|
31/12/15
| |||
ஜலால்லு தீன்
தாயின் வயிற்றில் 4 மாத கருவாக அக்குழந்தை இருந்த போதே அந்த பெண்ணின்
கணவன் மனக்கசப்பால் பிரிந்து சென்றுவிட்டான், சிறிது நாள் கழித்து அவன்
இறந்து விட்டதாக தெரிய வந்தது. தன் மனைவியின் நடக்கையில் சந்தேகப்பட்டு
தான் பிரிந்துவிட்டான் என்று அந்த கிராமத்தில் அவதூறுகள் பரவியது.
அக்குழந்தை பிறந்த சில நாட்களிலேயே அப்பெண்ணின் 12 வயது மூத்த மகனும்
உடல் நலக்குறைவால் இறந்துவிட்டான்.
வயிற்றில் கருவாக உருவானதுமே குடும்பம் சீர்குலைந்து விட்டது என்று
அக்குழந்தையை சாபமாக கருதினர் அனைவரும்.
தன் தாய்மாமனிடம் ஒப்படைக்கப்பட்ட
து குழந்தை, அந்த சிறுவனுக்கு 6 வயதான போது அந்த தாய் மாமன்
காவல்துறையால் கைது செய்யப்பட்டார், தேசதுரோகி என்று.
இதற்குள் மறுமணம் செய்து மூன்று மகன்களை பெற்றிருந்தால் அச்சிறுவனின்
தாய். தன் தாயிடம் திரும்பிய அந்த சிறுவனை அந்த குடும்பத்திற்குள்
ஏற்றுக்கொள்ள யாருமே தயாராக இல்லை.
இந்த சிறுவனை பற்றிய செய்திகள் ஊருக்குள் பரவியிருந்ததால் அவனை நண்பனாக
ஏற்றுக்கொள்ளவும் சிறுவர்கள் யாரும் முன்வரவில்லை. தன் தாயின் இரண்டாவது
கணவன் அச்சிறுவனை கொடுமை படுத்தவும் ஆரம்பித்திருந்தார்
அன்பிற்காக ஏங்கிய அந்த பிஞ்சுக்கு போகும் இடமெல்லாம் கிடைத்தது
அவதூறுகளும், ஏளனங்களும் மட்டும் தான். பிற்போக்கு தனமான எண்ணங்களால்
அந்த சிறுவனின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியது அந்த கிராமத்து
சமூகம்.
ஒரு கட்டத்தில் தெருவில் பார்த்த உடனேயே அந்த சிறுவனை சூழ்ந்து கொண்டு
ஏளனம் செய்யவும் தாக்கவும் முற்பட்டனர் அக்கிராமத்து சிறுவர்கள்.
9 வயதான போது சாதாரணமாக தெருவில் நடந்து செல்ல வேண்டும் என்றாலே கையில்
இரும்புக்கம்பியுடன் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அந்த
சிறுவனுக்கு.
இளவயதிலேயே இப்படி அனைவராலும் வெறுக்கப்பட்ட அச்சிறுவனின் எதிர்காலம்
என்னவாகியிருக்கும் ?
9 வயதில் அந்த கிராமத்து தெருக்களில் கையில் இரும்புக்கம்பியுடன் வளம்
வந்த அந்த சிறுவன் தனது 31 வது வயதில் அந்நாட்டின் இரண்டாவது
சக்திவாய்ந்த மனிதனாக உருவெடுத்திருந்தான்.
அந்த சிறுவன் வேறு யாரும் அல்ல 1937 ஆம் ஆண்டு வடக்கு ஈராக்கின் அல்
அவ்ஜா கிராமத்தில் அபித் அல் மசீத் - சுபா துல்பா முசாலத் தம்பதிகளுக்கு
பிறந்த சதாம் உசேன்.
"எதிர்த்து நின்று இடரலை உண்டாக்குபவன் " என்று பொருள்படும்படி
அக்குழந்தைக்கு சதாம் என்று பெயர் சூட்டினார் அவர் தாய்.
10 வயதான போது சதாம் மீண்டும் தன் தாய் மாமன் கெய்ராலா தல்பா உடன்
பாக்தாத் நகருக்கு திரும்பினார். 1941 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆதரவு ஈராக்
முடியாட்சியை கவிழ்க்க நடந்த முயற்சியில் பங்கெடுத்து தேச துரோக வழக்கில்
சிறை தண்டனை அனுபவித்த கெய்ராலா, சதாமிற்கு அரபு தேசியவாதத்தை
சொல்லிக்கொடுத்து வளர்த்தார்.
பின்னாளில் "Three Whom God Should Not Have Created: Persians, Jews,
and Flies" என்ற புத்தகத்தை எழுதியவர் கெய்ராலா. பாக்தாத் நகரின்
மேயராகவும் இருந்தார்.
அந்த கிராமத்து சமூகம் சதாம் மீது திணித்த மூர்க்கத்தனமும் தன் தாய்
மாமனின் தேசியவாதமும் சதாமை முற்றாக மாற்றியது.
1958 ஆம் ஆண்டு ஈராக்கில் மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு இராணுவ் பின்புலம்
கொண்ட அரசியல் வாதிகளிடம் ஆட்சி கைமாறியது.
19 வயதில் ஈராக் பாத் கட்சியில் இணைந்த சதாம். 1959 ஆம் ஆண்டு தனது 22
வது வயதில் சகாக்களுடன் இனைந்து பாக்தாத் நகரில் வைத்து தேசியவாதத்தை
புறக்கணித்து வந்த ஈராக்கின் புதிய பிரதமர் அப்துல் கரீமை சுட்டுக்கொல்ல
முயற்சி செய்தார். முயற்சி தோல்வியடைந்ததால் சிரியாவுக்கு தப்பி
சென்றார்.
அரபு தேசியவாதிகளான மிச்செல் அப்லாக், எகிப்திய அதிபர் நாசர்
போன்றவர்களுடன் சதாமுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
1968 ஆம் ஆண்டு பல பிரச்சனைகளில் தள்ளாடிக்கொண்டிருந்த அரசை கவிழ்த்து
விட்டு ஈராக்கின் பாத் கட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. ஈராக்கின் அதிபராக
அல் பக்கர் பதவியேற்றார். துணை அதிபராக தனது 31 வது வயதில் சதாம் உசேன்
பொறுப்பேற்றார், கூடுதலாக ஈராக்கின் இராணுவம் அவர் கட்டுப்பாட்டில்
இருந்தது.
1979 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் அல் பக்கர் பதவி விலகியுடன் சதாம்
ஒட்டு மொத்தமாக ஆட்சியை கைப்பறிக்கொண்டு சர்வாதிகாரியாக மாறினார். தனது
எதிரிகளை ஒழித்துகட்டினார். 24 ஆண்டுகள் ஈராக் அவர் கட்டுப்பாட்டில்
இருந்தது.
1970 களில் எண்ணெய் வளத்தை கொண்டு ஈராக்கை வளப்படுத்தினார் சதாம்,
தனியார் எண்ணெய் நிறுவனங்களை தேசிய மயமாக்கினார், பிற்போக்கு வாதிகள்
போல் அல்லாமல் பெண்கள் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிகம்
முக்கியத்துவம் கொடுத்தார்.
Women make up one half of society. Our society will remain backward
and in chains unless its women are liberated, enlightened and
educated.- Saddam Hussein
அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி, இலவச மருத்துவம், விவசாயிகளுக்கு
மானியம், ஈராக்கின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம், சாலை வசதி என்று
குறுகிய காலத்தில் ஈராக்கை செழிப்பாக மாற்றினார்.
மத்திய கிழக்கில் சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு கொண்ட நாடாக ஈராக்கை
அறிவித்து விருதும் வழங்கியது UNESCO.
இட்லர் எப்படி குறுகிய காலத்தில் ஜெர்மனியை மீண்டும் கட்டி எழுப்பினாரோ
அதே போல் சதாமும் செய்ததால் பல மேற்கத்திய ஊடகங்கள் அவரை மத்திய
கிழக்கின் இட்லர் என்றே அழைத்தன.
ஒரு பக்கம் ஈராக்கை வளபடுத்திய சதாம் மறு பக்கம் ஷியா
இஸ்லாமியர்களுக்கும், குர்து இனமக்களுக்கும் எதிராக பல மீறுதல்களை
கட்டவிழ்த்து விடவே செய்தார்.
1970 இல் நாசர் இறந்த பிறகு, ஒட்டுமொத்த அரபு உலகின் God Father ஆக
கருதப்பட்டவர் சதாம் உசேன். 1972 ஆம் ஆண்டு வெளிவந்த "The Godfather "
தான் சதாம் அதிகம் விரும்பிய திரைப்படமும்.
தனது அசிங்கங்களை பார்க்காமல், பிறரின் குறைகளை கண்டுபிடித்து இழிவு
படுத்துவது தான் இந்த மனித சமூகத்தின் வழக்கம். இப்படி ஏற்ப்படும்
அவமானங்களை பாடங்களாக எடுத்துக்கொள்பவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி
அடைகின்றனர்.
அந்த கிராமத்து சமூகத்திடம் அச்சிறுவன் கற்றுக்கொண்ட பாடம் தான்
பின்னாளில் யாருக்கும் தலை வணங்காத சதாம் உசேனை உருவாக்கியது. தனக்கே
உரிய முரட்டு தனமான அரசியலால் அவர் ஏற்படுத்தி சென்ற தாக்கத்தை மக்கள்
எளிதில் மறந்து விட மாட்டார்கள். அரபு உலகம் அவருக்காக அதிர்ந்து கொண்டே
இருக்கும்.
அமெரிக்க பெருமுதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் எண்ணெய் பசிக்கு சதாம்
உசேன் பலிகொடுக்கப்பட்ட நாள், டிசம்பர் 30.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக