சனி, 25 மார்ச், 2017

சித்திரை தமிழ்ப்புத்தாண்டு புத்தாண்டு நாட்காட்டி நேரக்கணக்கீடு

aathi tamil aathi1956@gmail.com

14/4/16
பெறுநர்: எனக்கு
என் இனிய நணபர்களுக்கு, சிறிய விளக்கத்துடன், மனம் கனிந்த தமிழ்
புத்தாண்டு வாழ்த்துக்கள் ::::
சித்திரை 1 ஏன் தமிழ்ப் புத்தாண்டு?
சித்திரை திருநாளையே பல்லாயிரக்கணக்க ான ஆண்டுகளாக தமிழ்ப் புத்தாண்டாகக்
கொண்டாடி வருகின்றனர்.
அதற்கான காரணங்கள் பல உள்ளன.

சித்திரை மாதம் புத்தாண்டின்
தொடக்கம் என்பது, வான நூலையும்,
பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக்
கொண்டது.
பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம்
ஓர் ஆண்டு.

சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப்
பிரகாசிக்கும் மாதம், ஆண்டின்
தொடக்கமாகக் கருதப்படுகிறது.

சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள்
நுழைவதிலிருந்து , அந்த
ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள
காலம் சித்திரை மாதம்.
சித்திரையில் துவங்கி,
பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்
மாதத்தின் பவுர்ணமி அன்று வரும்
நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின்
பெயர்.

உதாரணமாக, சித்திரை மாதம்
பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால்
அந்த மாதத்தின் பெயரே சித்திரை.

இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று,
விசாக நட்சத்திரம் வருவதால், அந்த
மாதத்தின் பெயர் வைகாசி.

இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த
அடிப்படையிலே பெயர்கள்
வழங்கப்படுகின்ற ன.

இலக்கிய ஆதாரங்கள்:
"சித்திரையே வா நம் வாழ்வில் முத்திரை பதிக்க
வா' என்று சொல்லும் மரபு இருக்கும்
காரணத்தினால், சித்திரை மாதமே தமிழ்ப்
புத்தாண்டுக்குர ிய பொருத்தமான
நாள் என மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ள ார்.

சோழர் கல்வெட்டுக்களில ும்,
கொங்கு பாண்டியர்
கல்வெட்டுக்களில ும்,
60 ஆண்டுகளின்
பெயர்கள் குறிப்பிடப்பட்ட ு உள்ளன.
அகத்தியரின், "பன்னாயிரத்தில் '
பங்குனி மாதம் கடை மாதம்
என்று குறிப்பிடப்பட்ட ு உள்ளது.

"திண்ணிலை,
மருப்பின் ஆடுதலை' என்று நக்கீரர்
கூறியிருக்கிறார ். இந்தப் பாடலில் வரும்
ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று,
பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில்
விளக்கம் கொடுத்துள்ளார், முனைவர்
ராசமாணிக்கனார்.

புஷ்ப விதி என்னும்
நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம்
கொடுத்துள்ளார்
கமலை ஞானப்பிரகாசர்.

நாமக்கல்
கவிஞரும், "சித்திரை மாதத்தில்
புத்தாண்டு தெய்வம் திகழும்
திருநாட்டில்' என்ற தன் வாழ்த்துப் பாடலின்
மூலம் தமிழ்ப்பண்பாட்ட ின்
தொடக்கம் சித்திரை மாதம்
என்பதைத்தெரிவித ்துள்ளார்.

கோடைக்காலமே முதலாவது பருவம் என, சீவக
சிந்தாமணியில்
வருணிக்கப்பட்டு ள்ளது.

இந்து பாண்டிகை என்றால் இந்தியா முழுதும் ஏன் கொண்டாடப்படவில்லை.

சித்திரை முதல் திங்களை நம்
வழியில் கொண்டாடும் தரணிவாழ்
தமிழர்களுக்கு

இனிய தமிழ்ப்
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக