|
17/1/16
| |||
Palani Deepan
இதிகாசங்கள்.
மகாபாரதத்தைப் பற்றி ஒரு பதிவு செய்திருந்தேன்.
உங்களுக்கு அதைப்பற்றி என்னத் தெரியும் என சில பார்ப்பன நண்பர்களுக்கு
இயல்பாக ஒரு கேள்வி எழலாம்.
மகாபாரதத்தைப் பற்றி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக ஓர் ஆங்கில இலக்கிய
வரலாற்று அறிஞர் எழுதிய ஆய்வும் கதையும் கலந்த நூல் என்னிடம் உள்ளது.
விறுவிறுப்பான மகாபாரதம் தொடர்பான பல யாரும் நினைத்துப்பார்க்க முடியாத
அரிய தகவல்களைக் கொண்டப் புத்தகம்.
மிக அற்புதமான நூல். அதைப்பற்றி வேறு எந்த இந்திய அறிஞர்களும்
எந்தக்குறிப்பகளும் கூறாததில் இருந்து, அந்த புத்தகம் என்னிடம் மட்டுமே
உள்ள அரிய புத்தகமாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்.
(நூல் மற்றும் ஆசிரியரின் பெயரை, பிறகு பதிவு செய்கிறேன்.)
அதே போலவே, இராமயண புத்தகம் தொடர்பான அரிய ஆய்வு நூல்களும் உள்ளன.
பகவத்கீதையைப் பற்றி மிகச்சிறப்பான ஆய்வு நூலாகவும், மிகக் கடுமையான
விமர்சன நூலாகவும் உள்ளது... காஷ்மீர் பண்டிட் (பெயர் நினைவில்லை) எழுதிய
(The role of Bhahavat Geetha In Indian History)
ஒரு நாவலுக்கு இணையாக விறுவிறுப்பாகவும், சுவையாகவும் செல்லக்கூடியது
இந்தப் புத்தகம். இதுவும் மிக அரிதான புத்தகமே. வெளியே புதிய ஆங்கில
பிரதி எங்கும் கிடைக்கவில்லை.
இதன் மொழிபெயர்ப்பை இராமசுப்பரமணியம் அவர்கள் செய்துள்ளார். தமிழாக்கமும்
அருமை. இந்த நூலும் என்னிடம் உள்ளது. இந்த தமிழாக்கம் சில ஆண்டுகளுக்கு
முன்புதான் நடந்தது. அதிக விலை வைத்திருந்தும் சில தினங்களிலேயே முழு
புத்தகங்களும் விற்றுத்தீர்ந்த
ுவிட்டன. பிறகு எனது நண்பர் வழங்கினார்.
இன்னொரு அரிய புத்தகம் மதுரை மாநகர், திருமலை நாயக்கர் காலத்து வரலாறு,
மதுரை கோவிலின் அமைப்பும் சிறப்பைபும் பற்றியதுமான, ஆங்கிலேயரின் ஆய்வு
நூல். அற்புதமான நூல்.
ஆக பல அரிய நூல்களை படித்ததன் பயன்தான் மகாபாரதம் தொடர்பான என பதிவு
என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேற்குறிப்பிட்ட புத்தகங்களை எனது நூல்நிலையத்தில் இருந்து தேடி எடுத்து,
அதைப்பற்றிய இன்னும் சுவையான குறிப்புகளைத் தருவேன்.

அன்பரே என் பெயர் பெரு.முருகன், நான் சென்னையில் வசிக்கின்றேன். நானொரு மொழிப்பெயர்ப்பாளன் தவிர நாவலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். டாவின் சி கோட், மற்றும் ஏஞ்சல்ஸ் அண்ட டிமான்ஸ் முதலான பத்து நூல்களை மொழிபெயர்த்து தமிழில் வெளியிட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குமகாபாரதத்தை வித்தியாசமாக அதன் உண்மை முகத்தோடு எழுத வேண்டுமென்பது என்னுடைய நெடுநாள் ஆவல். உங்கள் பதிவை இன்றுதான் கண்டேன். மேற்சொன்ன அந்த புத்தகங்களை நகல் செய்து அனுப்பிவைத்தால் நன்றி உடையவனாக இருப்பேன். செலவுகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்களின் பதிலை விரைவுடன் எதிர்பார்க்கின்றேன்.
பெரு.முருகன் 99402 56596