சி.பா.அருட்கண்ணனார் , 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — அருகோ
மற்றும் 14 பேர் உடன்.
ஏ...ஏ...இந்தியாவே...!
நெடுந்தொடர் - 8
மக்கள் சீனத்தின் மாண்புமிகு புரட்சியாளர் மா.வோ., புரட்சிப் போர் வெற்றி
அடைந்ததையடுத்து, மக்கள் சீன அரசின் சார்பில் உலக நாடுகளுக்கு விடுத்த
முதற் செய்தியில், “இன்று மக்கள் சீனம் மலர்ந்து, அது நடைமுறைக்கு
வந்துள்ளது; இந்நாள் வரை மக்கள் சீன நாட்டைப் படைத்திடத் நெடும்போர்
தொடுத்து வெற்றி பெற்றுள்ள மக்கள் சீனப்படை, இன்றுமுதல் சீனாவில் வாழும்
அனைத்து மக்களின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதோடு, மக்கள் சீன நாட்டிற்கு
உள்ளேயும் வெளியேயும் வாழும் சீனர்களின் பாதுகாப்பிற்காகவும் பாடுபடும்;
உலகின் எந்த மூலையிலேனும் சீன மக்களுக்கு ஊறு நேர்விக்கப்படும
ாயின், மக்கள் சீனப் படை உடனே தலையிட்டு உரிய போர் நடவடிக்கையை மேற்கொள்ளும்”,எ
ன்ற கருத்தினையும் இடம் பெறச் செய்தார் . அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க
பெரு முழக்கத்திற்குப் பின், இன்றுவரை எந்த நாட்டிலும் எந்தச்
சீனருக்கும் எந்தச் சிறு தீங்கும் சீனர் என்பதற்காக நேர்ந்தது என்ற
செய்தியில்லை. இவ்வியப்புறு நடப்பு எப்படி இயல்வதாயிற்று?
ஒரு பொது மொழியும் அப்பொதுமொழி பேசும் மக்கள் தொடர்ச்சியாக வாழ்நிலமும்
அப்பொதுமொழி பேசும் தொடர்நில மக்கள், “தாம் ஓரின மக்கள்”, என்ற உளவியல்
உருவாக்கம் பெற்ற நிலையும் ஒரு பொதுப் பொருளாதாரமும் வரலாற்று
வளர்ச்சியின் ஊடாகக் கொண்ட ஓர் இயல்பான நாடு, சீன நாடு. அதனால்தான்
அந்நாட்டு அரசமைப்பும் அரசத் தலைவனும் மக்கள் சீனத்தில் வாழும் ஒவ்வொரு
சீனனையும் சீனர் வழிவழியாக வந்து பிற நாடுகளில் வாழும் ஒவ்வொரு சீனனையும்
தம் இனம் எனவும் தம் உறவு எனவும் இயல்பாகக் கருதி, அவர்களுடைய பாதுகாப்பே
முதன்மைப் பணி என்று கடமையாற்றும் நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இனி, இந்தியாவிற்கு வருவோம்; பிரிட்டிசு இந்தியா என்ற நாடே, ஆங்கிலேய
வணிகப்படை அரம்பர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை நாடு; அதில் அடிமைப்பட்ட
பல தேசிய இனங்கள் சிறைப்பட்டிருந்தன; 1947-இல் ஆங்கிலேயர் அகன்ற பொழுது
அதிகாரத்தைப் பெற்ற வருண நெறி மனுவியர்களும் அந்நெறிசார்ந்த பெரு
முதலாளிகளும் சேர்ந்து அந்நாட்டிற்கு ‘இந்திய ஒன்றியம்’ அதாவது ‘பாரத
ஒன்றியம்’ என்று பெயரிட்டுக் கொண்டார்கள். ஒரு பொது மொழியும் ஒருமொழியின
மக்கள் என்ற உளவியல் உருவாக்கமும் வரலாற்று வளர்ச்சியின் ஊடாகப்
பெற்றிராத இந்தியா, ஓர் இயல்பான நாடாக என்றுமே இருந்ததில்லை. ஓர் இயல்பான
நாடென்றால், அந்நாட்டு மகன் ஒவ்வொருவனும் நாட்டிற்காக இருப்பான்;
ஒட்டுமொத்த நாடும் ஒவ்வொருவனுக்காகவும் இருக்கும். இந்தியா 1947-இற்கு
முன்னும் பின்னும் ஒரு செயற்கையான நாடே; 1947-இற்கு முன் மக்கள் அனைவரும்
ஆங்கிலேயனுக்கு அடிமை; 1947-இற்குப் பின் அதிகாரத்தைக் கைமாற்றி வாங்கிக்
கொண்ட வருணநெறி மனுவாளர்க்கும் அந்நெறியை ஊடகமாகக் கொண்டு மக்களைச்
சுரண்டும் பெருமுதலாளியர்க்கும் சேர்த்து, மக்களனைவரும் அடிமை.
செயற்கையான நாடென்பதால், படை வலிமையால் தொடர்ச்சியான ஒரு நிலப்பரப்பும்
ஒரு பொதுப் பொருளாதாரமும் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வரலாற்றின்
ஊடாகக் கனிந்திருக்க வேண்டிய ஒர் இந்தியப் பொது மொழியும் இந்தியன் என்ற
ஓரினத்து உளவியல் உருவாக்கமும் இல்லாமல் போயின.
மேற்கண்ட உண்மைகளின் வெளிச்சத்தில் தான், இந்தியாவின் முதல்
தலைமையமைச்சர் நேருவிற்கு, பர்மாத் தமிழர், இலங்கைத் தமிழர் போன்றோர்
இந்திய வழிவழியினராகப் படவுமில்லை; அவர்களுடைய துன்பங்கள் அவர் மனத்தைத்
தொடவும் இல்லை. ஐம்பதாயிரம் ஆண்டுகால முதுமை கொண்ட மொழிக்காரர்கள்,
இந்தியப் பாராளுமன்றத்தில் ஊமைகளாகவும், செவிடர்களாகவும் இருக்க நேர்ந்த
- நேர்கிற இழிவார்ந்த துன்பத்தைத் தன் தேசத்துக்காரர்கள் துன்பமாக அவரால்
புரிந்துகொள்ள முடியவில்லை; புரிந்து கொள்ள முடியாதது தான்; ஏனென்றால்
நேருவின் தேசம் வேறு; தமிழர்களின் தேசம் வேறு.
மேற்கண்ட செய்தியோடு இணைத்து, 1972-ஆம் ஆண்டு உகாண்டாவில், அங்கு
பொருளாதார மேலாளுமை செய்து கொண்டிருந்த வட இந்திய வணிகர்கள் மீது
அந்நாட்டு அதிபர் இடிஅமீன் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிய போது, அப்போதைய
தலைமையமைச்சர் இந்திரா காந்தி பல வானூர்திகளை அனுப்பி நெருக்கடிகால
உதவிகளை செய்ததையும் 2004-ஆம் ஆண்டு (ஆழிப்)பேரலையம் (பிரளயம்)
தமிழ்நாட்டு நாகைப் பகுதியையும் தமிழீழத்துக் கிழக்குக் கடற்கரையையும்
சிங்களக் காலித்துறைமுகத்தையும் தாக்கிய போது அப்போதைய தலைமையமைச்சர்
மன்மோகன் சிங்கு நாகை, தமிழீழப் பகுதி ஆகியவற்றைப் புறக்கணித்துவிட
்டு உடனடியாகக் காலித்துறைமுகத்திற்கு உணவு மருந்துக் கப்பலை
அனுப்பியதையும் எண்ணிப்பார்க்கல
ாம்; இவை போன்று தமிழர் இந்தியராகவும் இந்திய வழிவழியினராகவும் இந்திய
அரசால் ஏற்கப்படாதக் கொடுமைச் செய்திகள் பல.
மேலே கண்ட பகுதியில் விளக்கியவாறு செயற்கையான இந்தியநாட்டுச் சூழல்
தொடர்ந்தால், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களின் ஒற்றுமையின்மையும்
அவர்களை அடக்கிக் கொண்டிருக்கும் செயற்கை நாட்டுப் படைவலிமையுமே செயற்கை
நாடான இந்தியாவை, ஒரு நாடாகத் தக்க வைக்க முடியும்; இந்தியாவை ஒரு
நிலையான நாடாகவும் அதை வருணநெறி மனுவாளர், அவர்தம் கூட்டாளியரான பெரு
முதலாளியர் ஆகியோரின் நிலையான வேட்டைக் காடாகவும் தக்கவைக்க
வேண்டுமென்றால், படைவலிமையின் துணையாலும் சுரண்டலாளர்களின் சுரண்டல்
கொடுமைகளாலும் செயற்கை இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசிய இன மக்களிடையேயும்
ஒரு பொது மொழியாக வருணநெறி மனுவாளர் போற்றும் குறியீட்டுத் தொகையான
சமற்கிருதத்தைப் பெரிதும் தழுவிய இந்தி மொழியை வலிந்து திணிப்பதன்
வழியாகவும் அதன் விளைவாக இந்திமொழி அடிமைகள் என அனைவரிடையேயும் ஓர்
உளவியல் உருவாக்கத்தை உருவாக்குவதின் வழியாகவும் நிறைவேற்ற முடியும்
என்று தெளிந்து கடந்த 66-ஆண்டுகளாக அந்தத் திருப்பணி இந்தியாவெங்கும்
நடந்து கொண்டிருக்கிறது.
பொது மொழி உருவாக்கம் நோக்கிய அந்தத் திருப்பணி தொடங்கப்பட்ட
காலத்திலிருந்தே, சமற்கிருதத்திற்கும் இந்திக்கும் நேர்பகையான தமிழ்மொழி
வழங்கு தமிழர் தேசத்தில் மட்டும்தான் எதிர்ப்பு இருந்து வந்தது;
எதிர்ப்பின் உச்ச கட்ட காலமான 1965-இல், மக்கள்நாயக முறையில்
தீக்குளிப்பு மூலம் தம் எதிர்ப்பைப் பதிவு செய்த இருபதிற்கும் மேற்பட்ட
தமிழர்களின் ஈகத்தை இலால்பகதூர் சாத்திரியின் மக்கள் நாயக வேடம் பூண்ட
இந்தியா கொஞ்சமும் வெட்கமின்றிப் புறக்கணித்ததோடு அல்லாமல் இந்தியப்
படையை அனுப்பி ஈவிரக்கமின்றி ஐநூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களைச்
சுட்டுக் கொன்றது.
காமராசர், பத்தவச்சலம், சுப்பிரமணியம் போன்ற இனக் கருங்காலிகள் காட்டிக்
கொடுத்துக் கொண்டிருக்கவும் தமிழர் இனப் பகைவர்களாம் அண்ணாத்துரை,
கருணாநிதி போன்ற திராவிடர்கள், இந்திக்கும் தமிழுக்குமான போராட்டத்தை,
இந்திக்கும் ஆங்கிலத்துக்குமான போராட்டமாக வருணநெறி மனுவாளன் அரசாசி
துணையோடு மடைமாற்றிக் கொண்டிருக்கவும் ‘இந்திய நாட்டில் இந்திப் பொதுமொழி
ஞாயந்தானே’ என்று கூறித் தமிழர் இன மூலப் பகைவன் ஈ.வெ.ரா. இந்திய
வருணநெறி மனுவாளரின் அடிதாங்கிக் கொண்டிருக்கவுமா
ன நெருக்கடியான காலத்தில், தெளிவு பெற்ற இளந்தமிழர்கள் மட்டும், “இந்திய
நாட்டில் இந்தியை வைத்துக் கொள்; தமிழ்நாட்டிற்குள் திணிக்காதே; இந்திய
நாடு வேறு; தமிழ்நாடு வேறு; தமிழ்நாடு தமிழருக்கே” என்று எதிர்காலத்
தமிழர்மீது நம்பிக்கை வைத்து முழங்கினர்.
உலக வரலாற்றிலேயே மொழி உரிமைக்காக தமிழ்நாட்டு 1965-ஆம் ஆண்டு இந்தி
எதிர்ப்புப் போராட்டத்தைப் போல வீரமும் ஈகமும் நிறைந்த போராட்டம்
நடந்ததில்லை என்பது மெய்நடப்பாக இருந்தும் இந்திய ஆளுமைவெறி அரசு
தமிழர்களின் ஞாயமான போராட்ட உணர்வை முற்றாகப் புறக்கணித்து
முன்னெப்போதையும் விட மிக மூர்க்கமாக இந்தியைப் பல்வேறு துறைகளிலும்
முறைகளிலும் தொடர்ந்து திணித்து வருகிறது.இந்த வன்முயற்சி முழுமை அடைந்து
வெற்றி பெறுமுன், தமிழர்கள் தங்களைத் தமிழர்களாக உணர்ந்தறிந்து,
தமிழர்களாக ஒன்று திரண்டு, தமிழர்களுக்கான முழு இறையாண்மை மீட்புப்
போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியைத் தமிழர் அனைவரும் உணரவேண்டிய
கணம் இது.
தமிழர்களை இந்தியர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குரிய மொழி உரிமையையும்
உயிர் பாதுகாப்பையும் வாழ்வுரிமையையும் வழங்காத நிலையில், தமிழகத்துக்
கனிம வளங்களையும் தமிழர்களுடைய வரிப்பணத்தையும் தமிழர்தம் உழைப்பால்
உருவாகும் பொருள்களின் ஏற்றுமதிப் பயனையும் கொஞ்சமும் வெட்கமில்லாமல்
பிடுங்கிக் கொள்ளும் ஆளுமை வெறிகொண்ட...
ஏ...ஏ...இந்தியாவே...!
நீ...தமிழர் இனப் பகையே...!!
-அருள்நிலா.
57 நிமிடங்கள் · பொத

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக