|
28/11/15
![]() | ![]() ![]() | ||
போர் செய்யும் மள்ளர் ஔவையார் பாண்டிய வேந்தர் நெடுஞ்செழிய மள்ளரை
கரிகால மள்ளர் உண்டி கொடுத்தோ ருயிர் கவடுஅதோரே திவாகர நிகண்டு பிங்கல
நிகண்டு பெரியபுராணம்
என மிக நீள விளக்கம்
www.tamilpaper.net/?p=4990
கரிகால மள்ளர் உண்டி கொடுத்தோ ருயிர் கவடுஅதோரே திவாகர நிகண்டு பிங்கல
நிகண்டு பெரியபுராணம்
என மிக நீள விளக்கம்
www.tamilpaper.net/?p=4990
தேவராக இருப்போம், தேவேந்திரரோடும் இருப்போம்!
தென் தமிழகத்தைப் பாதிக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்று சாதிக் கலவரங்கள். பெரும்பாலும் அவை தேவர் சமூகத்துக்கும் ப(ம)ள்ளர் சமூகத்துக்கும் இடையில்தான் நடக்கின்றன என்று சொல்லிவிடலாம்.
தேநீர் விடுதிகளில் இரட்டைக் குவளை என்பதில் ஆரம்பித்து பஞ்சாயத்தில் தலைவராக யார் நிற்பது என்பதுவரை சாதியின்பிடி வலுவாக இருக்கிறது.
ஒருவகையில் முன்பைவிட இந்தப் பிரச்னை அதிகமாகியிருப்பதுபோலவே தெரிகிறது. இந்தப் பிரச்னையை இப்போது நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் பார்ப்பது ஒருபோதும் சரியான தீர்வுக்கு இட்டுச் செல்லாது.
தென் தமிழகத்தின் சமூக அமைப்பை ஒருவர் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக, தேவர் – மள்ளர் சமூகங்களின் நிலையைப் புரிந்துகொள்ளவேண்டும். தேவர் சமூகத்தினர் நிலவுடமையாளர்களாகவும் மள்ளர் சமூகத்தினர் அந்த நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாகவும்தான் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறார்கள் என்று ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. மள்ளர்கள், தங்களை அப்படி நினைக்கவில்லை. ஒருகாலத்தில் அவர்களே மன்னர்களாக, ஆதிக்க சாதியாக இருந்ததாகவே அவர்கள் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
ஆனால், இன்று பொருளாதாரரீதியாக பெரும்பாலான மள்ளர்கள் ஆதிக்க சாதியான தேவர்களைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். சமீபத்திய பல நூற்றாண்டுகளாக இந்த நிலையே நீடித்து வந்திருக்கிறது. பழங்காலத்தில் குரு – சிஷ்யன், கணவன் – மனைவி, மன்னர் – குடிமக்கள் என பிறவற்றில் எப்படி விசுவாசமும் மரியாதையும் ஆதார அம்சங்களாக இருந்தனவோ அதுபோலவே பண்ணையார் – பண்ணையாள் உறவிலும் இருந்துவந்திருக்கிறது.
நவீன சமூகம் புதியதொரு மதிப்பீட்டை முன்வைக்கிறது: இதில் அனைவரும் சமம். ஒவ்வொருவருக்கும் கல்வியும் பிற வசதிகளும் சமமாகத் தரப்படும். அவரவர் திறமைக்கு ஏற்ப சமூக அடுக்கில் அவருடைய இடம் தீர்மானமாகும். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு கற்பிக்கப்படக்கூடாது.
இன்றைய நவீன சிந்தனையின் அடிப்படையில் இதுவே நியாயமானதாகச் சொல்லப்படுகிறது. இதே அடிப்படையில்தான் இப்படியான வாழ்க்கை முறை இருந்திராத கடந்த காலம் பிற்போக்கான ஒன்றாகவும் சொல்லப்படுகிறது. இன்றைய பெரும்பாலான பிரச்னைகளின் ஆணிவேர் இதில்தான் இருக்கிறது: நேற்றைய வாழ்கையை இன்றைய அளவுகோலால் அளத்தல். அதுதான், மறவனை வெட்டு மறத்தியைக் கட்டு பாணியிலான ‘விடுதலைப் போராட்டத்தை’ நியாயப்படுத்தவும் செய்கிறது.
சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் இரண்டு வழிமுறைகள் நம் முன்னே இருக்கின்றன. ஒன்று கடந்த காலத்தைப் பழித்து, ஒழித்து புதியதை உருவாக்குவது… இன்னொன்று, கடந்தகாலத்தைப் பழிக்காமலே அதில் இருக்கும் சில அம்சங்களை நவீன காலத்துக்கு ஏற்ப மாற்றி, புதியதொன்றை உருவாக்குவது. ஒரு வசதிக்காக முன்னது அம்பேத்காரின் வழிமுறை… பின்னது காந்தியின் வழிமுறை என்று சொல்லலாம். இருவரின் வழிமுறை வேறு என்றாலும் இலக்கு ஒன்றுதான்: சமத்துவ சமுதாயம்.
விஷயம் என்னவென்றால், காந்தியின் அன்பாலோ அம்பேத்கரின் கலகத்தாலோ அதை உருவாக்கிவிட முடியாது. சம்பந்தப்பட்ட மக்களின் மனதில் அந்த எண்ணம் உருவாக வேண்டும். தென் தமிழகத்தில் வாழும் தேவர்கள் தங்களுக்குக் கீழே இருக்கும் பிரிவினரைத் தமக்கு சமமாக மதித்து நடக்க வைக்க என்ன வழி? அங்கிருக்கும் மள்ளர்கள் தேவர்களுடன் இணக்கமாக வாழ்வது எப்படி?
இரண்டு தரப்பினருக்கு இடையே ஒரு பிரச்னை என்றால், அதைத் தீர்க்க இரண்டு தரப்பினரின் இடத்தில் இருந்துகொண்டு விஷயத்தைப் பார்ப்பது அவசியம். எதிர் தரப்பின் நியாயங்களை மறுக்கும் ஒருவர் தனக்கான பாதையில் தடைகளை உருவாக்கிக்கொள்கிறார் என்றுதான் அர்த்தம். நாம்… பிறர்… என்று அணி பிரிந்து நின்று போராடுவது ஒருநாளும் நல்ல முடிவைத் தராது. நம் கை ஓங்கும்போது நமக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும். அவர்கள் கை ஓங்கும்போது அவர்களுக்குச் சாதகமானவை நடக்கும். இவை இடைவெளியை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
தேவர் சாதியினரின் சுய சாதிப் பெருமிதம் என்பது அவர்களால் மட்டுமே உருவானதல்ல. பல நூறு ஆண்டுகளாக அவர்களுக்குக் கீழே இருந்த பிரிவினரின் முழு சம்மதத்துடன்தான் அது உருவாகியிருக்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் நேற்றைய நிலை.
ஆனால், புதியதொரு சமுதாயம் புதிய அளவுகோல்களை முன்வைக்கிறது. ‘கீழே இருப்பவர்களுக்கு’மேலே செல்லவேண்டும் என்ற ஆர்வம் எளிதில் வந்துவிடும். ஆனால், ‘மேலே இருப்பவர்களுக்கு’ தங்கள் மேலாதிக்கத்தை விட்டுக் கொடுக்கும் மனம் எளிதில் வந்துவிடாது. மனித மனதின் மிகவும் அடிப்படையான இந்த அம்சத்தை ஒருவர் புரிந்துகொள்ளவேண்டும். இன்று கீழே இருப்பவர்கள் மேலே இருந்திருந்தால் அவர்களும் மேலே இருந்தவர்கள் செய்ததையேதான் செய்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், இன்று கீழே இருப்பவர்கள் அவர்களுக்கும் கீழே இருப்பவர்களுக்கு இதையேதான் செய்தும்வருகிறார்கள். எனவே, இந்த விஷயத்தை வெறும் ஒடுக்குமுறை, வெறுப்பு என்று மட்டுமே பார்க்காமல் பொறுமையாகக் கையாளவேண்டும்.
அதோடு ஒவ்வொன்றாக ஏற்றப்பட்ட சுமையை ஒவ்வொன்றாகத்தான் இறக்கிவைக்க வேண்டும். ஆயிரம் வருட ஏற்றத் தாழ்வைப் போக்க ஐந்தாறு தலைமுறைகளாவது அவகாசம் தரப்படவேண்டும். அதைவிட முக்கியமாக, இரண்டு பிரிவினரையும் ஒன்று சேர்க்கும் அடையாளத்தின் அடிப்படையில் பிரச்னையை அணுகவேண்டும். அதாவது தேவர்களையும் தலித்களையும் தமிழர்கள் என்ற அடிப்படையில் பார்க்கவேண்டும். தமிழர்களில் இரண்டு பிரிவினர் சண்டையிட்டால் நீங்கள் எந்தப் பிரிவுக்கு ஆதரவு தருவீர்கள்… ஒரு முகத்தின் இரு கண்களுக்கு இடையே சண்டையென்றால் என்ன செய்வீர்கள்?
‘இந்து மதம்தான் எல்லா பிரச்னைக்கும் காரணம்… தலித்துகள் பவுத்தத்துக்கு மாறிவிடவேண்டும். அது ஒன்றே ஒரே வழி’ என்று அம்பேத்கர் சொல்கிறார். ‘பிரிட்டிஷாரின் ஆட்சியை வெறு… பிரிட்டிஷாரை நேசி’ என்று சொன்ன காந்தியோ வேறோரு வழியை முன்வைக்கிறார்.
சாதி இந்துகள், தலித்துகள் என கற்பனையான ஒரு பிரிவை உருவாக்கி கலகம் பிறந்தால்தான் வழி பிறக்கும் என்று ஒரு தீர்வை அம்பேத்கர் முன்வைக்கிறார். நம்மை அடக்கியாண்ட பிரிட்டிஷாரில் இருக்கும் நேச சக்திகளைக்கூட ஒன்றிணைத்துக்கொண்டு ஒரு அகிம்சைப் போர் முறையை முன்வைத்த காந்தியோ வேறொரு வழியை முன்வைக்கிறார். அம்பேத்கரின் வார்த்தைகளைக் கேட்டு மேல் சாதியினரை எதிர்க்கக் கிளம்பிய தலித்களைவிட காந்தியின் வார்த்தைகளைக் கேட்டு தலித்கள் மத்தியில் சேவை செய்யப் புறப்பட்ட மேல்சாதியினரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.
அந்நியர்களான ஆங்கிலேயர்களையே அகிம்சை முறையால் வெல்ல முடிந்தபோது அண்டை அயலார்களுடன் அந்த வழிமுறையை பயன்படுத்தி வெற்றி பெற முடியாதா என்ன? உலகில் அடக்குமுறையாளர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையிலான போரில் அடக்கப்படுபவர்களுக்குக் கூடுதல் நன்மையைத் தரக்கூடிய ஒரே வழி அதுவே என்பதை காந்திய வழியிலான போராட்டங்களின் வெற்றி மட்டுமல்லாமல், வன்முறை வழியிலான போராட்டங்களின் தோல்வியும் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டேதான் இருக்கின்றன.
காந்திஃபோபியா உடையவர்கள் தமிழர்களாக இருக்கும்பட்சத்தில் இன்னா செய்தாரை எப்படி ஒறுக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்கலாம். மேலைத்தேய சிந்தனையின் தாக்கம் கொண்டவர்களாக இருக்கும்பட்சத்தில் ஒரு கன்னத்தில் அறைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்கலாம்.
இன்று காந்தி இருந்திருந்தால், தென் தமிழகப் பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வுதான் சொல்லியிருப்பார். தேவர்களின் சாதி வெறியை வெறு… தேவர்களை நேசி.
தேவர் குரு பூஜையின்போது ஒவ்வொரு தலித் கிராமங்களில் இருந்தும் பால்குடம், முளைப் பாலிகை ஏந்திச்சென்று தேவர் சிலைக்கு மரியாதை செய்ய வேண்டும். பதிலுக்கு தேவர்கள் தாங்கள் கடைப்பிடிக்கும் அனைத்துவகையான அடக்குமுறைகளையும் கைவிட வேண்டும். தேநீர்விடுதியில் அனைவருக்கும் ஒரேவிதமான டம்ளர்கள் தரவேண்டும்… தேவர்களின் தெருவுக்குள் செருப்பு அணிந்துவரத் தடை, சைக்கிள்,மோட்டார் பைக்கில் போகத் தடை என்பதை நீக்க வேண்டும்… கோயிலில் இரு தரப்பினரும் சுமுகமாகத் தொழ அனுமதி… ரிசர்வ் தொகுதியில் தலித் தலைவர் முறையான தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு சுதந்தரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு தேவர் இன்னொரு தேவரை எப்படி சமமாக நடத்துவாரோ அதுபோலவே தலித்களையும் நடத்தவேண்டும்.
காந்தி இதையே சொல்லியிருப்பார். சொல்லியதோடு நிறுத்தியிருக்கவும் மாட்டார். களத்தில் இறங்கி அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றிருப்பார். இம்மானுவேல் சேகரனுக்கான குருபூஜையை தேவர்களும் இணைந்து நடத்தும் ஒரு நாளை நோக்கிய பயணத்தின் முதல் காலடிச் சுவடாக இதுவே இருந்திருக்கவும் செய்யும். இந்த வழிமுறைக்கு இருதரப்புப் ‘போராளி’களிடமிருந்து எதிர்ப்புவரும். ஆனால், எளிய மக்களிடமிருந்து இதற்கு பலத்த ஆதரவு கிடைக்கும். ஏனென்றால், இன்றும் தேவர் குரு பூஜை என்பது அக்கம் பக்கத்தில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த பள்ளர்களால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. தேவர் தனது சொத்தில் கணிசமான பங்கை அந்த கிராமங்களைச் சேர்ந்த பள்ளர்களுக்குத்தான் தானமாகக் கொடுத்திருக்கிறார். அவர்கள்தான் பால் குடமும் முளைப்பாரியும் ஏந்திவந்து முதல் மரியாதை செய்து குருபூஜையை ஆரம்பித்துவைக்கிறார்கள்.
பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா, தேவா போன்ற பிரபலங்கள் இரு தரப்புக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க முன்வரவேண்டும். அதிலும் ஈழத் தமிழர்கள் பிரச்னையில் இந்திய அரசின் விருதைத் தூக்கி எறிந்த பாரதிராஜாவும் அவரைப் போலவே இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் மும்மரமாக இருப்பவர்களும் தமிழக தலித்கள் பிரச்னையிலாவது உண்மையான அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.
– மகாதேவன்

September 23rd, 2012 at 12:06 pm
மேலே கூறப்பட்ட வரையறைகளுடன் ஆய்வாளர் எட்கர் தட்சன் எழுதிய “தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்” என்ற புத்தகத்தின் சாதிபற்றிய மேற்கோள்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்புத்தகத்தில் பள்ளர்கள் குடும்பன், காலாடி, பண்ணாடி, மூப்பன், வாதிரியார், பட்டக்காரர், மண்ணாடி போன்ற தொழில்சார்ந்த பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுவதை பக்கம்-486- ல் குறிப்பிட்டுள்ளார். மேற்கூறப்பட்ட வரையறைகளின்படி பள்ளர்கள் தீண்டத்தகாதவர் என முடிவு செய்தால், பள்ளர்களின் இன்னபிற பெயர்களும் எஸ்.சி(SC) பட்டியலில் அல்லவா இருந்திருக்க வேண்டும்? ஆனால் தமிழ்நாட்டின் சாதிப்பட்டியல்களில்,
ஆ) மூப்பன் -பி.சி பட்டியலிலும் (BC – 65 )
இ) காலடி – டி.என்.சி பட்டியலிலும் ( BC – 35 )
ஈ) காலடி — பி.சி பட்டியலிலும் (DNC – 28 )
உ) மண்ணாடி – எம்.பி.சி பட்டியலிலும் ( MBC – 16 ) உள்ளன.
September 25th, 2012 at 12:20 am
September 25th, 2012 at 12:22 am
இது மனித இயல்பு.
September 27th, 2012 at 12:34 am
உலகின் நாகரிகங்களை வகைப்படுத்தும் போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நாகரிகத்தை “நெல் நாகரிகம்” என்று கூறுகிறார்கள். இந்த நெல் நாகரிகம் தோன்றியது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்திலே தான். தமிழகத்தில் இந்த நாகரிகம் மள்ளர் நாகரிகம் எனப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இந்த நாகரிகத்தின் தோற்றத்தையும் இந்த நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் பற்றியும் அதன் “பண்பாடுத் தலைவர்கள்” பற்றியும் அந்தப் பண்பாடு பற்றியும் விரிவாகவும் பெருமையுடன் கூறுகின்றன.
—-காமாட்சியம்மன் கோயில் செப்புப்பட்டயம்
—-நல்லூர் செப்புப்பட்டயம்
—-சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு
திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . ”
—- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803
தமிழர்கள் மக்களின் வாழ்விடங்களை நான்கு வகைகளாகப் (திணை) பிரித்தனர். இவை குறிஞ்சி, முல்லை, மருதம், மற்றும்நெய்தல் எனப்பட்டன. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த நிலமும் ஆகும். முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலமும் ஆகும். மருத நிலம் என்பது நீர் வேளாண்மை செய்யப்படும் வயலும் வயல் சார்ந்த நீர் வளம் மிகுந்த நிலம் ஆகும். நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த கடலை ஒட்டிய மணல் பரந்த நிலமும் ஆகும். பாலை நிலம் என்பது குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் மழையின்மையாலும் கதிரவனின் வெப்பத்தாலும் காய்ந்து வரண்டு திரிந்த நிலம் ஆகும்.
ஆற்றுப் பள்ளதாக்குகள் மற்றும் ஆறு பாயும் சமவெளிகள் மருதநிலப் பகுதிகள் ஆகும். உலகின் பல நாடுகளிலும் நீர் வளம் மிகுந்த நதிக் கரைகளில் அமைந்த இந்த மருத நிலப் பகுதிகளிலெயெ நாகரிகங்கள் தோன்றியுள்ளன. கி.மு. 3400 வாக்கில் தோன்றிய எகிப்திய நாகிகம் நைல் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும்.கி.மு. 3500 வாக்கில் தோன்றிய சுமேரிய நாகரிகம் யுப்ரட்டீஸ், டைகீரீஸ் நதி சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 3000 வாக்கில் தோன்றியது சிந்து நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1600 வாக்கில் தோன்றியது சீன மஞ்சள் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 2500 வாக்கில் தோன்றிய கிரேக்க நாகரிகமும் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1000 வாக்கில் தோன்றியது கங்கை நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். இப்படிப் பல நாடுகளிலும் நாகரிகங்கள் தோன்றியது ஆற்றுச் சமவெளிப் பகுதிகளான மருத நிலங்களில் தான்
September 27th, 2012 at 12:37 am
காவிரி, தென்பெண்ணை, பாலாறு, பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி, பொருணை மற்றும் கடல் கொண்ட பஃறுளி ஆற்றுச் சமவெளிகளான மருத நிலத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம் “நெல் நாகரிகம்” எனப்படும். இந்த நெல் நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழர் மள்ளர் எனப்பட்டனர். இந்த நெல் நாகரிகம் தமிழகத்தில் தோன்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது.
தமிழகத்தில் மருத நிலத்தில் முதன் முதலில் மள்ளர்களால் நெல் கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காலத்தில் குடும்பம், ஊர், பேரூர், நகரம், நாடு, அரசுகள் தோன்றின. நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவன் இந்தப் பண்பாட்டினை உடைய மக்களுக்குத் தலைவனானான். தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்ககூடிய மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் இந்தப் பண்பாட்டுத் தலைவனை வேந்தன் எனக் கூறுகிறது. இந்நூலில் இந்தப் பண்பாட்டுத் தலைவனான வேந்தன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையைக் கூறுகிறது.
—– தொல்காப்பியம் – பொருளதிகாரம்
பாண்டியன் நெடுஞ்செழிய மள்ளரை வேந்தன் என்றதும் அவனுடைய நீண்ட மதில் கொண்ட மதுரையை மல்லன் மூதூர் என்றதும் அவன் நெல்லின் மக்களின் குலத்தைச் சார்ந்தவன் என்பதும் பின்வரும் பாடல்களால் அறியலாம்.
மல்லன் மூதூர் வய வேந்தெ. ”
—- புறநானூறு – 18,குடபுலவியனார் பாடியது.
கொண்ட உயர் கொற்றவ ”
—- மதுரைக் காஞ்சி வரி 87 – 88, மாங்குழ மருதனார்.
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீன்குடைக் கொடித் தேர்ச் செழிய ”
—- புறநானூறு 24
சோழன் குளமுற்றுத் துஞ்சிய கிள்ளி வளவன் மள்ளரை வெள்ளைக்குடீ நாகனார் தமிழ் மூவெந்தருள்ளும் சிறந்த வேந்தர் எனப் பாடியது.
முரசு முழ ங்கு தானை மூவருள்ளும்
அரசெனப்படுவது நினதே பெரும
ஆடுகட் கரும்பின் வெண்பா நுடங்கும்;
நாடெனப்படுவது நினதே யத்தை, ஆங்க
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தெ. ”
—- புறநானூறு 35.
ஆயிரம் விளையுட்டு ஆக
காவிரி புரக்கும் நாடு கிழவோனே. ”
—- பொருநர் ஆற்றுப் படை வரி 246 – 248.
சேரன் வேந்தன் பாலை பாழய இளங்கோ மள்ளரை ஏருடைய வேந்தன் என்றது.
பாடல் சான்ற விறல் வேந்தனும்மெ
வெப்புடைய வரண் கடந்து
தும்புறுவர் புறம் பெற்றிசினே
புறம் பெற்ற வயவேந்தன்
மறம் பாழய பாடினியும்மே
ஏருடைய விழுக் கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே ”
—-புறநானூறு 11, பேய்மகள் இளவெயினி பாடியது.
திருவில் அல்லது கொலை வில் அறியார்
நாஞ்சில் அல்லது படையும் அறியார். ”
—(நாஞ்சில் – கலப்பை) – புறநானூறு 20, குறுங்கோழியார் கிழார் பாடியது.
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?’ என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
ஏறி கோல் அஞ்சா அரவின் அன்ன
சிறு வல் மள்ளரும் உளரே, அதா அன்று,
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்,
அது போர்’ என்னும் என்னையும் உளனே
”
—-புறநானூறு 89.
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே ”
—- புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது.
உழந்தும் உழவெ தலை. ”
—- திருக்குறள் 1031.
தொழுதுண்டு பின் செல்பவர். ”
—-திருக்குறள் 1033.
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்” ”
—- என்று திவாகர நிகண்டும்.
மருத நில மக்களும் மள்ளர் என்ப” ”
—- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.
சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும்
வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும்
வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்” ”
—-தொல்காப்பியம்.
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட
வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி. ”
—- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22.
மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு. ”
—- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின் ”
—- கம்பராமாயணம்.
“ சிவனுயுமையும் மதிறுக் காஞ்சி தன்னில்
ஏகாம்பரரா இருந்தருள் புரிந்து
மதுரையை நோக்கி வரும் வழியதனில்
உலகலாமீன்ற உமையவள் மனதில்
திருவருள் தோன்றி சிவனிடத்துரைக்க
அரன்மன மகிழ்ந்து முகமது வேர்க்க
கரமதில் வாங்கி வரமதுக்கியந்து
வைகையில் விடுக்க
வருணன் பொழிந் துருழிக் காத்தடித்து
குளக் கரையதனில் கொடி வள்ளல் தாங்க
ஓமம் வளர்ந்து உற்ப்பணமாக
ஈசுவரி தேடி யிருளில் நடக்க
கூவிய சத்தம் குமரனை நோக்கி
வாரிடியடுத்து வள்ளலை வலபுறம் வைத்து
வலமார் பிய்ந்து அமுர்தம்
பொழிந்து அ~;த்தம் கொடுக்க
பாலன் நரிவு பணிவிடைக்காக
புரந்தரன் மகிழ்ந்து ப+ரித்தெடுக்க. ”
தென்னை கமுகு செறந்த வெள்ளிலை
அன்ன மிளகு மாந்துளிற் மஞ்சள்
மல்லிகை முல்லை மகழி நுவர்ச்சி
பரிமள சுகந்தம் பாங்குடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசிக்க வென்று
காராவின் பாலை கரகத்திலேந்தி
சீறாக அன்னம் சிறப்பித்த போது. ”
அமரர்கள் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து அதிசயத் திவாகும்
விமரிசையாக விருது கொடுக்க
மாலயன் ருத்திரன் மகேஷ்பரன் மகிழ்ந்து
பொன்முடி யதனில் பூசன மணிய
வாடாத மாலை மார்பினி லிலங்க
வெட்டுப் பாவாடைகள் வீணைகள் முழங்க
செந்நெல் சேறாடி சிறப்புடன் சூழ
வெள்ளைக் குடையும் வெங்களிறுடனே
டாலுடம்மான சத்தம் அதறிட
மத்தாளம் கைத்தாமம் மகெஷ்பரத் துடனெ
எல்லா விருதும் இயல்புடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசனம் செய்து
பதினெட் டாயுதம் பாங்குட னெடுத்து
புரவியிலேறி பூலோக மதனில்
சென்னலா யெங்கும் சிற்ப்பிக்கும் போது
விசுவ கண்ணாளர் மேழியும் கொடுக்க
மூவராசாக்கள் முடிமணம் சூட்ட
செந்நெல்லை படைத்தோர்
குகவேலருளால் குடும்பன் தழைக்க
சிவனரளாலே திருநீறணிந்து
யெல்லா வுலகும் யிறவியுள் ளளவும்
தெள்ளிமை யாத செந்நெலை படைத்தோர்
சேத்துக்கால்ச் செல்வரான
செந் நெல் முடி காவரலான
முத்தளக்கும் கையாதிபரான
பாண்டியன் பண்டான பாறதகதபரான
அளவு கையிட்டவரான
மூன்று கைக்குடையாதிபரான
பஞ்ச கலசம் பாங்குடன் வயித்து
அஞ்சலித் தேவர்கும் அன்னம் படைத்தவரான
மண்ணை வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான
கடல் கலங்கினும் மனங் கலங்காத வல்லபரான
மாடக் குளத்தில் வந்துதித்தவறான
பரமசிவனுக்கு பாத பணிவிடை செய்கின்றவரான
தெய்வலோகத்தில் தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய
பழனித் தலத்தில் காணியாளனாகிய
கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி. ”
—– பழனிப் பட்டயம், வரி 195 – 217.
பள்ளர் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் பள்ளு இலக்கியத்தில் தான் வருகின்றது. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற் பள்ளு. பள்ளு இலக்கியம் சிற்றிலக்கிய வகையை சேர்ந்தது, சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களை கொண்டது. இது நாயக்கர் ஆட்சி காலத்தில் தோன்றியது. இந்த பள்ளு நூல்கள் இவர்களை பள்ளர் என்று அழைத்தாலும் இவையே ‘மள்ளர் தான் பள்ளர்’ என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
பள்ளக் கணவன்” ”
—-முக்கூடற் பள்ளு
September 27th, 2012 at 12:39 am
Posted on August 14, 2010 by Mallar Meetpu Kalam
மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து…
வழிபடுவோலைர வல் அறிதீயே,
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே
நீ மெய் கண்ட தீமை காணின்.
ஒப்படி நா டி, அத் தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே –
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசைஇல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ்,
நெய்தலங்கானல், நெடியோய்! –
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே!”
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர்
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி,
நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்
யார் கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார் பூண்டு,
தா‘லி களைந்ததன்றும் இவனே; பால் விட்டு
அயினியும் இன்று அயின்றனனே; வயின்வயின்
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும், இழிந்தன்றும் இலனே; அவரை
அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழ,
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும் அதனினும் இவனே”.
வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாடள,
அணங்கு அருங்கடுந் திறல் என்னை முணங்கு
நிமிர்ந்து,
அளைச் செறி உழுவை இரைக்கு வந்தென்ன
மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து,
விழுமயம், பெரியம், யாமே; நம்மின்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர்; புறத்தில் பெயர,
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர்
மான் இழை மகளில் மாணினர் கழிய,
தந்தை தம் ஊர் ஆங்கண்,
தெண்கிணை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே”.
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து,
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே,
எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே?”
மைந்துடை மல்லன் மத வல முருக்கி,
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால்
வரு தார் தாங்கிப்பின் ஒதுங்கின்றே –
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப்
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்து பணை முயலும் யானை போல,
இரு தலை ஒசிய ஏற்றி,
களம் புகு மல்லற் கடந்து அடு நிலைதயே”
கோப்பெருநற்கிள்ளியின் கைபட்டவர் நிலை
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர்தாமே-ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட்டோரே?”
யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே;
போர் எதிர்ந்து என்னை போர்க களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன்னன்னே”
மடவரல், உண்கண், வாள்நுதல், விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?’ என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
ஏறி கோல் அஞ்சா அரவின் அன்ன
சிறு வல் மள்ளரும் உளரே, அதா அன்று,
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்,
அது போர்’ என்னும் என்னையும் உளனே”
மள்ளன் கோப்பெருஞ்சோழன்
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே –
பலரால் அத்தை, நின் குறி இருந்தோரே”.
பாவை அன்ன குறுந் தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்
கழைக் கண்நெடு வரை அருவி ஆடி
கான யானை தந்த விறகின்
கடுந்த தெறல் செந் தீ வேட்டு,
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே!”
எடுப்ப எழஅய், மார்பாம் மண் புல்ல,
இடைச் சுரத்து இறுத்த மள்ள! விளைர்த்த
வளை இல் வறுங் கை ஒச்சி, கிளையுள்
‘இன்னன் ஆயினன், இளையோன்’, என்று,
நின் உரை செல்லும் ஆயின், ‘மற்று
முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து,
புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகள்
வளனும் செம்மனும் எமக்கு’ என, நாளும்
ஆனாது புகழும் அன்னை”
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி
காடி வெள் உலைக் கொளீஇ நீழல்
ஒங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி,
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங்கு குறை
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல்,
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன
மெய் களைந்து, இனனொடு விரைஇ….
அழிகளின் படுநர் களி அட வைகின்;
பழஞ்சோறு அயினும் முழங்கு நீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக்
கிள்ளிவளவன் உள்ளி, அவர் படர்தும்;
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்;
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து,
கிணைமகள் அட்ட பாவல் புளிக்கூழ்
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு,
ஒரு சிறை இருந்தேன்; என்னே! இனியே
அறவர் அறவன், மறவர் மறவன்,
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்,
இசையின் கொண்டான், நனக அமுது உண்க என,
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி
வள் பரிந்து கிடந்த…. மணக்க
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை
அலகின் மாலை ஆர்ப்ப ட்டித்து,
கடியும்உணவு என்னக் கடவுட்கும் தொடேன்,
‘கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவற்
பகடே அத்தை யான் வேண்டி வந்தது’ என,
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின்
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை
ஊர்தியொடு நல்கியோனே; நீர் கொள
இழுமென இழிதரும் அருவி,
வான் நோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே”.
September 27th, 2012 at 12:40 am
Last Updated :
November 16th, 2012 at 9:28 am
இந்த இன சண்டை கடந்த 150 ஆண்டுகளுக்கு *முன்பு* இல்லை .
எங்க ஊரு முதாட்டி ஒரு பழமொழி சொல்லுவாங்க ……
” மள்ளரும் மறவரும் ஒன்று ,
சாணரும் சாம்பவரும் ஒன்று ,
பள்ளு முத்துனா படைமாட்சி ,
படைமாட்சி முத்துனா உடையாச்சி”….
திராவிட இயக்கங்களே இந்த சண்டையை பெரிதாகின !!!
November 16th, 2012 at 9:38 am
அது இன்னும் தொடர்வதுக்கு காரணம் தமிழ்நாட்டை ஆளுவது நாயக்கனே ( கருணாநிதி ).
November 27th, 2012 at 2:20 am
===================================================
திருநெல்வேலியின் பழங்குடிகள் பற்றிப் பிசப் கால்டுவெல் தனது தென்பாண்டித் திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு என்ற நூலில் குறிப்பிடும் செய்திகள் வருமாறு:
தென்பாண்டி திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு
மொழியாக்கம் பேரா.ந.சஞ்சீவி, பேரா.கிருட்டின சஞ்சீவி, பக். 5 -6
November 27th, 2012 at 2:21 am
========================================================
“செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் இடையே தொடர் சாதிய மோதலையோட்டு 1920 கலீல் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உருயதேன்ரும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளக் கூடாதென்றும் மறவர்கள் சார்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட வளரார்று ஆவணங்கள், நிலா ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று ‘பள்ளர்கள் தான் பாண்டியர்கள்’ என்று கொல்லம் நீதி மன்றம் தீர்ப்பு தந்துள்ளது.”
November 27th, 2012 at 2:25 am
1.கோயமுத்தூர்,பேரூர் பட்டீஸ்வரர் கோயில்கல்வெட்டு.. (தெ.க.5/240) பட்டீஸ்வரர் கோயிலுக்கு நந்தவனம் எற்படுத்திக் கொடுத்த குடும்பர்
‘தென்வழிநாட்டு ஏழூர் ஊராளி தென் குடும்பரில் சிங்கன் சோழனான அணுத்திரப்பல்லவரையன்’
இங்கு குடும்பன் என்பது பள்ளரைக் குறிக்கும். அணுத்திரன் என்றால் தேவேந்திரன்.
2.திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் கல்வெட்டு (தெ.க.5/278) கோயிலுக்கு நிலம் கொடை அளித்தவர்” ‘குடும்பரில் சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்கச் சோழ இருங்கோளர்’
இதுபோன்று நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் மள்ளர் என்ற பள்ளர்களுக்கு உள்ளது. அதை வசதியாக மறைத்து விட்டார், இந்த நல்லவர்!
இதுமட்டும் கிடையாது. இராசராச சோழன் மற்றும் இராசேந்திர சோழன் ஆட்சியின் போதுதான் அதாவது கி.பி 9 மற்றும் 10 நூற்றாண்டு காலத்தில்தான்
‘அருந்திரல் வீரர்க்கும்,பெருந்திரல் உழவர்க்கும்
வருந்தகையதாக்கும் மள்ளர் எனும் பெயர்’ (திவாகர நிகண்டு)
‘செருமலை வீரரும்,திண்ணியோரும் மருதநில
மக்களும் மள்ளர் என்ப” (பிங்கல நிகண்டு)