ஞாயிறு, 19 மார்ச், 2017

சிவசேனாபதி சிவசேனாதிபதி பற்றி , நல்லவர்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 24
பெறுநர்: எனக்கு
திரு கார்த்திகேய சேனாபதி அவர்களை பற்றி---

பல ஏக்கர் நிலங்களுக்கும், பல கோடி ரூபாய் சொத்துகளுக்கும் சொந்தகாரர்
கார்த்திகேய சிவசேனாபதி. ஈரோட்டில் யாரிடம் கேட்டாலும் தெரியும், பழைய
கோட்டை ஜமீன் பற்றி.  காங்கேயம் காளைகளை அழிவிலிருந்து மீட்பதற்கான பத்து
ஆண்டுகளும் மேலான,  நீண்ட, நெடிய, போராட்டத்திற்கு சொந்தகாரர்.
நமக்கெல்லாம் சல்லிக்கட்டு பற்றி தெரிந்ததே நவம்பருக்கு பின்பு தான்.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென்று மட்டுமே ஆரம்பித்தது நம் போராட்டம்.
ஆனால் காங்கேயம் காளை இனம் அழிந்துவிடக்கூடாது என்பதே அவரது போராட்டம்.
சுமார் ஆறு கோடி செலவு செய்து காங்கேயம் காளைகளின் விந்தணுக்களை சேமித்து
வைத்திருக்கிறார். இந்த நொடியில் அனைத்து காங்கேயம் காளைகளை கொன்றாலும்
மீண்டும் காளை இனத்தை உயிர்பிக்க செய்யும் வல்லமை கொண்டவர். நம்
மாநிலங்களில் மட்டுமல்ல. பல வெளிநாடுகளுக்கும் சென்று அந்த நாட்டு
பாரம்பரிய கால்நடைகளை பாதுகாப்பது தொடர்பான போராட்டங்கள் மற்றும் பல
கருத்தரங்குகளில் பங்கெடுத்தவர். நாம் இன்றைக்கு சல்லிக்கட்டடுக்கு
ஆதரவாக போராடவில்லை என்றாலும், அவர் தொர்ந்து போராடிக்கொண்டு தான்
இருப்பார். நொய்யல் நதி புணரமைப்பு பணி, அவிநாசி அத்திகடவு திட்டம், வேதி
உரங்களில்லா இயற்கை விவசாயம், பாரம்பரிய கால்நடை ஆராய்ச்சி என எதிர்கால
சந்ததிக்கான போராளி அவர். அவரது தாத்தா, அப்பா, சித்தப்பா என பலரும் பல
முறை பாராளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். அவரை காசு
வாங்கினார் என்பது நம்மையும், நம் போராட்டத்தையும் நாமே கொச்சை
படுத்துவது போலாகும். இன்றைக்கு நாம் கோபபடுகிறோமே, பெப்சி, கோக் மேல.
பத்து வருசத்துக்கு மேல எல்லா கூட்டங்களிலும் அவர் சொல்றது, சாணம்
மற்றும் இயற்கை உரம் போட்டு விவசாயம் பண்ணுங்க. செயற்கை உரம் (அவர் பாஷை
ல உரமல்ல விஷம்) போட்டு மண்ணை மலடாக்காதீங்க ணு.... வீடியோக்கள்
கிடைத்தால் பாருங்கள், உண்மை புரியும். புறநானூறு காலத்திற்கு பின்,
முதல் முறையாக கொங்கு மண்டலத்தில், கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம்
அழகுமலையில்  பொங்கல் விழா மற்றும் ஜல்லிக்கட்டு நடத்த தன் சொந்த நிலத்தை
சீரமைத்து கொடுத்தவர்.
என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக