புதன், 5 ஏப்ரல், 2017

அப்துல் ஜப்பார் தமிழக பிறப்பு தலைவர் சந்திப்பு இசுலா

aathi tamil aathi1956@gmail.com

5/11/15
பெறுநர்: எனக்கு
ரகுநந்தன் வசந்தன்.
''# என்_மனம்_கவர்ந்த_மனிதர்கள் '
குழந்தையைப் போல ஓடிச்சென்று கட்டிப்பிடிக்க ஆசை. ஆனால் ஆயுதமேந்திய அந்த
இளைஞர்கள் ஒரு கணம் என் எண்ணத்தில் மின்னி மறைந்தனர். என்னையும்
எண்ணத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு சிலையாக நின்றேன். என்னை நெருங்க,
நெருங்க அவருடைய நடையின் வேகம் கூடுகிறது. நெருங்கி வந்து அப்படியே
கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்கிறார். அவரது தாடை என் தோளில்....
இன்னும் பிடி இறுகுகிறது... “நான் உங்கள் பரம ரசிகன் அய்யா” என்கிறார்...
சொன்னவர் தலைவர் பிரபாகரன்.
திரு. அப்துல் ஜப்பார்
தலைவரையே ரசிகராக்கிய இந்த குரல் உலகம் முழுதும் எண்ணற்ற மனிதர்களை
தனக்காய் சம்பாதித்து வைத்திருக்கிறது. தமிழகத்தின் தூத்துக்குடி
மாவட்டத்தின் சாத்தான்குளம் கண்டெடுத்த ஒலிபரப்புதுறையின் முத்து...
வளர்ந்தது என்னவோ இலங்கையில் தான். பிரபஞ்சம் எங்கும் ஓய்வில்லாமல்
ஒலித்துகொண்டிரு
க்கும் பல குரல்கள் வளர்ந்த இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம்தான்
இவருக்கும் தாய் வீடு. சிறிது காலம் அங்கேயே பணியாற்றியவர் மீண்டும்
தமிழகம் திரும்புகிறார்.
ஒருநாள் ‘ஆல் இந்தியா’ வானொலியில் கிரிக்கெட் வர்ணனை
கேட்டுக்கொண்டிருந்தவர் ‘இந்த வர்ணனை கேட்பதற்கே முடியவில்லை உங்கள்
வர்ணனை முறையை கொஞ்சம் மாற்றுங்கள் என கூறி நீண்ட மடல் ஒன்றை எழுதி
அனுப்புகிறார். நிர்வாகம் ஏளனமான பதில் கடிதம் ஒன்றை அனுப்புகிறது
‘முடிந்தால் நீ வந்து செய்’ என்று. சவாலை ஏற்றவர் பணியை
ஆரம்பிக்கிறார்... பாராட்டுகள் குவிகிறது. முதல் முழு தமிழ் கிரிக்கட்
வர்ணனையாளர் ஆகிறார். யாராலும் அசைக்கமுடியாத ஒரு இடமும், பணியும்
கிடைக்கிறது வானொலியில்.
அதன் பின் உலகம் முழுதும் விரிகிறது இந்த குரலின் வீச்சம். லண்டன் பிபிசி
தமிழிலும் சிறிது காலம் பணியாற்றியவர் தமிழகத்தில் இருந்தபடியே உலக
வானொலிகள் பலவற்றுக்கு அரசியல் ஆய்வு, செய்திகளை வழங்கி
கொண்டிருக்கிறார். இவர் அரசியல் ஆய்வும், அதை சொல்லும் அந்த குரல்
அசைவும் கேட்கவே அலாதியானது.
எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என விரிகிறது இவர் ஆளுமை. 2002 ஆம்
ஆண்டு தேசிய தலைவர் பிரபாகரனின் பத்திரிகையாளர் மாநாட்டில்
கலந்துகொண்டபோது தலைவரே இவரை பிரத்தியேகமாக சந்திக்க விரும்பி அழைத்து
சந்தித்து கொள்கிறார். அச் சந்திப்பு பற்றிய தருணங்களை ‘’அழைத்தார்
பிரபாகரன்’’ என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கியிருக்கிறார்.
குரல் மொழியாலும், எழுத்துக்களாலும் தமிழ் மனங்களோடு பேசிக்கொண்டிருக
்கும் இந்த கலைத் தமிழனின் பணி நீண்டு நடக்கட்டும்.
புங்கை முகிலன்
இசுலாமியர் முஸ்லீம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக