புதன், 5 ஏப்ரல், 2017

தபலே ஆலம் குந்தவையை விட இளையவர்

aathi tamil aathi1956@gmail.com

24/10/15
பெறுநர்: எனக்கு
// குந்தவை நாச்சியாரும் ஆதித்த கரிகாலனும் இரட்டை குழந்தைகளாக
பிறந்தவர்கள் என்றும், நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத சுந்தரசோழன்
அப்போது இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்து, சோழநாட்டின் திருச்சி
பகுதியில் சீடர்களுடன் தங்கி இருந்த இஸ்லாமிய ஞானி, தப்லே ஆலம் பாதுஷா,
நத்தார் வலியார் என்பவரது அருளாசியால் பிறந்தவர்கள் என்றும் பெர்சிய,
பாரசீக மொழிகளில் ஏராளமான குறிப்புகள் உள்ளன....//
ஐயா தாங்கள் கூறும் வரலாற்றில் பிழை உள்ளதாக அறிகிறேன்.
ராஜ ராஜ சோழன் பிறந்தது 947 . அவரது அண்ணன் பிறந்தது குறைந்தது ஓராண்டு
முன்பு இருக்க வேண்டும்.
அது ஒரு புறம் இருக்க
நீங்க கூறும் தப்லே ஆலம் பாதுஷா, நத்தார் வலியார் என்பவர் பிறந்ததோ 956
என்றும் 959 என்றும் கூறப்படுகிறது.
எப்படி இருந்தாலும் அவர்கள் பிறந்து பத்து வருடம் கழித்து தான் இவர்
பிறந்ததாக கூறப்படுகிறது. இவரது அருளால் ஆதித்தன் பிறந்தான் என்பதை
ஏற்க்க முடியவில்லையே..
வரலாற்றை பிழை இன்றி எழுத முயலுங்கள்...என்னுடைய கூற்றில் தவறு
இருந்தாலும் சுட்டி காட்டுங்கள்.
உங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
மேலும் ஜாதியை உருவாக்கியது அல்லாவா? அல்லது பிராமணனா? என்பதற்கும்
தங்கள் விளக்கம் எதிர்பார்க்கிறேன்.
இது உண்மையை அறியும் ஆவலே தவிர உங்களை குறை கூறுவது என் நோக்கம் இல்லை
என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவது என் கடமை என்றே
நினைக்கின்றேன்.

நத்தார் வலியார் சிரியா இசுலாமியர் முஸ்லீம் தர்கா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக