ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

கொரியா தமிழ் தொடர்பு கொரியர்

aathi tamil aathi1956@gmail.com

23/12/15
பெறுநர்: எனக்கு
நிலா நிலா
முறைப்பெண்களை மணக்கும் கொரியர்கள்!
கொரியாவில் அத்தை, மாமன், தாய் மாமன் முறைப் பெண்களைத்தான் மணந்து
கொள்கிறார்கள் .தமிழர் பண்டிகையான பொங்கலை பெரும் விழாவாக அங்கு
கொண்டாடுகிறார்கள். சமீபத்தில்தான் சீன உணவின் தாக்கம் அங்கு
ஏற்பட்டுள்ளது . அதற்கு முன்பு அவர்களின் முழு உணவும் அரிசி சார்ந்து
இருந்தது ஊறுகாய் இல்லாத உணவு அரிது . 1960-கள் வரை அவர்களின் வீடுகள்
தமிழர்களின் குடிசைகளைப் போலவே இருந்தன.
இன்றும் கொரியாவில் பெற்றோரை அம்மா, அப்பா என்றே அழைக்கிறார்கள் .
வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மாவிலைத் தோரணம் (mango
leaves ) கட்டுவோம். கொரியாவில் மாங்காய் கிடையாது
என்பதால் அங்கு மிளகாயைத் தோரணமாக கட்டுகின்றனர்.ஆனால் அதற்கு பெயர்
மாவிலைத் தோரணம் என்றுதான் அழைக்கின்றனர் என்றார் பேராசிரியர்
சி.சிதம்பரம்.
-செய்தி : தமிழறம் (www.tamilarram.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக