடம் அரசு இயந்திரம் இருக்கிறது. வாய்ப்பு இருக்கிறது. இவர் நினைத்தால் மக்கள் தொகை கணக்கெடுத்து யார் யார் எவ்வளவு இருக்கிறார்கள் என்று சுலபமாக கண்டுபிடித்து விடலாம். ஆனால், இந்த இடத்தில் தட்டிக் கழிக்கும் மனப்பான்மை மட்டுமல்ல பெரும்பான்மை மக்களை நசுக்கும் மனோநிலை இந்த சிறுபான்மை தலைவருக்கு இருந்திருக்கிறது.
தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ரயில் மறியல் போன்ற போராட்டங்களை முன்னெடுத்து விட்டு அரசு மசியாத காரணத்தால்தான் காலவரையற்ற சாலைமறியல் அறிவிக்கிறார் மருத்துவர் ராமதாசு. செப்டம்பர் 17ஆம் நாளில் இருந்து கால வரையற்ற சாலை மறியல் செய்யப் போகிறோம் என முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையில் திமுக நடத்தும் முப்பெரும் விழாவும் நடக்க இருக்கிறது. எனவே அவர்களுக்கும் முன்னெச்சரிக்கை அனுப்பப்பட்டு விடுகிறது.
குறிப்பட்டபடி செப்டம்பர் 16 அன்று இரவு சரியாக 12 மணிக்கு சாலை மறியல் போராட்டம் தொடங்குகிறது. சென்னை விழுப்புரம் சாலையில் உள்ள முண்டியம்பாக்கம் என்ற இடத்தில் வன்னியர்கள் திரண்டு சாலையை மறைக்கின்றனர். அவர்களிடம் காவல்துறையினர் கலைந்து செல்லும்படி மிரட்டுகின்றனர். கலைந்து செல்லாவிட்டால் துப்பாக்கி சூடு நடத்தப்படும் என்று அறிவிக்கின்றனர். ஜெகநாதன் என்பவர் கலைந்து செல்ல முடியாது முடிந்தால் சுடு என எதிர்த்துப் பேசுகிறார். அவரை சுட்டுத் தள்ளுகிறது காவல்துறை. தங்கள் கண்முன்னே துப்பாக்கிச் சூட்டில் ஒருவரை இழந்தும் கூட்டம் கலைய மறுத்து போராட்டம் தீவிரமடைகிறது.
அதே நேரம் விக்கிரவாண்டி அருகே சாலைமறியல் நடக்கும் போது திமுக முப்பெரும் விழாவிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டு இருந்தவர்களின் வாகனங்களும் மறிக்கப்பட்டுள்ளன. அந்த போராட்டத்தை நசுக்க வந்த அழகுவேல் என்னும் காவல்துறை அதிகாரி கட்டைகளை கொண்டு திமுகவினர் மூலம் போராட்டக்காரர்களை அடித்து துன்புறுத்தி கலைக்க முயல்கின்றனர். இதன் மூலம் வன்முறை வெடிக்கிறது. கூட்டத்தை கலைக்க திமுகவினரும் காவல்துறையினரும் அங்கிருந்த கரும்புத் தோட்டங்களுக்கு தீ மூட்டுகின்றனர். இதனால் கொதிப்படைந்த போராட்டக்காரர்கள் சாலையில் நின்றிருந்த லாரிகளுக்கு தீ வைக்கின்றனர். கரும்புத் தோட்டங்களுக்கு வைத்த தீயில் அதன் அருகே இருந்த சில பறையர்களின் குடிசைகளும் வன்னியர் குடிசைகளும் எரிந்து போகின்றன. இப்படியாக நடந்த போராட்டத்தில் அந்த ஒரு இரவில் மட்டுமே சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் 11 பேர்.
அதில் யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர் ஒருவர் போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்தவர் அவரும் வன்னியர் என்று தவறாக கருதப்பட்டு அடித்து காவல்துறை வேனில் போடப்பட்டார். பிறகு உயிரிழந்தார். பத்தர் (விஸ்வகர்மா) சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கும் பறையர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோதத்தில் பத்தர் சமுதாயத்தை சார்ந்தவரை பறையர் சமுதாயத்தை சார்ந்தவர் குத்தி விட்டார். அவரும் இறந்து போனார்.
துப்பாக்கிச் சூடு நடந்துவிட்டபடியால் சட்டம் ஒழங்கு சீர்கெட்டு விட்டது எனவே பேராட்டத்தை நசுக்குங்கள் என காவல்துறைக்கு உத்தரவு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது.
இத்தனை உயிரிழப்புகளுக்குப் பிறகு மக்கள் தன்னெழுச்சியாக போராடத் தொடங்கி விட்டனர். ஆங்காங்கே மரங்களை வெட்டி சாலைகளை மறிக்கத் தொடங்கி விட்டனர். அந்த சாலை மறியல் போராட்டம் ஒரு வார காலம் நடைபெறுகிறது. சாலையோர மரங்களையும் கிளைகளையும் வெட்டி சாலையில் போட்டு வழியை மறிக்கின்றனர்.
காவல்துறையும் துணை ராணுவமும் மிகக் கடுமையான ஒடுக்கு முறையை கிராம மக்கள் மீது கையாள்கிறது. அடித்து கொல்லப்பட்டவர்கள்; சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்; படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் என எண்ணிக்கை இருபதை தாண்டுகிறது. பல பெண்கள் காவல்துறையின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். படுகாயம் அடைந்து கை இழந்து கால் இழந்து ஊனம் அடைந்தவர் பலர். வெடிகுண்டு வைத்திருந்ததாக பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் தள்ளப்பட்டவர் பலர். இப்படி ஒரு அரச பயங்கரவாதத்தின் மூலம் போராட்டம் ஒடுக்கப்படுகிறது.
கடைசியில் பறையர்கள் வீடுகளை வன்னியர்கள் கொளுத்தி விட்டதாகவும்; கொன்று விட்டதாகவும் அரசு ஒரு பொய்யை பரப்புகிறது. அப்போது தலித் எழில்மலை அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்து அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அறிக்கை வழங்கினார்.
கொளுத்தப்பட்ட மொத்த வீடுகள் 300 என்றால் அதில் 200க்கும் மேற்பட்டவை வன்னியர் வீடுகளே.
தனக்கு சமூக நீதி வழங்காத அரசை எதிர்த்து ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் நடத்திய அரசியல் போராட்டம் இது.
இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான செய்தி.
மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும் கள்ளுக் கடைகளை மூட வேண்டும் என்று காந்தி போராட்டங்களை முன்னெடுத்தபோது, அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் காந்திய கொள்கைகளை வலியுறுத்தி களமாடி வந்தவர், பெரியார் என்று உங்களால் செல்லமாக அழைக்கப்படும் ஈ.வே.ராமாசாமி நாய்க்கர். காந்தி அறிவித்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்திற்கு ஆதரவாக தன் வீட்டு தோட்டத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிப் போடுகிறார் பெரியார். காரணம்? தென்னை மரங்களில் இருந்துதான் கள் இறக்குகிறார்கள் எனவே தென்னை மரங்களை வெட்டு. என்று.
இன்றுவரை அந்த நிகழ்ச்சியைப் பெருமையாகக் கூறி.. பார்த்தாயா என் தலைவனை கள்ளுக்கடையை மூடுவதற்காக 500 தென்னை மரத்தையே வெட்டினார் என்று புளகாங்கிதம் அடைகிறார் அவரது தொண்டர்கள். அரசை எதிர்த்த ஒரு போராட்டம். அதற்காக மரங்களை வெட்டுகிறார் பெரியார்.
இப்போது சொல்லுங்கள்..
எங்கள் உரிமைகளை கேட்டு நாங்கள் போராட்டம் நடத்தினால், மரத்தை வெட்டினால், எங்களுக்கு மரம் வெட்டி பட்டம்?
அதே மரத்தை தெலுங்கர் பெரியார் வெட்டினால் அவருக்கு தமிழர் தலைவர் பட்டம்…?
இதனை நான் குறிப்பிட்டால் சில பெரியாரியவாதிகள் என்னிடம் இரண்டையும் ஒப்பிடாதீர்கள் என்கிறார்கள். சாதியை ஒழிக்க வந்தவராம் பெரியார். நாங்கள் சாதி வெறி போராட்டம் நடத்தினோமாம். அதனால் ஒப்பிடக் கூடாதாம்.
ஏன் பெரியாரியவாதிகளே இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அரசு பட்டியிலில் ஒடுக்கப்பட்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டபர்களை தவிர்த்து மற்ற அனைவரும் மாட மாளிகையிலும் கூட கோபுரத்திலுமா வாழ்கிறார்கள்? எங்கள் கோரிக்கையின் நியாயத்தை கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாத நீங்கள் ஏன் தமிழன் என்றும் தமிழினம் என்றும் பேசுகிறீர்கள்?
கூடங்குளம் போராட்டத்திலும்; முல்லைப் பெரியாறு போராட்டத்திலும் சாலையை மறிக்க வெட்டப்பட்டது மரங்கள் இல்லையா? சாலை மறியல் செய்ய சாலைகளின் ஓரத்தில் உள்ள மரத்தை வெட்டிப் போடாமல் மயிறையா வெட்டிப் போட முடியும்.. அல்லது அரசுக்கு அஞ்சி ஒதுங்கி கடைசி வரை சாக்கடையிலேயே உழலுங்கள் என்று எங்களுக்கு போதனை செய்கிறீர்களா?
டாக்டர் ராமதாசைத்தான் சொல்கிறோம், காடுவெட்டி குருவைத்தான் சொல்கிறோம் என்று நீங்கள் சொல்வது பேடித்தனம்.
போராட்டம் நடத்தி மரத்தை வெட்டியவர்கள் எங்கள் முன்னோர்கள். டாக்டர் ராமதாசும் குருவும் அல்ல.. காடுவெட்டி குரு அப்போது வன்னியர் சங்கத்திலேயே இல்லை.
எங்கள் தலைவர்கள் காட்டிய வழி தவறு. அவர்கள் தவறானவர்கள் என்றால்.. எங்களுக்கான உரிமைகளை நீங்கள் கேட்டு வாங்கிக் கொடுங்கள்.. எங்களுக்கான போராட்டங்களை நீங்கள் நடத்துங்கள்.. உங்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். நீங்கள் நேர்மையாளராக இருக்கும் பட்சத்தில்.
கூடங்குளம் பகுதி மீனவர்களுக்காக நாடார் சமூகத்தை சேர்ந்த அய்யா உதயகுமார் போராடுவதைப் போல, அந்தமக்கள் எப்படி அந்த மனிதரைத் தாங்குகிறார்கள்? அது போல உங்களை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறோம். தயாரா? சொல்லுங்கள்…
நீங்களும் வாய்திறக்க மாட்டீர்கள்.. யாராவது கேட்டாலும் – மரம் வெட்டி என்று முத்திரை குத்துவீர்கள்?
குற்றப்பட்டியலிலிருந்து தங்களை நீக்கக்கோரி பிறமலைக் கள்ளர் சமுதாயத்தினர் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்திய போது, பெருங்காமநல்லூரில் அவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்றும் விழா எடுக்கிறார்கள்.. தோழர் தியாகு அதில் பங்கேற்கிறார். கீழவெண்மணி போராட்டத்தையும் பெருங்காமநல்லூர் போராட்டத்தையும் நான் வேறு வேறாகப் பார்க்கவில்லை என்கிறார். அதில் வைகோ போன்ற முன்னணித் தலைவர்கள் கலந்து கொண்டு வீரவுரை ஆற்றுகிறார்கள்.
அதே போல, சமூக நீதி காக்க எங்களுக்கு உரிமை கேட்டு அரசை எதிர்த்துப் போராடி, துப்பாக்கிச் சூட்டிலும் அடி உதை பட்டும் உயிர் நீத்த எங்கள் முன்னோருக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாம்.. மரம் வெட்டி, மரம் வெட்டி என்று பட்டம் கொடுக்காமலாவது இருக்கலாமல்லவா?
இனிமேல் ஒரே வார்த்தை.. எவனாவது எங்களை கை நீட்டி மரம் வெட்டி என்று சொல்வானானால் .. அவன் முதலில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரை மரம் வெட்டி என்று பட்டப் பெயர் போட்டு எழுதிவிட்டு அதன்பிறகு எங்களை சொல்வதைப் பற்றி யோசிக்க வேண்டும்.. இல்லை என்றால்.. அவர்கள் பிறப்பு சந்தேகத்திற்குரியது.
குச்சிக் கொளுத்தி..
தமிழ்நாட்டில் இத்தனை பட்டங்கள் வேறு எந்த சாதிக்காவது உண்டா என்று யோசித்துப் பார்க்கிறேன்..
சாதி வெறியன், மரம் வெட்டி, குச்சுக் கொளுத்தி, வன்முறையாளன், கொள்ளைக்காரன்… இப்படி..
2001 சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனின் தேர்தல் முழக்கங்கள் என்ன? ஓட்டுப் போடு.. இல்லை உன் பொண்ணைக் கொடு, சிரமறுக்க ஒன்று கூடுவோம். ராமதாசின் தலையை வெட்டப் பணம் கொடுங்கள். படையாச்சி பொண்டாட்டி பறையனுக்கு வப்பாட்டி.. இப்படி பேசவே நா கூசும் சொற்களை கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்ததால் ஏற்பட்டது தான் சிதம்பரம் கலவரங்கள். பேசுவதை எல்லாம் பேசுங்கள் காதை பொத்திக் கொள்கிறோம் என்று எல்லோருமே இருந்துவிட மாட்டார்கள்.
தேர்தல் தினத்தன்று-
வன்னியர்களை வாக்குப் போட விடாமல் தடுக்க வரைமுறையற்ற அராஜகங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வன்னியர் குடிசைகள் கொளுத்தப்பட்டன. 4000 வாத்துக்கள் கொட்டாயோடு சேர்த்து கொளுத்தப்பட்டன. பல வன்னிய இளைஞர்கள் வெட்டப்பட்டனர்.
இத்தனையும் நிகழ்த்திவிட்டு ஊடகங்களை அழைத்து உண்ணாவிரத நாடகம் நடத்தி, வன்னியர்கள் எங்கள் குடிசைகளை எரித்து விட்டார்கள். கலவரம் நடத்தி விட்டார்கள் என்று ஒப்பாரி வைத்தார் திருமாவளவன். ஊடக தர்மம் அவர்களுக்கே ஒத்து ஊதியது. பாதிக்கப்பட்ட நாங்களே வன்முறையாளர் பட்டம் பெற்றோம்.
அன்று முதல் இன்று வரை என்ன நடக்கிறது. ஒரு கலவரம் நடந்தால் என்ன ஏது என்றே விசாரிக்காமல், வன்னியர்கள் தான் குடிசைகளை கொளுத்தினார்கள் என்று முன்முடிவு எடுக்கும் நிலை தொடர்கிறது. இது தர்மபுரியிலும் எதிரொலித்தது.
இப்போது கூட நா கூசாமல் சொல்கிறார் திருமாவளவன் சிதம்பரம் தேர்தலில் வன்னியர்கள் பறையர்களின் 5000 குடிசைகளை கொளுத்தி விட்டார்கள் என்று.
தர்மபுரி கலவரத்திற்கு பிறகு இது குறித்து உண்மை கண்டறிய சென்ற குழுவில் நானும் பயணப்பட்டேன். அதன் பிறகும் அங்கு ஏறக்குறைய 7 நாட்கள் தங்கி இருந்து இதன் சூத்திரதாரி யார் என்று விசாரித்தேன்.
தர்மபுரி கலவர சூத்திரதாரி யார்?
பெண் ஓடிப் போகிறாள் பேரம் பேசப்படுகிறது. இடையில், காவல்துறை குறுக்கிடுகிறது. பேரத்தொகை உயர்த்தப்படுகிறது. பெண் அப்பா நாகராஜ் ஒரு பக்கம் பணம் திரட்ட முடியாமல் திணறுகிறார். மறுபக்கம் பேச்சுவார்த்தைக்கு போனவர்களிடம் மகள் வர மறுப்பதாக செய்தி வருகிறது. மறுபடியும் காவல் நிலையம் போகிறார். விடுதலைச் சிறுத்தைகளின் கட்டப்பஞ்சாயத்து கும்பலான குண்டு சக்தி, அதியமான்கோட்டை துப்பாக்கி திருட்டு வழக்கில் உள்ள மின்னல் சக்தி, எஸ்.ஐ. பெருமாள் ஆகியோரின் ஏளனப் பேச்சுக்கு ஆளாகிறார்.
மனமுடைந்து வீடு திரும்பிய நாகராஜ் தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் நாயக்கன் கொட்டாய் காலனி மக்களுக்கு முதலில் தெரியப்படுத்தியவர் பேரம் பேசிய எஸ்.ஐ. பெருமாள் தான். அதுமட்டுமல்லாமல் பெண்ணின் அப்பன் செத்துவிட்டான் என்பதால் கலவரம் நடக்கும் எனப் பயந்து தலைமறைவு ஆகிறார்.
இந்த செய்தி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் அனைவருக்கும் தெரியவருகிறது. உடனே ஒரு மேல்மட்ட கூட்டம் ஊமை.ஜெயராமன் என்பவர் தலைமையில் நடைபெறுகிறது. எங்கே? தர்மபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில், அந்த அலுவலக மேலாளர் தலித் சாதியை சேர்ந்தவர் என்பதால் அங்கு ரகசிய கூட்டம் நடக்கிறது. அங்கிருந்துதான் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. என்னென்ன செய்ய வேண்டும் என்று.
இந்த நிலையில்தான் நாகராஜின் பிணத்தை சுமந்து சென்ற ஊர் மக்கள் அந்த பையனின் வீட்டு முன் வைத்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அந்த பகுதி நொறுக்கப்படுகிறது. பிறகு பிணத்தை எடுத்துக்கொண்டு சென்று நடு சாலையில் வைத்து சாலை மறியல் செய்கிறார்கள்.
இது தவறு என்றால்,கூடங்குளத்தில் அரச வன்முறையைக் கண்டித்து சென்னையில் அண்ணா சாலையில் சாலை மறியல் நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து அடித்து நொறுக்கப்பட்டது. இது என்ன இனவெறியா? நீங்கள் செய்தால் போராட்டம்.. மற்றவன் செய்தால் அது சாதி வெறி..
இவ்வளவிற்கு பிறகும் எந்த செய்தியிலும் விடுதலை சிறுத்தைகளின் பங்கு பற்றி செய்தியே வராமல் பார்த்துக் கொண்டவர்கள்; கடைசி வரை இளவரசனின் படத்தை வெளியிடாமலே கவனமாகப் பார்த்துக்கொண்டவர்கள் அறிவாளிகளா? செத்துப் போன நாகராஜின் படத்தை வெளியிட்டு ஆதரவு திரட்டக்கூட தெரியாமல் கடைசி வரை இருந்தவர்கள் அறிவாளிகளா?
ஒரு மனிதன் இறந்து விட்டான். பெண்ணை பெற்ற தகப்பன். அதற்கு காரணமானவர்கள் வீட்டை ஒரு மக்கள் கூட்டம் அடித்து நொறுக்குவது என்பது என்ன சாதி வெறியா? இத்துடன் அவர்கள் ஆர்ப்பாட்டம் எல்லாம் முடிந்து விட்டது. அன்று இரவு தான் அண்ணாநகர், கொண்டம்பட்டி காலனிகள் பற்றி எரிகின்றன. இதற்கு திட்டமிட்டு கொடுத்தவர் ஊமை.ஜெயராமன். இதில் பார்க்கலாம். ஒரு கோழி ஆடு கூட உயிரிழக்கவில்லை.. எல்லாம் பொருட்சேதம் மட்டுமே. அதிலும் கூட விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை. இந்த கேள்வியை யாரும் எழுப்பிவிடக் கூடாது என்றுதான். கொள்ளையடித்து விட்டார்கள் என்ற பொய் பரப்பப்படுகிறது.
அவர்களின் நோக்கம், தாங்கள் செய்த கட்டப்பஞ்சாயத்தை மறைப்பது கொலைப்பழியிலிருந்து தப்புவது. பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்குவது. இதில் மாவட்ட தலித் கலெக்டரும் உடந்தை. அன்று மாலையே தர்மபுரி வந்து விட்ட கலெக்டர் மறுநாள் வரை சம்பவ இடத்திற்கு போகவே இல்லை. உடனடியாக 265 வீடுகள் எரிக்கப்பட்டது என்று அறிக்கை கொடுத்துவிட்டார். வீட்டிற்கு 5000 நிவாரணம் என்றும் அறிவித்து விட்டார்.
இரவோடு இரவாக காவல்துறை வேட்டை நடக்கிறது. வீடு வீடாகப் புகுந்து கைது நடக்கிறது. சித்தப்பா செத்துவிட்டார் என்று சேலத்திலிருந்து வந்த மாணவன் முதற்கொண்டு எல்லோரையும் அள்ளிக்கொண்டு போகிறது காவல்துறை. சிக்கியோர் மீதெல்லாம் வன்கொடுமை வழக்கு. இதில் அடையாளம் தெரியாதவர் என்று 500 பேர் மீது வழக்கு வேறு. ஏனென்றால். பின்னாளில் யார் மீது வேண்டுமானாலும் வழக்குப் போட்டுக் கொள்ள வசதியாக.
ஊர் சிரித்தது. வன்னியர்கள் குற்றவாளிகள் வீட்டை கொளுத்தினார்கள் மூன்று கிராமத்தை கொளுத்தினார்கள், கொள்ளை அடித்தார்கள் என்று.. அனைத்து ஊடகங்களும் ஒத்து ஊதியது. இந்த சத்தத்தில் தர்மபுரி வழியே திருவண்ணாமலை சென்று கொண்டிருந்த பேருந்தை விடுதலைச் சிறுத்தைகள் அடித்து நொறுக்கியதில் அப்பாவி இளைஞன் சக்திவேல் கொல்லப்பட்டான். இவன் வீட்டு ஒப்பாரிச் சத்தம் யார் காதிலும் விழவே இல்லை.
மறுநாள் தமிழக அரசும் வீட்டிற்கு 50,000 நிவாரணம் அறிவித்து விட்டது. இதுவும் போதாது என்று நீதிமன்றம் சென்று வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும் என்று வழக்காடி அதன் மூலமும் சுமார் ஏழரை கோடி நிவாரணம் வாங்கி விட்டார்கள். அவர்கள் வழக்கை எடுத்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, வன்னியர் தரப்பு வழக்கை (பிணை வழங்க போடப்பட்ட வழக்கை) தள்ளுபடி செய்து தன் சாதிப்பாசத்தை காட்டிக் கொண்டார்.
இப்படி ஒரு கூட்டணி தமிழக அரசு வரலாற்றிலேயே பார்த்திருக்க முடியாது. எல்லா கட்சிகள், தலைவர்கள், ஊடகங்கள் என அனைவரும் வன்னியரைக் குற்றம் சுமத்தின. ஒப்புக்குக் கூட இவர்களின் நியாயம் என்ன என்று கேட்க நாதியற்று போனது வன்னியர் சமூகம். 4 மரங்களை வெட்டியதை 42 மரங்கள் என்று எழுதித் தள்ளிய கவின் மலர் என்னும் எழுத்தாளரை பெண்ணுரிமை போராளியாகத்தான் அனைவரும் பேசுகின்றனர். அந்த உண்மையை ஜூ.வி குழுவினரிடம் எடுத்துக்காட்டி கவின் மலர் இப்படி பொய் எழுதுகிறார் என அச்சமில்லை இறைவன் உள்ளிட்டவர்கள் முறையிட்டபிறகுதான், அங்கு பிரச்சனை ஏற்பட்டது. தமது பத்திரிக்கையில் பணியாற்றுவோர் இதுபோல் உண்மை அறியும் குழு என்றெல்லாம் போகக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன் காரணமாகத்தான் கவின் மலர் விகடன் குழுமத்திலிருந்து வெளியேறினார். போனதுதான் போனார் சும்மா போனாரா?
வன்னியர்கள் மீதான தனது வன்மத்தை எல்லாம் ஒன்று திரட்டி ஆனந்த விகடனில் ஒரு கவிதை எழுதிவிட்டுப் போனார். பாவம் அந்த கவிதையின் பொருள் புரியாமலேயே அனைவரும் படித்து சிலாகித்தார்கள்.
தலித்துகள் உரிமையை வென்றெடுக்க, அதிகாரத்தை கைப்பற்ற நேரடியாகவே தலித் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், இயக்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அறிவு ஜீவிகள் என பலர் உள்ளனர். அரசியல் கட்சிகள் மறைமுகமாக தலித்துகளுக்கான ஆதரவுப் போக்கை முன்னெடுக்கின்றன. அப்படி எடுக்காத பட்சத்தில் இந்த அறிவுஜீவிகள் அழுத்தம் கொடுத்து நிர்ப்பந்தித்து எதிர்ப்பு நிலை எடுக்க வைக்கிறார்கள்.
ஓசூரில் இருந்து எழுத்தாளர், கவிஞர் ஆதவன் தீட்சண்யா இந்த வேலைகளை கனகச்சிதமாகச் செய்தார். தர்மபுரி கலவரம் குறித்து பேசாதவர்களை எல்லாம் அழுத்தம் கொடுத்து பேச வைத்தார். பலரிடம் உரையாடி, இது குறித்து பல போராட்டங்களை முன்னெடுக்க வைத்தார்.
தர்மபுரி நகரில் பார்க்க வேண்டுமே!
தினம் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. போகிறவன் வருகிறவன் எல்லாம் வன்னியர்களின் மேல் காலை தூக்கி மூத்திரம் அடித்துவிட்டுப் போனான். தினம் ஒரு இயக்கம் என்று முறைவைத்துக் கொண்டு, சுவரொட்டிகளை ஒட்டினார்கள். மக்கள் மனதில் கசப்புணர்வு அதிகரித்தது. இதன் விளைவாகவே எல்லா சமூகத்து பெண்களும் இணைந்து மாபெரும் உண்ணாவிரதத்தை நடத்தினார்கள். அந்த உண்ணாவிரதத்தில் 5000 பெண்கள் கலந்து கொண்டார்கள் தன்னெழுச்சியாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் குறிப்பிட்ட நாளுக்குள் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும். தேடுதல் வேட்டை நிறுத்தப்பட வேண்டும் என்று எச்சரித்தார்கள். பெண்களின் இந்த போராட்டம் ஒரு செய்தியாகக் கூட வரவில்லை ஊடகங்களில்.
உடனே பார்த்தார் கலெக்டர்.. உங்களுக்கு என்ன எழுச்சி ஏற்படுகிறதா? போடு தடை உத்தரவை என்று 144 தடை உத்தரவு போட்டு விட்டார்.
எப்படி பார்த்தீர்களா? அவர்கள் பொதுக்கூட்டம் நடத்தியவரை தடை கிடையாது. பாதிக்கப்பட்ட வன்னிய மக்கள் எழுந்த உடனேயே தடை. இப்படித்தான் எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது.
சரி.. நத்தம் காலனியை அடித்து நொறுக்கியது தவறு. அதனை கண்டித்த முற்போக்காளர்கள். கைது செய்யப்பட்ட அப்பாவி மாணவர்களைப் பற்றி வாய் திறந்தார்களா? பேருந்து உடைப்பில் இறந்துபோன அப்பாவி சக்திவேல் குறித்து கவலைப்பட்டார்களா? இல்லை. இது என்ன நடுநிலை? ஆதிக்க சாதி என்று முத்திரை குத்தப்பட்டால் நாங்கள் எல்லாம் செத்துப் போக வேண்டும் என்று உங்கள் சட்டம் கூறுகிறதா? அப்படி எந்த வகையில் தான் நாங்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செய்து விட்டோம்? சொல்லுங்கள்.
பார்ப்பனர் கொலை செய்தால் மயிரை மட்டும் சிரைத்தால் போதும் என்று மனு கூறுவது போல, உங்கள் குடிசையின் கூரை மதிப்பும் எங்கள் உயிரின் விலையும் ஒன்றா?
கடைசியாக மரக்காணம் கலவரம்.
அரியலூரிலிருந்து டீசல் வேனில் வந்தவர்கள் 300 கிலோ மீட்டர் வரை வந்து மரக்காணத்தில் தலித் வீடுகள் எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்து பெட்ரோல் குண்டுகள் வீசி கொள்ளை அடித்தார்கள். இது செய்தி. அப்படியே தர்மபுரி கலவரத்தை நினைத்துப் பாருங்கள். அதே கதை.
ஆனால் கலவரம் செய்து கொள்ளையடித்தவர்கள் செத்துப் போனார்கள். கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உடைமை இழப்பு மட்டுமே. உயிரிழப்பு இல்லை. இந்தக் கலவரத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் 4 பேர் மருத்துவமனையில், வன்னியர் ஒருவரின் கோழிப்பண்ணை முற்று முழுதாகத் தீக்கிரையாக்கப்பட்டது. சாதி வெறி சாதி வெறி என்று வழக்கம் போல் கூச்சல்.
எல்லா பிரச்சனைகளிலும் பத்திரிக்கைகளையும், காவல்துறையையும் கேள்வி கேட்கும் அறிவுஜீவிகள் வன்னியர் பிரச்சனை என்று வந்து விட்டால் மட்டும் காவல்துறைக்கும் அரசுக்கும் சலாம் போட்டு ஒத்து ஊதுவது உங்களுக்கே வெட்கமாக இல்லையா?
நீங்கள் ஏன் மாநாடு போடுகிறீர்கள்? ஏன் சித்திரை மழுநிலவில் ஒன்று கூடுகிறீர்கள் எனக் கேட்கப் போகிறீர்களா?
காலம் காலமாக பாதிக்கப்பட்ட சமூகம் தனக்கான தலைவன் என்று நம்பும் ஒருவர் சொல்லைக் கேட்டு கூடுவது என்பது தவறா? தனக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர் என்ற நம்பிக்கையில் இவர்கள் கூடுகிறார்கள். இதை தவறு என்று யாராவது சொல்ல முடியுமா? அல்லது தமிழ்நாட்டில் யோக்கிய சிகாமணி தலைவன் வேறு யாரையாவது காட்ட முடியுமா உங்களால்?
இவர்கள் கூடப் போகிறார்கள் என்றதுமே. பலர் எள்ளி நகையாடினர். ஒரு கோடி பேரா.. அத்தனை பேர் இருக்காங்களா இவங்க சமூகத்தில்? என்று. இப்பேர்ப்பட்ட கூட்டம் கூடியதும், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு பார்த்தீர்களா சாதி வெறியர்கள் கூடிவிட்டார்கள். சாதி என்றால் கூடுகிறார்கள் தமிழன் எனும்போது வர மறுக்கிறார்கள். சுனாமி வரக்கூடாதா? பூகம்பம் வரக்கூடாதா? என்று நீங்கள் போடும் கூச்சலில் அர்த்தம் உள்ளதா?
நெய்வேலி நிலக்கரிக் சுரங்கத்திற்காக நிலம் எடுத்த வழக்கு இன்னும் உயர்நீதிமன்றத்தில் தூங்குகிறது ஐயா?
சொந்த மண்ணை இழந்து செய்த விவசாய தொழிலை இழந்து அகதி முகாம் போன்ற இடங்களில் அந்த மக்கள் இன்னும் தங்கள் சிறைவாசத்தை தொடர்கிறார்கள் ஐயா.
ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டம் முதற்கொண்டு தானே புயல் வரை இந்த ஒதுக்கப்பட்ட மனிதர்கள் பாதிக்கப்பட்டபோது எவனாவது ஒருவன் வந்து இவர்களுக்காகக் குரல் கொடுத்தது உண்டா?
சிறிய எடுத்துக்காட்டு ஒன்றைச் சொல்கிறேன்.
ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி எடுப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் வன்னியருடையது. ஒரு ஏக்கருக்கு வெறும் 28,000 பிச்சைக்காசை எறிந்து விட்டு நிலங்கள் பறிக்கப்பட்டன. ஓரு ஏக்கருக்கு பயிர்க்கடனே 20 ஆயிரம் 30 ஆயிரம் தரப்படும் போது, நிலத்தின் விலையாக 28000 தருவது எவ்வளவு கேவலம்,
ஜெயங்கொண்டம் பேரூராட்சிப் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு என்ற பகுதி 1ஆவது வார்டில் வருகிறது. இந்த ஊரில் உள்ள ஒட்டு மொத்த நிலத்தையும் வீடுகளையும் நிலக்கரி நிறுவனத்திற்காக தமிழக அரசு கையகப்படுத்தி இருக்கிறது. இப்பகுதியில் இருப்பவர்கள் 90 சதவீதம் வன்னியர்கள். ஜெயங்கொண்டம் பேரூராட்சியின் மற்றொரு பகுதி செங்குந்தபுரம் வார்டு எண் 21, 22இல் வருகிறது 100 சதவீதம் இங்கு செங்குந்த முதலியார்கள் வாழ்கிறார்கள். இங்கே வீட்டையோ, காலி மனையையோ யாராவது விற்பதாக இருந்தால் கூட அதை இன்னொரு முதலியாருக்குத்தான் விற்க வேண்டும் என்ற ஊர்க்கட்டுப்பாட்டை விதித்து -அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
மேற்கண்ட செங்குந்தபுரத்தில் உள்ள வீடுகளையோ, அங்கே குடியிருப்பவர்களுக்குச் சொந்தமான நிலங்களையோ நிலக்கரி நிறுவனத்திற்காக தமிழக அரசு எடுக்கவில்லை. இதற்கு ஒரே காரணம் குடியிருப்பவர்கள் செங்குந்த முதலியார் என்பது தான்.
செங்குந்தபுரத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரம் வரை விரிந்துள்ள புதுக்குடி, வாரியங்காவல் என்ற ஊர்களில் உள்ள வீடுகளையும், அப்பகுதியில் உள்ள நிலங்களையும் தமிழக அரசு எடுத்துக் கொண்டது. வாரியங்காவல் என்ற ஊரில் உள்ள ஒரு பகுதியை மட்டும் விட்டு விட்டார்கள். அங்கும் செங்குந்த முதலியார்கள் மட்டுமே வாழ்கிறார்கள். செங்குந்தபுரத்திலும், வாரியங்காவலில் முதலியார்கள் வாழும் பகுதியில் மட்டும் நிலக்கரி இல்லையா? இருக்கிறது. நிலத்தை எடுக்க வந்த சர்வேயரும், தாசில்தாரும் செங்குந்த முதலியார் சாதியைச் சேர்ந்தவர்கள் அதனால் அவர்கள் நிலங்களை மட்டும் விட்டு விட்டார்கள்.
தாமிரபரணி ஆற்றில் மணல் எடுப்பதை தடுக்க வழக்கு போட்டு ஜெயித்த தலைவர்கள் பாலாறு பாழடிக்கப்படுவதைப்பற்றி போராட்டம் நடத்தியதுண்டா? எல்லோரையும் தமிழராக நினைத்து அரவணைத்து போகும் எண்ணம் உங்களுக்கு உண்மையிலேயே இருக்கிறதா?
அப்படி உங்களுக்கு இருக்குமேயானால் முதலில் மரம் வெட்டி என்று எங்களை ஏளனப்படுத்தியபோதே அவர்களைக் கண்டித்திருப்பீர்கள்.
தமிழர் பிரச்சனையே பெரியதாய் இருக்கிறது எப்படி வன்னியர் பிரச்சனை பற்றிப் பேசுவது என்கிறீர்களா?
ஏன் நாங்கள் பேசவில்லை? இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் நீங்கள் கொடுத்த பட்டங்களை சுமந்து கொண்டு தமிழினம் என்று உழைக்கவில்லை?
உங்களுக்குத் தெரியுமா?
தமிழத்தேசியத்திற்காக புலவர் கலியபெருமாள் (வன்னியர்) போராடினார் என்ற ஒரே காரணத்திற்காக, அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள வன்னிய இளைஞர்களை காவல்துறை உயர் பொறுப்புக்கு தேர்ந்தெடுப்பதே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
தமிழரசன் ஆயுதம் தாங்கி போராடினார் என்ற காரணத்திற்காக இன்னமும் எங்கள் இளைஞர்கள் தீவிரவாதிகளாகப் பார்க்கப்படுகிறார்கள். உங்களுக்குத் தெரியுமா?
அரியலூரைச் சுற்றியுள்ள வன்னியர் நிலங்களை வளைத்து சிமெண்டு தயாரிக்கும் கம்பெனிகள் வன்னியர்களை அங்கே வேலைக்கே சேர்ப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்த சாதியில் பிறந்து விட்டான் என்ற ஒரே காரணத்திற்காக தர்மபுரி கிருஷ்ணகிரி பகுதிகளில் நக்சலைட்டு என்று பெயரிடப்பட்டு காக்கா குருவி போல சுட்டுத்தள்ளப்பட்ட அப்பாவிகள் வன்னியர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வீரப்பன் சொந்தக்காரன் என்ற ஒரே காரணத்திற்காக அவரைப் பார்த்தே அறியாதவர்கள் இன்று தூக்கு மேடையின் நிழலிலே ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள் உங்களுக்குத் தெரியுமா?
வீரப்பன் வேட்டையிலே கொத்துக்கறி போடப்பட்ட, சீரழிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் வன்னியர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பெரியார் சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக, தன் பெயரையே சாதி மறுப்பு என்று சூட்டிக்கொண்டு அசிங்கப்பட்டவன் வன்னியன்.
தன் பிள்ளைக்கு அம்பேத்கார் என்று பெயரிட்டவன் வன்னியன்.
பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, இன விடுதலை என்று நம்பிப் போய் சொந்த சாதியை நட்டாற்றிலே தவிக்க விட்டவன் வன்னியன்
தலித் அறிவு ஜீவிகள் எல்லாம் தங்கள் சாதி விடுதலைக்காகப் போராடும் போது, வன்னிய அறிவுஜீவிகள் எல்லாம் சாதி ஒழிப்பிற்கு போராடுகிறான். யாருக்கு நட்டம்? உயர் அறிவாளி ஆனைமுத்துவே விதிவிலக்கில்லை என்றானபோது அறிவுமதிகளைப் பற்றி சொல்லியா தெரிய வேண்டும்?
பெத்த தாயை பிச்சை எடுக்க வைத்து விட்டு; காசிக்கு போய் கோதானம் கொடுத்தானாம் ஒருவன். அந்த கதைதான் இன்றைய வன்னியர் நிலைமை.
உங்கள் அரசியல் சாணக்கியத்தனத்தை எல்லாம் எங்களிடம் காட்டி, நீங்கள் செய்தது சரிதானா? என்று கேட்டு கொட்டி முழக்க முடியும்.. ராமதாஸ் செய்த தவறுகளை அடுக்க முடியும். அதே கைகளால் திருமாவை நீட்டி அதே குற்றச்சாட்டுகளை வைக்கத் தயாரா? தர்மபுரி வன்னியர் பிரச்சனையில் எவனும் குரல் கொடுக்காத நிலையில் அதைப் பற்றி முதல் முதலில் பேசியதே டாக்டர்.ராமதாஸ் மட்டும் தான். அதுவும் பிரச்சனை நடந்து ஓரிரு வாரங்கள் கழித்து. அதை எதிர்த்து அறிக்கை விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக இன்று வரை சாதிதாஸ் என்று எழுதும் வெட்கங்கெட்ட விகடன்களே.
வன்னியர்களின் ரத்தத்திலும் உயிரிலும் உருவான பாமக விற்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை தாழ்த்தப்பட்டவருக்கு கொடுத்தாரே ராமதாஸ்; அப்போது அவர் சாதிதாஸாக தெரியவில்லையா உங்களுக்கு?
ஆனாலும் தலித் எழில்மலை தன் சொந்த சாதிக்காரர்கள் 2000 பேருக்கு தான் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் வேலை வாங்கிக் கொடுத்தார்? வன்னியருக்கு வாங்கி கொடுக்கவில்லை.
நாடகக் காதல் நடத்துகிறார்கள் என்று சொன்னவுடன் எங்களுடன் மல்லுக்கட்டும் அறிவாளிகளே. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 2000 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன ஒரே ஒரு வழக்கறிஞரின் கையெழுத்துடன். இதை பற்றி நீங்கள் ஏன் வாய் திறக்க மறுக்கின்றீர்கள்?
இதே திருமாவளவனின் தலைமையில் பறையரை திருமணம் செய்து கொண்ட வன்னியப் பெண் இங்கே ஆவடியில் எரித்துக் கொல்லப்பட்டாளே… அப்போது நீங்கள் பேசும் பெண்ணுரிமை எங்கே போயிற்று?
எந்ந ஒரு இனமும் இன்னொரு இனத்தை ஒழிக்க ஒடுக்க அந்த இனத்தின் பெண்களைத் தான் குறி வைக்கும்.
அப்படித்தான் இன்று நடைபெறுகிறது. இவர்கள் சாதி ஒழிப்பிற்கு மற்ற சாதிக்காரனின் பெண்களைக் குறி வைக்கிறார்கள். இந்த ஒரு காரணத்திற்காகத்தான் எல்லோரும் ஒன்றிணைகிறார்கள். ராமதாசை அயோக்கியர் அவர் பின்னாலே போகாதே வன்னியனே! ஏமாறாதே வன்னியனே என்று ஊளைக் கூச்சல் போடுகிறீர்களே. தர்மபுரி உண்மையை கண்டறிந்து நியாயம் வாங்கித் தர வேண்டியது தானே?
அப்பாவி வன்னியர்களுக்கு அரசியல் தெரியாது. அவனுக்கு தெரிந்ததை அவன் பேசுவான். உங்களுக்கு சாதி ஒழிப்பின் மீது நம்பிக்கை என்றால் அவனுக்கு தன் சாதியின் மீது நம்பிக்கை. தன் சாதிக்காரன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை. இதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஈழத்தில் தன் இனப் பெண்களை பங்கம் செய்பவனை நோக்கி தலைவர் பிரபாகரன் துப்பாக்கி எடுத்தது நியாயம் என்றால்?
இங்கே ஒரு சாதியில் பிறந்த பெண்ணின் மார்பில் முட்டை உடைக்கும் பொறுக்கியை நோக்கி அரிவாளை எடு என்பது மட்டும் சாதி வெறியா?
உங்கள் வீட்டுப் பெண்ணை ஒருவன் இப்படிச் செய்தால் அவனுக்கு மாலை போட்டு கட்டிக் கொடுப்பீர்களா?
தர்மபுரி மாவட்டத்தின் ஊர் தோறும் சென்று கேட்டுப் பாருங்கள். ஆயிரம் கதை இருக்கிறது. ஏதோ பெண்ணைப் பெற்றவன் மானம், மரியாதை கருதி, பெண்ணின் வாழ்வு கருதி ஒதுங்கிப் போகிறான். அது இவர்களுக்கு வசதியாகப் போயிவிடுகிறது. அவ்வளவுதான்.
சொல்லுங்கள் ராமதாசு வருகைக்குப் பிறகு இங்கே எத்தனை சாதிக்கலவரங்கள் நடந்திருக்கின்றன? பட்டியலிடுங்கள். இதே போல் ஒரு முறை மாமல்லபுரம் மாநாட்டுக்குப் போய் திரும்பியவர்களை தலித்துகள் தாக்கியதில் திருபுவனம் கண்ணன் போன்றவர்கள் செத்தபோது கூட, அவர்களையே கண்டித்தவர் காடுவெட்டி குரு. தலித்துகளுடன் இணக்கமாகப் போனால்தான் இங்கே வன்னியர் அரசியல் வெற்றிகளைப் பெற முடியும் என்று கணித்து தான் அவர் செயல்பாடுகள் இதுவரை இருந்தன. அதனால்தான் தன் கட்சிக்குத் பொதுச் செயலாளராக தாழ்த்தப்பட்டவர்தான் வர வேண்டும் என்றும் பொருளாளர் சிறுபான்மையினர் ஒருவர் இருக்க வேண்டும் என்றும் விதிமுறை உருவாக்கினார்கள்.
வன்னியர்கள் எல்லாம் சாதி வெறியர்கள் என்றால், தலித் எழில்மலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்த போதே டாக்டர் ராமதாசை தூக்கி எறிந்திருப்பார்கள். எப்படி ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு அதிகாரம் கொடுக்கலாம் என்று.
டாக்டர் ராமதாஸ் சாதி வெறியராக இருந்தால் மக்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தை கூட வன்னியருக்கு கொடுத்திருப்பார். அப்படி கொடுக்கவில்லையே.
வன்னியனுக்கு மட்டும் ஏன் சாதி வெறியன் பட்டம்?
தலித்துகளைப் போல, வன்னியரும் தாங்கள் சேரும் கட்சிகளிடம் எல்லாம் வன்னியருக்கு தலைமை கொடுப்பாயா? வன்னியர் தலைமை ஏற்பாயா என்று கேட்டிருந்தால்? எந்த கட்சியாவது தமிழ்நாட்டில் வளர்ந்திருக்க முடியுமா?
தெற்கே வேதாரண்யத்திலிருந்து வடக்கே ஆந்திர எல்லை வரை இடைவிடாது நெருக்கமாக வாழும் வன்னியர் சமூகம் இதையெல்லாம் கேட்டதா? இன்றுவரை எடுப்பார் கைப்பிள்ளையாக கட்சிவெறி, தலைவன் வெறி, நடிகன் வெறி என்று இருக்கிறானே தவிர சாதி வெறியனாக இருக்கிறானா? இவனுக்கான உரிமைகளை கேட்கும்போது மட்டும் சாதி வெறியன் என்கிறீர்களே உங்கள் வாய் கூச வில்லையா?
இல்லை ராமதாசை, காடுவெட்டி குருவை மட்டும்தான் நாங்கள் திட்டுகிறோம் என்று நீங்கள் சொல்வீர்களானால்,
அது ஏமாற்று வேலை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்றைய வன்னியர்களின் முகவரி இவர்கள் தான். இவர்களை அரசியலில் ஒழித்துவிட்டால் வன்னியர் இப்போதைக்குத் தலையில்லாத முண்டங்கள் ஆகி விடுவார்கள். வன்னியர்களை அரசியலிலிருந்து ஒழித்துக் கட்டுவதே உங்கள் நோக்கம். பெரும்பான்மைச் சமூகம் அரசியல் முகவரி பெறக்கூடாது என்பது தான் உங்கள் நோக்கம். இதற்காகத்தான் நீங்கள் அவர்கள் மீது பாய்கிறீர்கள். டாக்டர் ராமதாசு மீது தீவிர விமர்சனம் வைக்கும் என்னைப் போன்றவர்களின் நிலைப்பாடு இதுதான்.
இயக்கங்களின் யோக்யதை.
ஒருநாள் டாக்டர் விமுனா மூர்த்தி (வன்னியர்) அவர்களுடன் பயணம் செய்த போது ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை வெளியிட்டார். பொதுவுடைமைக் கட்சிகளுக்கான நாடு தழுவிய மாநாடு ஒன்று கல்கத்தாவில் நடைபெற்றது. அம்மாநாட்டில் நாடெங்கும் அரசை எதிர்த்து நடந்த வெகுமக்கள் போராட்டம் குறித்து ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து திரு.மணியரசன் அவர்கள் (த.தே.பொ.க) அந்த அறிக்கையை தயாரித்தார். அதில் வன்னிய மக்கள் நடத்திய ஒருவார கால சாலை மறியல் போராட்டம் இடம் பெறவில்லை. ஒரு அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் ஒருவார காலம் நடந்திருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட செய்தியை நீங்கள் இந்த ஆவணத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய போது மணியரசன் ஏனோ மறுத்து விட்டார். ஆவணம் முடிந்து விட்டது இனி திருத்த முடியாது நீங்கள் வேண்டுமானால் மாநாட்டில் கோரிக்கை வையுங்கள் என்று கூறி விட்டார்.
டெல்லியில் மாநாட்டில் தமிழ்நாட்டிற்கான ஆவணம் வாசிக்கப்பட்டபோது, டாக்டர் விமுனா மூர்த்தி அவர்கள் குறுக்கிட்டு இந்த செய்தியை சொல்லி இருக்கிறார். உடனே மாநாட்டுக் குழுவினர் இப்படிப்பட்ட போராட்டமா? என வியந்து அந்த ஆவணத்தில் சேர்த்திருக்கிறார்கள். டெல்லியில் உள்ள மாநாட்டுக் குழுவினருக்கு தெரிகிறது. இங்கே தமிழருக்காக இயக்கம் நடத்தும் மணியரசனுக்குத் தெரியவில்லை. ஒருவேளை வன்னியர்களை உழைக்கும் மக்களாகவோ; தமிழர்களாகவோ பார்க்க மனமில்லையோ அல்லது தலித் மக்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று நினைத்து மறுத்தாரோ என்னவோ? இவர்களை நம்பியா எங்களை சாதியை ஒழித்து விட்டு வரச் சொல்கிறீர்கள்?
மே 17 இயக்கம்.
2009 ஈழப்படுகொலைகளுக்குப் பிறகு அந்த ஒன்றரை லட்சம் மக்களின் உயிரின் மீது எழுப்பப்பட்ட இயக்கங்களில் ஒன்று இந்த மே 17 இயக்கம். கடந்த ஆண்டு சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது வன்னியகுல சத்ரியர் என்று பதியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டி தான் இவர்களுக்கு பெரும் பிரச்சனையாகப் போய்விட்டது. அது எப்படி சத்ரியர் என்று சொல்லலாம்? அப்படி என்றால் நீங்கள் மனுதர்மத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று ஒரே அக்கப்போர். எத்தனை வன்னியனுக்கு மனுதர்மம் தெரியும் என்று தெரியவில்லை.
“ஈழத்தில் லட்சக்கணக்கான பேர் கொலை செய்யப்பட்டபோது வராத இந்த வியாக்யானம் இப்போது வருகிறது. நீ வன்னியனாகவே இருந்து கொள், தமிழன் என்று மட்டும் சொல்லாதே, ஒரு காலத்தில் தமிழகத்துக்கு விடுதலை கிடைக்கும் போது இவர்களை வெளியேற்றி இவர்களை சத்ரியன் என்று எவன் வைத்து மரியாதை செய்வானோ அங்கே அனுப்புவோம். நாங்கள் உனக்காகவெல்லாம் போராடவில்லை. போராடப் போவதுமில்லை’ என்று 4 வரியில் சொல்லி விட்டு அதை எதிர்த்து நண்பர்கள் கேட்டபோது 40 பக்கத்தில் விளக்கம் கொடுத்தார் அந்த இயக்கத்தின் திருமுருகன். நான் இவர்களை சொல்லவில்லை, அவர்களைச் சொல்லவில்லை. தமிழன் சாதியால் பிரிந்து கிடக்கிறான். அப்படி, இப்படி என்று.
உண்மையில் சத்ரியன் என்ற வார்த்தையைத்தான் இவர்கள் எதிர்த்தார்கள் என்றால்,
கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி சத்ரிய நாடார் சங்கம் என்பவர்கள், ஐயா உதயகுமாருக்கு எதிராகப் போராடினார்கள். சுவரொட்டிகள் போட்டார்கள், தாக்குதல் நடத்தினார்கள். அவர்களும் தங்களை சத்ரியர் என்று சொல்லிக்கொண்டுதான் எதிர்த்தார்கள். அவர்களை வெளியேற்றி விடலாம் என்று நாடார் சமூகத்துக்கு எதிராக அறிக்கை விட்டாரா இந்த திருமுருகன்?
இதே திருமுருகன் தர்மபுரி கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார் சென்னையில். என்ன வேண்டுகோள் வைத்தார்? வன்னியர்களை வன்கொடுமை சட்டத்தில் போட்டது மட்டும் பத்தாது. திருட்டு; கொள்ளை வழக்கும் போடுங்கள் என்று.
அந்த கூட்டத்தில் பேசினார். “வன்னியர் செய்தது நியாயமா? இதோ இந்தக் கூட்டத்திற்கு பெரும்பாலான வன்னியர்கள் வந்திருக்கிறீர்கள்” என்று.
இவர்கள் தான் சாதி பார்க்காமல் பழகுபவர்கள் ஆயிற்றே…. வந்தவனில் பெரும்பாலும் வன்னியன் என்று இவருக்கு எப்படித் தெரிந்தது? எப்படி கண்டு பிடித்தார்? இவரின் சாதியைப் பற்றிக் கேள்வி வந்தபோது, வாயைத் திறந்து நான் இன்ன சாதி என்று கடைசிவரை சொல்லாமல், ஒரு லிட்டர் ரத்தம் தருகிறேன். கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என்று முழங்கியவர் தான் இவர்.
ஈழத்தமிழருக்கான அமெரிக்கத் தீர்மானத்தையே அலசி ஆராய்ந்து பிரித்து மேயும் திருமுருகனுக்கு தர்மபுரி கலவரம் பற்றி தெரியாமலேயே போய்விட்டது. எல்லோரையும் மிஞ்சும் விதமாக 1000 குடிசைகளை கொளுத்தலாமா? எனக் கேள்வி எழுப்புகிறார். வன்னியர் மீது அவ்வளவு காழ்ப்பு அவ்வளவுதான்.
தன்னை சாதி ஒழிப்பு போராளியாகக் காட்டிக்கொள்ளும் திருமுருகன் அவர்கள், மாணவர் போராட்டத்தில் மட்டும் தன் சாதிக்காரரான சிபியை சத்தமில்லாமல் நுழைத்து கலகம் விளைவித்தார். ஒரு கோடி மாணவர் முழக்கம் போராட்டத்தில் மைக்கை வாங்கி அங்கே துண்டுப் பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த அருண்சோரி குழுவினரை உளவாளிகள் என்று அறிவித்தார். அப்போது அவரைப் பார்த்து ஒரு இயக்கத்தின் சார்பாளரான நீ எப்படி இன்னொரு இயக்கத்தை உளவாளி எனச் சொல்லலாம் எனக் கேட்டதும் நாம் தான்.
விடிய விடிய மாணவர் போராட்டங்களுக்கு கண் விழித்து சுவரொட்டி ஒட்டுவது முதற்கொண்டு எல்லா வேலைகளையும் தோளில் தூக்கிப் போட்டு செய்தவர்கள் நாம் தான். ஆனால் எங்களைப் பார்த்து சாதி வெறியர் பட்டம் கொடுத்தனர் திருமுருகன் தோழர்கள். சாதி வெறியர்கள் மாணவர் போராட்டத்தை கைப்பற்றப் பார்க்கிறார்கள் என்று? மாணவர் போராட்டத்தை நாங்கள் தான் ஏற்படுத்தினோம். பின்னால் இருந்து இயக்குகிறோம் என்று புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பரப்புரை நாங்களா செய்தோம்?
போராடும் மாணவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று கூட ஆராயாது போராட்டத்தின் நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு களத்தில் நின்றவர்கள் நாங்கள். தன் சொந்த சாதியைச் சேர்ந்தவரை மாணவர் பிரதிநியாகவும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என்றும் அறிவித்தவர் திருமுருகன்.
நேரடியாகவே கேட்கிறேன். சாதி ஒழிப்பு போராளி ஒருவருக்கு முதல் அடையாளம் சாதி மறுப்பு திருமணம் செய்வது. ஆனால் திருமுருகன் அதைச் செய்தாரா? சாதி ஒழிப்பு பற்றி பேச அவருக்கு அருகதை இருக்கிறதா? இவர் மட்டும் சொந்த சாதியில் திருமணம் செய்து கொள்வார். மற்றவனுக்கு சாதி வெறியன் பட்டமா?
இங்கே ஒருவனை எதிர்கொண்டு அழிக்க சாதி வெறி என்ற கேவலமான பதம் பயன்படுத்தப் படுவது வெட்கக் கேடானது.
வடமாவட்டங்களில் வன்னியருக்கும் பறையருக்கும் கலவரங்களை ஆரம்பித்து வைத்தது யார்?
எங்கள் ஊரில் ஒரு பழக்கம் உண்டு. வன்னியர்கள் கோயிலுக்கு காப்பு கட்டும் முதல் உரிமை அங்கே உள்ள பறையர் சாதியைச் சேர்ந்த வெட்டியான் தொழில் செய்பவர்களுக்கே உண்டு. அவர்களுக்கு கட்டிய பிறகு தான் மற்றவருக்கு கட்டும் பழக்கம். மேலும் பொங்கல் வைப்பது. பால்குடம் எடுப்பது போன்ற அனைத்திலும் பறையருக்கே முன்னுரிமை. இதனை நான் நேரில் அங்குள்ள பறையர்களிடம் நான் நேரில் விசாரித்து உறுதிப்படுத்தி இருக்கிறேன்.
தற்போது செளராட்டிரர்கள் வந்து வன்னியர் கோயிலின் தர்மகர்த்தாக்கள் ஆன பிறகே அந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு விட்டது. மேலும் இப்போது பறையர்கள் அதனை விரும்பாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். பறையர்களுக்கும் வன்னியர்களுக்கும் ஒரே பஞ்சாயத்தாக இருந்த நிலை மாறி தற்போது தனித்தனி பஞ்சாயத்துகளாகப் பிரித்துக் கொண்டு விட்டனர். அந்த பகுதியில் தலித் கிருத்துவர்களுக்கு பிணம் புதைக்க தனது இடத்தை கொடுத்தவர் மணி வன்னியர் என்பவர்.
மயிலாடுதுறையில் நண்பர் சூர்யாவின் வீட்டருகே உள்ள வன்னியர் கோயிலின் தெய்வம் பறைச்சி அம்மன். ஆண்டுதோறும் விழாக்காலங்களுக்கு மட்டும் அந்த அம்மன் பறையர் தெருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விழா நடத்த அவர்களுக்கு உரிமை உண்டு.
வடமாவட்டங்களில் பல பகுதிகளில் பறையர் தெருவும், வன்னியர் தெருவும் அருகருகே இருப்பதே இவர்களுக்கு முரண்பாடு எதுவும் இல்லை என்பதற்கு சான்றாக விளங்கும்.
தஞ்சை மாவட்டம் அணைக்கரை பகுதியில் நீலப்புலிகள் என்ற தலித் அமைப்பு நடத்துபவர் திரு. டி.எம்.மணி அவர்கள். (தற்போது இசுலாமியராக மாறி இருக்கிறார்). அவர் தெரிவித்த தகவல் இது.
1940களில் வன்னியருக்கும் பறையருக்கும் வேற்றுமையே இல்லை. இந்த பகுதிகளில், ஆதீனங்கள் என்ற பெயரில் மக்கள் சொத்துக்களை கொள்ளை அடித்த பிள்ளைமார்கள் தான் இவர்களுக்கிடையே கலகம் மூட்டி கலவரத்தை ஏற்படுத்தியவர்கள்.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்கும் வேலையை செய்து வந்தவர்கள் வன்னியர்கள். அப்படி வேலை செய்த ஒருவருக்கும் ஆதீனத்திற்கும் தனிப்பட்ட முரண்பாடு தோன்றி பெரும் பிரச்சனையாக உருவெடுத்து விட்டது. அவர் ஆதீனத்தை எதிர்த்து நிற்பதால், இந்த குள்ளநரிகள் ஒரு தந்திரம் செய்தனர். அதாவது பறையர்களிடம். இவர் வன்னியர் இவரை காட்டிக் கொடுத்து விடுங்கள் என்று பேரம் பேசியபோது அவர்கள் மறுத்து விடுகின்றனர். வன்னியரும் பறையரும் சேர்ந்தே இவரைக் காக்கின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில் அரசு இயந்திரங்களின் உதவியோடு அவரை சுட்டுக் கொல்கின்றனர் ஆதீனங்கள். மொத்தம் 5 தோட்டாக்கள் பாய்ந்து உயிரிழக்கிறார் அந்த மனிதர்.
இப்படிப் போய்க்கொண்டிருந்த வன்னியர் – பறையர் உறவை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் காத்திருக்கிறார்கள் ஆதீனங்கள், அந்த வேளையும் வந்தது.
1970களில் வெட்டியான் மானியம் ஒழிக்கப்படுகிறது. பறையர்கள் வெட்டியான் வேலை செய்ய மறுத்து கொதித்தெழுகிறார்கள். அப்போது வெட்டியான் வேலை செய்ய வன்னியர்களை நியமிக்கிறது ஆதீன பரம்பரை அவர்களும் சில காலம் செய்து விட்டு பிறகு செய்ய மறுத்து விடுகிறார்கள். இதன் மூலம் இரண்டு சமூகங்களுக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக கலகங்களை உருவாக்கி பின்பு அதை காட்டுத்தீயாய் உருவெடுக்க வைக்கிறார்கள் ஆதீனத்தை சேர்ந்த ஆதிக்க சாதி பிள்ளைமார்கள். தங்களை காத்துக் கொள்ள இந்த இரண்டு சமூகங்களையும் நம்பாமல், தென்தமிழகத்திலிருந்து முக்குலத்தோரையும் அழைத்து வந்து அந்த பகுதியில் குடியேற்றி அவர்களை அடியாட்களாகப் பயன்படுத்தியவர்களும் பிள்ளை மார்களே.
பிள்ளைமார்களே சுமூகமாக வாழ்ந்த இரண்டு சாதிகளுக்குள் மோதலை ஏற்படுத்தி அஸ்திவாரம் போட்டது என்ற செய்தியை அவர் தெரிவித்தார்.
இது போல எத்தனை இடங்களில் வளர்த்தார்களோ தெரியவில்லை.
திருநெல்வேலி சைவ பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த திருமுருகன் அவர்களுக்கு இதுவெல்லாம் தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை. இப்போது இந்த திடீர் சாதி ஒழிப்பு போராளி வன்னியர்களை ஒழித்துக் கட்டுவேன் என்று சபதம் போடுகிறார். பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக இருக்கிறது இவர் சொல்லும் கதை.
இட ஒதுக்கீட்டு பட்டியலில் இடம் பெறாத ஆதிக்க பிள்ளைமார் சாதியைச் சேர்ந்த ஒருவர், இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான சுவரொட்டியை கண்டிப்பது ஆச்சரியம் இல்லை. இவர்களை எல்லாம் தலைவர் என்று நம்பிப் போய் மூக்குடைபட்டு திரும்பிய நம்மைத்தான் சொல்ல வேண்டும். சக தோழமை இயக்கங்களையே மதிக்கத் தெரியாத, தமிழ்த்தேசிய அமைப்புகளையே ஒன்றிணைக்கத் முடியாத இவர்கள் தான் சாதி கடந்து தமிழர்களை ஒன்றிணைக்கப் போகிறார்களாம். பார்ப்போம்.
கொளத்தூர் மணி
மரக்காணம் கலவத்திற்கு பிறகு அங்கு கொல்லப்பட்ட வன்னியர்களுக்கு நியாயம் வழங்க கோரி நண்பர்கள் திரு.கொளத்தூர் மணியை சந்திக்கின்றனர். அவர் கேட்கிறார். கொலையா செய்துவிட்டார்கள் என்று. ஆமாம், பிரேத பரிசோதனை அறிக்கையிலும் வெட்டி கொலை செய்யப்பட்டதாகதான் வந்திருக்கிறது என்கிறார்கள். அதற்கு அவர் அப்படியானால் காவல்துறை பார்த்துக் கொள்ளும் நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று பதில் சொல்கிறார். அதே கொளத்தூர் மணி இளவரசன் இறந்து போன போது காவல்துறை பார்த்துக் கொள்ளும் என்று சும்மா இருந்தாரா? தெருவில் இறங்கி போராடினார்.
நண்பர்களை சந்தித்த போது காவல்துறை அடக்குமுறை பற்றி அவர் கூறி இருக்கிறார். ஒருவரை பொய்வழக்கில் கைது செய்கிறார்கள். கைது செய்யும்போது என்ன சாதி என்று கேட்கிறார்கள். அவர் கவுண்டர் என்று கூறுகிறார். உடனே அவரை வன்னியர் என்று நினைத்து அவர் மீது பொய் வழக்கு போட்டு விடுகிறார்கள். பிறகு தான் தெரிகிறது அவர் கொங்கு வேளாள கவுண்டர் என்று. உடனே அவரிடம் காவல்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். கொங்கு வேளாளர் என்று தெளிவாக சொல்லி இருந்தால் உன்னை விடுவித்திருப்போமே என்று.பார்த்துக் கொள்ளுங்கள் இதுதான் வன்னியர் நிலைமை. திரு. கொளத்தூர் மணி அவர்கள் கூறிய செய்திதான் இது.
ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த காரணத்திற்காகவே ஒருவன் ஒடுக்கப்படுவது என்பது சமூக அநீதி இல்லையா?
ஆனாலும் கொளத்தூர் மணியும் வன்னியர்கள் திருடர்கள் கேஸ் சிலிண்டரை திருடி விட்டார்கள் என்று ஒப்பாரி வைக்கிறார். தருமபுரி கலவரத்தில்.
ஒரு தோழர் இப்படி பேசுகிறார்.
சாதியத்தையும் பேசுறானுங்க..
பிரபாகரன் படமும் போட்டுக்குறானுங்க..
தமிழ்த்தேசியமும் பேசுறானுங்க… என்று நக்கலடிக்கிறார்.
தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களுக்கானது. அதில் எல்லா தமிழர்களும் அடங்குவோம். நீதான் பேச வேண்டும் நீ பேசக்கூடாது என்று வரையறுக்க இங்கே யாருக்கும் உரிமை இல்லை. தலித் விடுதலை கேட்கும் திருமாவளன் தமிழ்த்தேசியம் பேசலாம் பிரபாகரன் படம் போட்டுக் கொள்ளலாம் என்றால், வன்னியர் உரிமை கேட்டும் எமக்கும் அதனை பேச, உரிமை உள்ளது.
ஆண்டான்டு காலமாய் ஊரான் சொத்தை கொள்ளையடித்து வைத்துள்ள ஆதிக்க சிறுபான்மை சாதிகளுக்கு சாதி உரிமை பேசுவது தேவை இல்லாமல் இருக்கலாம். சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட சாதிகள் அதற்கான உரிமையைக் கேட்பதைத் தடுப்பவன் யார்?
அந்த நிலையில் தான் எமது நிலைப்பாடு குறித்து இப்போது வரையறுக்கிறோம்.
வன்னியர்கள் தமிழ்நாட்டின் பெரும்பான்மை சாதி, ஆனால் இந்த மக்கள் கேட்பாரற்று கிடக்கிறார்கள். விவசாயக் கூலிகளாக இருக்கிறார்கள். இருக்கும் கொஞ்ச நிலத்தில் விவசாயம் செய்வது, கட்டிடம் கட்டுவது, கூலி வேலை செய்வது பூ, பழம் விற்பது போன்ற அடித்தட்டு சமூகமாக இருக்கிறார்கள். இவர்களது உரிமை என்பது இதுவரை ஆண்ட திராவிட கட்சிகளாலும், இனி ஆளத்துடிக்கிற தமிழ்த்தேசிய கட்சிகளாலும், இயக்கங்களாலும் மறுக்கப்பட்டே வந்திருக்கிறது.
இவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு இல்லை. இவர்கள் செய்த போராட்டம் கொடுத்த உயிர்ப்பலி விழலுக்கு இறைத்த நீராகி விட்டிருக்கிறது. அங்கீகரிக்கப்படவில்லை. கருணாநிதியால் மிகப்பிற்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு இருந்தாலும் அதில் தன் சொந்த சாதி உட்பட 107 சாதிகளை சேர்த்து வஞ்சித்தார். இதனால் இம்மக்கள் இன்னும் உரிமை பெறாதவர்களாகவே இருக்கின்றனர். ஒரு புள்ளி விபரப்படி மிகப் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் 8 சதவீதம் மட்டுமே வன்னியர்கள் பலனடைகிறார்கள் என்று அறிய வருகிறோம்.
தலித்துகளுக்கு தனி இட ஒதுக்கீடு, சட்டப் பாதுகாப்பு இருப்பதை போல இவர்களுக்கு இல்லை. எனவே யார் வேண்டுமானாலும் இவர்களை வஞ்சிக்கலாம் என்ற நிலைமை இருக்கிறது. தன் ஆட்சியில் அதிகம் பேர் தலித்துகள் காவல்துறையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவே ஆதாரத்துடன் பேசி இருப்பதே இதற்கு சான்று.
இந்த நிலையில் தான்.
திராவிடக் கட்சிகள் பார்ப்பனரை ஒதுக்கியதைப் போல, வன்னியர்கள் இன்று திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறோம்.
பார்ப்பனரை ஒதுக்கியதற்காவது நியாயம் இருந்தது. அவர்கள் எல்லா பதவிகளையும் அபகரித்துக் கொண்டார்கள் என்று குற்றம் சாட்ட முடிந்தது. இவர்கள் என்ன ஆதிக்கம் செலுத்தினார்கள்? அரசியலிலா? பொருளாதாரத்திலா? சமூக நிலையிலா? எங்கே?
முகநூலில் சில நண்பர்கள் “சிலருக்கு திடீரென்று சாதிப்பாசம் வந்து விட்டது” என்று பேசுகிறார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடுதலை கேட்பவர்கள். நான் கேட்கிறேன். உங்களுக்கு சாதிப்பாசம் இருக்கும் போது எங்களுக்கு இருக்கக் கூடாதா?
இன்னும் சிலர், “சாதிக்கலவரங்கள் வரும்போது தான் சிலர் உண்மை முகம் தெரியவருகிறது” என்கிறார்கள். ஆமாம். அதனால்தானே உங்களது உண்மை முகம் நாங்கள் அறிந்தோம்.
சமூக அநீதியை எதிர்த்துப் போராட நினைக்கும் எங்களை சாதி வெறியர்கள் என்று சொல்ல நீங்கள் யார்?
உங்கள் நோக்கம் சாதி ஒழிப்பு என்றால், ஆண்டான்டு காலமாய் எங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் உயர்சாதிகளிலிருந்து உங்கள் சாதி ஒழிப்பை ஆரம்பிக்கலாமே. முதலில் பிள்ளை, முதலியார், செட்டியார் என்று கடைசியில் எங்களிடம் வாருங்கள். வரவேற்கிறோம்.
பெரியார் காலத்திலிருந்து நீங்கள் சாதி ஒழிப்பீர்கள் என்று நம்பி நம்பி நாங்கள் ஏமாந்தது போதும்.
மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திரத்திலிருக்கும் தமிழரெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழை மறந்து போக,
கார்நாடகத்திலிருக்கும் (கொள்ளேகால் பகுதி வரை) தமிழரெல்லாம் கன்னடமயமாக,
தமிழ்நாட்டில் இருக்கும் நாயுடு, ரெட்டி, தெலுங்கு செட்டி போன்றவர்கள் மட்டும் இன்னும் தங்கள் மொழியை மறக்காமல் வீடுகளில் வைத்து காப்பாற்றுவது போல,
எங்களை எல்லாம் சாதி ஒழிக்க கூப்பிட்டு விட்டு நீங்கள் உங்கள் சாதியை வீடுகளில் பொத்தி பொத்தி வளர்க்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறோம்.
ஈழவிடுதலையில் சமரசம் கிடையாது. அதற்கான போராட்டங்களை முன்னெடுப்போம்.
அதே வேளை எங்களுக்கான சமூகநீதிப் போராட்டங்களையும் விட்டுக் கொடுக்க முடியாது.
முதலில் தமிழ்த்தேசியம் அடைவோம். பிறகு உங்களுக்கான உரிமைகளை கேட்போம் என்று சொல்வது என்பது.
நாலு நாள் கழித்து பிரியாணி போடுகிறோம். அதுவரை பட்டினியாக இரு என்பதற்கு ஒப்பானது.
நீங்கள் தமிழ்த்தேசம் அடைவதற்கான எந்த உருப்படியான திட்டத்தையும் வைத்திருக்கவில்லை. எடுத்தவுடனேயே சாதி ஒழிப்பு என்கிறீர்கள், கடவுள் ஒழிப்பு, சமய ஒழிப்பு, சாதி ஒழிப்பு இப்படி வேகாத பருப்பைத்தான் இங்கே வேக வைக்கப் போவதாகச் சொல்கிறீர்கள். நடக்கிற காரியமா அது? இதுவரை சாத்தியப்பட்டதா?
எதிர்மறை எண்ணங்களுடன் அதை ஒழித்து விட்டு வா. இதை ஒழித்து விட்டு வா என்றால், தமிழ்த்தேசியத்திற்கு முன் நிபந்தனை சாதி ஒழிப்பு என்றால், இங்கே யாருமே உங்கள் பின்னால் வர மாட்டார்கள். நீங்களும் உங்கள் வறட்டு வாதங்களை வைத்துக் கொண்டு கடைசி வரை போராடிப் போராடித் தோற்பீர்கள். ஏனெனில் இங்கே சமூகம் என்பது சாதிகளால் ஆனது. ஒன்றை விட்டு விட்டு இன்னொன்றுக்கு வரும் அளவிற்கு உங்கள் மேல் மக்களுக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை. ஏனென்றால் நீங்களே தனி மனித வெறுப்பு, உள்ளுக்குள் காழ்ப்புணர்வு, இளிச்சவாயன் கிடைத்தால் ஏறி மேய்வது என்று அனைத்துவிதமான கெட்டகுணங்களின் அடையாளமாக இருக்கிறீர்கள்.
இந்தியா வெள்ளையனிடம் அடிமைப்பட்டு கிடந்த போது நாட்டு அடையாளத்துடன் அனைவரும் போராடினர். இனங்களால் பிரச்சனையாக இருக்கிறது. மொழிகளால் பிரச்சனை இருக்கிறது. இந்தியர்கள் ஒன்றுபட முடியவில்லை எனக்கூறி இனங்களை ஒழித்து விட்டு இந்தியராக வாருங்கள் என்றா கூப்பிட்டார்கள்? அது அவரவர் அடையாளம்.
அதுபோல சாதியை ஒழித்துவிட்டு தமிழனாக வா என்பது நிழலின் மீது கத்தி வீசுவது. இங்கே உரிமைகளை தொலைத்த சாதியும்; வளமாக வாழும் சாதியும் இருக்கும் வரை சாதி ஒழிப்பு என்பது எடுபடப் போவது இல்லை. சுரண்டுபவனிடமிருந்து சுரண்டப்படுபவனை காப்பாற்ற முடியாது. அந்தந்த சாதிக்கான உரிமைகளை கொடுத்தால் அனைவரும் இணைவது சாத்தியமே. இங்கு சாதி ஒழிப்பு என்ற போர்வையில் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் ஒத்து ஊதுவது. அவர்கள் ஆண்டான்டு காலமாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதற்காக இனி இன்னொரு இளிச்சவாயனை ஒடுக்குவோம் என்பதெல்லாம் உங்கள் திட்டமாக இருப்பதால் தான் அந்த அடையாளத்தோடு எதிர்க்க வேண்டியதாய் இருக்கிறது.
மற்றபடி சாதியை உள்ளுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு; தலைமைகளை நம் சாதிக்காரன் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மறைமுக திட்டம் வைத்துக் கொண்டு; வெளியே சாதி ஒழிப்பு இனிக்க இனிக்க பேசி ஊரை ஏமாற்றும் வேலை எங்களுக்குத் தெரியாது. அதனால்தான் வெளிப்படையாக அறிவிக்கிறோம்.
மார்க்ஸ் என்ன சொன்னார். பெரியார் என்ன சொன்னார் என்று புத்தகங்களில் தேசியத்தை தேடிக்கொண்டிருக்கும் உங்களை இனி நம்பாமல்,
எதிர்காலத்தை எங்கேயென்று கண்களை இடுக்கிக் கொண்டு தேடும் எம் சமூக மக்களுக்காக இனி களமாடுவோம்.
எம் சமூக மக்களுக்கு அரசியல், கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதே இனி எங்கள் முதன்மை கொள்கையாக; வேலைத்திட்டமாக இருக்கும்.
எங்கள் சந்ததியின் உரிமை மீட்க தங்கள் இன்னுயிரை இழந்த தியாகிகளுக்கும்; பாதிக்கப்பட்டு கொடுஞ்சிறை எய்தி; துன்பத்தில் உழன்று மாண்டு போன போராளிகளுக்கும்.
வீரவணக்கம்.!!!
செப்டம்பர் 16, 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக