|
22/12/15
| |||
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட
அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களில் ஒருவராக 1948 ஆம் ஆண்டு அவர்
நியமிக்கப்பட்டார்.
14.9.49 அன்று அரசியல் நிர்ணய சபை கூடி இந்தியாவின் தேசிய மொழி பற்றி
விவாதித்தபோது இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி தமிழ் மொழிக்கு
மட்டுமே உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். வரலாற்றின் பொன்னேட்டில்
அன்று அவர் பொறித்துச் சென்ற வைர வரிகள் இவை:
“ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின்
பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின்
தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே
முன்வைக்கப்பட்டது.
அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை
எடுக்குமானால், ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன்.
இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப
காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது
கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள்
ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும்,
நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன்.
அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான்
இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத்
தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்”
ஆனால், விவாத முடிவில் இந்தியை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது
வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, வாக்குககுள் இருதரப்புக்கும் சரிசமமாகப்
பிரிந்த நிலையில், அவைத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் தனது ஒரு
வாக்கை இந்திக்கு சாதகமாக அளித்ததால் இந்தி அரியணை ஏறியது.
ஆட்சி மொழி பற்றிய விவாதம் மக்களவையில் வரும்போதெல்லாம், காயிதே மில்லத்
இந்திக்கு எதிரான தனது கருத்தை ஆணித்தரமாக வெளியிடத் தயங்கியதே இல்லை.
26.4.63 அன்று மக்களவையில் அவர் உரைத்தார்:
“மொழி என்பது உணர்ச்சிபூர்வமானது. ஒருவன் வாழ்க்கை முழுவதிலும் அது
பிரதிபலிக்கிறது. தொட்டு நிற்கிறது. எனவே இதுகுறித்து விளையாட்டாகவோ
மேம்போக்காகவோ பேசிவிட்டு நிறுத்திவிட முடியாது.
ஒரு மொழியை மட்டும் மத்திய அரசு ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டால் அந்த
மொழியைப் பேசுகிறவர்கள் மட்டும் ஆட்சியாளர்களாகவும், அம்மொழியைத்
தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் ஆளப்படுபவர்களா ஆகி விடுவார்கள்.
ஒரு மொழிதான் ஆட்சி மொழியாக வேண்டுமா? அல்லது இந்நாட்டின் ஒற்றுமை
முக்கியமா? இதுதான் இன்று கேள்வி. எனவே நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில்
கொண்டு இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களின் விருப்பங்களையும்,
அச்சங்களையும் மதித்து சரியானதொரு முடிவை எடுக்க வேண்டிய நிலைமையில்
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.”
தமிழ் மொழிக்காக மட்டுமல்ல. மாநிலப் பிரிவினையின்போது தமிழன் இழந்த
மண்ணுக்காகவும் காயிதே மில்லத் நாடாளுமன்றத்தில் வாதிட்டார். தேவிகுளம்,
பீர்மேடு தமிழனிடமிருந்து பறிபோனபோது, குளமாவது மேடாவது என்று காமராசர்
குதர்க்கம் பேசினார். ஆனால் 24.12. 1955 அன்று நாடாளுமன்ற மேலவையில்
மாநில எல்லைகள் சீரமைப்புக் கமிஷன் அறிக்கை மீது நடந்த விவாதத்தின் போது
தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதிகள் என காயிதே மில்லத்
வாதிட்டார். திராவிடச் சிக்கல், இந்தியச் சிக்கல் எதுவும் இன்றி தமிழர்
பக்கம் நின்று கச்சிதமாக வாதிட்டார் இந்த தென்பாண்டித் தமிழ் மறவர்.
“நான் ஒரு தமிழன். எனது தாய்மொழி தமிழ். தமிழ்நாட்டிற்கும்,
ஆந்திராவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை. அதேபோல கேரளாவிலும் எல்லைப்
பிரச்சினை. தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை. அப்பகுதியில் தமிழ் மொழி
பேசுபவர்களே பெரும்பான்மை. ஆனால் சமஸ்தான அரசாங்கம் வேறுவிதமாக
கூறுகிறது. தமிழ் பேசுபவர்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் இல்லை
என்றும், வந்துபோகக் கூடியவர்கள் என்றும் கூறுகிறார்கள். கடந்த
தேர்தலின்போது தமிழ் பேசுபவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்றாடம்
வந்துபோகிறவர்கள் என்றால் எவ்வாறு வாக்களிக்க முடியும்?
தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதி. தமிழ்நாட்டை ஒட்டியே அது
இருக்கிறது. தமிழர்களே அங்கு பெரும்பான்மையாக வாழவும் செய்கிறார்கள்.
எனவே இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அதுவே நியாயம்”
இங்கே நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். காயிதே மில்லத் அவர்கள்
அகில இந்திய அளவில் செயல்பட்டு வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில
இந்திய தலைவர். எல்லா மாநிலங்களிலும் அவர் அரசியல் செய்தாக வேண்டும்.
குறிப்பாக தமிழக முஸ்லிம்களை விடவும், கேரளா முஸ்லிம்கள் அவரது வாக்கைக்
கட்டளையாக ஏற்றுச் செயல்படுபவர்கள். அப்படியிருந்தும் தேவிகுளம்,
பீர்மேடு பகுதியை கேரளாவுடன் இணைக்கக் கூடாது என்று ஒரு தமிழனாய்
நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.
தமிழ் மொழிக்காகவும், மண்ணுக்காகவும் நாடாளுமன்றத்தில் வாதிட்டவர், தமிழ்
அகதிகளுக்காகவும் 22.8.63 அன்று வாதிட்டார்.
“அகதிகள் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு பகுதியிலிருந்து வந்த அகதிகள்
உரிய முறையில் கவனிக்கப்படுகிறவர்கள். ஆனால் இலங்கை, பர்மா, மலாயா போன்ற
நாடுகளில் இருந்து வந்த அகதிகள் நாதியற்றவர்களாய்த் தத்தளிக்கிறார்கள்.
சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களது அவலக் குரல்
டெல்லியில் கேட்பதே இல்லை”
மேலும் இலங்கை மலையகத் தமிழர்கள்களுக்குக் குடியுரிமை வழங்குவது பற்றிய
விவாதத்தின்போது சட்டசபையில் 25.10.78 அன்று அவர்களுக்கு ஆதரவாக
வாதிட்டார்.
“இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்ற தொழிலாளர்கள்தான் அந்நாட்டை
வளப்படுத்தினார்கள். செழிப்புள்ளதாக்கினார்கள். நமது மக்களின் உழைப்பின்
பலனாகவே இலங்கை வளம் மிக்கதானது. நாலைந்து தலைமுறையாக நமது நாட்டைச்
சேர்ந்தவர்கள் அத்தீவில் நிரந்தரமாக வாழ்ந்து வருகிறார்கள். 1947 ஆம்
ஆண்டில்கூட அன்றைய இலங்கைப் பிரதமர் டி. எஸ். சேன நாயகா, இலங்கை வாழ்
இந்தியர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால்
குடியுரிமை வழங்குவதற்கு பல நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள்.
குடியுரிமை பெற விரும்புவோர் மீது அநாவசியமான நிபந்தனைகளை விதிக்காமல்
அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்.”
ஒரு தமிழனாகத் தமிழ் மொழிக்கும் தமிழ் மண்ணுக்கும் தமிழர்களுக்கும்
அரசியல் தளத்தில் நின்று அவர் ஆற்றிய கடமையை மேலே கண்டோம். அதே நேரத்தில்
ஒரு முஸ்லீமாக, விடுதலை பெற்ற இந்தியாவில், மேற்கு, கிழக்கு
பாகிஸ்தானுக்குச் சென்றதுபோக, எஞ்சி நின்ற நான்கு கோடி முஸ்லிம்களை
அரவணைத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும் அவர் செவ்வனே
நிறைவேற்றினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக