|
23/8/15
| |||
|
தமிழன் இழந்த மண் என்ற புத்தகத்தில் இருந்து மாநில பிரிவினையின் போது
சென்னையின்போராட்ட வரலாறு
1953 -ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை
வலியுறுத்தி பொட்டி ராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார்.இதன்
விளைவாக ஆந்திராவில் பெரும் கலவரங்கள் நடந்தன.அதுவரை மொழிவாரி
மாநிலப்பிரிவினை
யை ஏற்ப்பதற்கு மறுத்தா பிரதமர் ஜவஹர் லால் நேரு நாடாளுமன்றத்தில்
2.10.53 -ல் ஆந்திர மாநிலம் தனியாக பிரிக்கப்படும் என்ற வாக்குறுதியை
அளித்தார்.இந்த வாக்குறுதியை அளிப்பதற்கு முன்னால். சென்னை மாநிலத்தின்
முதல்மைச்சராக இருந்த இராஜாஜியைக் கூட அவர் ஆலோசிக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.தகராறுக்குரி ய சித்தூர் மாவட்டத்தையிம் சேர்த்து
ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்ற நேருவின் அறிவிப்பு தமிழர்களுக்கு
அதிர்ச்சியை அளித்தது.இது வீணான தகராறுகளுக்கு வழி வகுத்தது.ஆந்திரத்
தலைவர் டி.பிரகாசம் சென்னை நகரம் பற்றி பின்வரும் அறிக்கையை
வெளியிட்டார்.
சென்னை நகரம் முழுவதையிம் ஆந்திராவுடன் சேர்க்காவிடில் கூவத்தை நடுவே
வைத்து தென் சென்னையை தமிழகத்திற்கும் வடசென்னை ஆந்திரத்திற்கும் பங்கு
போடப்பட வேண்டும். அதுவும் இயலாது என்றால் சென்னை நகரை. ஆந்திரம் தமிழகம்
ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக ஆக்க வேண்டும். அதுவும்
இயலாது என்றால் சென்னை நகரை மத்திய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக
மாற்றவேண்டும்
ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டியின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டு
டி.பிரகாசம் விடுத்த அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
சென்னை நகரம்
பிரதமர் நேரு. ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என உறுதியளித்தது வெளியிட்ட
அறிக்கையில் அம்மாநிலத்தின் தலைநகரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை
தங்களுக்கு சென்னை நகரம் கிடைக்கவில்லை என்றால் அது தமிழர்களுக்கும்
கிடைக்கக் கூடாது என்பது ஆந்திரரின் மனோபாவமாக இருந்தது.
ஆந்திர மாநிலப் பிரிவினை சம்மந்தமாக பிரச்சனையை ஆராய்ந்து பரிந்துரை தரர
நியமிக்கப்பட்ட நீதிபதி வாஞ்சு சென்னைக்கு வந்தபோது ஆந்திர மாகாண
காங்கிரஸ் தலைவர்கள் சென்னையில் முகாமிட்டு சென்னை நகரம் ஆந்திரருக்கே
உரியது என கடும் பிரச்சாரம் செய்தனர். அவர்களுடன் சென்னை நகரில் உள்ள
தங்கம் -வெள்ளி நகை வணிகர்களான ஆயிர வைசியர்களும்
வடஇந்தியர்களான.குஜராத்திகளும். மார்வாடிகளும் ஆந்திராவுக்கு ஆதரவாக
வாஞ்சுவிடம் மனுக்கள் அளித்தனர். அதாவது தமிழர்களுக்கு எதிராக
ஆந்திரர்களுடன் குஜராத்திகளும்.மார்வாடிகளும் சேர்ந்தனர் என்பது
அவர்களின் தமிழர் விரோதபோக்குகளுக்குச் சான்றாக அமைந்தது.
சென்னை தமிழர்களுக்கு உரியது என்பதை விளக்கும் வகையில் இருநூறுக்கு
மேற்ப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கையெத்திட்ட அறிக்கையை தமிழரசுகழகத்
தலைவர் ம.பொ.சி. சென்னை மாநகரமேயர் த.செங்கவராயன் ஆகியோர் பிரதமர்
நேருவுக்கு அனுப்பினார்கள் .தமிழநாட்டைச் சேர்ந்த 32 நாடாளுமன்ற
உறுப்பினர்களும்சென்னை தமிழகத்திற்கே உரியது என கூட்டறிக்கையை
டில்லியிலிருந்து வெளியிட்டனர் .சென்னை மாநில சட்ட மேலவையில் 9.12.52 -ல்
ம.பொ.சி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது முதல்மைச்சர் ராஜாஜி
பின்வருமாறு திட்டவட்டமாக அறிவித்தார்.
சென்னை நகரம் தமிழ்நாட்டுடன் சேர்ந்த பகுதி.சென்னை நகர மக்களும்.
அந்நகருக்கு வடக்கே வெகுதூரம் வரை வசிப்பவர்களும் .தமிழர்களே ஆகவே சென்னை
நகரத்தைத் தமிழநாட்டிலிருந்து பிரித்துத் தனி நிர்வாகத்தின் கிழ்
வைக்கமுடியாது.சென்னையைத் தனி நிர்வாகத்தின் கிழ் வைக்கமுடியாது சென்னையை
தனி ஆந்திர ராஜ்யத்தின் தலைநகராகவும் செய்ய முடியாது. சென்னை நகர
நிர்வாகம் பற்றிப் பேசவும் நிபந்தனைகள் விதிக்கவும் ஆந்திரர்களுக்கு
எந்தவிதமானா உரிமையிம் கிடையாது. சென்னை நகரத்தின் ஜனத் தொகையில்
நூற்றுக்கு அறுபத்தெட்டு பேர் தமிழர்கள் .பதினான்கு சதவிகிதம் பேர்தாற்
தெலுங்கர்கள். சென்னை நகரம் பற்றிய கோரிக்கையையிம் அதன் எதிர்காலம்
பற்றியிம் நிபந்தனைகளையிம். கைவிடும் பட்சத்தில் தனி ஆந்திர அரசை நிறுவ
ஆந்திர நன்பர்களுடன் சேர்ந்து நானும் பாடுபடத் தயார்.
நீதிபதி வாஞ்சுவிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை நகரம்
தமிழருக்கே உரியது என வலியுறுத்தி ஒரு மனு கொடுக்கப்பட்டது
சென்னை மேயர் த.செங்கல்வராயன்
.ம.பொ.சி ஆகியோர் முன் முயற்சி எடுத்து 13.2.53 அன்று அனைத்துக் கட்சித்
தலைவர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்கள்.
சென்னை நகரம் தமிழருக்கே உரியது என்பதை வலியுறுத்தும் இக்கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட
து. 16.3.53 -ல் சென்னை கடற்கரையில் கட்சி சார்பற்ற வகையில் ஒரு பொதுக்
கூட்டத்தை மேயர் செங்கல்வராயன் கூட்டினார் இக்கூட்டத்தில் பெரியார்.
தமிழ்நாடு காங்கிரஸ் துனைதலைவர் எல்.ஏஸ்.கரையாளர
்.மீனாம்பாள் சிவராஜ்.எஸ்.முத
்தையா. எம்.பக்தவச்சலம்
.ம.பொ.சிவஞானம் ஆகியோர் பேசினார்கள்.இக்கூட்டத்தில் சென்னை நகரம்
தமிழருக்கே உரியது என்ற தீர்மானம் வலியுறுத்தப்பட்டது
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராசர் சென்னை நகரில் ஆந்திரருக்கு
எந்தவிதமான பங்கு தந்தாலும் சரி இதுவரை கண்டிராத அளவிற்குப் பெரும்
கிளர்ச்சி எழும் என்று எச்சரித்தார்
நீதிபதி வாஞ்சு தனது பரிந்துரையில் ஆந்திராவின் தலைநகராக இடைக்காலாத்தில்
சென்னையே இருக்கலாம் எனக் கூறியிள்ளார் என்ற ஒரு செய்தி மெயில்
பத்திரிகையில் வெளியிடப்பட்டது. இதற்கு பிறகு பிரதமர் நேருவை சந்தித்துப்
பேசுவதற்காக முதல்மைச்சர் ராஜாஜி டெல்லி சென்றார் .நேருவைச் சந்தித்த
பிறகு ராஜாஜி பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்
சென்னைப் பட்டினத்தை ஆந்திரரிடம் தருவது என மத்திய அரசு முடிவு
எடுக்குமானால் அதை அமுல் படுத்துவதற்கு ஒத்தழைப்பு தரும் சக்தி எனக்கு
இல்லை.இந்த நிலையில் வேறு முதல்மைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்
என் பிரதமரிடம் கூறிவிட்டேன் என பத்திரிக்கையாளர்களிடம் ராஜாஜி கூறினார்
டில்லியிலிருந்து சென்னை திரும்பிய ராஜாஜி, ம.பொ.சி அவர்களை அழைத்து
நிலைமையைத் தெளிவாக்கினார். சென்னை நகரை பொதுத் தலைநகராகக்க நேரு முடிவு
செய்துவிட்டார் என்பதை அவர் தெரிவித்து அவ்வாறு நேருமானால் தான்
முதலமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக கூறினார்
செட்டிநாட்டரசர் ராஜா சர் எம்.ஏ.முத்தையா செட்டியார்.ம.பொ
.சி ஆகியோர் கலந்து பேசி சென்னை நகரின் மீது தமிழர்களுக்குள்ள உரிமையை
வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்கு தந்திகள்
அனுப்பும் இயக்கத்தை நடத்த முடிவுசெய்தனார் .இதற்கிணங்க நகரசபைகள்.வணிக
நிறுவனங்கள் .காங்கிரஸ் குழுக்கள். தமிழ் இலக்கிய மன்றங்கள் ஆகியவற்றின்
சார்பில் சுமார் 2000 -க்கும் மேற்ப்பட்ட தந்திகள் சாஸ்திரிக்கு
அனுப்பிவைக்கப்படடன.
சாஸ்திரியை காமராசர் சந்தித்த போது அவர் தமிழ்நாட்டிலிருந்து வந்த
ஆயிரக்கணக்கான தந்திகள் பற்றி அவரிடம் குறிப்பிட்டார்.சென்னை நகரம்
பற்றிய மத்திய அரசின் முடிவினை மறு பரிசீலனை செய்வதாகவும் உறுதி கூறினார்
சென்னை மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் மேயர் செங்கல்வராயன் தலைமையில்
கூட்டப்பட்டது .இக்கூட்டத்தில் சென்னை நகரை இரண்டாக பிரிப்பதோ ஆந்திரா
-தமிழக அரசுகளின் பொதுத் தலைநகரமாக ஆக்குவதோ. மத்திய ஆட்சிக்கு உட்பட்ட
பகுதியாகச் செய்வததோ.ஆந்திராவின் இடைக்காலத் தலைநகராக அனுமதிப்பதோ கூடாது
என்ற தீர்மானத்தை ம.பொ.சி முன்மொழிந்தார் .முன்னால் மேயர்
எம்.ராதாகிருஷ்ண பிள்ளை வழிமொழிந்தார்.இதற்கு ஆதரவாக 52 வாக்குகளும்
எதிராக மூன்று வாக்குககளும் போடப்பட்ன. சென்னை மாநகராட்சியில்
நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் குடியரசுத் தலைவர்.பிரதமர் உள்துறை
அமைச்சர் .சென்னை மாநில முதலமைச்சர் ஆகியோருக்கு உடனடியாக
அனுப்பிவைக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தை பிரதமர் நேருவின் கண்களை
திறந்தது.சென்னை நகர மக்களின் பிரதிநிதித்துவ ஸ்தாபனம் மிகப்
பெருபான்னையானா ஆதரவோடு நிறைவேற்றியுள்ள இந்த தீர்மானத்தைப் புறக்கணிக்க
இயலாது என பிரதமர் நேரு டி.டி.கிருஷ்ணமாச்சாரியிடம் கூறினார்
25.3.53 அன்று நாடாளுமன்றம் ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரபூர்வமான
பிரகடனம் ஒன்றை பிரதமர் நேரு வெளியிட்டார்.அதில் ஆந்திராவின் தலைநகரம்
ஆந்திர எல்லைக்குள்ளேயே இருக்கும் என அறிவித்தார்.பிரதமர் நேருவின் இந்த
பிரகடனம் தமிழர்களின் கவலையை போக்கி மகிழ்ச்சியை அளித்தது.அவர் முதலில்
அறிவித்தது போல் தமிழகத்திற்கும் ஆந்திராவிற்க்கும் பொதுபொதுத்தலைநகராக
சென்னை அறிவிக்கப்பட்டு
யிருந்தால் இன்றளவும் தீராத பிரச்சனையாக மாறி தலைவலி
கொடுத்துயிருக்கும்.பஞ்சாப். ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுத்
தலைநகரமாக சண்டிகார் அறிவிக்கப்பட்டதன் விளைவாக இன்றளவும் அந்தப்
பிரச்சனையாக விளங்கி வருகிறது.அதைப் போல சென்னை நகர பிரச்கனையிம்
ஆகியிருக்கும்.
https://m.facebook.com/story. php?story_fbid= 470257423135184&id= 100004527914629&_rdr
சென்னையின்போராட்ட வரலாறு
1953 -ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை
வலியுறுத்தி பொட்டி ராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார்.இதன்
விளைவாக ஆந்திராவில் பெரும் கலவரங்கள் நடந்தன.அதுவரை மொழிவாரி
மாநிலப்பிரிவினை
யை ஏற்ப்பதற்கு மறுத்தா பிரதமர் ஜவஹர் லால் நேரு நாடாளுமன்றத்தில்
2.10.53 -ல் ஆந்திர மாநிலம் தனியாக பிரிக்கப்படும் என்ற வாக்குறுதியை
அளித்தார்.இந்த வாக்குறுதியை அளிப்பதற்கு முன்னால். சென்னை மாநிலத்தின்
முதல்மைச்சராக இருந்த இராஜாஜியைக் கூட அவர் ஆலோசிக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.தகராறுக்குரி

https://m.facebook.com/story.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக