செவ்வாய், 21 மார்ச், 2017

பாலாறு ஆந்திரா அடாவடி தெலுங்கு நாயுடு நதிநீர்

aathi tamil aathi1956@gmail.com

3/7/16
பெறுநர்: எனக்கு
Kannan Mahalingam
பாலாற்றில் தடுப்பணை - ஆந்திரா
கர்நாடகா மாநிலம் கோலார் நந்திதுர்க்கத்தில் உற்பத்தியாகும் பாலாறு
கர்நாடகா, சீமந்திரா வழியாக தமிழகத்தில் பாய்ந்து சீரங்கப்
பட்டினத்தில் கடலில் கலக்கிறது.
பாலாறு பாய்ந்து வரும் வழியில் தடுப்பணைகளை கர்நாடகா, சீமந்திரா இரண்டு
அரசுகளும் கட்டி தமிழகத்துக்குள் தண்ணீர் வராமல் தடுக்கின்றனர்.
தமிழகத்தின் அனுமதி இல்லாமல் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டக்கூடாது என
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக – சீமாந்திரா எல்லையான வேலூர் மாவட்டம், வாணியம்பாடி
அடுத்த பில்லூர் பகுதியில் 5 அடி உயர தடுப்பணையை 10 அடி உயரமாக மாற்றி
கட்டும் பணியில் ஆந்திரா பொதுப்பணித்துறை ஈடுப்பட்டுள்ளது.
இந்த தகவல் தமிழக விவசாயிகளை எட்ட அவர்கள் தடுப்பணையை உயர்த்தி
கட்டக்கூடாது என வாணியம்பாடி – நாட்றாம்பள்ளி சாலையில் சாலை மறியல்
ஈடுப்பட்டுள்ளனர். அது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் 320 கோடி ரூபாய் செலவில் அணை கட்ட
சீமாந்திரா அரசாங்கம் முடிவு செய்து பணிகளை தொடங்கின. தமிழகம் கடுமையாக
எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் செல்ல அணை கட்டுமான பணி நிறுத்தப்பட்டன.
அதுவும் நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் நீதிமன்ற இடைக்கால தடைகளை
மீறும் வகையில் தடுப்பணை கட்டும் பணியை சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு
நாயுடு தொடங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக