|
5/10/15
![]() | ![]() ![]() | ||
அறம் இலக்கிய அமைப்பு Aram Foundation 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
இராசேந்திர சோழன் குறித்த இறையன்பு I A S அவர்களின் கட்டுரையிலிருந்து...
மகத்தான மனிதர்களுக்கு மகனாகப் பிறப்பதில் சில சங்கடங்கள் இருக்கின்றன.
இராஜராஜன் என்ற கம்பீரம் வீற்றிருந்த இடத்தில அவரினும் மேம்ம்பட்ட ஒருவர்
அமர முடியுமா என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இராஜராஜனின்
ஆளுமை அத்தனை அழுத்தமானது. ஆனால் அவருக்குப் பின்னும் வலிமை வாய்ந்த
தலைமை சோழ நாட்டிற்குத் தேவை என்ற அடிப்படையில், மகனை வெவ்வேறு
படையெடுப்புகளுக
்கு அனுப்பியும், 1012ஆம் ஆண்டே இளவரசனாகப் பட்டம் கட்டியும்
பக்குவப்படுத்திய சாதுரியம் அவருடையது.
‘தந்தையை விஞ்சக் கூடாது’ என்ற கண்ணுக்குத் தெரிகிற வகையில் காட்டிக்
கொள்ளாத மேன்மை இராசேந்திரனுக்கு இருந்தது. அவர் தமிழக வீரத்தின் உலக
அடையாளமாகத் திகழ்ந்தவர். தான் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரத்தின்
விமானம் தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயிலை விட உயரமாக இருக்கக்கூடாது என்பதில்
எச்சரிக்கையாக இருந்த தந்தை பக்தி கொண்டவர் அவர்.
உருவாக்குவதை விடச் சிரமம், அதைக் கட்டிக் காப்பது, முன்மனார் செய்தவற்றை
இன்னும் மெருகேற்றி மேன்மையடையச் செய்து உயர்ந்த தலைமைப் பண்பு. அதை
நிரூபித்துக் காட்டிய நெஞ்சுரம் பெற்றவர் இராஜேந்திரன். இளம் வயதில்
அரியணையேறிச் சாதித்தவர்கள் அக்பர், அலெக்சாண்டர், பாபர் போன்றோர்கள்.
வயதான பின்னர் வாரிசுகளாக சாதனைகளை வாரி வழங்கிய வரிசையில் வந்தவர்களும்
உண்டு. அப்படிப்பட்டவர் இராசேந்திரன். அவர் அரியணை அஅடையும்போது 45 முதல்
50 வயது இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்து
தெரிவிக்கின்றனர்.
இளமை தலைமுடியில் இல்லை, இதயத்தில் மட்டுமே இருக்கிறது என்பது அவருடைய
வாழ்வை வாசிக்கிற போது தெரிகிறது. செல்வமும், செல்வாக்கும் இருக்கிற
நாடுகளே வளர்ந்த நாடுகளாக வலம் வரமுடியும் என்பது எப்போதும் உணரப்படும்
உண்மை. பகைவர்கள் துளைக்க முடியாத கோட்டையாக இருந்தால் மட்டுமே அது
சாத்தியம். இராஜராஜனுக்குப் பிறகு அவருடைய நிலையான ராணுவத்தை மேலும்
விரிவுபடுத்தினார் இராசேந்திரன். சோழர் படைகளைத் தளபதியாக தலைமையேற்றுச்
சென்ற கள அனுபவம், அவருக்குக் கைகொடுத்தது.
இராசேந்திரன் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலேயே மகன் இராசாதிராசனை
இளவரசராக நியமித்தார். இராஜராஜன் இலங்கையின் வடக்குப் பகுதியை
மட்டும் வெற்றி கண்டார். இராசேந்திரனோ, இலங்கை முழுவதையும் வென்று தன்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்ததனச்
சிறை செய்து அவனைப் பன்னிரண்டு ஆண்டுகள் காவலில்
வைத்தார். அவன் சிறையிலேயே உயிர் நீத்தான். இராசேந்திரன் பாண்டிய, கேரள
நாடுகளுக்குத் திக்விசயம் செய்தார். அங்கு அடிக்கடிக் கிளர்ச்சிகளும்,
கலகங்களும் தலைதூக்காமல் மகனை ஆளுநராக நியமித்து, மதுரைப் பகுதியை
அவனுடைய கட்டுப்பாட்டில் வைத்தார். தமிழகத்தில் அப்படி நியமிக்கப்பட்ட
முதல் வைசிராய் செயவர்மன் சுந்தர சோழ பாண்டியனே!
பாண்டியன் என்ற பின்னிணைப்பையும் அளித்துப் பாண்டிய மக்கள் ஏற்றுக்
கொள்ளும் தலைவனாக அவனை ஆக்கினார்.
இராசேந்திரனின் வேட்கை தீவிரமடைந்தது. மஸ்கி போர்க்களத்தில்
விஜயசிம்மனைத் தோற்கடித்து மேலைச் சாளுக்கியர்களின் கொட்டத்தை
அடக்கினார். அந்தப் போரால் துங்கபத்திரை நதி இரு நாடுகளுக்கான
எல்லையாக அங்கீகரிக்கப்பட்டது. வேங்கியில் விஜயாதித்தன் என்கிற
சாளுக்கியனைப் பல முனைகளில் தோற்கடித்துத் தன் தங்கை குந்தவையின் மகன்
இராசராசனிடம் அரசை ஒப்படைத்தது, கங்கையின் கிழக்குப் பகுதியை ஆண்ட
மதுகாமார்நவா ஜெயசிம்மனுடன் கூட்டுச் சேர்ந்த காரணத்தால் சோழர் படை
கலிங்கம் நோக்கிப் படையெடுத்து அந்த நாட்டைச் சூறையாடி மீண்டும் அவன்
வாலாட்டாதவாறு எச்சரிக்கை செய்தது, பின்னர் சோழர் படை கங்கைப்
பகுதிக்குச் சென்று அங்கும் வெற்றிக்கொடி நாட்ட முழுவீச்சில் பயணித்தது,
பின்பக்கமாக எதிரிகள் தாக்குவதை முறியடிக்க இராசேந்திர சோழனே வடக்கு
நோக்கிப் படை நகர்த்தி, கோதாவரிக் கரையில் கூடரமிட்டுத் தங்கினார்.
குந்தவையின் மகன் இராசரானின் மகுடாபிசேகத்தை 1022-ஆம் ஆண்டு ஆகஸ்டு
16-ஆம் தேதி கொண்டாடிய போது, அதில் களிப்புடன் கலந்து கொண்டார். வடக்கே
மன்னன் மஹிபாலனை வீழ்த்திய படை அவருடன் இணைந்துகொள்ள, புதிய தலைநகருக்கு
அவர் புறப்பட்டார்.
கங்கைப் படையெடுப்பின்போது சக்கரக்கோட்டம், மண்ணிக்கோணம், கோசலநாடு,
பஞ்சப்பள்ளி, மசூணி தேசம், இந்திர ராஷ்டிரா, ஒட்ட விஷயா, தண்டபுக்தி ஆகிய
நாடுகளைச் சோழர் படை தோற்கடித்ததாக
திருவாலங்காட்டுச் செப்பேடு குறிப்பிடுகிறது. அப்போது தண்டபுக்தியை
தர்மபாலாவும், தக்கநாடளத்தை ரணசூராவும், வங்காள தேசத்தை கோவிந்த
சந்திராவும் ஆண்டார்கள். அவர்கள் அனைவரையும் வெற்றிகொண்டு சோழர் படை
வடக்கத்திய மன்னர்களுக்கு சோழர்களின் ஆளுமையைப் புரிய
வைத்தது என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இரண்டு ஆண்டுகள்
நீடித்த இந்த திக்விஜயத்தால் பீகார், வங்காளம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட
பல நாடுகள் இராசேந்திரனின் ஆற்றலை ருசிபார்க்க நேர்ந்தது.
கோதாவரிக்குச் சென்ற இராசேந்திரன் ஒட்டா மன்னனை வீழ்த்தி அவன் களிறுகளைக்
கவர்ந்து கொண்டு களிப்போடு முன்னேறினார்.
இராசேந்திரனின் கடாரப் படையெடுப்பு குறித்து ஆய்வரங்கம் ஒன்று மணிலாவில்
நடத்தப்பட்டது. அதில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுப்
புத்தகமாக வந்திருக்கின்றன. சோழப் பேரரசுடன் இராசராசன் காலத்தில் கடாரம்
நட்புறவு கொண்டிருந்தது. அம்மன்னர்கள் சூடாமணி விகாரம் எழுப்ப இசைவு
தந்தார் அவர். ஆனால் அது நீடிக்கவில்லை. சோழர்களுடன் கொண்டிருந்த நட்பு
சிதைந்ததாலோ, வங்கக் கடலை
சோழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் ஆவலாலோ அல்லது ஸ்ரீவிஜய
அரசு சோழர்களின் கடல் வாணிபத்திற்கு இடைஞ்சலாக இருந்ததாலோ இப்படையெடுப்பு
நடந்திருக்க வேண்டும் என்று
எண்ணுகிறார்கள் அவர்கள். சீனத்துடன் சோழர்கள் கொண்டிருந்த வணிக உறவுக்கு
நெருக்கடி ஏற்படக் கடாரக் கப்பல்கள் காரணம் என்பதால் இராசேந்திரன்
கொதித்தெழுந்து இப்படையெடுப்பை நடத்தியிருக்க வேண்டும் என்கின்றனர்
அறிஞர்கள். கடாரம் அப்போது கப்பல்கள் கட்டுவதில் கைதேர்ந்த நாடு.
அப்படிப்பட்ட ஸ்ரீவிஜயப் பேரரசின் மீது படையெடுக்குமளவு துணிச்சல்
வந்ததர்க்குக் காரணம் இராசேந்திரனின் கடற்படை. இன்று இந்தியாவிலிருந்து
விமானம் மூலம் சுமத்திரா சென்றால் கூடச் சுமார் 2,000 கி.மீ. தூரம் பயணம்
செய்ய வேண்டும். அன்று நாகப்பட்டினத்திலிருந்து சுவர்ணதீபத்திற்க்குப்
பயணம் செய்யக கடல் மார்க்கமாக எவ்வளவு தூரத்தை அந்தக் கப்பற்படை
கடந்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தால் அது இமாலய சாதனை. திசை
காட்டி, காற்றின் வேகம், கடல் பற்றிய விவரம், வழியில் உள்ள துறைமுகங்கள்
போன்ற அனைத்துச் செய்திகளும் சாத்தியப்பட்டால் மட்டுமே இந்தச் சாதனை
நிகழ்ந்திருக்க முடியும்.
மலேயா, ஜாவா, அண்டையில் உள்ள தீவுகள் போன்றவற்றை ஆண்டதால்
இந்தியாவிற்கும் சீனத்திற்கும் இடைப்பட்ட கடல் வழிகளில் நாட்டாமை செய்து
வந்த சக்தி வாய்ந்த ஓர் அரசாக இருந்தது. அந்தப் பேரரசை எதிர்த்து
இராசேந்திரன் மேற்கொண்ட போர் முழு வெற்றியில் முடிந்தது என நீலகண்ட
சாஸ்திரியும் ஒப்புக்கொள்கிறார்.
கடாரத் ததலநகரமே, ஸ்ரீவிஜயமே சிதைக்கப்பட்டன. அதன் மன்னன் சங்க்ராம
விஜயோதுங்க வர்மன் சிறையெடுக்கப்பட்டான். சரணடந்து சோழர்களின்
உயர்வை ஒப்புக்கொண்டதும், அந்த மன்னனுக்கே நாட்டை ஒப்படைத்துவிட்டு
வந்தார் இராசேந்திரன். கங்கைகொண்ட சோழபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட சீன
நாணயங்களும், சீனப் பொருட்களும் இரு நாடுகளுக்கும் இருந்த கடல்
வர்த்தகத்தைப் படம் பிடிக்கின்றன.
இராசேந்திரனின் நாவாய்ப் படை எவ்வளவு கச்சிதமாகத் திட்டமிட்டுப்
பராமரிக்கப்பட்ட ஒன்று என்பதைப் பார்க்கும்போது நாம் வியக்காமல்
இருந்தால் விவஸ்த்தை கெட்டவர்கள் என்றே பொருள். கப்பற்படையின் மிகப்
பெரிய தொகுதியைக் ‘கணம்’ என்று அழைத்தார்கள்.
இன்றைய ஸ்க்வாட்ரனுக்கு இணைனது அது. அதற்குத் தலைமை ஏற்றவர் கனாதிபதி.
போர் குறித்து ஐந்து ஐந்து கப்பல்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, ‘ கண்ணி’
என்று அழைக்கப்பட்டன. அவை எதிரிகளைச் சிக்க வைக்கிற கப்பல்கள்.
எதிரிக்கப்பல்கள் சூழ்ந்ததும் ‘தளம்’ என அழைக்கப்படும் பெரிய கப்பல்கள்
சூழ்ந்துகொண்டு அந்த எதிரி நாவாயை அழிக்கும். எவ்வளவு விரைவில்
உதவிக் கப்பல்கள் வருகின்றன என்பதே வெற்றியைத் தீர்மானிக்கும். ‘கண்ணி’
என்பதற்கு, ‘தூண்டில்’ என்றும் பொருள். கண்ணியின் தலைவனுக்கு, ‘களபதி’
என்று பெயர். ஐந்து போர்க்கப்பல்கள், மூன்று துணைக் கப்பல்கள், இரண்டு
உணவு, உபகரணக் கப்பல்கள், ஒன்றிரண்டு தனி உபயோகக் கப்பல்கள் இருக்கும்
தொகுதிக்கு, ‘ஜலதளம்’ அல்லது ‘தளம்’ என்று பெயர். ‘ஜலதளாதிபதி’ என்பவர்
இவற்றின் ஆணையாளர். துப்பு துலக்கவும், எதிரிகளின் நடமாட்டத்தைக்
கண்காணிக்கவும் இரண்டு மூன்று தளங்கள் கடலில் ரோந்துப் பணியைச் செய்து
வந்தன. அவை சமயத்தில் சோதனை போடவும், தேவைப்பட்டால்
சந்தேகத்திற்குரிய கப்பல்களை அழிக்கவும் செய்தன.
பலவகைப் பணிகளை மேற்கொள்ளும் நாற்பதிலிருந்து ஐம்பது வரை எண்ணிக்கை கொண்ட
கப்பல்களுக்கு, ‘மண்டலம்; என்று பெயர். ஆழ்கடலில் போர் புரிய இவற்றைப்
பயன்படுத்தினர். அவற்றின் தலைமையை,
‘மண்டலாதிபதி’ ஏற்று நிர்வகித்து வந்தார். ‘கணம்’ என்பது நூறு முதல்
நூற்று ஐம்பது கப்பல்களைக் கொண்ட தொகுப்பு. ‘கணம்’ என்பதற்கு ‘மூன்று’
என்ற பொருள் தமிழில் உண்டு. மூன்று மண்டலங்களின் இணைப்பே கணம். அதைக்
‘கணாதிபதி’ கவனித்து வந்தார். இது சுயசார்பு கொண்ட அனைத்து வசதிகளும்
கொண்ட கப்பற்படை. மூன்று கணங்களைக் கொண்டது ‘அணி’. முந்நூறு முதல் ஐநூறு
வரையிலான எண்ணிக்கை கொண்ட கப்பல்களின் தொகுப்பு, ‘அணி’ கடல்
திக்விஜயம் செய்யப் பயன்படுத்தப்பட்
டது. அதற்கு, ‘அணிபதி’ தலைமை ஏற்றார். இரண்டு முறையே இத்தகைய அணியைச்
சோழர்கள் களத்தில் இறக்கியதாக ஆவணங்கள் தெரிரிவிக்கின்றன. ‘பிரிவு’
என்பது நவீன கப்பற்படைத் தளத்தைப் போலச் செயல்பட்டது. இரண்டு முதல்
நான்கு பிரிவுகள் சோழர் நாவாயில் செயல்பட்டு வந்தன. சேரர்களின் நாவாய்
எழுச்சிதய மட்டுப்படுத்த மலபார் பகுதியில் நிரந்தரமான சோழர் நாவாய்த்
தளம் இயங்கி வந்தது. பிரிவுக்குத் தலைமை இளவரசனோ அல்லது அரசனின்
நம்பிக்கைக்கு உகந்த வீரனோ ஏற்கவேண்டும்.
இத்தனை தெளிவாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைந்ததால் மட்டுமே
இராசேந்திரன் கடலைக் கட்டாந்தரையைப் போலப் பயன்படுத்தி வெற்றிகளைக்
குவிக்க முடிந்தது. ‘இராசேந்திரன் காவல்மிக்க கடாரத்தின் மீது போர்
மேற்கொள்ள முடிவெடுத்ததும், கப்பற்பதடைத் தலைவராக அவரே பொறுப்பேற்றார்.
இந்தியப் பெருங்கடலும், வங்காள விரிகுடாவும் சோழர்களின் கப்பல்களால்
நிரம்பின. போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவு அந்தக் கப்பல்கள் கடலை
அடைத்துக்கொண்டு புறப்பட்டன. காலமும், நிலையும் அறிந்து அந்தப்
படையெடுப்புக்குத் தாமே முன்னின்று ஊக்கப்படுத்தினார். பின்னிருந்து
ஆணைகள் பிறப்பிக்கும் பழக்கம் இல்லாத அவர்,நெஞ்சை நிமிர்த்தி படைகளை
அணிவகுக்கும் மரபைத் தந்தையிடமிருந்து கற்றவர். அத்தனைக்
கலங்களும் நீரைக் கிழித்துக் கொண்டு நெடிது சென்றன. சோழர்களுக்குத்
தேவையான உபகரணங்கள், உடைகள் போன்றவற்றையும் பயன்பாட்டுக்குக் கலங்களில்
கொண்டு சென்றனர். சோழ வீரர்கள் பயணத்திற்குப் பின்னும்
புத்துணர்ச்சியுடன் போரிட்டு வென்றனர். இராசேந்திரன் அம்மன்னனை வென்று
அடிமைப்படுத்தியதோடு, அவனுடைய பட்டத்து யானையையும் கவர்ந்தார்.
வித்தியாதரத் தோரணத்தையும் கைப்பற்றினார்’ என்றெல்லாம் இராசசேகர தங்கமணி
அவருடைய, ‘இராசேந்தி சோழன்’ என்கிற நூலில் விவரித்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதியுள்ள அறிஞர் என். சுப்ரமணியன்
கடாரத்தை வெற்றி கொண்ட இராசேந்திரன் சோழ ராசவம்சத்தில் சிலரை கடல் கடந்த
பகுதிகளுக்கு வைசிராயாக நியமித்ததாகக் குறிப்பிடுகிறார்.
காம்போஜன மன்னன் சூரியவர்மன் இராசேந்திரனின் நட்பை நாடி வந்து பாதுகாப்பு
அளிக்கக் கோரியது பற்றிய கரந்தைச் செப்பேடுகள் கடல் கடந்து அவர்
பெற்றிருந்த செல்வாக்கைப் பற்றி நமக்கு உணர்த்துகின்றன. அவர்
வழியில் 14 துறைமுகங்களில் வெற்றுக் கொடியை நாட்டிய வண்ணம் சென்றதாக
ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பர்மா, இந்தோ-சீனா, நிக்கோபார்
போன்ற பல இடங்களை சோழர்படை கைவரிசையைக் காட்டிக் கைப்பற்றியது.
இராசேந்திர சோழனைப் பற்றி எழுதும் நேரு, இராசேந்திரன் சிறப்பு வாய்ந்த
பாசனத் திட்டத்தை சோழபுரத்தில் ஏற்படுத்தினார். அந்தப் பாசனத்திட்டத்தின்
கரை பலம் வாய்ந்த கருங்கற்களால் 10 மைல் நீளத்திற்குக்
கட்டப்பட்டிருந்தது. அது கட்டப்பட்டு நூறு ஆண்டுகளுக்குப் பின் அதைப்
பார்வையிட்ட அராபியப் பயணி அல்பெருனி அசந்து போனார். ‘நம் மக்கள் இதைப்
பார்த்தால் வியப்பார்கள். இது போல் நம்மால் கட்டுமானம் செய்ய
இயலாது என்று ஒத்துக் கொள்வார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.
இராசேந்திரன் வெற்றிகளின் போது சில கதலை பொருட்களையே கைப்பற்றி வந்தார்.
கங்கைப் பகுதி வேந்தர்களை வென்று திரும்பி வருகிறபோது,
வடநாட்டிலிருந்து ஒரு விநாயகர் படிமத்தை எடுத்து வந்தார். அக்கற்படிமம்
கும்பகோணத்திலுள்ள திருநாகேஸ்வரம் கோயிலில் கங்கை விநாயகர் என்ற
பெயரால் பிரதிட்டை செய்யப்பட்டது. இராசேந்திரன் ஏழைகளுக்குக் கொடையளித்து
ஏழ்மையின் மீது நேரடித்
தாக்குதல் நடத்தினார். அவர் 1,073 பேருக்குக் கொடையளித்த விவரம் கரந்தைச்
செப்பேட்டில் காணபடுகிறது. திருக்கோயில்களுக்கும் நிலங்களை
வாங்கித் தானமளித்துள்ளார். எண்ணற்ற கோயில்களுக்குத் திருப்பணிகளைச்
செய்தார். வெற்றி பெற்ற இடங்களில் சோழ சிற்பிகளைக் கொண்டு
கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் எழுப்பினார். ‘கோலார்’ என்ற
இடத்தில் துர்க்கைக்குக் கோயில் எழுப்பி வழிபாட்டிற்கான நிவந்தங்களும்
அளித்தார். பல கோயில்கள் இவருடைய ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டன. இவர் 24
மகாயில்களுக்கு மேல் கட்டியும், புதுப்பித்தும் கலை முத்திரைகளைப்
பதிப்பித்துள்ளார். காவிரிப்பூம்பட்
டினத்தில் கங்கை கொண்டான் கால்வாயை வெட்டுவித்தார்.
சோழபுரத்தில் கன்னி நங்கை ஏரியை வேட்டிவைத்தார். ‘சோழ கங்கை’
நீர்த்தேக்கம் பற்றி நேரு சிலாகித்ததை ஏற்கனவே பார்த்தோம். அதில் அவர்
வெற்றி பெற்றுக் கொண்டு வந்த கங்கை நீரை ஊற்றிப் புனிதப்படுத்தியதால்
அப்பெயரைச் சூட்டியதாகக் குறிப்பிடப்படுகிறார்கள. அந்த ஏறி குன்றும்,
மலையும் இல்லாத இடத்தில் ஏற்படுத்தப்பட்டது; 16 மைல் நீளம்; மூன்று மைல்
அகலம் கொண்டது. ‘நம் நாட்டில் காணப்படுகிற மனிதரால் அமைக்கப்பட்ட
ஏரிகளில் இதுவே பெரியது’ என தொல்லியல் வல்லுநர் நாகசாமி
குறிப்பிட்டுள்ளார்.
அவருதடய படையெடுப்புகள் வெற்றி பெற்ற நாடுகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தன.
இராசேந்திரனின் படையெடுப்புகள் வங்கத்தில்
நிரந்தரமான அடையாளங்களை விட்டுச் சென்றதாக, ‘வங்கப்பாலர்கள்’ என்ற நூலில்
ஆர். டி. பானர்ஜி குறிப்பிடுகிறார். அவர் பர்மாவை வென்றமபோது,
‘பெரு’ என்ற இடத்தில் கற்றூணில் சாசனம் வெட்டுவித்துப் பெரிய கோர்டருக்கு
முன் நாட்டினார். அக்கற்றூண் இன்றும் நிலவி வருகிறது. அவர் பெற்ற
வெற்றிகளின் காரணமாக நாகப்பட்டினத்தைச் சுற்றி
கங்கைகொண்டான், கடாரம் கொண்டான் என்று ஊர்கள் பெயர் சூட்டப்பட்டிருப்பதை
அங்கு சாராட்சியாகப் பணியாற்றும்போது நான் பார்த்திருக்கிறேன்.
சாளுக்கியர்களின் கல்யாணபுரம் சூறையாடப்பட்டபோது கொண்டு வந்த அறிய
பொருட்களில் ஒன்று, ‘துவார பாலகர்’ சிற்பம். இப்போது இது பெரிய கோயிலில்
உள்ளது.
இராசேந்திரன் காலத்தில் கடல் வணிம் கொடிகட்டிப் பறந்தது. தமிழ் நாட்டுச்
சிற்பங்கள் சீனக் கோயில் ஒன்றில் காணப்படுகின்றது. முத்து, யானைத்
தந்தம், வண்ணப்பட்டு கலந்த பருத்தித் துணிகள், பாக்கு போன்றவை சோழ
நாட்டிலிருந்து சீனத் துறைமுகத்தை வந்தடைந்தன என்று சீன அறிஞர் சௌஜீகுவா
குறிப்பிடுகிறார். அவர் காலத்தில் சோழ-அராபிய வாணிகமும் சிறந்து
விளங்கியது. இராசேந்திரன் என்ற மாபெரும் தலைமைப் பண்பாளரிடம்
கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகள் நிறைய. அவற்றில் முதன்மையானது முன்மனார்
விட்டுச் சென்ற பாரம்பரியத்தையு
ம், வீரத்ததயும் பழுதுபடாமல் கட்டிக் காப்பதும், அவற்றிற்குச் செம்மை
சேர்ப்பதும். அவர் அதைச் செவ்வனே செய்தவர். அதற்கு முக்கியக் காரணம் அவரே
தந்தைக்கு வலதுகரமாகச் செயல்பட்டதும், தந்தையார் மீது பக்தி கொண்டவராக
இருந்ததும் ஆகும்.
அவருடைய நிர்வாகத்திறன் அவர் மதுரைப் பகுதியில் தன மகனை ஆளுநராக
நியமித்து வெற்றி பெற்ற பகுதிகளைக் கட்டிக் காக்க ஏற்பாடு
செய்ததிலிருந்து புலப்படுகிறது. அவருதடய துணிவு கப்பற்படையை நுணுக்கமாகத்
திட்டமிட்டு வடிவமைத்ததிலும், பல கிழக்கத்திய நாடுகளுக்குத் தன் வீரத்தை
உணர்த்தியதிலும் வெளிப்படுகிறது. இருபது வயதில் இராசேந்திரன் சோழ
நாட்டின் மன்னனாக மாத்திரம் ஆகியிருந்தால் இந்தியப் பேரரசின்
சக்கிரவர்த்தியாக அவர் அதை உருவாகியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
வயோதிகத்திலும் வாலிபச் செழுமையைப் பூசிக்கொண்டு அவர் செய்த சாதனகள்தாம்
இத்தனையும்.
தலைமைப் பண்பாளர்கள் இருப்பவற்றை இன்னும் மேம்படுத்தியும், அவற்றைப்
புதுப்பித்தும், தேவைப்பட்டால் உயிர்ப்பித்தும் மூலாதாரங்களை
முழுமையாகப் பயன்படுத்துகிறா
ர்கள். அதுவே அவர்களை உலக அளவில் உயர்த்துகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக