|
6/11/16
| |||
மலையாள இனவெறியால் பலியான நெய்யாற்றின் நீர் உரிமை பறிபோனகதை
இலவசத்தை இன்பமுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கை “ஊரான் வீட்டு நெய்யே,
என் பெண்டாட்டி கையே” எனும் சொலவடைமூலம் எள்ளி நகையாடுகிறோம்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு வட்டார விவசாயி கள் ஆவலுடன்
எதிர்நோக்கிக் காத்திருக்கும் நெய்யாற்றுத் தண்ணீர் கேரளா நமக்கு
இலவசமாகத் தரும் நெய் அல்ல; அது இப்பகுதி விவசாயிகளின் பாரம்பரிய உரிமை.
திருவனந்தபுரத்திலிருந்து மேற்குப் பக்கம் சுமார் 30 கி.மீ. தொலைவில்
மலையின் அடிவாரத்திலுள்ள கள்ளிக்காடு எனுமிடத்தில் திருவிதாங்கூர் -
கொச்சி அரசால் திட்ட மிடப்பட்டதுதான் நெய்யாறு அணை. விடுதலைக்குப் பிறகு
1952ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1958ஆம் ஆண்டு இது கட்டி முடிக்கப்பட்டது.
இந்த அணையின் வலதுகரை சானலின்மூலம் நெய்யாற்றங்கரை வட்டத்திலுள்ள சுமார்
10,000 ஏக்கர் நிலங்களும், இடதுகரை சானலின்மூலம் குமரி மாவட்டம்
விளவங்கோடு வட்டத்திலிருக்கும் சுமார் 10,000 ஏக்கர் நிலங்களும் பாசன
வசதி பெற்றன. நெய்யாறு பாசனத்திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம்
நிலைகள் திருவிதாங்கூர் - கொச்சி அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்டாலும்,
மேற்கண்ட கால்வாய்கள் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் (1955 - 1960)
கீழ் மத்திய அரசின் அனுமதியோடு தமிழக அரசாலும் கேரள அரசாலும்
கட்டப்பட்டன.
ஆனால் 1956ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது,
விளவங்கோடு வட்டத்திலுள்ள 9,200 ஏக்கர் நிலம் புதிய கன்னியாகுமரி
மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டது. மாநில மறுக்கட்டமைப்புச் சட்டத்தின்
(1956) பாகம் 108இன் துணைப்பாகம் இரண்டின் கீழ் நெய்யாறு பாசனத்திட்டம்
கட்டமைக்கப்பட்டிருப்பதால், தமிழ்நாடும் அதன் மக்களும் சட்டரீதியான உரிமை
பெற்றவர்கள் என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. எனினும் தமிழகத்திற்குத்
தேவைப்படும் 150 கியூசக்ஸ் தண்ணீருக்குக் குறைவாகவே இடதுகரை சானல்மூலம்
கேரள அரசு தண்ணீர் கொடுத்தது.
ஏற்கெனவே 1957ஆம் ஆண்டு முன்வைத்த பரிந்துரையின்படி நெய்யாறு
பாசனத்திட்டத்தின் செலவுகளை தமிழக அரசும் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனக்
கோரிக்கைவைத்த கேரள அரசு, 01.02.1965 அன்று தமிழக அரசு எவ்வளவு பணம்
தரவேண்டும் என்றும் கணக்கிட்டுச் சொன்னது. தமிழக அரசு எவ்வளவு பணம்
தரவேண்டும், கேரள அரசு எவ்வளவு தண்ணீர் தரவேண்டும் என்றெல்லாம்
பேரப்பேச்சு நடத்தி முறைப்படி ஒப்பந்தம் செய்துகொள்வோம் என்று தமிழகம்
1971ஆம் ஆண்டு ஒரு கோரிக்கை வைத்தது. செலவைப் பகிர்ந்துகொள்வதில்
குறிப்பாய் இருந்த கேரள அரசு, தண்ணீர் அளவை நிர்ணயித்துக்கொள்வதை
விரும்பவில்லை. நெய்யாறு இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான ஆறு அல்ல
என்பதால், ஒப்பந்தம் போடுவது இயலாது என்று 1999ஆம் ஆண்டு தெரிவித்தது.
இந்நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் தலையீட்டைக் கோரியது. மத்திய அரசு
13.02.2003 அன்று நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர கேட்டுக்கொண்டு,
தேவைப்படும்போது மத்திய தண்ணீர் ஆணையத்தின் உதவியைக் கேட்டுப்பெறுமாறு
அறிவுரைத்தது. நெய்யாறு அணையிலிருந்து கேரளா தண்ணீர் திறந்துவிடுவது
ஒருபோதும் சீரானதாக இருந்ததில்லை. பின்னர் 2004ஆம் ஆண்டிலிருந்து ஒரு
சொட்டுத் தண்ணீர்கூட தமிழகத்துக்குத் தரவேயில்லை.
கேரள சட்டமன்றத்தில் 18.10.2006 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்
அடிப்படையில், தண்ணீரின் விலை நிர்ணயிக்கப்பட்டப் பிறகே தமிழகத்துக்கு
தண்ணீர் தர முடியும் என்று 2007ஆம் ஆண்டு கேரள அரசு அறிவித்தது. ஆனால்
தமிழகமோ நெய்யாறு இருமாநில நதி என்பதால், மாநிலங்களுக்கிடையேயான
நதிநீர்த் தகராறுகள் சட்டம் 1956இன் பாகம் ஏழின் படி, ஏற்கனவே பயன்
படுத்திக்கொண்டிருக்கும் தண்ணீருக்குக் கூடுதல் பணம் அல்லது விலை தருவது
என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னது.
ஆனால் நெய்யாறு இருமாநில நதியல்ல என்று கேரளா மீண்டும் வலியுறுத்தியது.
மத்திய அரசு தயாரித்த வரைபடங்களில் நெய்யாற்றின் நீர்பிடிப்புப்
பகுதிகளில் 12.90 சதுர கி.மீ தமிழகத்தில் இருப்பதாகக்
குறிப்பிட்டிருக்கிறது. எனவே இது இருமாநில நதிதான் என்று வாதிட்ட தமிழக
அரசு ஒரு புதிய ஒப்பந்தத்தை தயாரித்து 19.05.2009 அன்று கேரள அரசின்
பார்வைக்கு அனுப்பியது. இதைப்பற்றிக் கருத்து எதுவும் சொல்லாத கேரள அரசு
11.01.2010 அன்று வேறு ஓர் ஒப்பந்தத்தை தயாரித்து தமிழகத்துக்கு
அனுப்பியது. அந்த ஒப்பந்தம் தமிழக நலன்களுக்கு ஊறு விளைவித்ததால்,
தமிழ்நாடு இதை நிராகரித்தது. பிறகு இருமாநில அதிகாரிகளும் 06.05.2011
அன்று திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்;
ஆனாலும் முக்கியமான அம்சங்களில் உடன் பாடு ஏற்படவில்லை.
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடவேண்டும் என்று தமிழகம்
வற்புறுத்தினாலும் தில்லி கண்டுகொள்ளவில்லை. எனவே தமிழக அரசு 30.05.2012
அன்று உச்சநீதிமன்றத்தில் நெய்யாறு அணையிலிருந்து தமிழக விவசாயத்திற்கு
கேரளா தண்ணீர் திறந்துவிடும்படி அறிவுறுத்தக் கேட்டு வழக்கு தொடர்ந்தது.
வழக்கின் விசாரணை 03.01.2014 அன்று நடந்தபிறகு, 07.02.2014 என்று நாள்
குறிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. தமிழக முதல்வர் 03.06.2014 அன்று
இந்திய பிரதமருக்குக் கடிதம் எழுதி 9,200 ஏக்கர் நிலத்தில் விவசாயம்
செய்ய தண்ணீர் தருமாறு கேரளாவைக் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை
வைத்தார்.
போதிய தண்ணீர் கைவசம் இல்லாததால் கேரளாவால் தர முடியவில்லை என்றால்கூடப்
பரவாயில்லை. ஆனால் நிலைமை அதுவல்ல. கேரளத்தில் நன்றாக மழைபெய்து
வருகிறது; அபரிமிதமான நெய்யாற்றுத் தண்ணீர் திருவனந்தபுரத்தை அடுத்த
பூவார் எனும் ஊரில் அரபிக் கடலில் வீணாகக் கலக்கிறது என்பதுதான் வேதனையான
உண்மை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக