|
24/10/15
![]() | ![]() ![]() | ||
மனக்கசப்பு கொண்டிருந்திருக்கின்றனர் என்பது பல்லவர் காலத்தில் கதம்ப
பிராமண அரசன் “மயூரசர்மன்”, காஞ்சிபுரம் கடிகைக்கு உயர் கல்வி கற்க
வந்தபோது, பல்லவர் குதிரை வீரன் ஒருவனால் கடிகைக்குள் நுழையவிடாது
தடுத்துவிட்டபொழுது, அப்பிராமண மன்னன், “கடவுளே, இந்தக் கலியுகத்தில்
பிராமணர் சத்திரியர்களுக்கு அடங்கிய நிலையில் இருக்க வேண்டியுள்ளதே!
பிராமணன் தன் குருவின் குடும்பத்துக்கு உரிய பணிவிடை செய்திருந்தாலும்,
வேதங்களின் உறுப்புகளை முறையாகப் படித்திருந் தாலும், அவன் சமயத்தில்
முழுத்துவம் அடைவதற்கு (பல்லவ) அரசனைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்
கிறது. மனவலியை ஏற்படுத்த இதைவிட வேறு என்ன வேண்டியிருக்கிறது?” என்று
தமக்குத் தாமே புலம்பியிருக்கி
றான். இச்செய்தி தாலகுண்டாக் கல்வெட்டினால் புலப்படுகிறது. 10 பல்லவர்,
சத்திரியர் என்பது காசாக்குடிச் செப்பேடு 11 நரசிம்மவர்மனை “சத்திரிய
சூளாமணி” என்பதாலும், திருவெள்ளறை மூன்றாம் நந்திவர்மன் கல்வெட்டினாலும்
12 முதலாம் நரசிம்மப் பல்லவன் தம்மை “சத்திரிய சிம்மன்” என்று அழைத்துக்
கொண்டதாலும் 13 உணரலாம்.
தாலகுண்டா கல்வெட்டு தெரிவிக்கும் முதன்மைச் செய்தி யாதெனில் பிராமண
மன்னர்களும் பிராமணர் களும் சத்திரிய மன்னர்கள்மீது வெளியில் காட்டிக்
கொள்ளாத பகைமை உணர்வைக் கொண்டிருந்தார்கள் என்பதேயாகும். இதுவும் அந்தப்
பரசுராமனின் சத்திரிய மன்னர்கள் அழிப்பின் ஒரு கூறே என்று கருதலாம்.
பரசுராமன் கதை மேற்போக்காகப் பார்க்கையில் ஒரு தொன்மம் போன்று
தோன்றினாலும், பிராமண - சத்திரிய அரசர்களின் பகைமையை எதிரொலிப்ப தாகவே
அதைக் கொள்ளல் வேண்டும்.
கண்டராதித்தன் மேற்கெழுந்தருளி
யது எதற்காக?
பிற்காலச் சோழ மன்னர்களில் முதற் பராந்த கனின் மகன் கண்டராதித்தனை
“மேற்கெழுந்தருளிய தேவர்” என்று உடையார்குடிக் கல்வெட்டு 14 குறிப்பிடு
கிறது. இவர் சோழ நாட்டின், மேற்குப் பகுதிக்கு எதற்காகச் சென்றார்
என்பதில் வரலாற்றாசிரியர்கள் வேறுபட்ட கருத்தைக் கூறியுள்ளனர். இவன்
மேற்றிசை யில் இராட்டிரகூட மன்னரோடு பொருது அதில் இறந்திருக்கலாம் என்பது
ஒரு கருத்து. 15 இம்மன்னன் தல யாத்திரைக்குச் சென்று திரும்பாமை என்பது
பிறிதொரு கருத்து. 16
இவர் காலத்தில் முதன் முதலாகக் “கண்ட ராதித்தப் பெரும் பள்ளி” என்ற புறச்
சமயக் கோயில் ஏற்படுத்தப் பெற்றிருக்கிறது. 17 கண்டராதித்த சோழனின்
இப்புறச் சமயச் சார்பும், இவன் ஒரு சத்திரிய மன்னன் என்ற நிலையும், இவன்,
9ஆம் திருமுறையில் சேர்க்கப் பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவன்
என்பதும், காந்தளூர்ச் சாலையிலிருந்த பரசுராமன் வழிவந்தோரை இவன்மீது
வெறுப்படையச் செய்திருக்கும். அவர்களை அமைதிப்படுத்த இம்மன்னன்
சென்றிருக்கலாம். அப்போது மேற்குத் திசையில் (சேர நாட்டுக் காந்தளூர்ச்
சாலையில்) இம்மன்னன் நயவஞ்சகமாகச் சாகடிக்கப் பட்டிருக்கலாம். ஆதலால்
அவன் மீண்டும் சோழ நாட்டுக்குத் திரும்ப இயலாது போய்விட்டது. இதுதான்
“மேற்கெழுந்தருளிய தேவர்” என்ற மரியாதைச் சொல்லுக்கு உரிய பொருளாக
இருக்கும்.
இம்மன்னன் காந்தளூர்ச் சாலையில் கொல்லப் பெற்ற செய்தி, இவரது தம்பி
மகனாகிய சுந்தரசோழன் ஆட்சியின் இறுதிக் காலத்தில்தான் தெரிய நேர்ந்திருக்
கிறது. சுந்தரசோழனை அவன் காலத்தில் வெளியிடப் பெற்ற அன்பில் செப்பேடு
“சத்திரியர்களில் முதன்மை யானவன்” 19 என்று புகழ்ந்துரைக்கிறது.
சத்திரியர்களின் எதிரியான பரசுராமனின் வழிவந்தோரால் தம் பெரிய தந்தை
சாகடிக்கப்பட்டிருக் கிறான் என்று தெரிந்தவுடன் தம் மூத்த மகன் ஆதித்த
கரிகாலனைக் காந்தளூர்ச்சாலைக்கு அனுப்பி அந் நயவஞ்சகர்களைத் தண்டிக்கத்
தக்க நடவடிக்கையை மேற்கொண்டிருப்ப
ான். அத்திட்டம் தம் செவிகளுக்கு எட்டவே பரசுராமனின் வழிவந்தோரில்,
உடையார்குடி யில் வாழ்ந்துவந்த மேலே குறிப்பிடப்பெற்ற நான்கு
“துரோகிகளும்”, ஆதித்த கரிகாலனைச் சூழ்ச்சி செய்து கொன்றுவிட்டனர்.
சுந்தரசோழனும் மிகுந்த தமிழ்ப்பற்றாளன் என்பதை “வீரசோழியம்” என்னும்
தமிழ் இலக்கண நூல் உரை விரித்துரைத்துள்ளது. 20 தாம் ஒரு சத்திரியன்
என்பதும், தம் தமிழ்ப் பற்றும்தான் சுந்தரசோழனின் உடனடி நடவடிக்கைக்குக்
காரணமாகலாம்.
கொலையாளிகளைக் கண்டறிவதில் சுணக்கம்
ஆதித்த கரிகாலனைக் கொன்ற தீயவர்களைக் கண்டறிவதில் காலச்
சுணக்கமாகியிருக்கும். ஆதலால் தான் உத்தமசோழன் ஆட்சிக் காலத்தில்
அக்கயவர் களைத் தண்டிக்க இயலவில்லை. அவனுக்குப் பின்பு அரசாட்சி ஏற்ற
முதலாம் இராசராசன் தம் ஆட்சியின் தொடக்கக் காலத்திலேயே “அத்துரோகிகள்”
யார் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களது நிலம் மற்றும் அவர்களது
உறவினர்களின் நிலங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விற்று, அரசுக்
கருவூலத்தில் ஒப்படைக்கக் கட்டளையிட்டிருக
்கிறான் 21 இராசராசன் என்பதே சரியான கருத்தாக இருக்க முடியும்.
காந்தளூர்ச் சாலையை முதலில் தாக்கியதன் காரணம்
ஆதலால் தம் இரண்டாம் ஆட்சியாண்டில் அக்கயவர்களுக்குத் தண்டனை
வழங்கிவிட்டு, தம் மூன்றாம் ஆட்சியாண்டிலேயே அக்கொலைக்கு மூலக்காரணியர்கள
ாகக் காந்தளூர்ச் சாலையிலிருந்த பரசுராமன் வழிவந்தோரை வாதத்தில் வென்று
தாம் ஒரு “ராஜஸர்வஞ்ஞன்” 22 என்பதைப் புலப்படுத்தியதோடு, அச்சாலையை
நிலைகுலையச் செய்து, பின்பு தம் பெருந்தன்மையால் மீண்டும் அதைப் பழைய
நிலையிலேயே இயங்கவும் செய்ததைத் தம் முதல் வெற்றியாக வும், மற்ற எல்லா
வெற்றிகளிலும் முதன்மையானதாக வும் கருதியிருக்கிறான். எனவேதான்
அவ்வெற்றியைத் தம் மெய்க்கீர்த்திய
ில் “காந்தளூர்ச்சாலை கலமறுத் தருளி” 23 என்று முதலாவதாகக்
குறிப்பிட்டுக் கொண்டான்.
பரசுராமன் நாடு
திருவாலங்காட்டுச் செப்பேட்டில் 24 முதலாம் இராசராசனுடைய இவ்வெற்றி
“பரசுராமனது நாட்டை வென்றது” என்று குறிப்பிடப்படுக
ிறது. இதேபோன்று இப்பெருவேந்தனின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா மகன்
முதலாம் இராசேந்திரனும் “சோழ நாட்டுக்கு மேற்கே அமைந்திருந்த சேர
நாட்டையும், பல்பழந்தீவுகளையும் வெற்றி கொண்டதோடு, சேரரின் முடியையும்,
மாலை யையும், பரசுராமரால் சாந்திமத்தீவில் வைக்கப் பெற்றிருந்த செம்பொன்
முடியையும் தம் ஐந்தாம் ஆட்சியாண்டில் கவர்ந்து கொண்டான்” என்று
கல்வெட்டுகள் 25 கூறுகின்றன.
திருமுறை இருக்குமிடம் காட்ட மறுத்ததன் கரணியம்
ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகளைத் தண்டித்ததற்கும், தில்லை நடராசர்
கோயிலில் திருமுறை கள் இருக்குமிடத்தைக் காட்ட மறுத்த 26 தில்லை
மூவாயிரவர் செயலுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். ஏனெனில் தில்லை
மூவாயிரவரும் சேர நாட்டைச் சேர்ந்தவர்களேயாவர். 27 அவர்களுக்கும்
பரசுராமனின் வழிவந்தோரான காந்தளூர்ச் சாலை அந்தணர்களுக்கும்
உடையார்குடித் துரோகிகளுக்கும் தொடர்பு இருந் திருக்கலாம்.
திருமுறை ஓத முக்கிய இடம்
ஆதித்த கரிகாலனைப் பிராமணர்கள் கொன்றதன் கரணியத்தாலோ என்னவோ இராசராசன்
தம் நாட்டில் வேதங்கள் ஒலிப்பதற்குப் பகரமாகத் திருமுறை ஓதுவதற்கு 28
மிகுந்த முதன்மை தந்திருக்கிறான். இங்கு மற்றொன்றையும் கருதிப் பார்க்க
வேண்டியுள்ளது.
ஒரேயொரு செப்புப் பட்டயம்
பிற்காலச் சோழர்களில் பெரும் புகழ் படைத்த பேரரசனாக விளங்கிய இராசராசன்
வெளியிட்டதாக ஒரே ஒரு செப்புப் பட்டயம்தான் இந்நாள்வரை கிடைத்
திருக்கிறது. அப்பட்டயமும் “க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டுப் பட்டணக்
கூற்றத்து நாகப்பட்டணத்தில் கடாரத்தரையன் சூளாமணி பன்மனால் அமைக்கப்
பெற்ற புத்தப்பள்ளிக்கு” அளிக்கப் பெற்ற நிலக்கொடை யைக் குறிப்பதாகத்தான்
உள்ளது. 28 பிராமணர்களுக்கு இவன் காலத்தில் நிலக்கொடை வழங்கி வெளியிட்ட
செப்புப் பட்டயம் ஒன்றுகூட இதுவரை கிடைக்காம லிருப்பதும், இவன்
பிராமணர்கள்மீது கொண்டிருந்த வெறுப்பை எதிரொலிப்பதாகவே தெரிகிறது.
இம்மன்னன் தாம் “சத்திரியர்களின் சிகாமணி” 29 என்று பட்டம் சூட்டிக்
கொண்டிருக்கிறான். 30 மேலும் ஒரு வளநாட்டுக்குச் “சத்திரிய சிகாமணி
வளநாடு” என்று பெயரிட்டிருக்கிறான். ஆதலால் தாம் ஒரு “சத்திரியன்” என்று
கூறிப் பெருமைப்பட்டிருக்கிறான். இவையெல்லாம் முதலாம் இராசராசனின்
பரசுராமர் வழிவந்தோர் எதிர்ப்பைப் புலப்படுத்துவதாகத் தோன்று கிறது.
- திரு. நடன காசிநாதன்.
15 நவம்பர் 2014 இல் 11:10 AM ·
தொகுத்தது · பொது
விரும்பாத பக்கம் · மேலும்
நீங்கள், Go Green , மேலும் வேறு 74 பேர்கள் பேரும் இதனை விரும்புகிறீர்கள்.
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
நண்பர்களைக் குறிப்பிடவும்
Aathi Prakash Savetamilpeople
திருமுறை இருக்குமிடம் காட்ட மறுத்ததன் கரணியம் ஆதித்த கரிகாலனைக் கொன்ற
துரோகிகளைத்// இதுதான் நான் கேள்விப்படாதது
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
திருத்து · 42 நிமிடங்களுக்கு முன்
Aathi Prakash Savetamilpeople
இராசராச சோழன் பற்றி சத்தியாசிரியனின் கல்வெட்டு அவன் பிராமணரையும்
குழந்தைகளையும் இளம்பெண்களையும் கொன்றதாகக் குற்றம்சாட்டுகிறது.
பிடித்திருக்கிறது · பதிலளி ·
திருத்து · 17 நிமிடங்களுக்கு முன்
Puli Vamsam - புலி வம்சம்
புதினம் வெறும் புதினம்தானே நண்பரே. ஆனால் புதினத்தைத் தனியாகவும்
தொன்தகவல்கள் தனியாகவுமல்லவே தருகிறேன். புதினத்தைவிடத் தொன் தகவல்கள்
மக்களைச் சென்றடையவேண்டும் என்றுதான் நானும் அவாவுகிறேன் நண்பரே.
மறைந்துகிடக்கும் உண்மைத் தகவல்களை நாம் விவாதத்தின் மூலம்தானே மக்களிடம்
கொண்டு சேர்க்கவியலும்? அதேவேளை, நாமறிந்த, சேகரித்த, ஆய்ந்தறிந்த
தகவல்களையும் மக்களிடம் தெளிவாய்க் கொண்டு சேர்த்தலும் நம் கடமையல்லவா?
தொகுத்தது · பிடித்திருக்கிறது ·
3 · பதிலளி · புகாரளி · 16 நவம்பர் 2014
Puli Vamsam - புலி வம்சம்
நாம் இதுகுறித்து விவாதிக்க விவாதிக்கத்தானே மக்களும் இதுகுறித்து அறிந்துகொள்வர்?
பிடித்திருக்கிறது · 3 · பதிலளி ·
புகாரளி · 16 நவம்பர் 2014
Puli Vamsam - புலி வம்சம்
நண்பர் சந்திரசேகரனாரே, நடனகாசிநாதர் அளித்த கட்டுரையை அப்படியே சிறிதும்
மாற்றாமல்தான் நான் இங்கே அளித்திருக்கிறேனேயொழிய நானாக எதனையும்
செப்பவில்லை. இக்கட்டுரையும் விவாதத்திற்குரி
யது என்பதனை நானும் அறிவேன். நான் இதனை இங்களித்ததன் நோக்கமும் அதுதானே.
உங்களைப் போன்ற இலக்கியப் பாடல்கள், வேதங்கள் போன்றவற்றை ஆய்வோரும்
இப்படியான விவாதங்களில் கலந்து, தாங்கள் கண்டறிந்தவற்றையும் உலகறிய
அளிக்கவேண்டுமென்பதே என் அவா. எல்லோராலும் எல்லாவற்றையும் ஆய்ந்துவிட
முடியாதல்லவா? அதற்காகத்தானே உங்களைப் போன்ற சிலரும் இருக்கின்றனர்!
உங்கள் கருத்தினையும் கண்டறிந்த சான்றுகளையும் இப்படியான விவாதங்களில்
முன்வைப்பதன் மூலமாகத்தானே பல் விடயங்களை மக்களும் அறியவியலும்? மேலும்
தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் நண்பரே.
சுந்தரன், 'தபல்லே ஆலம்', 'நத்தார் வலியார்' ஆகிய இசுலாமிய மதப் பரப்புரை
செய்ய இங்கு வந்திருந்தோருடன் கொண்டிருந்த தொடர்புகளும், குந்தவை,
இராசராசன் போன்றோரும் 'நத்தார் வலியா'ரின் அரவணைப்பில் இருந்த
தகவல்களும், குந்தவை இறுதியில் இசுலாம் மார்க்கத்திற்கு மாறிய தகவலும்கூட
உண்டல்லவா?
தொகுத்தது · பிடிக்கவில்லை · 4 ·
பதிலளி · புகாரளி · 16 நவம்பர் 2014
அனைத்து 8 பதில்களையும் பார்க்கவும்
GI Prabaharan
அருமை
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 16 நவம்பர் 2014
Prabu Krishna
மிகவும் அருமையான பதிவு
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 15 நவம்பர் 2014
கூர்ங்கோட்டவர்
நடனகாசிநாதன் மற்ற ஆய்வாளர்கள் போல் திராவிட மாயையில் வீழ்ந்து
பிராமணர்களுக்கு எதிராக எழுதியிருக்கிறார். பரசுராமர் கதையை எல்லாம்
இகாலத்தில் நம்புபவரா நீங்கள்? வடுகர்கள் ஆகட்டும். பிராமணர்கள் ஆகட்டும்
பெண்வழியில் தங்களின் ஆளுமையை நாட்ட முயல்வார்கள். அதன் விளைவு தான்
பெண்வழி அநாபயன் குலோத்துங்கன் ஆனதும். மதுரை நாயக்கன் ஈழத்தில் கண்டி
நாயக்கே ஆனதும். அதுக்கு பிராமணர்கள் துணை போவார்கள். இது இராஜராஜன்
காலத்தில் இருந்தே தொடர்ந்திருக்கலாம்.
இராஜராஜன் காலத்தில் பெண்வழி மரபினரை பிராமணர்களாலும் சாளுக்கியராலும்
ஏற்படுத்த முடியாமல் போய்விட்டாலும் அதிராஜேந்திரன் காலத்தில்
நடந்தேறிவிட்டது. திராவிடர்கள் எனப்படும் பிராமணர்களும் குலோத்துஙக்ன்
காலத்துக்குப் பிறகுதான் பலம்பெற்றார்கள். தமிழ் சோழர் காலம் வரை
பிரம்மாதிராயர் எனப்படும் பிராமணர்களுக்கும் தமிழ் பார்ப்பணர்களான
மறையர், சான்றான், வள்ளுவர் போன்றவர்களுக்கு சமமான உரிமைகள் தரப்பட்டன.
ஆனால் குலோத்துங்கன் காலத்தில் தான் அவ்வளவு காலம் ஒற்றுமையாய் இருந்த
வலங்கை இடங்கை சமூகங்கள் தடாலென அடித்துக்கொண்டன. சமயப்பூசல்கள் ஏராளம்.
சைவ மதம் ஆதரித்த சாளுக்கியச் சோழர் வெறிபிடித்தவர்கள் ஆனார்கள்.
திராவிடர் என்ற பிராமணர்களுக்கு தமிழ் பார்ப்பணர்களின் பதவிகள் உரிமைகள்
புடுங்கித் தரப்பட்டன. மறையர், வள்ளுவர், சான்றொன் இவர்களால்
புறக்கணிக்கப்பட்டனர்.ஈழம் சோழர் கையில் இருந்து போனது போனது தான். இது
எல்லாம் பெண்வ்ழி மரபை தமிழ்கத்தில் நிறுவிவிட வேண்டும் என்ற துணிவில்
தான். ஆனால் தமிழகம் தப்பித்துக்கொண்டது. பாண்டியன் பேரரசனாகி
சாளுக்கியச் சோழரை அடித்து நொறுக்கினான்.
சோழர்களில் குலோத்துங்கனிடம் இருந்து தப்பியவர்கள் கொங்குச்சோழரோடு கலந்துவிட்டனர்.
இணையத்திலும் தொட்டதுக்கெல்லாம் பெண்ணியம் பேசும் குழு ஒன்றூள்ளது. அது
இவர்களின் தொடர்ச்சி தான். அதில் ஒருவர் தான் சந்திரசேகர் ஆறுமுகம் என
ஐயமாக உள்ளது. ஆய்வாளர்கள் வட்டத்திலும் இவர்கள் புகுந்து குழப்பி
வருகிறார்கள். இவர்களின் உளவியல் பற்றி கீழுள்ள பதிவில் உள்ளது.
__________________________
மூவேந்தர் ஆண் வழி மரபினரே.
posts/319818331529839

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக