புதன், 5 ஏப்ரல், 2017

நாயக்கர் ஆட்சி தெலுங்கு நூல்கள்

aathi tamil aathi1956@gmail.com

29/10/15
பெறுநர்: எனக்கு
வெ.பார்கவன் தமிழன்
விஜயநகர ஆட்சிக்
காலத்திலேயே இம்மொழிகளில் இயற்றப்பட்ட நூல்களைக் காண்போம்.
தெலுங்கு நூல்கள்:
வ. எண் - நூலின் பெயர் - ஆசிரியர் - பொருள்
1 தெலுங்கு பாரதம் - எர்ரப் பிரகதா - மகாபாரதம்
2 லக்ஷ்மீ நரசிம்ம புராணமு - எர்ரப் பிரகதா - புராணம்
3 தெலுங்கு ராமாயணம் - எர்ரப் பிரகதா - இராமாயணம்
4 ஹரிவம்சமு - எர்ரப் பிரகதா - வைணவ புராணம்
5 தெலுங்கு நைஷதம் - ஸ்ரீநாதன் - நளன் கதை
6 ஹர விலாசமு - ஸ்ரீநாதன் - சிவன் பெருமை
7 தெலுங்கு பாகவதம் - போதனன் - பாகவதம்
8 வீரபத்ர விஜயமு - போதனன் - வீரபத்திரர் கதை
9 ஜைமினி பாரதம் - நரசிம்ம ராயரால் ஆதரிக்கப்பட்ட வீரபத்ரன் - பாரதம்
10 சிருங்கார சாகுந்தலமு - வீரபத்ரன் - சகுந்தலை கதை
11 கவிகர்ண ரசாயனமு - நரசிம்ம கவி - கவிதை
12 பசவ புராணமு - பக்தி சோமநாதன் - வீரசைவ பசவண்ணர் கதை
13 ஹயலக்ஷண சாஸ்திரமு - மனுமஞ்சி பட்டர் - குதிரை நூல்
14 ராஜசேகர சரித்ரமு - மல்லண்ணா - வரலாறு
15 பிரபாவதி பிரத்யும்னமு - சூரண்ணா - புராணம்
16 கலா பூர்ணோயதமு - சூரண்ணா - புராணம்
17 ராகவ பாண்டவ்யமு - சூரண்ணா - இராமாயணம் மற்றும் மகாபாரதம்
18 பாரிஜாதாபஹரணமு - நந்தி திம்மண்ணா - புராணம்
19 மனுசரிதா - அல்லசாணி பெத்தண்ணா - புராணம்
20 சகல கதாசார சங்கிரஹா - ராமபத்ரன் - கதைத் தொகுதி
21 ராமாப்யுதயமு - ராமபத்ரன் - இராமாயணம்
22 காளஹஸ்தி மகாத்மியமு - தூர்ஜடி - காளத்தித் தல வரலாறு
23 காளஹஸ்தீசுவர சதகமு - தூர்ஜடி - காளத்தி சிவன் பெருமை
24 வசு சரிதமு - ராமராஜ பூஷணன் - புராணம்
25 ஹரிச்சந்திர நளோபாக்கியானமு - ராமராஜ பூஷணன் - அரிச்சந்திரன் நளன் கதை
26 பாண்டுரங்க மகாத்மியமு - தெனாலி ராமகிருஷ்ணா - பண்டரிபுரத்தின் பெருமை
27 நிரங்குசோபாக்கியானமு - ருத்ரய்யா - புராணம்
28 ஆமுக்த மால்யதா - கிருஷ்ண தேவராயர் - ஆண்டாள் கதை
(வ. எண் 14 முதல் 26 வரையிலான நூலாசிரியர்கள் கிருஷ்ண தேவராயரதுஅவையில்
இருந்த அஷ்டதிக்
கஜங்கள்(எண்திசை யானைகள்) எனப்பட்டவர்கள்.)
கன்னட நூல்கள்:
வ. எண் -நூலின் பெயர் - ஆசிரியர் பொருள்
1 தர்மநாத புராணம் - இரண்டாம் அரிகரன், முதலாம் தேவராயரால் ஆதரிக்கப்பட்ட
மதுரா - 15ஆம் சைனத் தீர்த்தங்கரர் கதை
2 ரத்ன காண்டகா - அயதாவரா - சைனக் காப்பியம்
3 தர்ம பரீட்சா - விருத்த விலாசன் - சைன நூல்
4 சாஸ்திராச்சாரம் - விருத்த விலாசன் - சைன நூல்
5 காவிய சாரா - அபினவவாதி வித்யானந்தஎ - சைனத் தொகை நூல்
6 சைன பாரதா - சாளுவன் - மகாபாரதம்
7 பரதேசுவர சரிதா - ரத்னாகர வர்ணி - பரதச் சக்கரவர்த்தி சைனரான கதை
8 அபராஜித சதகா - ரத்னாகர வர்ணி - சைன நீதி நூல்
9 புஜபலி சரித்ரா - பஞ்ச பாணன் - சிரவணபெலகுளா கோமதீசர் சிலை நிறுவல்
10 பசவ புராணம் - பீம கவி - வீர சைவ சமயாசிரியர் பசவண்ணா கதை
11 சிவ தத்துவ சிந்தாமணி - இரண்டாம் தேவராயரால் ஆதரிக்கப்பட்ட லக்ஷ்மண
தண்டநாதன் - வீர சைவத் தத்துவ நூல்
12 பிரபு லிங்க லீலா - சாமரசன் - வீர சைவ வரலாறு
13 பிரெளடராய சரிதா - அதிரிஸ்யா - வீர சைவ அடியார் கதை
14 சட்ஸ்தல ஞானாமிருதம் - அதிரிஸ்யா - வீர சைவ நூல்
15 சிவயோக பிரதீபிகா - நிஜகுண சிவயோகி - வீர சைவ தத்துவ விரிவுரை
16 விவேக சிந்தாமணி - நிஜகுண சிவயோகி - வீர சைவக் கதைகள்
17 வீர சைவாம்ருதம் - கிருஷ்ண தேவராயரால் ஆதரிக்கப்பட்ட மல்லனார்யா - சிவனது
திருவிளையாடல்
18 சத்யேந்திர சோளகதா - மல்லனார்யா - சிவ மந்திர மாண்பு
19 சர்வஞ்ஞன பதகளு - சர்வஞ்ஞன் - நீதி நூல்
20 கன்னட ராமாயணா - கிருஷ்ண தேவராயரால் ஆதரிக்கப்பட்ட நரஹரி - இராமாயணம்
21 கன்னட பாகவதா - சாடு விட்டலநாதன் - பாகவதம்
22 புரந்தரதாசர் கீர்த்தனகளு - அச்சுதராயரால் ஆதரிக்கப்பட்ட புரந்தரதாசன் -
வைணவக் கீர்த்தனைகள்
23 மோகன தரங்கிணி - கனகதாசன் - கண்ணன் கதை
24 நளசரிதா - கனகதாசன் - நளன் கதை
25 ஹரிபக்திசாரா - கனகதாசன் - வைணவ பக்திநூல்
26 ராமதான்ய சரிதா - கனகதாசன் - கேழ்வரகு வரலாறு
சமஸ்கிருத நூல்கள்:
வ. எண்- நூலின் பெயர் - ஆசிரியர் - பொருள்
1 மதுரா விஜயம் - குமார கம்பணர் மனைவி கங்கா தேவி - குமார கம்பணரின் தமிழக
வெற்றி
2 ஜாம்பவதீ கல்யாணம் - கிருஷ்ண தேவராயர் - புராணம்
3 உஷா பரிமளம் - கிருஷ்ண தேவராயர் - புராணம்
4 வேதப் பிரகாசம் - இரண்டாம் அரிகரரின் அமைச்சர் சாயனன் - ரிக் வேத விரிவுரை
5 நியாயாம்ருதம் - கிருஷ்ண தேவராயரால் ஆதரிக்கப்பட்ட வியாசராயன் - அத்வைதத்
தத்துவ விளக்கம்
6 சாத்வீக பிரம்மவித்யா விலாசம் - முதலாம் வேங்கடவரின் ஆசிரியர் தாதாச்சாரியர்
- வைணவத் தத்துவம்
7 பாண்டுரங்க மகாத்மியம் - தாதாச்சாரியர் - பண்டரிபுர இறைவன் கண்ணனின்
மாட்சிமை
8 தெய்வக்ஞ விலாசம் - கொண்டவீட்டு லக்ஷ்மீதரன் - கலைக் களஞ்சியம்
9 சங்கீத சூரியோதயம் - லக்ஷ்மீ நாராயணா - இசை நூல்
10 சாலுவாப்யுதயம் - அச்சுதராயரின் அவைப் புலவர் இராஜநாத திண்டிமா -
பரம்பரையின் எழுச்சியும் ஆட்சியும்
11 பாகவத சம்பு - இராஜநாத திண்டிமா - புராணம்
12 அச்யுத ராயாப்யுதயம் - இராஜநாத திண்டிமா - அச்சுதராயரின் பெருமை
13 வரதாம்பிகா பரிநிர்ணயம் - அச்சுதராயரின் அவைப் புலவர் திருமலாம்பா -
அச்சுதராயர்-வரதாம்பா திருமணம்

இலக்கியம் காப்பியம் பொற்காலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக