சனி, 25 மார்ச், 2017

கல்லறை வழிபாடு புறநானூறு தர்கா

aathi tamil aathi1956@gmail.com

30/3/16
பெறுநர்: எனக்கு
Paari Saalan
புறநானூற்றில் தர்கா (சமாதி) வழிபாடு :
==================================
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
- புறநானூறு
விளக்கம் :
பகைவர் படைகளின் முன்னின்று மேலெதிர்த்து வராதவாறு தடுத்து, அவர்தம்
கொல்லும் யானையை வென்று, அப்போரில் தாமும் வீழ்ந்து நடுகல்லானவரின்
நடுகல்லைத் தொழுதலையன்றி, நெல்லும் பூவும் சொரிந்து வழிபடச் சிறந்த
கடவுளும் வேறு கிடையாது.
இங்கு நடுகல்லைத் தொழுவது என்றால் வெறும் கல்லையோ (அ) வெறும் கற்சிலையையோ
வணங்குவது என்று பொருளாகாது. அது இறந்தவரின் உடல் அடக்கம்செய்யப்பட்டுள்ள
சமாதியை வணங்குதல் என்றுதான் பொருள்படும். நடுகல் என்பது இறந்தவரின்
சமாதியில் அடையாளத்துக்காய் நடப்படுவதேயன்றி வேறில்லை.
இந்த புறநானூற்றுக் கால தமிழ்மரபை தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது
கடைசிக்காலம்வரை உறுதியாகக் கடைபிடித்தார். ஈழப்போர்க்களங்களில்
எதிரியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த தமிழர்களின் உடல்கள் அனைத்தையுமே
முறைப்படி அடக்கம் செய்யவைத்து சமாதியாக மாற்றினார். (ஆனால் தற்போது
அவ்விடங்களை எதிரிகள் அழித்து தரைமட்டமாக்கிவிட்டதாக தெரிகிறது.)
வீடுகளுக்கு அருகே வேப்பமரங்களிலோ (அ) அதற்கு அருகில் ஒருகல்லை
நட்டுவைத்தோ வீடுகளில் விளக்கேற்றிவரும் வழக்கம் இன்றைக்கும்
கிராமப்புறங்களில் காணக்கிடைக்கிறது.
முற்காலத்தில் தமது குடும்பத்தில் வயது முதிர்ந்தவர்கள் இயற்கையாக
இறந்தாலோ (அ) குழந்தைகள் பிறந்தவுடனேயே இறந்தாலோ வீட்டிற்கு அருகிலேயே
வேப்பமரத்துக்கு அடியில் புதைத்து வைப்பார்கள். அந்த வேப்ப
மரத்திலிருக்கும் வேப்பஇலைகளை ஒடித்து மந்திரித்து விடுவார்கள்.
குறிப்பிட்ட அச்சமாதிகளின் அருகில் அமர்ந்து கொண்டுதான் சாமியாடி
குறிசொல்வார்கள். இவ்வழக்கம் 60 ஆண்டுகளுக்கு முன்புவரைகூட தமிழகத்தில்
உயிர்ப்புடன் இருந்திருக்கிறது.
அந்நியர்களின் கோயில் பண்பாட்டுத் தாக்குதல்களால் நாளடைவில் இம்முறை
மருவி வெறும் வேப்பமரத்தையும், செங்கற்களையும் நட்டுவைத்து வணங்கும்
முறையாக மாறிவிட்டது. ஆனால் இசுலாமியர்கள் மட்டும் இந்த உருவமில்லா சமாதி
(தர்கா) வழிபாட்டு முறையை அச்சு பிசகாமல் இன்றுவரை கடைபிடித்து
வருகின்றனர்.
உலகின் மிகத்தொன்மைவாய்ந்த உருவமில்லா சமாதிவணக்கச் சமயங்கள் அதன்
எதிரிகளால் மிகக்கடுமையான முறையில் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. அதில்
ஆசீவகத்தின் கதை ஏற்கனவே முடிந்துவிட்டது. இசுலாமின் கதை ஷிர்க்ஒழிப்பு
என்ற பெயரில் முடிந்துகொண்டே இருக்கிறது. சீக்கியத்தின் கதையும் நாட்களை
எண்ணிக்கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக