புதன், 22 மார்ச், 2017

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் evm நாடுகள் தவறு செய்த சான்று

aathi tamil aathi1956@gmail.com

27/5/16
பெறுநர்: எனக்கு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரமும் - மக்களின் எதிர்காலமும்
உலகில் இதுவரை வளர்ந்த நாடுகள் பல மின்னணு வாக்குபதிவு எந்திரத்தை
முன்னோட்டமாகப் பயன்படுத்தி பின்னர் அதனை அறவே கைவிட்டுவிட்டனர். காரணம்
அதில் அவர்களுக்கு வாக்கு எண்ணிகை என்பதில் ஏற்பட்ட சிக்கல் அல்லது
குழப்பம் அல்லது நம்பகத் தன்மை குறித்த விவாதமே. மேலும் இது போன்ற
எந்திரமயமான வாக்கு எண்ணிக்கையை அவர்கள் ஏற்கவே இல்லை. ஆகவே சோதனை செய்து
பின்னர் அந்த வழக்கத்தை அடியோடு நிறுத்தியும் விட்டனர். தற்போதும் கூட
உலகம் முழுக்க சோதனை முயற்சியில் முன்னோட்டமாக மின்னணு வாக்கு எந்திரத்தை
பயன்படுத்தும் நாடுகள் வெறும் இருபது மட்டுமே. அதிலும் ஆசியாவில் ஒற்றை
இந்தியா என்று சொல்லிக்கொள்ளும் பல்வேறு தேசிய இனங்களின்
அடையாளங்களையும், மொழிவழி தேசியத்தின் தனித்த அடையாளத்தைக் கொண்ட நமது
இந்தியாவும், பின்னர் மூன்றாம் உலக நாடுகளைக் கொண்ட தென் அமெரிக்க
லத்தின் நாடுகளும் தான். இங்கே எல்லாம் இனக்குழு சிக்கல்கள் உள்ள
பகுதிகளே என்பதை நாம் நன்கு உணர வேண்டும். மேலும் பிரஞ்சு நாட்டிலும்
இனக்குழு சிக்கல் நீடிக்கின்றது. ஐரோப்பாவில் ஒருங்கிணைந்த பிரிட்டன்,
இத்தாலி ஆகிய நாடுகள் கைவிட்டுவிட்டன. அதி உன்னதமாகவே தொழில் நுட்பத்தில்
முன்னேறிய செர்மனியும் இந்த முயற்சிக்கே போகவில்லை.
இது இப்படியிருக்க கிழக்கே ஆஸ்திரேலியா, மங்கோலியா போன்ற நாடுகள் மின்னணு
வாக்குப்பதிவினை சோதனை முயற்சிக்குப் பின்னர் அறவே அகைவிட்டுவிட்டனர்.
தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக மொத்தம் இருபது நாடுகள் மேற்படி
எந்திரத்தைப் பயன்படுத்துவதும், தங்களின் நாட்டின் அனைத்துப்பகுதிகளும்
இல்லை என்பதை உணர வேண்டும். அதாவது இந்தியா, லத்தின் அமெரிக்க நாடுகள்
மட்டுமே விடாபிடியாக முழுமையாக இதனைப் பயன்படுத்தி வருகின்றது.
இதற்கு முதன்மைக் காரணம் இனக்குழுக்களின் சிக்கல்கள் உள்ளவையே முதன்மைக்
காரணம். வாக்கு எண்ணிக்கை என்பது நம்பகம் அற்றவையாகவே அனைத்து நாடுகளும்
என்னிவருகின்றது. அதாவது வாக்கு என்பது மனிதர்களின் உணர்வுப்பதிவு. அதனை
எந்திரத்தின் மின்னணு என்னிம கட்டளைகளை வைத்து கணித்துவிட முடியாது
என்பதே. ஆனால் இந்தியாவில் இந்த வகையான புகார்கள் பதிவாகி உள்ள நிலையில்
( சான்று தென்னிந்தியாவின் சிவகங்கை மாவட்டம் பாராளுமன்றத் தேர்தலில்
வாக்கு எண்ணிக்கையினை மூன்று முறைக்கும் மேல் மறு வாக்கு எண்ணிக்கை
செய்து முப்பதாயிரம் வாக்குகள் பின் தங்கிய ஒரு வேட்பாளர் மஊன்று நாட்கள்
மறு எண்ணிக்கைக்கு பின்னர் ( மின்னணு வாக்கு எண்ணிக்கை என்பதை மறக்க
வேண்டாம் ) வெறும் அற்ப சொற்பமாக மூவாயிரம் கூடுதல் பெற்று
வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட விந்தை உலகிலேயே இந்தத் தொகுதியில்
மட்டுமே ) இந்த நிகழ்வு நீதிமன்றத்திற்கும் சென்று பின்னர் தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் அரசியல் வல்லாண்மை என்ற காரணமே.
ஆகவே நாளுக்கு நாள் மக்களின் உணர்வுகளை டிஜிட்டல் என்ற முறையில்
முன்வடிவம் செய்யப்படுவதையோ, அல்லது அது போன்றதொரு வாய்ப்பினையோ ஜன
நாயகத்தில் இடம் கொடுக்கக் கூடாது. மாறாக இந்தியா போன்ற நாடுகளில் மற்ற
நாடுகளைப் போலவே வாக்குச் சீட்டுப் பதிவினை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு
வரவேண்டும் என்பதே தற்போதைய நிகழ்வுகளின் படிப்பினை என்பதை நாம் மறத்தல்
கூடாது. இல்லையெனில் ஒரு உயர்மட்ட அரசியல் நிலைக்குழுவின்
விருப்பத்திற்கு பல்வேறு உலக நாடுகளில் உள்ள பொது மக்கள் பலியாக
நேரிடும். இது மனிதர்களின் நலன் சார்ந்த சிந்தனை. நன்றி.
இணைக்கப்பட்டுள்ள படங்கள் உலகின் மின்னணு வாக்குப்பதிவின் தற்போதைய
நிலையினை தெளிவுபடுத்தும

-நெற்குப்பை காசிவிசுவநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக