|
19/9/16
| |||
Kathir Nilavan
'தமிழ்ப் பெரியார்' திரு.வி.க. நினைவு நாள்
17.9.1953
தமிழ்நாட்டில் 'ஆங்கிலச் சனியனை' திராவிட இயக்கங்கள் தூக்கிப் பிடித்ததன்
மூலமாக தமிழ் மொழியும், தமிழரது ஒழுக்க நிலையும் கேள்விக் குறியாகியாகி
விட்டது. இது குறித்து மிக வருத்தத்தோடு தொண்ணூற்றி ஐந்து ஆண்டுகளுக்கு
முன்பே 'தேசபக்தன்' (9.2.1918) ஏட்டில் திரு.வி.க. எழுதியுள்ளதை கீழே
தருகின்றோம்.
உலகத்திலேயுள்ள மொழிகள் பலவற்றுள்ளுந் தமிழ் மிகத் தொன்மையானது.
பிறமொழிகளின் உதவியின்றி இயங்கும் ஆற்றலுடையது. உலகம் முழுவதும்
அநாகரிகத்தில் அமிழ்ந்து கிடந்தபோது தமிழுலகம் நாகரிகத்திலே செழுமை
பெற்றிருந்தது. இன்றைக்குச் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்
புலவர்களால் யாக்கப்பட்ட தொல்காப்பியம், புறநானூறு முதலிய நூல்கள் தமிழ்
மக்களின் நாகரிகத்தையும் பெருமையயும் எடுத்து விளக்குங் கருவிகளாக
இருக்கின்றன. பண்டைக்காலத் தமிழ் மன்னர்களுக்கு ஐம்பெருங்குழு,
எண்பேராயம் என்னும் இரு கூட்டம் துணை செய்து வந்தன. ஜனங்களால்
தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாறாக அரசர்கள் நடந்ததில்லை.
குடிமக்கள் உள்ளமும் அரசன் உள்ளமும் அன்பால் ஒன்றுபட்டிருந்தன. அரசன்
உயிராகவும் குடிகள் உடலாகவும் இருந்தார்கள். தொல்காப்பியத்திலே புறத்திணை
இயலில் போந்துள்ள யுத்தமுறைகளை உற்றுநோக்கி வாசிப்போருக்கு தமிழ்நாகரிகம்
நன்கு புலனாகும். ஓரரசன் மற்றோரரசன் மேல் படையெடுத்துச் செல்லுங்
காலத்து, அவ்வரசன் ஊரிலுள்ள பசுக்கள், பெண்கள், குழந்தைகள்,
சந்நியாசிகள், நோயாளிகள், பிள்ளை பெறாதோர் ஆகியோரை பாதுகாக்க வேண்டிய
யுத்த தருமம் அனுஷ்டிக்கப்பட்டது. மாற்றரரசனது ஊரில் பசுக்கள் அகப்படின்,
அவையாவும் போர்வீரர்கள் வயிற்றிலே (பாசறை) பாதுகாக்கப்படும்.
தமிழ்மக்கள் அகவொழுக்கத்தை அறியும் ஆற்றலுடையவாராயி
ருந்தார்கள். இப்போது அகவொழுக்க நெறி அறவே ஒழிந்தது. அதைப் பற்றி விபரீத
உணர்ச்சி ஆங்கிலங் கற்ற தமிழ் மக்களிடையில் விளைந்திருக்கிறது.
தமிழர்கள் ஒழுக்கத்தை விரித்துக் கூறப் பல நூல்கள் வேண்டுமா? திருக்குறள்
ஒன்றே சாலும். பதினாயிரம் ஆங்கில நூல்கள் ஒரு திருக்குறளுக்கு இணையாகுமோ?
இருமொழியிலும் வல்லார் இவ்வுண்மை யுணர்ந்திருக்கி
ன்றனர்.
எம்முன்னோர்கள் கடவுளை அன்புமயமாகவும் நீதிகள் திரண்ட ஒன்றாகவும் போற்றி
வந்தார்கள். அக்டவுளைக் கொல்லாமை, பொய்யாமை, அருள், தவம், அன்பு, அறிவு
முதலிய பூக்களினால் வழிபட்டு வந்தார்கள். பெண்பாலர் அன்புச்
சுதந்திரத்தைப் பெற்றிருந்தனர். கல்விக்கரசிகளாக இருந்தனர். செங்கோல்
தாங்கி நாட்டையும் ஆண்டனர்.
இத்துணைச் சீருஞ் சிறப்பும் வாய்ந்த தமிழ்நாடு இப்பொழுது எந்நிலை
யுற்றிருக்கிறது? தமிழ் நாட்டார் தமிழை மறந்தார்கள். சுதந்திரத்தை
யிழந்தார்கள். ஆங்கிலமயமாக விளங்குகிறார்கள்.
-திரு.வி.க.
17 செப்டம்பர், 12:24 PM · பொது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக