திங்கள், 24 ஏப்ரல், 2017

பாரி நகரத்தார் முன்னோன் செட்டியார் வள்ளல்

aathi tamil aathi1956@gmail.com

12/8/15
பெறுநர்: எனக்கு
ஆவுடையப்பன் காசிவிசுவநாதன்
# அற்றைத்___திங்கள்____அவ்வெண்ணி
லவில் ......
பாரியூர், ஏரியூர் மட்டுமல்ல புதுப்பட்டி, நாகமங்கலம், ஒழுகுமங்கலம்
என்பன போன்ற பல ஊர்கள் தமிழகம் எங்கும் தன்னிச்சையாக இயல்பாகவே அமைகின்ற
பெயர்கள். இதன் காரணம் நமது வாழ்வியலின் பண்பாட்டுக் கூறுகளின்
ஒர்மைதான். அப்படி இருக்க பார் ஆண்ட பரம்பு மலை இதுவல்ல என்பதற்கு
இப்போது வந்த காரணம் என்ன ?? அப்போதைய பரம்பு மலை என்பது மூவாயிரம்
ஆண்டுகளுக்கு முந்தைய குறு நில குன்றுத் தொடர்களை உடைய தன்னாட்சிப்
பகுதி. மருத நில வாழ்வின் முந்தைய வாழ்க்கைப் பதிவாகவே அது இன்றும்
இருக்கின்றது. இந்த மலைக்கு சரியாக கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வந்த
திருஞான சம்பந்தர், மலையின் மேல் உயரமும், அதனை எளிதில் அடைய முடியாத
இயல்பினை வைத்தே தனது தேவாரப் பாடலில் அவர் கொடுத்த பெயர் திருக்
கொடுங்குன்றம். அதன் பின் சைவம் எழுச்சி பெற்ற போது பரம்பு மலை பிரான்
மலையாகிப் போனது. ஆகவே, பரம்பு, திருக்கொடுங் குன்றம், பிரான் மலை என்று
கால வரிசைப்படியான பெயர்களைத் தாங்கி அறைத் திங்கள் அவ்வெண்ணிலவை
சாட்சியாக்கி, பாரிமகளிர் பாடலில் அழியாத தடம் பதித்தது தற்போதைய
பிரான்மலையாகிய அப்போதைய பரம்பு மலையே.
அதுமட்டும் அல்ல. சங்க இலக்கியங்கள் சிவத்திற்குப் பின்னும், வடுகர்
காலங்களிலும் கவிராயர்களால் மட்டுமே காப்பாற்றப்பட்டு வந்தது. சங்க
இலக்கியம் வெளிப்பட்ட போதுதான் பண்டிதர்கள் பாரியையும், அவனது
மழையினையும் தேடினார்கள், தூக்கினார்கள். ஆனால் வாழையடி வாழையாக அந்தப்
பகுதி மக்கள் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால் அங்கவை, சங்கவை என்று
பெயர் வைக்கும் பழக்கமும் பாரிக்கு நன்றி சொல்லும் வழக்கமும் ஏடு
எழுத்தறியா மக்களிடம் இருந்து வந்துள்ளது. எங்கள் ஊரில்
கல்வெட்டாய்வறிஞர் முனைவர்.மா.ராசமாணிக்கனாரை எங்கள் பாட்டனார்
நெற்குப்பை அழைத்து மூன்று நாட்கள் சங்க இலக்கிய சொற்பொழிவினை 1950 களில்
நிகழ்த்தினார். அந்தப் புகைப்படங்கள் தவறவிட்டு விட்டேன். முற்றத்தில்
நின்று அந்த மலைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று எங்கள் ஐயாவிடம் அன்றைய
நாட்களில் கேட்டால் விலங்குகள் மண்டிய காடுகள் உள்ளன வேண்டாம் என்பார்.
அன்றைய பரம்பு மலை இப்போதைய பிரான்மலை என்று பெயர் மாற்றத்தை
வேறுபடுத்திக் காட்டுவார். அன்று புரியவில்லை, இன்று உணர்கின்றேன்.
பாரியின் மக்கள் இருந்கோவேளுக்கு கொடுத்து மணமுடிக்கப்பட்டார்களா என்பது
ஆய்விற்குரிய ஒன்று. ஆனால் தமிழக வேளிர் குடிகள் வடக்கு மட்டுமல்ல
தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இருந்தனர். அதில் தலையாயவர் பாரி வள்ளல்,
அவருக்குச் சிறப்புச் சேர்த்த பாரி மக்கள். பாரியுடன் கல்லும்-தேனும்
நரவும் சரி நிகராய் அமர்ந்து பகிர்ந்துண்ட கபிலனுக்கும் உண்டு.
--- ----- நெற்குப்பை காசி விசுவநாதன். 11-08-2015.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக