சனி, 1 ஏப்ரல், 2017

ஈன பறையர் என்பது இழிவு அல்ல ஈன எனில் உலக மக்கள் ஈனோர்

aathi tamil aathi1956@gmail.com

6/1/16
பெறுநர்: எனக்கு
ஈன பரையன் பெருமையா இழிவா?
========================
ஈனோர் வடிவிற் காண்ட லில்லெனக்
கோட்டமில் கட்டுரை கேட்டனன் யானென - சிலம்பு 54
இதற்க்கு பொருள் "மக்கள் வடிவிற் காண்பதில்லை யென்று கூற"
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென
மதுரைமா தெய்வ மாபத் தினிக்கு - சிலம்பு 174
இதற்க்கு பொருள் "தேவர்களுடைய வடிவத்துக் காண்பதல்லது இவ்வுலக மக்களுடைய
வடிவத்துக் காணுதல் இல்லையென்று"
ஆக சிலப்பதிகாரத்தின் படி ஈனோர்-னா இவ்வுலகில் இருப்பவர்கள் என்றுதான்
பொருள். ஆக ஈன பரையன் என்பது இவ்வுலகில் இருக்கும் பரையன் என்றே பொருள்
படும். ஈன நாயுடு, ஈன நாயக்கர், ஈன ரெட்டி என்று இங்கு எல்லாரும்
ஈனர்களே. ஆக இதில் இழிவு இருப்பதாக கருதத்தேவையில்லை.
ஈ என்றால் என்ன?
=============
"ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர் - தொல்"
ஈ என இரத்தல் இழிந்தன்று - இழிந்தோன் கூற்றால் ஈ
எனச் சொல்லி யிரத்தல் இழிந்தது. ஆக தொல்காப்பியத்தின் மூலமாக ஈ என்ற
வார்த்தை இழிவான வார்த்தை அன்று என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
"ஈ" என்றால் கொடு என்று பொருள் வருகின்றது ஆக ஈனன் என்றால் பொருள்
கேட்பவன். பார்ப்பனனன் மற்றும் பிராமணன் ஈனனே! ஏன்னா இரந்து(ஈ)
வாழ்வதுதானே அவர்கள் குலத்தொழில்?
ஆக எவ்விதம் நோக்கினும் ஈன பரையன் என்பதை இழிவாக கருத இயலாது. மேலும் ஈ
என்ற வேர்ச்சொல்லை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது பரையர்கள் ஈந்து
வாழ்ந்தவர்கள் என்று கருத இடமுண்டு. இதன் மூலம் பார்ப்பனர்களே பரையர்கள்
தான் என்ற வரலாற்றை நாம் நிறுவ இயலும் இதன் மூலம் நம் இன பெருமை
வெளிப்படும். ஆக "ஈன பரையன்" என்பது இழிவல்ல அதுவே நம் வரலாறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக