ஞாயிறு, 19 மார்ச், 2017

இந்தியா மறைமுக மக்களாட்சி நேரடி ஜனநாயகம் இல்லை அரசியல் சட்டம் சனநாயகம் ஓட்டு வாக்குரிமை தேர்தல்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 7
பெறுநர்: எனக்கு
Logan K Nathan
இந்தியா - மறைமுக மக்களாட்சி நாடு.
சட்டம் இயற்றும் அமைப்பிற்கு (Legislative body) மக்கள் தங்கள்
பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதோடு அவர்களின் பங்கு முடிவடைகிறது.
தேர்ந்தெடுக்கப்
பட்ட பிரதிநிதிகள் தங்களுக்குள் பெரும்பான்மையினர் நம்பிக்கை கொண்ட ஓர்
குழுவை (Council of Ministers) நிர்வாகம் (Administration) செய்ய
நியமிக்கும். அக்குழுவில் உள்ளோர் தங்களில் ஒருவரை முதன்மையானவர் (Prime
/Chief) ஆக அங்கீகரித்து அவர் தலைமையில் இயங்கும். இத்தகைய பாராளுமன்ற
முறையிலான, மறைமுக மக்களாட்சி முறையே இந்திய அரசியல் சட்டம்
அங்கீகரித்துள்ளது.
இந்திய ஒன்றியத்தில் உள்ள உறுப்பு மாநிலங்களுக்கும் இதே முறைதான். இதைவிட
சிறந்த, ஜனநாயகத் தன்மை மிகுந்த, தேர்தல் முறைகளும், அரசாங்க முறைகளும்
உலகில் உள்ளன.
தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் ஜனநாயகத் தன்மை மிகுந்த நிறுவனங்களை அடைய
விரும்புவது நியாயமானது தான். ஆனால், அவர்கள் நினைத்த நேரத்தில்
அரசியலமைப்பு முறையை மாற்றுவதற்கு தமிழ் நாடு, சுதந்திரமான தனி நாடு அல்ல
என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

Aathimoola Perumal Prakash
இதைவிட சிறந்த, ஜனநாயகத் தன்மை மிகுந்த, தேர்தல் முறைகளும், அரசாங்க
முறைகளும் உலகில் உள்ளன// உதாரணமாக....?
பிடித்திருக்கிறது · திருத்து · 1 மணிநேரத்திற்கு முன்பு
Logan K Nathan
விகிதாசார முறை தேர்தல், நேரடி மக்களாட்சி முறை.
பிடித்திருக்கிறது · புகாரளி · 58 நிமிடங்களுக்கு முன்
Logan K Nathan
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நேரடி மக்களாட்சி முறை சிறந்த மக்களாட்சி
என கொண்டாடப்படுகிற
து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக