|
29/12/16
| |||
Pasumai Shahul , 5 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
இயற்கை விவசாயம் நட்டமென யார் சொன்னது.....?
திட்டமிட்டு செய்யப்படும் இயற்கை விவசாயம் என்றுமே நட்டமடைந்தது
கிடையாது. அந்த திட்டமிடுதலை பூமி ஆர்கானிக் வளர்மதி அம்மாவிடமிருந்த
ு கற்றுக்கொள்ளலாம்.
நாட்டுமாடுகள்,ஆடுகள்,கோழிகள் என தோட்டத்தில் தனி தனி பண்ணை
அமைத்திருக்கிறார். ஆடு கோழிகள் சுதந்திரமாக மேய்ந்து வளருகின்றது,
ஆடு,மாடு,கோழி இவற்றின் கழிவுகளை தோட்டத்துக்கு உரமாக
பயன்படுத்துகிறார்கள். தோட்டத்தில் விளையும் புற்களும்,தாவர கழிவுகளும்
இவற்றுக்கு இரையாகிறது.
ஆர்கானிக்கை சாப்பிட்டு ஆர்கானிக்காக புழுக்கையும்,சா
ணமும் இடுகிறது இந்த ஜீவராசிகள்,
சாணம் உரமாக.... உரம் பயிராக....பயிர் உணவாக... உணவு சாணமாக..... சாணம் உரமாக....
இப்படியான சுழற்சி முறைதான் பூமி பண்ணையின் தனித்துவம். வெற்றியும் கூட.....
இங்கு என்னை ஒரு விஷயம் மிகவும் கவர்ந்தது. ஆம் ..... மாட்டு கொட்டிலில்
இருந்து வழிந்தோடும் கோமியம் அங்குள்ள ஒரு தொட்டியில் சேருகிறது. அந்த
கோமியத்தை மின் மோட்டார் மூலம் பண்ணைகுட்டை அளவிற்கு பெரியதாய் இருக்கும்
தண்ணீர் தொட்டிக்கு கொண்டு செல்லபடுகிறது.
தொட்டியில் சேரும் கோமியம் நீருடன் கலந்துவிடுகிறது. இந்த கோமியம் கலந்த
நீர் மடைகளின் வழியே தோட்டத்திற்குள் ஒவ்வொரு பாத்திகளுக்குள்ளும்
பாய்கிறது.
பூமி இயற்கை தோட்டத்தின் வனப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் இதுவும் ஒரு காரணம்.
நாட்டு காய்கறிகள்,கீரைகள், பழங்கள் என ஒருபக்கம் விளைச்சல்
கொடுக்க....., மறுபக்கம் பசுக்களிடமிருந்து பெறப்படும் ஆர்கானிக் பாலும்
அரை லிட்டர் பாக்கட்டாக கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.
பூமி ஆர்கானிக் தோட்ட காய்கறியும், பாலும் எப்போதும் தனி சுவைதான்.
செவ்வாய் கிழமைதோரும் எனது நாகர்கோவில் பசுமை அங்காடிக்கு காலை ஏழு
மணிக்கு வந்து சேரும் பூமி தோட்டத்து காய்கறிக்காகவும
்,கீரைகளுக்காகவும், பாலுக்காகவும் காலை ஆறுமணிக்கே வந்து காத்து
நிற்கும் என் அன்பான வாடிக்கையாளர்களே இதற்கு சாட்சி..!
ரசாயனத்தை கொட்டி விவசாயம் செய்து அதிக விளைச்சலை பெற்று அதற்கு சரியான
விலை கிடைக்காமல் நட்டப்பட்டு போகும் அக்கிரி கலாச்சாரத்திலிருந்து
விடுபட்டு....
குறைவான விளைச்சலாக இருந்தாலும் நிறைவான விலை கிடைக்கும் இயற்கை
விவசாயத்துக்கு வாருங்கள் விவசாயிகளே....!!
உங்கள் விளைபொருட்களை இடைதரகரே இல்லாமல் நேரடியாக நல்ல விலைகொடுத்து
வாங்கிகொள்ள என்னைப்போன்ற நூற்றுக்கணக்கான இயற்கை அங்காடிகள்
இருக்கின்றது.
விஷத்தை கொட்டும் விவசாயத்திலிருந்து வெளியேறி இயற்கையின் பக்கம்
வாருங்கள் எம் விவசாய தோழர்களே....!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக