புதன், 5 ஏப்ரல், 2017

ராசேந்திர சோழர் வெற்றி சாதனை

aathi tamil aathi1956@gmail.com

24/10/15
பெறுநர்: எனக்கு
Puli Vamsam - புலி வம்சம்
இராசேந்திரன் 1025 ஆம் ஆண்டில், மிகப்பெரிய கடற்படையை அனுப்பி, அதன்மூலம்
அவன் வெற்றி கொண்ட நாடுகளைப் பற்றித் தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள
கல்வெட்டொன்று, இவ்வாறு புகழ்கிறது...
"... அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம விஜயேத்துங்க வந்மனாகிய
கடாரத்தரசனை வாகயம் பொரு கடல் கும்பக் கரியொடு மகப்படுத்துரிமையில்
பிறக்கிய பெருனெதிப் பைருக்கமும் ஆவர்த்தன கனகர் பொர்த்தொழில் வாசலில்
விச்சாதித் தொரணமும் மெய்த்தொளிர்ப் புனைமணிப்புதவமும் கனகமணிக் கதவமும்
நிறைசீர் விசயமும் துறை நீர்ப்பண்ணையும் வன்மலையூரெயிற் பொன் மலையூரும்
ஆழ்கடல்சூழ் மாயிருடிங்கமும்.....
.........
......கருமுரட் கடாரமும் மாப்பொரு தண்டாற் கொண்ட பொப்பர கெஸரிவந்மரான
உடையார் ஸ்ரீ ராசேந்திர சோழதேவர் கங்கைகொண்ட சோழபுரத்துத் தேவர்க்கு
யாண்டு..."
இப்படிப் பொரிக்கப்பட்டுள்ள கல்வெட்டின் பொருள் என்ன தெரியுமா?
"அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை அனுப்பிய அவன், கடாரத்து மன்னன்
சங்கிரம விஜயதுங்க வர்மனையும், புகழ்வாய்ந்த அவனுடைய படையிலிருந்த
யானைகளையும் பிடித்துக் கொண்டான். நேர்மையான வழியில் அவ்வரசன்
சேர்த்திருந்த சொத்துக் குவியலையும் எடுத்துக் கொண்டான். பரந்து
விரிந்திருந்த அவனுடைய நகரமான ஸ்ரீவிஜயாவின் போர்வாயிலில் நின்றிருந்த
வித்யாதர தோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான்.
ஜொலிக்கும் இரத்தினங்கள் பதித்த சிறுவாயிலையும், பெரிய இரத்தினங்களால் ஆன
வாயிலையும் சேர்த்துக் கொண்டான். தீர்த்தப் படித்துறைகளில் நீர்
நிறைந்திருந்த பண்ணை, பாதுகாப்பு அரணாக வலிமையான மலையைப் பெற்றிருந்த
மலையூர், அகழிபோல் ஆழ்கடலால் சூழப்பட்டிருந்த மாயிருடிங்கம், எத்தகைய
போருக்கும அஞ்சா இலங்காசோகா, ஆழ்கடலால் சூழப்பட்ட மாப்பாளம், வலிமையான
சுவரை அரணாகக் கொண்டிருந்த மேவிலிம்பங்கம், வலைப்பந்தூரு என்கிற
விலப்பந்தூர், அறிவியல் புலமை வாய்ந்தவர்களால் புகழப்பட்ட தலைத்தக்கோலம்,
மூர்க்கமான, பெரிய போர்களிலும் நிலைகுலையாத மாடமாலிங்கம், போரினால் வலிமை
கூடிய இளமுரித் தேசம், பூந்தோட்டங்களில் தேன் தேங்கி நின்ற மாநக்கவாரம்,
அத்துடன் ஆழ்கடலால் பாதுகாக்கப் பட்டதும், மிகவும் சக்தி வாய்ந்ததுமான
கடாரம்..."
இப்படி மலாயா தீபகற்பம், சுமத்ரா, நிக்கோபார் தீவுகளிலுள்ள பன்னிரண்டு
இதரத் துறைமுக நகரங்களையும் சோழர் கடற்படை கைப்பற்றிய தகவலும் அந்தக்
கல்வெட்டில் காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக