ஞாயிறு, 19 மார்ச், 2017

ஈழம் சைவம் சாதிஒழிப்பு சூரன் சீர்திருத்தவாதி சாதியம்

athi tamil aathi1956@gmail.com

மார். 13 (6 நாட்கள் முன்பு)
பெறுநர்: எனக்கு
Nadesapillai Sivendran
ஆறுமுக நாவலரது தமிழ்,சைவப் பணிகளுக்கு நிகராக போற்றப்படவேண்டிய,இன்னொரு
விதத்தில் கூறினால் நாவலர் எங்கு சறுக்கினாரோ அந்த இடத்தில் தமிழ்ச்
சமூகத்துக்கு சீரிய வழிகாட்டிய,ஆளுமை சைவப் பெரியார் சூரன்.
சாதியத்துக்கு எதிராகவும் மதமாற்றத்துக்கு எதிராகவும் இரு முனைகளில் ஒரு
சமூக யுத்தத்தை நடத்திய சூரனை தமிழுலகு உரிய விதத்தில் போற்றுவதற்கு
மறந்துவிட்டது.
தமிழ் இனத்தின் பெருமை மிக்க முன்னோடிகளில் ஒருவரான அவரின் புகழ்
குடத்தில் இட்ட விளக்காக இருப்பது வருந்தத்தக்கது.
இனியும் அந்த நிலை நீடிக்க தமிழர்கள் அனுமதிக்கக்கூடாது.
சைவப் பெரியார் சூரன் குறித்த சில கருத்துகள் விக்கிபீடியாவில
ிருந்து,
ஞானப்பிரகாச சுவாமி கத்தோலிக்க மதத்தைப் பரப்பிவந்த வேளையில் அவருடன்
கடிதமூலம் இந்து சமயத்தின் சிறப்புக்களை தர்க்கித்தார்.சூரன்
தாழ்த்தப்பட்டவர் எனத்தெரிந்த கொண்ட ஞானப்பிரகாசர் அவரை மதம் மாற்ற
முயற்சி செய்தார்.
இந்து மதம் தான் எனது மதம் அதிலிருந்த நான் விலகமாட்டேன் என உறுதியாகக்
கூறினார்.உயர் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட சாதி இந்துக்களை
அவமானப்படுத்துவ
தை ஞானப்பிரகாசர் சுட்டிக்காட்டிய போது, நான் ஆசாரமான சுத்த இந்து என
அடித்துக் கூறினார்.மஹாஜனாக் கல்லூரியின் முன்னாள் அதிபர்
திரு.பொ.கனகசபாபதி எழுதிய ‘எம்மை வாழ வைத்தவர்கள்’ எனும் நூலில்
சூரனைப்பற்றி வியந்து எழுதி உள்ளார்.
"இரட்டை முட்கிரீடங்களைச் சுமந்த நமது பெரியார் சூரன் எனும் சுதந்திர
நாயகன்"- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
"இப்பெரியார் நந்தன் சரித்திரத்தில் வரும் பெரிய கிழவனாரை எனக்கு
ஞாபகப்படுத்தினார்"- கல்கி கிருஷ்ணமூர்த்தி (இலங்கைக்கு வந்து இந்தியா
திரும்பிய பின்னர் கல்கியில் தொடர்ச்சியாக எழுதிய இலங்கையில் ஒரு வாரம்
கட்டுரையில் சூரனைப் பற்றி எழுதும் போது)
"எங்கடை சைவத்தையும் எங்கடை தமிழையும் காப்பாத்தியது ஆறுமுகநாவலர் அல்ல
சூர்ப்புதான், சூரன்தான்"- ராஜ ஸ்ரீகாந்தன்('தத்து’ என்ற சிறுகதையில்)
‘சாதியம் பீடித்த சமூகத்திலே சுதேச நிறுவனங்களிலும் இடமில்லாமல்,அதை
மற்றவர்கள் பயன்படுத்தும் உள்நோக்கையும், கல்விக்காக மதம் மாறும்
பிரமையையும் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களால் ஒதுக்கப்பட்டவர்
களுக்கு உருவாக்கப்பட்ட தேவரையாளி கல்வி நிறுவனம் சுயமரியாதையின்
ஈழத்தமிழ் வெளிப்பாடும் என எம்மை வாழவைத்தவர்கள் என்ற நூலின்
அணிந்துரையில் குறிப்பிடப்பட்ட
ுள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்களை,இந்து மதம் புறக்கணித்ததனால் டாக்டர் அம்பேத்கர்
புத்த மதத்துக்கு மாறினார். அப்பொது அவரது சமூகத்தைச் சேர்ந்த 3 லட்சம்
மக்கள் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினார்கள்.ஆனால் சூரன்
அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. தனது கிராமத்து மக்களும் அயல்
கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களும் மதம் மாறக்கூடாது என்பதற்காக
இந்துப் பாடசாலையை உருவாக்கினார் என்கிறார் திரு.பொ.கனகசபாபதி.
தேவரையாளி ,இந்துக் கல்லூரி, எனும் போது இருவர் எமது எண்ணத்தின் முன்
தோன்றுவார்கள். அவர்களில் தேவரையாளி சைவப் பாடசாலையின் ஆரம்ப கர்த்தா
பெரியார் கா.சூரன் அவர்களும் தொடர்ந்து தேவரையாளி கனிஸ்ட பாடசாலையை வதிரி
தேவரையாளி இந்துக் கல்லூரியாக்கி வடமாகாணத்திலே முன்னோடிக் கல்லூரிகளில்
ஒன்றாக வளர்த்தெடுத்த பெருமை அதிபர் க.மூ.சி.சீனித்தம்பிக்கே உரியதாகும்.
1914 ஆம் ஆண்டிலே பெரியார் சூரன் அவர்களின் முயற்சியாலும் வதிரி மக்களின்
ஒத்துழைப்பாலும் தேவரையாளி சைவக்கலைஞான சபை என்ற அமைப்புத்
தோற்றுவிக்கப்பட்டது. அதன் மூலம் தேவரையாளி ,இந்துக் கல்லூரி முதலில் ஓர்
ஆரம்பப் பாடசாலையாக ஒரு சிறிய ஓலைக் கொட்டிலில் ஸ்தாபிக்கப்பட்டது.
ஏறக்குறைய 22 ஆண்டுகளின் பின்னர், 1936 ஆம் ஆண்டிலே ‘சைவக் கலைஞான சபை’
பரவலாக்கப்பட்டமையால் வதிரி,அல்வாய் கொற்றாவத்தை,கரவ
ெட்டி மேற்கு ஆகிய கிராம மக்களின் உதவியுடன் ,இந்தப் பாடசாலை மேலும்
விருத்தியாக்கப்பட்டது.
அக்காலம் வடமாகாணத்தில் சாதி என்ற பெயரால் அநியாயமாக உரிமைகள்
மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு கல்விகூட வழங்குவதற்கு கருணை காட்டாத
இருண்ட காலமாகும். ‘நல்ல சமயமடா இதை நழுவ விடுவாயோ’ என்ற கோட்பாட்டிலே
அச்சமூகத்தினரிட
ையே சலுகைகளையும் வசதி வாய்ப்புக்களையும் காட்டி ‘ தவிச்ச முயலை’
அடிப்பது போன்று சமய மாற்றம் செய்ய மிஷனரிகள் பெரிதும் உழைத்தகாலம்.
விரக்தியின் காரணமாகவோ,சலுகைகளின் காரணமாகவோ மனம் மாறாமல்
சுயமரியாதையுடனும் சுயகௌரவத்துடனும் வாழ விரும்பிய ஒரு சமூகம்,
கல்வியையும் பொருளாதார சுதந்திரத்தையும் கையிலெடுத்து தமக்கென ஒரு
பாடசாலையையும்,யாரதும் தலையீடு இல்லாத சுதந்திரமான தொழிலையும்
தேர்ந்தெடுத்து, தமக்கென வழிபாட்டுக்கான கோயில் போன்றவற்றையும் தாமே
ஸ்தாபித்து யாரிலும் தங்கியிராத வியாபார நிறுவனங்களை உருவாக்கிய
பொருளாதார தன்நிறைவைக் கண்டதால் அவர்களின் பொருளாதாரப் பின்னணியே
தங்குதடையின்றி இந்தப் பாடசாலை நிறுவ பக்கதுணையாக நின்றதென்றால்
மிகையில்லை.
அத்தோடு வடமாகாணத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த சிறுபான்மைத் தமிழ்
சமூகத்தினரில் ஒரு பகுதியினர் பெரும்பான்மைச் சமூகங்களின் காணிகளிலேயே
வாழ்ந்து வந்தனர். ஆனால் ,அப்பகுதி மக்கள் தமக்கென சொந்தமான காணிகளில்
வாழ்ந்ததனால் பெரும்பான்மை சமூகத் தலையீடெதுவுமின்றி சுதந்திரமாக
பாடசாலையை ஸ்தாபிக்கத் தலைப்பட்டார்.
இச்சுதந்திரம் இல்லாத நிலையொன்று இருந்திருந்தால் அவர்களின் கல்வி
வளர்ச்சியைத் தடுக்க அவர்கள் வாழும் காணிகளிலிருந்து
விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள் அல்லது வீடுகள் எரிக்கப்பட்டிரு
க்கும். இப்படியான சூழ்நிலையே 90 வருடங்களுக்கு முன்பு வடமாகாணத்தில் நிலவியது.
பல நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழினத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட
கொடூரமாக மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில் பிறந்தவரான சூரன், கல்வி, அறிவு
அதனூடாகப் பெறப்படும் விழிப்புணர்வு, சைவசமயப்பற்று என்பவற்றின் மூலமே
நிரந்தர விடுதலையையும், மேம்பாட்டையும் அடையலாம் என்ற
சிந்தனையுடனும்,தொலை நோக்குடனும் செயற்பட்டுள்ளார்.
‘தமிழழையும் சைவத்தையும் காத்தவரென போற்றிக் கொண்டாடப்படும் ஸ்ரீலஸ்ரீ
ஆறுமுகநாவலர் இந்தத் தமிழ்ச் சமூகத்தை மனிதர்களாகவே மதிக்கக்கூடாதென்று
உறுதிபடக்கூறிச் செயலாற்றினார்.நாவலர் இறந்து (1879) ,இரண்டு ஆண்டுகளின்
பின்னர் ,பிறந்த (1881) சூரனோ இரட்டை முட்கிரீடங்களைச் சுமந்து கொண்டு
ஒருபுறம் ஆறுமுகநாவலரின் வழித்தோன்றல்களின் கொடூரமான உரிமை மறுத்தல்கள்,
மறுபுறம் ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களின் மதமாற்றல்களுக்க
ு இடையே சைவத்தை உறுதியாகக் கடைப்பிடித்தமைய
ும்,அதன் பொருட்டு வதிரி, தேவரையாளி வித்தியாலயத்தை நிறுவியமையும் தேசிய
மட்டத்தில் சூரனைத் தேசியப் பெரியாராக் கொள்ளவேண்டும் என்ற பேராசிரியர்
கா.சிவத்தம்பி அவர்களின் கூற்றுக்கு வலுச் சேர்ப்பவையாக உள்ளன.
சைவத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டு வந்த கொடுமைகளுக்காக இச்சமூக மக்கள்
அனைவருமே மதமாற்றம் செய்து கொண்டிருந்தாற்கூட அது
தவறாகக்கொள்ளப்பட்டிருக்கமாட்டா
து என அமரர் ராஜஸ்ரீகாந்தன் அவர்கள் ‘சூரன் சுயசரிதை’ என்ற நூலுக்கு
எழுதிய பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.
நான் இந்தச் செயற்றிறனை வைத்தே மேதை அம்பேத்கரிலும் பார்க்க பெரியவர்
சூரனை மதிக்கிறேன். 'மதம் பிழையானதா மதத்தைக் கையாள்பவர்களுடைய நெறி
பிழையானதா என்பதே’ கேள்வி.அம்பேத்கர் அவர்கள் மதத்தைக் கையாளர்பவர்கள்
மேலுள்ள கோபத்தால் மதத்துக்கு எதிராக இயங்கினார்.பெரியவர் சூரனோ மதத்தை
வெறுத்து ஒதுக்காமல் அதற்குள்ளேயே இருந்து தனது போராட்டங்களை
நடத்தினார்.அம்ப
ேத்கர் அவர்கள் மதமாற்றத்தினால் பெற முனைந்ததை சூரன் சைவத் தமிழ்ச்
சமூகமாகவே நின்று பெற முனைந்தார்.அவரது திடசித்தம் பாராட்டப்படவேண்டியது
என்கிறார் அதிபர் பொ.கனகசபாபதி.

1 கருத்து:

  1. சூரனைப்பற்றிய பதிவுக்கு நன்றி.
    அன்புடன்
    சூரனின் பேரன்
    சூரன்.ஏ.ரவிவர்மா

    பதிலளிநீக்கு