புதன், 22 மார்ச், 2017

பேரறிவாளன் பெரியார் இயக்கங்கள் துரோகம்

aathi tamil aathi1956@gmail.com

31/5/16
பெறுநர்: எனக்கு

பெரியாரிய கொள்கைகளைப் பின்பற்றுற பேரறிவாளனின் விடுதலைக்கு திராவிடர்
கழகம் செய்த பங்களிப்பு என்ன?
அதுவொரு கொடுமை. முதல் துரோகமே பெரியார் திடல்லதான் கெடச்சது. பெரியார்
சிலைகிட்ட இருந்துதான் என் மகன சிபிஐ கூட்டிட்டுப்போனாங்க. ஆனா,
அதப்பத்தி விடுதலை பத்திரிக்கைல ஒரு அறிக்கையோ, செய்தியோ வரல.
வந்திருந்தா, சிபிஐ நடவடிக்கை வேறுமாதிரி இருந்திருக்கும்ன்னு நான்
இன்னைக்கும் நம்புறேன். ஏன்னா அறிவுக்காக குரல் கொடுக்க யாருமே
இல்லன்னுதான் அவன் மேல நிறைய குற்றம் சுமத்துனாங்க.
திமுகவாவது உங்க மகனின் விடுதலைக்கு ஏதாவது செய்ததா?
கலைஞர் கருணாநிதி முதலமைச்சரா இருந்தப்ப நெடுமாறன் ஐயா தலைமைல
ஆயிரக்கணக்கான பேர் திரண்டு ஒரு கோரிக்கை மனு வச்சோம். அப்ப நாலு
பேருக்கு மரண தண்டனை இருந்தது. குழந்தைகள், பெண்கள்ன்னு எல்லா
அமைப்புகளும் திரண்டு போனோம். தண்டனைக்குறைப்ப
ு வழங்குங்க. உங்களுக்கு அதிகாரம் இருக்குன்னு கோரிக்கை மனு கொடுத்தோம்.
நளினிக்கு தண்டனைக் குறைப்பு செஞ்சாரு. அறிவுக்கு பண்ணுவாருன்னுதான்
நெடுமாறன் ஐயா உட்பட எல்லாரும் எதிர்பார்த்தோம். ஆனா, செய்யல. நளினிக்கு
தண்டனைக்குறைப்ப
ு செஞ்சாங்களே ஒழிய விடுதலை செய்யல. அவரது ஆட்சியில செம்மொழி மாநாடு,
அண்ணா பிறந்த நாள்ன்னு எத்தனையோ பேர விடுதலை செஞ்சாங்க. அப்பகூட நளினிய
விடுதலை செய்யல.
---- அற்புதம் அம்மாள்
சீனி. மாணிக்கவாசகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக