ஞாயிறு, 19 மார்ச், 2017

பெருவுடையார் கோவில் நிர்வாகி ஆசாரி பிடாரர் பிராமணரல்லாதார்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 14
பெறுநர்: எனக்கு
Rajasubramanian Sundaram Muthiah
மீள் பதிவு. 24 நவம்பர் 2016
ஆதாரம் பதிவில் உள்ள படம்
https://www.facebook.com/tenkasisubramani
an/posts/1201690769925282
தமிழ்த்தேசியம் தொடர்பான வணிகம் அனைத்தையும் தன் ஆதிக்க வெறிக்குள் வைக்க
நினைக்கும் கூட்டம் - தமிழ்த்தேசியத்துக்கு மிகப்பெரிய ஆபத்து.
நம்ம வெள்ளைக்கொடி வேந்தர் கொமாரு சொல்கிற மாதிரி பெருங்கோயில் நிர்வாகம்
என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியிடத்தில் இல்லை. இதை செந்தமிழன்
மணியரசன் பதிவு செய்த பல பதிவுகள் நிரூபிக்கும்.
கோயிலுக்கு திராவிடன் நம்மை போகக்கூடாதுனு சொல்லி சொல்லி கோயில்களை
எல்லாம் தமிழர்களிடம் இருந்து அழகாக பிராமணர்களுக்கு
புடுங்கிக்கொடுத்தான். அதே போல வேலையைத்தான் இப்பவுள்ள ஆதிக்க வெறி
பிடித்த இந்த வணிகக்கும்பல் செய்யுது. ஆசீவகம் பற்றி இவர்கள் போட்ட பல
காணொளிகள் இவர்களுக்கு நல்ல வருவாயை கொடுத்திருக்கும் போல. இனி அதை பற்றி
வேறு யாரும் ஆய்வு செய்து தங்களுக்கு வரும் வருவாயை பகிர்ந்து
கொள்ளக்கூடாது என நினைத்த இவர்கள் தான் ஆசீவகத்தை எதிர்ப்பதாக
காட்டிக்கொள்கிறார்கள். இனி யாராவது ஆசீவகம் பற்றி நூல் வெளியிட்டாலோ அது
இந்த ஆசீவக ஸ்டிக்கர் கும்பலின் வருவாயை கணிசமாக பாதிக்கும். அதனால்
ஆசீவகம் பற்றி முகநூலில் ஆய்வு செய்கிறேன் என்று வருபவர்களின் பதிவுகளில்
எல்லாம் போய் ஆசீவகம் ஒரு வந்தேறிச்சமயம்னும் அதை பரப்பியவர்கள்
தமிழர்களே அல்ல என்றும் பதிவிடுவார்கள். இதனால் புதிதாக ஆசீவகம் பற்றி
ஆராய வருவோர் பின்வாங்குவர் என்பது அவர்களது எண்ணம்.
அதே போல இவர்கள் பதிவிடுவது போல இவர்கள் பெருங்கோயில்களை எதிர்ப்பவர்களோ
வேளாளர்களை எதிர்ப்பவர்களோ கம்மாளர்களை எதிர்ப்பவர்களோலாம் கிடையாது.
இவர்களின் நோக்கம் என்னனு காட்ட சில சவிசயங்களை சொல்கிறேன். இவர்கள்
அதிகமாக விமர்சிப்பது இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயில். இந்த கோவில்
நிர்வாகிகளை ஏன் விமர்சிக்கிறார்கள்னு பாக்கலாம்.
பெருவுடையார் கோயிலின் நிர்வாகிகளாக பின்வருபவர்களை தன் ஆய்வில்
குறிக்கிறார் செந்தமிழன் மணியரசன். இது திராவிடப்புரட்டுகளை உடைக்க
செந்தமிழன் எழுதியது.
___________________________________
ஆக்கம் - செந்தமிழன் மணியரசன்
தஞ்சைப் பெருவுடையார் கோயில் சொத்துகளை பிராமணர்கள் அனுபவித்தனர் என்றும்
பொத்தாம் பொதுவாகப் பேசப்பட்டு வருகிறது. பின்வரும் பட்டியல்
பெருவுடையார் கோயிலின் ஆக்கம் மற்றும் நிர்வாகக் குழுவினரை
வரிசைப்படுத்துக
ிறது.
1. மாமன்னன் இராசராசன்
2. வீரசோழன் குஞ்சரமல்லன் எனும் ராசராசப் பெருந்தச்சன் எனும் தலைமைக்
கட்டிடக் கலைஞர்.
3. மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலைக் கட்டிடக் கலைஞர்)
4. இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலைக் கட்டிடக் கலைஞர்)
5. மாமன்னனின் தமக்கை குந்தவைப் பிராட்டியார்.
6. சேனாதிபதி கிருஷ்ணன் இராமன் என்னும் மும்முடிச் சோழப் பிரம்மராயன்.
7. ஸ்ரீகாரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த
வேளான் (கோயிலின் நிர்வாக அதிகாரி)
8. ஈசான சிவபண்டிதர் எனும் இராஜகுரு
9. இராசேந்திர சோழன்
10. சைவ ஆசாரியார் பவனபிடாரன் (தலைமை குருக்கள்)
11. கல்லில் எழுத்து வெட்டுவித்த சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாளுருடையான்
ஆறாம் இடத்தில் குறிப்பிடப்படும் பிரம்மராயன் மட்டுமே, பிராமணர்.
கோயிலின் மதில் சுவரைக் கட்டுவிக்கும் பொறுப்பு இவருக்கு
வழங்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. கோயில் நிர்வாகத்தில்
இவருக்கு எந்தப் பொறுப்பும் இருந்ததற்கான தடயங்கள் இல்லை. மேலும் இவர்,
இராசராசரின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர்.
பெருவுடையார் கோயில் நிர்வாகம் தமிழ்க் குலத்தவர்கள் நிர்வாகத்தில்
மட்டுமே இருந்தது. பவனபிடாரன் என்பவர் சிவனிய அறிவாளராக இருந்திருக்க
வேண்டும். பிடாரன் என்றால், தேவாரம் பாடுவோரைக் குறித்தது. இவரே
பெருவுடையார் கோயிலின் தலைமை குருக்கள்.
’பிராமணர் ஆதிக்கத்தில் கோயில் இருந்தது, சமஸ்கிருத மந்திரங்கள்தான்
ஓதப்பட்டன’ என்பது போன்ற கதைகளைக் கல்வெட்டுகள் மறுக்கின்றன.
இராசராசச் சோழரின் அரச ஆலோசகர் ஈசான சிவ பண்டிதரும் தமிழ்க்
குலத்தவர்தான். ஆகவே, ’பிராமணர்களின் சதி ஆலோசனைகளைக் கேட்டு சாதிக்
கொடுமைகள் செய்தார் இராசராசர்’ எனும் கதைகளும் பெருவுடையார் கோயில்
கல்வெட்டுகளால் தூக்கி வீசப்படுகின்றன. - செந்தமிழன் மணியரசன்
___________________________________
மேலுள்ள பெருவுடையார் கோவிலின் 11 நிர்வாகிகளில் மூவர் கம்மாளர், மூவர்
அரச குடும்பம், இருவர் வேளாண் தொழில் தொடர்புடையோர், இரண்டு
சிவாச்சாரியார், ஒரு பிராமணர். இது பெருவுடையார் கோவிலுக்கு மட்டும்
தான். மற்றக்கோயில்களை எடுத்துக்கொண்டாமானால் பழநி பண்டாரங்களுக்கு
உரிமையானாதாய் இருந்தது. மதுரையின் மீனாட்சி கோயிலின் நிலங்கள் பல
கூத்தருக்கானதாக இருந்தது. இப்டி ஒவ்வொரு கோயிலும் வேற வேற நிலைமை. ஆனால்
இன்று பார்த்தீர்களானால் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெருமளவு
கோவில்கள் பிறமொழியாளர்கள் கையில் தான் உள்ளது. அது பத்தாதுனு
கன்னடத்தேவாங்கச்செட்டியார் எல்லாம் சவுடேசுவரி கோயில்கள் பல புதுசாக
கட்டி கோயில் நிதி மூலம் (உண்டியல் உட்பட) நல்ல வளமாக வாழ்ந்து
வருகிறார்கள். அதிலும் முக்கியமாக வெள்ளாளர்களுக்கு கோயில் நிலங்கள்
என்பதெல்லாம் இப்போது பெரிதாக இல்லை. வெள்ளாளரின் மனநிலை எல்லாம்
கார்ப்பரேட்டு கம்பெனிகளில் அடிமையாய் வேலை செய்வதில் தான் இருக்கிறது.
(நானும் ஊழியன் தான்) இது அந்த ஸ்டிக்கர் கும்பலுக்கும் நல்லாவே
தெரியும். எனில் இவர்கள் கோயில்களின் எதிர்ப்பு மூலம் வெள்ளாளர்களைலாம்
எதிர்க்க எல்லாம் நினைக்கவில்லை. மாறாக புதிதாக தமிழ்த்தேசியம் தொடர்பாக
ஆய்வு நூல்களையோ சட்டைகளையோ வேளாண் பொருட்களையோ விற்க நினைப்பவரைகளைதான்
எதிர்க்கிறார்கள்.
அதன் காரணம் மிகத்தெளிவு. இவர்கள் ஆசீவகம் பற்றிய காணொளிகள் மூலமும்
தமிழ்த்தேசியம் தொடர்பான சட்டை வியாவாரத்தையும் வைத்து ஏற்கனவே வணிகம்
செய்தவர்கள். என்னை எதிர்க்க எதாவது காரணம் வேணும். அதனால் நான்
காரைக்காட்டு வேளாளனாக இருந்தது அவர்களுக்கு வசதியா போச்சு. சதிசுகுமாரை
எதிர்க்கனும். அதற்கு அவர் கம்மாளரா இருந்தது வசதியா போச்சு. இருவரும்
தொடர்புடைய கோவில் பெருவுடையார் கோவில். அதான் பழநி கோயிலைலாம்
எதிர்க்காம பெருவுடையார் கோவிலின் '''பழைய''' நிர்வாகிகளின் சாதிகளை
சொல்லி எங்களை எதிர்க்கிறாங்க. கமலநாதனின் சாதியை சொல்லி இவர்களால்
எதிர்க்க முடியாது. அப்படி எதிர்த்தால் அவர்கள் புகுந்திருக்கும்
இயக்கத்தில் இருந்தே எதிர்ப்பு வரும். அதனால் வணிகர்களை எதிர்க்கிறேன்னு
சொல்லி வணிகத்தால் தமிழர் உரிமையை எப்டி மீட்க முடியும்னு கமலநாதனின்
கருத்தை எதிர்த்து பதிவிட்டாங்க.
வணிகம் மூலம் எப்டி தமிழர் உரிமையை மீட்பதுன்னும் பெருவுடையார் கோவிலின்
முதன்மை அதிகாரி கம்மாளன்னும் சொல்லி சதிசுக்கு நெருக்கடி கொடுத்தாங்க.
நான் இப்போ ஆசீவகம் பற்றிய நூல் வெளிடப்போவதாக அவர்களாக கருதிக்கொண்டதால்
அதை தடுக்கனும்னு நான் செய்யும் ஆய்வுகளைலாம் கேலி செய்து
பதிவிடுவார்கள். அதற்காகத்தான் இவர்கள் வெள்ளாளர்களை எதிர்ப்பது போல்
காட்டிக்கொள்கிறார்கள். புதிதாக பண்டாரம் யாராவது நூல், சட்டை, வேளாண்
பொருட்களை வணிகம் செய்ய வந்தால் பண்டாரங்களையும் எதிர்த்து சரளமாக
இவர்களின் பதிவுகள் வரும்.
அதிலும் சிவக்குமார் எப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்னு ஒரு சின்ன
எடுத்துக்காட்டு சொல்றேன். திரைத்துறையில் தெலுங்கர் ஆதிக்கத்தை
எதிர்த்து ஒரு உண்ணாவிரதம் நடுவம் கேட்டுக்கொண்டதின் பெயரில்
நடத்தப்பட்டது. அதில் பல இயக்கங்களை சேர்ந்தவர்கள் வந்துருந்தாங்க.
அதுக்கு வந்த நம்ம கொமாரு எப்டி வந்தார்னு தெரியுமா? அவரின் இயக்கத்தின்
பெயர் பொறித்த சட்டையை போட்டுக்கிட்டு வந்தார். இந்த கும்பல் என்னாடான்னா
புது டிசர்ட்டு வியாபாரிகள்னு சொல்லி சதிசை கிண்டல் பண்ணி
மாட்டிக்கிட்டாங்க. எனக்கு புது டிசர்டு வியாவாரிகள்னு சொல்லி கிண்டல்
பண்ணதை பார்த்த உடனே தெளிவா தெரிஞ்சிருச்சு இவங்க நோக்கம்.
இதை பார்த்ததும் நம்ம திராவிட மதிகெட்ட மாற்றான் திடீர்
தமிழ்த்தேசியவாதிகள்னு சொல்லி தன் வயிற்றெரிச்சலை தமிழ்த்தேசியவாதிகள்
மீது கொட்டியதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது.
இந்த டிசர்டு உத்தியை எங்கோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினைச்சு நினைவில்
வராததால் விட்டுட்டேன். ஆனா அதை நினைவு படுத்துற மாதிரி கார்த்திகேயன்
கல்யாணி காந்தி எனப்படும் பழைய டிசர்டு வியாவாரி அடுத்ததாக வெள்ளாளர்களை
எதிர்ப்பதாக காட்டிக்கொண்டு ஒரு பதிவு போட்டார். அதில் நம்ம கொமாரு போய்
இதைப்பத்தி நம்ம மூத்திர சந்துக்குள் தான் பேசனும்னு கருத்திட்டார்.
அதாவது மறந்து போய்ருந்த டிசர்டு உத்தி நபரை இவர்களே
நியாபகப்படுத்தினார்கள். ஆனா இந்த பழைய டிசர்டு வியாவாரி ஏதும் தூண்டுதல்
பேரில் இதை தெரியாமல் போட்டார்னு நினைக்கிறேன். ஏனா எனக்கு
அவசரக்காலத்தில் மிக முக்கியமான உதவியைச்செய்தவர் கல்யாணி காந்தி.
இவ்ளோ எதிர்ப்பு பேசும் இந்த எழிலனையும் கொமாரையும் வெள்ளாளர்களுக்க
ோ கம்மாளருக்கோ பெருங்கோயில்களுக்கோ எதிரின்னுலாம் நினைச்சுறாதீங்க.
இப்பவே வெள்ளாளர்கள் சிலர் இவர்களின் வணிகக்கும்பலில் சேர்ந்தால் உடனே
வெள்ளாளர்கள் தான் எங்கள் தெய்வங்கள், வெள்ளாளர்களே தமிழ்நாட்டை மீட்க
வல்லவர்கள்னு பழைய இத்துப்போன வெள்ளாளதேசியம் பேச தங்கள் வெள்ளைக்கொடி
வேந்தன் வேலையை காட்டத்தொடங்கிவ
ிடுவார்கள் இவர்கள். இவ்ளோ தான் இவங்க வெள்ளாளர்கள் கம்மாளர்
பெருங்கோயில்கள் எதிர்ப்பெல்லாம்.
என் விருப்பம்லாம் என்னவென்றால் தமிழ்த்தேசியம் தொடர்பான நூல்கள்,
டிசர்டுகள், வேளாண்பொருட்கள்னு படைக்கவும் வணிகம் செய்யவும் பல தமிழர்கள்
நிறுவனங்களை தொடங்க வேண்டும். அதில் கிடைக்கும் வருவாய் மூலம் தான் நாம்
நிலங்கள் பலவற்றை வாங்க முடியும். ஆனால் நிலம் வாங்கும் போது
பிறமொழியாளர்கள் அவ்வளவு எளிதாகவெல்லாம் தமிழர்களுக்கு நிலத்தை
பணத்துக்கு கொடுத்துவிடமாட்டார்கள். அதற்கு பல வேலைகள் செய்யனும்.
இருந்தாலும் இருக்கின்ற நிலத்தைலாம் தக்கவைக்கவாவது இந்த வணிகம் செய்வது
முக்கியம். ஆனால் தங்கள் வணிகத்தை காப்பாத்த மற்றவர்கள் ஓரடி
முன்னேறினாலே அவர்களை தாக்குதலுக்கு உள்ளாக்கும் குழுமத்தின் முகமூடி
கிழியனும் என்பதுக்கு தான் இந்த பதிவு.
இப்பதிவில் குறிப்பிட்ட பல விசயங்கள் கருத்துக்களில் ஸ்கிரீன்சாட்டாக வரும்.
2 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக