புதன், 22 மார்ச், 2017

இந்திய வரைபடம் எரிப்பு ஆதித்தனார் பங்கு தனித்தமிழ்நாடு மாநாடு

athi tamil aathi1956@gmail.com

26/5/16
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan .
இந்திய வரைபட எரிப்புப் போராட்டத்தை நடத்தியது யார்?
சி.பா.ஆதித்தனாரை மறைக்கும் பெரியாரியவாதிகள்!
1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் தமிழறிஞர்களின் பங்கு
அளப்பரியது. இதனை மறைத்து விட்டு பெரியார் மட்டுமே தலைமையேற்று
நடத்தியதைப் போல பெரியாரியவாதிகள் சித்தரித்து வருவது கண் கூடு.
அது போலவே, தமிழ்நாடு வரைபடம் நீங்கலாக இந்திய வரைபட எரிப்புப்
போராட்டத்தை சி.பா.ஆதித்தனாரை தவிர்த்து விட்டு, பெரியார் மட்டுமே
நடத்தியது போல பெரியாரியவாதிகள் எழுதியும், பேசியும் வருகிறார்கள். இது
முழு உண்மையல்ல.
6.7.1958இல் சுதந்திரத் தமிழ் நாடு கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில்
முதன் முதலில் மாநாடு நடத்தியவர் சி.பா.ஆதித்தனார். 1956இல் திராவிட நாடு
கோரிக்கையை கைவிட்டு தமிழ்நாடு விடுதலைக்கு பாடுபடுவதாக கூறிக்கொண்ட
பெரியார் அதற்காக 1972ஆம் ஆண்டு வரையிலும் எந்த மாநாட்டையும் நடத்த
வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பா. ஆதித்தனார் நடத்திய அந்த மன்னார்குடி மாநாட்டில் தான் இந்திய
வரைபடத்தை எரிப்பது என்று தீர்மானம் போடப்பட்டது. பெரியார் அந்த மாநாட்டை
தொடங்கி வைத்தார். அதில் எடுக்கப்பட்டை முடிவை தானும் ஆதரிப்பதாக
பெரியார் பேசினார். அதன்படி 5.6.1960ஆம் ஆண்டு சி.பா.ஆதித்தனாரும்,
பெரியாரும் இணைந்து இந்திய வரைபட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார்கள்.
இருவரும் முன் கூட்டியே கைது செய்யப்பட்டனர். இது தான் உண்மையாகவே நடந்த
வரலாறு.
இனிமேலாவது, பெரியாரியவாதிகள் இந்தப் போராட்டத்தில் பெரியாருக்கு மட்டும்
'ஒளி வட்டம்' போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
24 மே இல் 04:16 PM · பொத

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக