சனி, 25 மார்ச், 2017

வன்னியர் முத்தரையர் பரதவர் திருமண தொடர்பு மீன்சின்னம் இடங்கை வலங்கை சண்டை அநாபய காலத்தில் தொடங்கியது

aathi tamil aathi1956@gmail.com

10/4/16
பெறுநர்: எனக்கு
கூர்ங்கோட்டவர்
இருக்கரசரும் முத்தரசரும் வன்னியரசரும்
இருக்குவேள் என அழைக்கப்படும் கொடும்பாளூர் இருங்கோவேளிரும் முத்தரசர் என
அழைக்கப்படும் முத்தரையரும் வன்னியரும் இன்று வெவ்வேறு சமூகங்களாக
உள்ளார்கள். இன்று இவர்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட கொண்டுகொடுத்தல்
என்பது ஏதுமில்லை. இது வடுகர்காலத்தில் இருந்து வந்த பிரித்தடிக்கும்
நுட்பத்தின் தொடர்ச்சியின் விளைவாக இருக்கலாம். ஆனால் சங்ககாலம் தொட்டு
முதலாம் இரண்டாம் பாண்டியப்பேரரசு காலம் வரையிலும் இவர்களுக்குள் ஏராளமான
கொண்டு கொடுத்தல் நடந்துளது குறிப்பிடத்தக்கது.
அதிலும் முக்கியமாக குடுமியான்மலை கல்வெட்டில் இருக்குவேள்
அரசர்களுக்கும் முத்தரசர்களுக்கும் கொண்டு கொடுத்தல் இருந்ததை காட்டும்
கல்வெட்டு முக்கியமானது.
"செம்பியனிருக்குவேள்தேவியார் முத்தரையர்மகளார்வரகுணனாட்டி பெருமாள்
கோயிலுக்கு கொடுத்த நொந்தா விளக்கு" எனக்கூறுகிறது அக்கல்வெட்டு. இதன்
பொருள் செம்பியன் இருக்குவேள் என்னும் வேளரசனின் மனைவியும் முத்தரையர்
மகளுமான வரகுணனாட்டி பெருமாள் கோயிலுக்கு விளக்கு கொடுத்தாள் என்பதாகும்.
இது பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டு.
அதே போலவே வன்னி முத்தரையர் செப்புப்பட்டயம் வன்னியருக்கும்
முத்தரையருக்கும் இருந்த மணவுறவுகளை காட்டுகிறது. இன்றும் வன்னியரில்
முத்தரையர் பட்டம் போடுபவர்கள் இருப்பதற்கும் முத்தரையரில் வன்னிய குல
முத்தரையர் என்ற உட்பிரிவு இருப்பதற்கும் இவர்களுக்குள் இருந்த
கொண்டுகொடுத்தலே காரணம் என்கிறார் நடனகாசிநாதன்.
முத்தரையர் பற்றி பாசில் வேள் நம்பி பாடிய தனிப்பாடல் ஒன்றில்
முத்தரையரின் பெயராக "வெங்கட்பொருகயல் வேல்கொடியோன்" என்பதை சுட்டுகிறது.
இது முத்தரையரின் சின்னமாக வேலும் கயலும் இருந்ததை காட்டுகிறது. ஏற்கனவே
இப்பக்கத்தில் பரவரின் காசொன்றில் இருமீன்கள் கொண்ட காசையும் காட்டினேன்.
இந்த மீன் சின்னம் பாண்டியர், முத்தரையர், பரவர் மூவருமே நெய்தல்
நிலத்தோற்றுவாய் கொண்டோர் என்பதைக்காட்டுகிறது. முத்தரையரில் வலையர் என்ற
பிரிவே 29 பிரிவுகளில் ஐந்து பிரிவுகளைக்கொண்டுள்ளது இதை மேலும்
உறுதிப்படுத்துக
ிறது.
இப்படி அடையாளங்களிலும் கொண்டுகொடுத்தலிலும் இணக்கமாக இருந்த சமூகங்கள்
கொண்ட தமிழினத்தை சாதிவெறி இனம் எனச்சித்தரிக்க கிண்டிய வடுக தலித்திய
கம்முனாட்டிய கூட்டங்கள் பதினோறாம் நூற்றாண்டுக்கு (>1069) பின்வந்த
வடுகச்சோழர்களின் காலத்துக்குப்பிறகுள்ள சோழநாட்டு வரலாற்றிலும்
பதினான்காம் நூற்றாண்டுக்கு பின்னர் வந்த வடுக விஜயநகர பாண்டிய நாட்டு
வரலாற்றிலும் இருக்கும் சாதிச்சண்டைகளை மட்டுமே காட்டி தமிழினத்தை
சாதிவெறி பிடித்த இனம் என்று வரலாற்றை திரித்தெழுதி வருகின்றன.
கி.பி. 1069 வரை சோழநாட்டில் வலங்கை இடங்கை கலவரம் நடந்ததில்லை. ஆனால்
பொசுக்குனு அநாபாயச்சாளுக்க
ியன் என்னும் வடுகன் குலோத்துங்கச்சோழன் என்ற பெயரில் அரியணை ஏறிய
காலத்தில் முதல் வலங்கை இடங்கை கலவரம் மூண்டது. பதவியேற்பதற்கு முன்
தமிழனான அதிராஜேந்திரனை கொன்று பதவியேற்கிறான் அநாபயன். தான்
ஆட்சியைப்பிடிக்க கலவரத்தை தூண்டிவிட்டதே இந்த அநாபயன் தான். இந்த
சாதிச்சண்டையை தூண்டி ஆட்சியைப்பிடிக்கும் பாணி விஜயநகர நாயக்க
பாளையக்கார ஆட்சியில் தொடர்ந்து இன்று திராவிட பயங்கரவாத மதுகோல்
ஆட்சிவரை தொடர்கிறது.
தென்காசி சுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக