செவ்வாய், 21 மார்ச், 2017

பனை பயன்கள் பழங்கால பங்களிப்பு வழிபாடு பனைமரம் வேளாண்மை விவசாயம்

aathi tamil aathi1956@gmail.com

13/8/16
பெறுநர்: எனக்கு
Selva Kumar > தமிழர் உழவாண்மை வாழ்வியல்
# பனை மரம் தமிழ்நாட்டின் # மாநில மரம். பனை மரத்தை பற்றி
# அறியாமல் இருந்தாலும் அதில் இருந்து கிடைக்கும் # உணவு பொருள்கள் நமக்கு நிறைய
# ஆரோக்கியமான நலன்கள் தருகிறது என்பதையாவது நாம்
# அறிந்துக்கொள்ள வேண்டும்.
இலங்கையில், தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இம்மரம் ஏராளமாக
காணப்படுகிறது. அடி முதல் முடிவரை இதன் எல்லா பாகங்களும் மனிதனுக்கு
உதவுவதால், இதனை “கற்பகத்தரு” என அழைப்பர். இந்தியாவில் சுமார் 8
# கோடி பனை மரங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 5
#கோடி மரங்கள் # தமிழ் நாட்டில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள
்ளது.
# பனையிலிருந்து பூம்பாளையைச் சீவி பெறப்படும்
# பதனீர் குளிர்பானமாக பயன்படுத்தப்படுகிறது. பதனீரை நுரைக்க வைத்தால்
அது போதை தரும் # கள்ளாக மாறுகிறது. பதனீரை காய்த்து கூழ்பதனீராக்கி
அதிலிருந்து # கருப்பட்டி தயாரிக்கப் படுகிறது. இளமையான பனங்காய் #
நொங்கு எனப்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் நொங்கு, பலராலும்
விரும்பி உண்ணப்படுகிறது. பனங்காய் முதிர்ந்து # பனம்பழம் உண்டாகிறது.
இனிப்பு சுவையுடைய பனம்பழம் தனியாகவும், சமைக்கப்பட்டும் உண்ணப்படுகிறது.
பனங்கொட்டையை முழைக்கப் போட்டு அதிலிருந்து
# பனங்கிழங்கு மற்றும் தவுன் பெறப்படுகிறது. மேலும் பனையின் இலைகள்
கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
பனையின் தடி # வீடு கட்ட உத்தரமாகவும், தூணாகவும் பயன்படுகிறது. பனையோலை
வீட்டிற்கு # கூரை வேய பயன்படுகிறது. இது தவிர
# பனையோலை பாய் முடையவும், ஓலைப்பெட்டிகள் செய்யவும், வேலிகள் அமைக்கவும்
பயன்படுகிறது. பனை மட்டைகள்
# நார் தயாரிக்க பயன்படுகிறது. பனந்தும்பு கயிறு தயாரிக்க பயன் படுகிறது.
இவை தவிர பனை மரங்கள் # மழை தருவிக்கும்
# குடைகளாகவும் இருக்கின்றன.
முற்காலத்தில் பனையோலைகளே எழுதப் பயன்பட்டு வந்தன. இன்றும் பல பழைய
நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம். அச்சுத்துறை இல்லாத
காலத்தில் உருவான உலகம் போற்றும்
# திருக்குறள் , # தொல்காப்பியம் , சிலப்பதிகாரம் உள்ளிட்ட அனைத்து தமிழ்
இலக்கியங்களும் பத்திரமாக புதிய தலைமுறைகளுக்குக் கிடைக்கக் காரணம் பனை
ஓலைகள்தான். பனை ஓலைகள் இல்லாவிடில் தமிழுக்கு இவ்வளவு எண்ணிக்கையிலான
பழந்தமிழ் இலக்கியங்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
# புத்த மதத்தில் பனைமரம் புனித மரமாக போற்றப்படுகிறது. திருப்பனந்தாள்,
திருப்பனங்காடு, திருப்பனையூர், திருமழபாடி, திருவோத்தூர் முதலிய சிவ
தலங்களில் பனை மரம் ஸ்தலமரமாக விழங்குகிறது.
பண்டைய தமிழ் இலக்கியத்தில் பனை மரங்களைப்பற்றி ஏராளமான குறிப்புகள்
காணப்படுகின்றன. காதலில் தோல்வியுற்ற காளையர் மடலேறுதல் நிகழ்ச்சியில்
பனை மட்டைகளை வைத்து குதிரை செய்து ஏறியதாக இலக்கியங்கள் கூறுகின்றன.
பழந்தமிழ் நூலான தலவிலாசம் பனைமரத்தின் 801
# பயன்களை கூறுகிறது.
தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக பனைமரம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக
விழங்கியது.
பால் சுரந்து குடும்பத்தை காப்பாற்றும் பசுக்கள், பயன்பாடற்றவுடன்
அடிமாடாக்கப்படுவதுபோல, வளம்மிக்க மரமான பனை மரங்கள் இன்று களை
மரமாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கிய பனை மரங்கள் இன்று
அருகிவரும் மரவகைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில்
சுமார் 1 கோடி பனை மரங்கள் தமிழகத்தில் அழிக்கப்பட்டுள்
ளன.
தமிழர் # அடையாளங்களில் ஒன்றான #பனை மரத்தை அழிவிலிருந்து காப்பது
ஒவ்வொரு தமிழனின் கடமையாகும

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக