ஞாயிறு, 19 மார்ச், 2017

ஓணம் தமிழர் பண்டிகை மலையாளி திருவிழா திருவோணம்

aathi tamil aathi1956@gmail.com

11/12/16
பெறுநர்: எனக்கு
Ajikumar Navaratnam
ஐப்பசி ஓணம்!! இதுவும் தமிழர் விழாவா???!!

Rajasubramanian Sundaram Muthiah
கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார் 590
மாயோன் மேய ஓண நல் நாள்,- this is மதுரைக் காஞ்சி

Rajasubramanian Sundaram Muthiah
மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ""ஓண விழாவும்"" அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” தேவாரம் 503, திருமறை 2

Rajasubramanian Sundaram Muthiah
இன்னொரு அதிர்ச்சியான தகவல் ஓணம் தமிழ்நாட்டை விட ஈழத்தமிழருக்கு அதிக
நெருக்கம் கொண்டது. நேரம் வரும்போது சான்றுகளுடன் வெளிப்படுத்துகி
றேன

விஷ்ணு தாசன் , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — சனாதன வாதி மற்றும்
45 பேர் உடன்.
# சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் -5
திருவோணம் தமிழர் திருநாளே!!!

திருவோணம் தமிழர் திருநாளே!!!
கேரளாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும்
# ஆவணி மாதம் அஸ்த(ஹஸ்த) நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை
பத்து நாள்களும் நடைபெறுகிறது. இன்று கேரளாவில் மட்டும் மிகச் சிறப்பாக
நடைபெறும் இவ்வோணம் பண்டிகை, பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டில்
குறிப்பாக, மதுரையில் நடைபெற்றுள்ள செய்தியை சங்க இலக்கியம் சுட்டுகிறது.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையை ஆண்டபோது,
அங்கு திருவோணத் திருவிழா நடைபெற்ற செய்தியை மாங்குடி மருதனார் மதுரைக்
காஞ்சியில் விரிவாகப் பாடியுள்ளார்.
ஆவணி மாதம் நிறைமதி நன்னாளான திருவோணத்தன்று திருமால் பிறந்ததாகவும்,
அதனை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி விழாக் கொண்டாடியதாகவும்
குறிப்பிடுகிறார். இதனை,
""கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நல் நாள்,
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை,
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப் படு நெற்றி,
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர'' (ம.கா.590-599)
என்ற மதுரைக்காஞ்சி பாடலடிகள் மெய்பிக்கின்றன. ஓண நன்னாளன்று காய்கறி,
கனி முதலிய உணவுப் பொருள்களை விருந்தினருக்குக் கொடுத்து
மகிழ்ந்திருந்தனர். வீரர்கள் "சேரிப்போர்' என்னும் வீர விளையாட்டை
நிகழ்த்தினர் என்றும், வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பசுக்களைப் பாண்டிய
மன்னன் வழங்கினான் என்றும் மதுரையில் நடைபெற்ற ஓணம் பண்டிகையை
விளக்கியுள்ளார் மாங்குடி
மருதனார்.
இறையனார் களவியல் உரைக்காரர் நக்கீரர், தமிழ்நாட்டில் நடைபெற்ற
திருவிழாக்களைக் கூறுமிடத்து ""மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப் பங்குனி
உத்திரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும்'' என்று குறிப்பிடுகிறார்.
இவர் குறிப்பிடும் மதுரை ஆவணி அவிட்டம், திருவோணத் திருவிழாவையே
குறிப்பதாக மு.இராகவையங்கார் கருதுகிறார்.
தமிழ் நாட்டில் நடைபெற்ற ஓணம் பண்டிகையைப் பெரியாழ்வாரும்
திருஞானசம்பந்தரும் குறிப்பிடுகிறார்கள். திருமாலுக்கு உரிய நாள்
திருவோணம் என்ற போதிலும், சென்னை - மயிலாப்பூர் கபாலீசுவரர்
திருக்கோயிலில் திருவோண விழா நடைபெற்ற செய்தியை திருஞானசம்பந்தர்
குறிப்பிடுகிறார்.
தமிழகத்தில் பண்டைக் காலத்தில் சிறப்பாக நடைபெற்ற இந்த ஓணம் பண்டிகை,
பின்னர் ஏனோ வழக்கொழிந்து போயிற்று. ஆனால், இன்று ஓணம் பண்டிகை கேரளா
முழுவதும் விழாக் கோலம் பூண்டு இன்பத் திருவிழாவாகக் கொண்டாடப்பெற்று
வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக