|
ஜன. 20
| |||
.Subaguna rajan:நேற்றிரவே பதிவொன்று எழுதுவதாகத் திட்டம்.ஆனால்
முகநூலின் ‘ சூடு’ அதிகமாகி விட்டது.ஆதரவு,எ
திர்ப்பு என்ற எதிர்வுக்குள் மட்டுமே இருப்பு சாத்தியம் என்றாகி விட்டது.
எவ்வளவு முயன்றாலும் ‘ முத்திரை குத்தல்’ உத்தரவாதம்.முன் வைக்கும்
தரவுகளும் தாட்சண்யமின்றி புறந்தள்ளப்பட்டு, நோக்கம் மட்டும்
சந்தேகிக்கப்படுகிறது. முயன்று சொல்லும் விளக்கங்கள் ஒரு இம்மிகூட
நிலைப்பாடுகளில் நெகிழ்வைச் சாத்தியமாக்கும் வாய்ப்பில்லை. இன்னொன்று
நீளமான முகநூல் பதிவுகள் வாசிப்பை சுவாரஸ்யமற்றதாக
்கிவிடுகிறது. எனவே சில களத்தகவல்களை மட்டும் சொல்லிவிட்டு ,
அவதானிப்புகளை அவரவர்க்கு விட்டு விடுவது நலமெனப்படுகிறது
1) கீழே உள்ள படத்துக்கு விளக்கம் தேவையில்லை.அலங்காநல்லூர் பேருந்து
நிலையத்துக்கு அம்பேத்கர் பெயரிடப்பட்டுள்ளது. அலங்காநல்லூரின் சாதிகளின்
தொகுதியில் நாயுடுக்கள், மூப்பனார்,வளையர், ரெட்டியார்,பள்ளர்,பறையர்
மட்டுமே உள்ளனர். ஊர் நாட்டாமைகள் நாயுடுகளே.
2) வாடிவாசல் முதல் மரியாதை முனியாண்டி கோவில் காளைக்கே. முனியாண்டி
கோவில் பூசாரிகள் பள்ளர்களும், பறையர்களுமே
3) காளை அணைவதற்கு எந்த நாளிலும் பள்ளர், பறையருக்கு தடையில்லை. ஆனால்
உள்ளூர் மாடுகளை உள்ளூர் ஆட்கள் எந்த சாதியினரும் பிடிக்கக்கூடாது.
4) பக்கத்தில் புதுப்பட்டி என்ற கிராமத்தில் அகமுடையார் சாதியினர்
உள்ளனர்.அவர்கள் மாடு பிடிக்க வரலாம். மற்றபடி விழாக்கமிட்டி போன்ற
எதிலும் பங்கு இல்லை.
5) இதுவரையான காலத்தில் ஜ்ல்லிக்கட்டு தொடர்பாக எந்தக் கலவர்மும் நடந்ததில்லை
6) பாலமேடு ஊரைப் பொருத்தவரை அங்கு பெரும்பான்மையாக இருப்பவர்கள்
நாடார்கள்,அதற்கடுத்து பள்ளர், குறவர், கோனார், பறையர், ரெட்டியார்
ஆகியோர்.
7) பாலமேடு விழா நிர்வாகக்குழு நாடார்கள் தலைமையில்.
8) பாலமேட்டிலும் பள்ளர் காளைகளுக்கு மாலை மரியாதை உண்டு
9) பாலமேட்டிலும் அனைத்து சாதியினரும் மாடுபிடிப்பதில்
பங்கேற்கலாம்.யாருக்கும் தடை இல்லை.
10) அலங்காநல்லூர் யூனியன் பகுதியில் முக்குலத்தோர் மைனாரிட்டி சாதியினர்..
11) அவனியாபுரம் விழாக் கமிட்டியின் பொறுப்பாளர்களில் ஒருவரான இன்குலாப்
அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் தலைவர்.
கள நிலவரம் இதுதான். தமிழ்நாடு முழுக்க நம்பப்படும்படிக்கு அந்தக்
குறிப்பிட்ட “ ஆணவ ஆதிக்க சாதிக்கு” இந்த நிகழ்வுகளில் பிரதான பங்களிப்பு
இல்லை போல் தெரிகிறது. மறவர், கள்ளர்,அகமுடையார் பெரும்பான்மையாக வாழும்
ராமநாதபுரம், மதுரையின் உசிலம்பட்டி, மேலூர் பகுதிகளில் பிரசித்தியான
ஜல்லிக்கட்டு நிகழ்வு இல்லை.ஜல்லிக்கட்டு அடிப்படையில் நிலவுடமை
சாதிகளின் நடவடிக்கை. கள்ளர், மறவர் போன்ற காவல் சாதியினர் நிலவுடமை
பெற்றது நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்குள்ள
ாகவே எனத் தெரிகிறது. அலங்காநல்லூரிலும், பாலமேட்டிலும் வாழும்
சாதியினரும் ஆணவ ஆதிக்க சாதியினர்தானே என்பீர்களானால் ஆட்சேபமில்லை.
ஆனால் இது வரையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட போது யாரை எண்ணிச்
சொல்லப்பட்டதோ அவர்கள் இந்தக் களத்தில் இல்லை என்பது மட்டுமே தகவல். ....
Subaguna rajan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக