ஞாயிறு, 19 மார்ச், 2017

கண்திருஷ்டி கண்ணூறு கொரியா தொடர்பு

aathi tamil aathi1956@gmail.com

30/12/16
பெறுநர்: எனக்கு
Yuvaraj Amirthapandian, 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Kasi
Krishna Raja மற்றும் 32 பேர் உடன்.
கண்ணூறு (கண்+ஊறு):
பிறரது பார்வை காரணமாக ஒருவருக்கோ, ஒருநிறுவனத்திற்
கோ, கட்டமைப்புக்கோ அல்லது உறவுநிலைக்கோ ஏற்படுவதாகக் கருதப்படும் ஊறு
கண்ணூறு எனப்படும். இது தமிழர் உள்ளிட்ட சில பண்பாடுகளில் காணப்படும்
நம்பிக்கை ஆகும். கண்ணூறு ஏற்பட்ட ஒருவர் நோய்வாய்ப்படுவதாகவும்,
மனச்சஞ்சலத்திற்கு உள்ளாவதாகவும் தீய நிகழ்வுகளுக்கு உள்ளாவதாகவும்
நம்பப்படுகின்றது.
தமிழர் பண்பாட்டில் கண்ணூறு, நாவூறு, காற்றணவு என்பன மூவகைத்
திருஷ்டிகளாகக் கூறப்படுகின்றது. இதில் நாவூறு என்பது பிறர் நாவால்
சபிப்பதால் வரும் தீவிளைவு எனவும் காற்றணவு என்பது காற்றில் உள்ள
தீயவாயுக்களின் விளைவாகவும் கொள்ளப்படுகின்ற
து.
கண்ணூறு நீக்கம்:
கண்ணூறு அடைவதைத் தடுப்பதற்கான பல்வேறு நடைமுறைகள் இந்துப் பண்பாட்டில்
காணப்படுகின்றன. வீடுகளில் நீற்றுப் பூசணிக்காய் (சாம்பல் பூசணிக்காய்)
கட்டுவது, கண்திருஷ்டி கணபதி படங்களை வைப்பது, கண்ணேறு பொம்மைகளை வைப்பது
என்பன இவற்றில் சிலவாகும். குழந்தைகளுக்கு கண்ணூறு படாமல் பெரிய்
கருப்புப் பொட்டு நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படுகின்றது.
ஏற்பட்ட கண்ணூறை சாந்திப்படுத்த கண்ணூறு கழிக்கப்படும். தூர இடங்களில்
இருந்து வீட்டுக்கு வந்தாலோ அல்லது திருமண வரவேற்பின் போது திருட்டி
கழிக்கப்படுவது வழக்கம். புதுமனை புகுதல், பூப்புனித நீராட்டல் முதலான
நிகழ்வுகளில் கண்ணூறு கழித்தல் ஒரு சடங்காகக் கொண்டாடப்படுகின்றது.
கண்ணூறு நீக்க முறைகள்
இந்த கண்ணூறு நீக்குவதற்கு எண்ணற்ற முறைகள் இந்துகளால் செய்யப்படுகின்றன.
வீடுகள், அலுவலகங்கள் போன்றவற்றுக்கு அந்தக் கட்டிடத்தின் முன்பு
நீர்பூசணி கட்டுதல், மிளகாய்-எலுமிச்சை மாலை கட்டுதல், கத்தாழையை
தொங்கவிடுதல், அரக்க பொம்மைகளை தொங்கவிடுதல், நீர்ப்பூசணியில் அரக்க
பொம்மை வரைந்து தொங்கவிடுதல் போன்ற சடங்குகளை செய்கின்றார்கள்.
இவையன்றி சூரத்தேங்காய் உடைத்தல், பூசணி உடைத்தல், எலுமிச்சை பழத்தினை
அறுத்து சிவப்பு தடவி வைத்தல் போன்றவற்றையும் செய்கின்றார்கள்.
மனிதர்களுக்கும், நாய் மற்றும் பசு போன்ற விலங்குகளுக்கும் ஆராத்தி
எடுத்தல், கற்பூரம் வைத்த வெற்றிலையைச் சுற்றி எறிதல் போன்ற சடங்குகளை
கையாளுகின்றார்கள்.
இலக்கியத்தில் கண்ணூறு:
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது பழமொழி.
திருவருட்பாவில் கண்ணூறு பற்றி இப்படி கூறப்படுகின்றது.
திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப் பிணிதீரும்
பவசங்கடம் அறுமிவ்விக பரமும் புகழ்பரவும்
கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே.
==============================
=======================
தமிழர் சமூகத்தில் இவ்வாறு இருந்து வரும் தொன்று தொட்ட பழங்கால வழக்க
முறைகள் தமிழர்களுடன் பண்டைய தொடர்பு கொண்டிருந்த சமூகங்களிலும்
இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழர்களுடன் மொழி, இலக்கண, இலக்கிய சமய
பண்பாடுகளில் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள கொரிய நாகரீகத்தில் இவ்வாறான
பழக்கவழக்கங்கள் இருப்பது நுட்பமாக ஆராயத்தக்கது. ஈராயிரம்
ஆண்டுகளுக்கும் கொரிய அரசியாக இருந்தது ஒரு தமிழ்ப் பெண்ணரசி என்பது சமீப
காலங்களில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட
ுள்ளது குறிப்பிடத்தக்கது. நண்பர்கள்
Rajasubramanian Sundaram Muthiah ,
Sivakumar Kone மற்றும் N. Ezhilan கவனத்திற்கு.
அதனை நிருபிக்கும் வகையில் "The Tiger: An Old Hunter's Tale" என்ற
தென்கொரிய மொழித் திரைப்படத்தில் ஒரு திருமணக் காட்சியில் மணக்கோலம்
பூண்ட மணமகன் மற்றும் மணப்பெண்ணுடன் காட்டப்படும் இல்லத்தின் வீட்டு
நிலைப்படியின் மேல் கருப்பு பொருட்களாலானதும் மற்றும் சிவந்த மிளகாயினைக்
கொண்டதுமான ஒரு மாலைக் கயிற்றினை தொங்கவிடப்பட்டு
ள்ளதைத் தெளிவாகக் குறிப்பிட்டு காண்பிக்கின்றனர். பின்பு மணப்பெண்ணின்
முகத்தையும் தெளிவாகக் காண்பிக்கின்றனர். மணப்பெண்ணிற்கு இரு
கன்னங்களிலும் பெருவட்ட வெளிர்சிவப்பு நிற (Pink) பொட்டு இட்டுள்ளனர்.
இவைகள் கெடுதல் நேராவண்ணம் தடுக்கும் பொருட்டு தமிழர் சமூகத்தில்
ஆதிகாலம் தொட்டு இருந்துவரும் முறைகளாகும்.
நன்றி:
- விக்கிபீடியா.
- "The Tiger: An Old Hunter's Tale" படக்குழு.
# கண்ணூறு # தமிழ் # பழந்தமிழர்
# கொரியர்கள் # கொரியா
# தமிழ்நாடு # Korea # SouthKorea
# தென்கொரியா
மொழிபெயர்ப்பைக் காணவும்
26 நிமிடங்கள் · நண்பர்கள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக