|
மார். 3
![]() | ![]() ![]() | ||
தமிழ்நாட்டில் இயற்கைக்கு எதிரான பாதுகாப்பற்ற தொழில்நுட்பங்களை நாங்கள்
ஏன் எதிர்க்கிறோம்???
டிசம்பர் 2, 1984. நள்ளிரவு. கடுங்குளிர். நாய்கள் ஓலமிடுகின்றன. ஊர்
பாதித் தூக்கத்தில் எழுகிறது. மூச்சுத் திணறுகிறது. காற்றுக்காகக் கதவைத்
திறந்து வெளியே வருபவர்கள் காற்றில் எரிச்சலை உணர்கிறார்கள். இன்னதென்று
யோசிக்கும் முன் ‘யூனியன் கார்பைடு’ தொழிற்சாலையிலிருந்து அபாயச் சங்கு
ஒலிக்கிறது. ஓடுகிறார்கள். சரிகிறார்கள். சாகிறார்கள். விடிந்தபோது
வீதியெங்கும் மனிதப் பிணங்களின் எண்ணிக்கைக்கு இணையாக கால்நடைகள்,
பறவைகளின் உடல்கள். அன்று தொடங்கி போபால் மக்கள் போராடுகிறார்கள்.
கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் செத்திருக்கிறார்கள். 10 லட்சத்துக்கும்
மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிறக்கும் ஒவ்வொரு
குழந்தையும் குறைபாடுடைய குழந்தையாகப் பிறக்கிறது. ஆலையைச் சுற்றியுள்ள 3
கி.மீ. பரப்பளவுக்கு நிலத்தடி நீர் நஞ்சாகியிருக்கிறது. இன்னமும்
‘யூனியன் கார்பைடு’ விட்டுச்சென்ற 350 டன் நச்சுக் கழிவு
அகற்றப்படவில்லை.
*இந்தியாவில் தொழில் தொடங்க உரிமம் கோரி, யூனியன் கார்பைடு நிறுவனம்
1.1.1970-ல் விண்ணப்பித்தது. நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த
அந்த விண்ணப்பத்தின் மீது 31.10.1975-ல் திடீரென முடிவெடுக்கப்பட்டு
ஒப்புதல் தரப்பட்டது. நெருக்கடி நிலை அறிவிப்பு அமலில் இருந்த காலம் அது.
*போபால் ‘யூனியன் கார்பைடு’ ஆலை மிக அபாயகரமான ரசாயனங்களைக் கையாள்வது
அன்றைக்குப் பெரும்பான்மை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கொள்கலன்
வெடித்து விஷ வாயு கசிந்தால், எப்படி எதிர்கொள்வது என்பது அங்குள்ள
மருத்துவர்களுக்குக்கூடச் சொல்லப்பட்டிருக்கவில்ல*போபால் ‘யூனியன்
கார்பைடு’ ஆலை மிக அபாயகரமான ரசாயனங்களைக் கையாள்வது அன்றைக்குப்
பெரும்பான்மை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கொள்கலன் வெடித்து விஷ
வாயு கசிந்தால், எப்படி எதிர்கொள்வது என்பது அங்குள்ள
மருத்துவர்களுக்குக்கூடச் சொல்லப்பட்டிருக்கவில்லை.
*சம்பவம் முடிந்து நான்காவது நாள் ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத் தலைவர்
வாரன் ஆண்டர்சன் போபால் வந்தார். அவருக்கு தண்டனை வாங்கித் தர மத்திய,
மாநில அரசுகள் முயலவில்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்
என்று தங்களது அப்போதைய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து உத்தரவு
வந்ததாகவும் இந்த வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரியே குற்றம்
சாட்டியுள்ளார். ஆகையால் மத்தியப் பிரதேச அரசு அவரையும் அவருடைய இந்திய
சகாக்களையும் கைதுசெய்தது. அவருடைய ஆலையின் விருந்தினர் மாளிகையிலேயே
அவர் தங்கவைக்கப்பட்டார். அடுத்த சில மணிநேரங்களில் ஆண்டர்சனை
விடுவித்தார் முதல்வர் அர்ஜுன் சிங். அரசு விமானத்திலேயே டெல்லிக்கு
அனுப்பி, அங்கிருந்து அமெரிக்கா செல்ல வழிவகுத்தார்.இந்த விஷயத்தில்
ராஜி்வ் காந்தி தலைமையிலான அப்போதைய மத்திய அரசின் உத்தரவு இல்லாமல்,
ஆண்டர்சனை அர்ஜூன் சிங் டெல்லிக்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்திருக்க
வாய்ப்பே இல்லை என்றே பலரும் கருதுகின்றனர்.இந்நிலையில் ஆண்டர்சென்
அப்போதைய ஜனாதிபதி ஜெயில் சிங்கை அவர் சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள்
வெளியாகியுள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின் அமெரிக்காவுக்கு சென்ற அவர்
தலைமறைவாகிவிட்டார்.ஆண்டர்சனை தனி விமானத்தில் டெல்லிக்குக் கொண்டு
வருவது, அவரை ஜனாதிபதியுடன் சந்திக்க வைப்பது, நாட்டை விட்டே தப்ப
வைப்பது போன்ற செயல்களை மாநில அரசு மட்டும் செய்திருக்க வாய்ப்பில்லை.
இதை மத்திய உளவுப் பிரிவுகள் தான் ஒருங்கிணைத்து செய்திருக்க வேண்டும்
என்று தெரிகிறது.
ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் செய்தும்
அமெரிக்கா அனுப்பி வைக்கவில்லை என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில்,
அவரை பத்திரமாக தப்ப விட்டதே அப்போதைய காங்கிரஸ் அரசு தான் என்பது
இதன்மூலம் நிரூபணமாகிவிட்டது. அன்றைய தினம் மத்தியப் பிரதேசத்தில்தான்
சாகர் என்ற ஊரில் இருந்தார் வெளியுறவுத் துறையைத் தன்வசம் வைத்திருந்த
பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், ஆண்டர்சன் விவகாரம் அவருக்குத் தெரியாது
எனச் சாதித்தனர் காங்கிரஸ் தலைவர்கள். இது தொடர்பான பதிவுகளே வெளியுறவுத்
துறையிடம் இல்லை என்று பின்னாளில் அறிவித்தது அரசு.
*அமெரிக்க நீதிமன்றங்களை நாட ஆரம்பித்தார்கள் போபால் மக்கள்.
அமெரிக்காவில் இந்த வழக்கை நடத்தினால், பெரும் தொகையை இழப்பீடாகத் தர
வேண்டியிருக்கும்; இந்தியாவிலேயே வைத்து முடித்துவிடலாம் என்று ‘யூனியன்
கார்பைடு’ நிறுவனத்துக்கு ஆலோசனை சொன்னவர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற
வழக்கறிஞர்கள். பல ஊடகங்களும் விலைபோயின. ஆலை நிர்வாகத்தின்
அலட்சியத்தால் நடந்த இந்தச் சம்பவத்தை, தொழிலாளர்களின் சதியால் நடந்தது
என்றெல்லாம்கூட எழுதின.
உலகின் மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த
விபத்து தொடர்பாக யூனியர் கார்பைடு நிறுவன அமெரிக்க தொழிலதிபரும், தலைமை
செயலதிகாரியுமான வாரென் ஆண்டர்சனை போலீசார் கைது செய்தனர். வழக்கு
விசாரணையின்போது ஜாமீன் பெற்று ஜாமீனில் வந்த அவர் அமெரிக்கா
சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் இந்தியாவில் நடந்த வழக்கில்
ஆஜராகவில்லை. அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு
அமெரிக்காவுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இந்நிலையில்
அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாநிலத்தில் இருக்கும் வெரோ பீச் பகுதியில்
உள்ள மருத்துவமனையில் ஆன்டர்சன் உடல்நலக்குறைவு காரணமாக
அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி தனது 92வது வயதில்
மரணம் அடைந்தார். பல்லாயிரம் பேர் இறந்த சம்பவம் தொடர்பான வழக்கு
விசாரணையை சந்திக்காமலேயே ஆன்டர்சன் அமெரிக்காவில் வாழ்ந்து
இறந்துவிட்டார். இத்தகைய கொலைகுற்றவாளி வாரென் ஆண்டர்சனை பிணையில் வெளியே
கொண்டுவர வாதடியது நம்ம #நிதியமைச்சர் #அருண்ஜெட்லீ தான்!
போப்பால் யூனியன் கார்பைடு ஆலையில் நச்சு வாயு வெளிப்பட்டதால் ஏற்பட்ட
பேரழிவு நிகழ்வதற்கு முன்னரே நிலத்தடி நீர் மாசடையத்
தொடங்கிவிட்டிருந்தது. ஆலையிலிருந்து வழக்கமாக வெளியான கழிவுநீரில்
நச்சுக் கலந்த வேதிப்பொருள்கள் அடங்கியிருந்ததால் அந்த இடர்ப்பாடு
ஏற்பட்டிருந்தது. 2005ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் போப்பால் பேரழிவால்
பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குத் தூய குடிநீர் வழங்க மாநில அரசும்
நகர ஆட்சியாளரும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவு
செயல்படுத்தப்படாமலே கிடப்பில் போடப்பட்டது. மக்களுக்கு வழங்கப்படுகின்ற
குடிநீர் இன்றுகூட மஞ்சள் நிறம் கொண்டு, வழக்கமான குடிநீரின் சுவை இன்றி
சப்பென்று உள்ளது. இதனால் மக்களின் நலம் பெருமளவு பாதிப்புக்கு
உள்ளாகின்றது.
யூனியன் கார்பைடிடம் இருந்து தொழிலகத்தை வாங்கிய டோ கெமிக்கல்சு நிறுவனம்
நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்க தனக்குப்
பொறுப்பில்லை என்று கூறிவருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு
அடிப்படைத் தேவையான தூய நீரும், நச்சு கலவாத சூழலும் கிடைக்குமாறு அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது.
அந்த ஆணை செயலாக்கம் பெறுகிறதா என்று கண்காணித்து 2012 ஆகத்து 13ஆம் நாள்
அறிக்கை வழங்குமாறு பணித்து ஒரு குழுவையும் நீதி மன்றம் அமைத்தது
இந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம், குற்றம்சாட்டப்பட்ட 8
பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய்
அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. உடனே அவர்களுக்கு ஜாமீனும்
வழங்கப்பட்டது. யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 5 லட்சம்
ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தின் அப்போதைய
தலைவர் ஆண்டர்சன் குறித்து தீர்ப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை
என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் குமுறல்.
போபாலில் 14 ஆண்டுகள் இயங்கிய யூனியன் கார்பைடு நிறுவனம், தொழிற்சாலை
வளாகத்தில் 11 லட்சம் டன் நச்சுக் கழிவுகளை நிலத்தில்
புதைத்துள்ளதாகவும், அந்த தொழிற்சாலையைச் சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டர்
சுற்றளவு பரப்பில் 340 டன் நச்சுக் கழிவுகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும்
அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பேரழிவின் பாதிப்பிலிருந்து இன்னும்
வெளியேற முடியாமல் தவிக்கும் போபால் மக்கள் நவீன சிகிச்சைக்கும் தொடர்
சிகிச்சைக்கும்கூட போதிய உதவியில்லாமல் பரிதவிக்கிறார்கள். அந்தக்
கழிவுகளை எப்படி அகற்றுவது என்று நம் அரசுக்கு இன்னும் தெரியவில்லை.
இதற்கென ரூ. 25 கோடி நிதி ஒதுக்கி ஜெர்மனியைச் சேர்ந்த ‘ஜி.ஐ.எஸ்.’
நிறுவனத்திடம் கழிவகற்றும் பணியை ஒப்படைத்தது. ஆனால், கழிவுகளை
அகற்றுவதில் உள்ள சவால்கள், விபத்து அபாயம், அதற்குப் பொறுப்பேற்கும்
சுமை உள்ளிட்ட விஷயங்களை யோசித்த அந்த நிறுவனமும் பின்வாங்கிவிட்டது.
கழிவு நிலத்தையும் நீரையும் நஞ்சாக்கி மனிதர்களை
முடக்கிக்கொண்டிருக்கிறது. துரோங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை
பார்க்கிறோம். விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பவம்
நடந்து 32 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சரியாக இழப்பீடு கிடைக்கவில்லை.
மரணத்தின் மடியில் இருந்தாலும் இன்றைக்கும் நீதி கேட்டு
போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர் மக்கள். ஆனால் இந்த இந்த மண்ணை
ஆள்பவர்களின் செவிகளுக்குத்தான் அவை இன்னமும் எட்டவில்லை. நாட்டில்
அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் அக்கறையில்
சிறிதளவேணும் மண்ணின் மைந்தர்களை காப்பாற்றுவதில் செலுத்தவேண்டும்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
அப்துல்கலாம் அவரிடம், போபால் விஷவாயு கசிவு வழக்கு தீர்ப்புக் குறித்து
நிருபர்கள் கேட்டதற்கு, நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்புவது
சரியாக இருக்காது. அதே நேரத்தில், இந்தத் தீர்ப்பு எனக்கு வேதனை
அளித்தது. தீர்ப்பைப் பற்றி படித்துப் பார்த்தேன். ஒரு வழக்கில் 26
ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்திருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு
வருத்தத்தை கொடுத்தது.நமது சட்டமும், நீதித்துறையும் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு சரியான தீர்ப்பை கொடுக்கவில்லை என்பது தான் எனது தனிப்பட்ட
கருத்து என்றார்.
இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். சட்டம், நீதி, நிவாரணம் என்ற
பெயர்களில் ஒளிந்து கொண்டு முதலாளிகள் தாம் நடத்தியிருக்கும் பச்சையான
படுகொலையை 26 ஆண்டுகளாக நாசுக்காக நீர்த்துப் போக செய்திருக்கிறார்கள்.
இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள், இருநாட்டு அரசாங்கங்கள் இணைந்து
நடத்தியிருக்கும் இந்த ஏமாற்று வேலையை வைத்தாவது முதலாளித்துவம் என்றால்
அது பயங்கரவாதம்தான் என்பதை நாம் உணரவேண்டும். அப்போதுதான் இன்னமும்
பரிதாபமாய் போபால் படுகொலைக்காக உயிரற்ற குரலில் போராடி வரும் அந்த பாமர
மக்களது நீதியின் பக்கம் நாமும் இணைய முடியும்.
"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்"
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை
முடிசூடும் தமிழ் மீது உறுதி, வழிகாட்டி எம்மை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக