|
20/4/16
| |||
Nakkeeran Balasubramanyam
தமிழ் மொழியா இல்லை திராவிட மொழியா 01
பன்மொழி கொண்ட இப்புவியில், அதன் மொழியுலகில், தமிழின் நிலையென்ன?
பல்வேறு மொழியிலாலர்களும், மொழியாய்வாளர்களும் தமிழை எத்தகைய கோணத்தில்
அணுகினாராம்? தமிழ் எவ்வாறு நோட்டமிடப்பட்டதாம்? எத்தகைய நெறியில்
வைத்துத் தமிழ் ஆராயப்பட்டதாம்? தமிழ் எத்தகுதியில் வைக்கப்பட்டதாம்?
எல்லாம் போக உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டனவா? இக்கேள்விகளுக்கான விடையை
இங்கே காண்போம்.
அறிஞர் டபிள்யு. சுமித் (W. Smith) வகுத்த கருத்தின்படி, இவ்வுலகின்
மொழிகளனைத்தும் மூன்று தலைக்குடிகள் ஆக்கப்பட்டன. அவை,
1. ஆரியம் (Aryan)
2. செமியம் (Semetic)
3. துரேனியம் (Turanian) ஆகும்.
பல மொழியறிஞர்களும் இதனை ஏற்றனர். இன்னும் ஒவ்வொரு தலைக்குடியிலும்
பற்பலக் குடும்பங்களை வகுத்தனர். இப்படியே இப்புவியின் மொழிக்
குடும்பங்கள் 27 என்று பிரெஞ்சுக் கழகமும் (French Academy) 30 முதல் 40
வரையென்று இன்னும் பல அறிஞர்களும்கூட வகுத்தனர். ஆயினும், விதி (சதி?)
இங்குதான் விளையாடியுள்ளது. இப்படி வகைப்படுத்தப்பட்ட மூன்று
தலைக்குடிகளில், தமிழை ஒரு தலைக்குடியாகவே இவர்கள் கொள்ளவில்லை
என்பதுதான் வேதனை. ஆனால் தமிழைத் தனியாக வகுக்காமல், ‘திராவிடம்’ எனும்
பெயர் கொண்டு, ‘துரேனியம்’ எனும் தலைக்குடியில் கொண்டுபோய் வைத்துத்
‘திராவிடக் குடும்பம்’ என்றனர். இன்னும் வேதனை, இதனைப் பல
மொழியியலாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளமையே. தமிழின் தனித்தன்மை பற்றி
விரிவாகக் கூறும் கால்டுவெல் கூட இக்கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அவ்வளவு ஏன், தமிழ் உணர்வாளராக இனம் காணப்பட்ட நமது பரிதிமாற்கலைஞரும்
கூட ஏற்றுள்ளாரென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! இன்னும் சிலர்
‘அக்கேடிய’ மொழியின் வழிமொழியான பினீசியத்தைச் சார்ந்தது என்றொரு
கருத்தையும்கூட வைத்துள்ளனர்.
ஐரோப்பாவும், ஆசியாவும் கூடிய யுரேசிய மொழிகளை,
1. பழைய ஆசிய மொழிகள்
2. சீன திபேத்திய மொழிகள்
3. அந்தமான் மொழி
4. திராவிட மொழிகள்
என்றெல்லாம் வகைபடுத்தித் தமிழைத் திராவிட மொழித்தொகுப்பில் சேர்த்தனர்.
இங்கே பழைய ஆசிய மொழிகள் என்பதில் சமற்கிருதத்தை அடக்கி, அதனை ஒரு தனிக்
குடும்பமாகவோ, தனித் தலைக் குடியாகவோ குறிப்பிடாமல் இந்தோ-இரானியம்
என்னும் தொகுப்பில் சேர்த்தனர்.
தமிழ், சமற்கிருதம், சீனம், இலத்தீனம், கிரீக்கு, எபிரேயம் ஆகிய ஆறு
மொழிகளும், இவ்வுலகிலேயே தொன்மையானவையாகவும், வழமையான மொழிகளாகவும்
கருதப்படுகின்றன. இதில் தமிழானது, இயற்கையான மொழித் தோற்றமும், இலக்கிய
மற்றும் இலக்கண வளமும் நெறியும் உடைத்தாயும், தற்பொழுதும் பேச்சு
வழக்கிலும், எழுத்து வழக்கிலும் உள்ள உயர்தனிச் செம்மொழியாகும்.
சமற்கிருதமோ, நான்மறை, ஆரங்கம், நாடக இலக்கிய வளமும் கொண்டு, எழுதத்
தனியெழுத்துக்கள் இல்லாவிடினும் வேற்றெழுத்து கொண்டு எழுதப்படுவதாகவும்,
ஆனால் பேச்சு வழக்கில் இல்லாததாகவும் உள்ளது. எனையவையனைத்தும், இத்தனைச்
சிறப்பு இல்லாவிட்டாலும், ஒரிரண்டு சிறப்புக்களை மட்டும் கொண்டுள்ளவை.
இருந்தும், தமிழையும் சமற்கிருதத்தையும் இந்த ஏனைய மொழிகளின் பின் வைத்தே
நோக்கப்படுகின்றன. இதிலும்கூட ஓரவஞ்சனையாய்த் தமிழை இறுதியாய்,
சமற்கிருதத்திற்கும் பின்னாலேயே வைத்தனர். வேடிக்கை என்னவென்றால்,
சமற்கிருதம் பன்நாட்டவராலும், ஆய்விற்குப் பெரிதும் உதிவிகரமான மொழியாகக்
காணப்பட்டது. இவ்வாறு, தமிழ் உயர்தனிச் செம்மொழி (Classical Languages)
என்று நோக்கப்படாமல் நெடுங்காலம் இருந்தது. பெரும் போராட்டத்திற்குப்
பின்னரே, அண்மைக் காலத்திலேயே இவ்வாறு செம்மொழியாகக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்று வரையிலும் ஆய்வாளர்களால் தமிழ் மொழி எவ்வாறு அணுகப்பட்டுள்ளத
ு தெரியுமா? தொன்மைத் தமிழ் தொடக்க காலம் முதல் இத்தகைய ஆய்வாளர்களால்
நேரடியாகத் தமிழ் என்று குறிக்கப்படாமல் திராவிட மொழிக்குடும்பம் என்றே
இதுகாறும் குறிக்கப்பட்டு வந்துள்ளது, இன்னமும் வருகிறது. அதாவது,
சிப்பியைத் திறக்காமலேயே உள்ளிருக்கும் நல்முத்தை விலை பேசுவதைப் போல்
செய்து வருகின்றனர். இம்முறையில் உண்மையான உள்ளீட்டை அறியவியலுமா? ஆக
அன்றுதொட்டு இன்றுவரை இத்தகைய மொழியியல் ஆய்வாளர்கள், தமிழை ஒரு
தலைக்குடியாகக் காணவேயில்லை என்பதுதான் உண்மை. இன்னும் வேறு கூத்துக்கள்
இருக்கின்றன. தமிழ் மொழியை அறியாமலேயே அறிஞர் கோல்புரூக்கு என்பார்
சமற்கிருத, இன்னும் வேறு பிற ஆரிய மொழிக் கருத்துக்களை வைத்தே ‘தமிழ்,
பிராகிருதக் குடும்பத்தைச் சார்ந்தது’ என்று கூறிய கொடுமையும்
நடந்துள்ளது. இப்படியான ஆய்வாளர்களே, தமிழைத் திராவிடத் தொகுப்பில்
வைத்தனர்.
உண்மையில் தமிழைத் திராவிடம் என்றதே திரிபு நிலைதான். தமிழ் என்பதுதான்
திராவிடம் என்று திரிக்கப்பட்டது. ஆனால் திராவிடம் என்றே பலர் காட்டினர்,
எடுத்தும் கொண்டனர்.
தமிழைத் திராவிடம் என்றவர் யாராம்?
இன்னும் வரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக