|
31/3/16
| |||
நொய்யல் பாதுகாப்பு அமைப்பு , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
"சிறுதுளி" வனிதாமோகன் அவர்களுக்கு சில கேள்விகள்....
சில ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எனக்கு ஒரு தீர்க்கதரிசியாகவே
தெரிந்தீர்கள். தங்களது அமைப்பின் மூலமாக நொய்யல் ஆற்றை காக்க தாங்கள்
எடுத்துக் கொண்ட முயற்சி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
தென்னிந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர், இவ்வாறு செய்கிறாரே
இவரை பார்த்து ஒவ்வொரு ஊரிலும் உள்ள, தொழிலதிபர்கள் தங்கள் ஊரில் உள்ள
நீர்நிலைகளை மீட்கும் முயற்சியில் இறங்கினால் தமிழகமே புத்துயிர்
பெற்றிடுமே என ஆனந்தம் கொண்டிருந்தேன்.
காலம்தான் எத்தனை சக்தி வாய்ந்தது, தங்கள் அமைப்பின் செயல்பாடுகளை பற்றி
சில கொஞ்சம் அலசிய போது பிரச்னைகளு மடை மாற்றம் செய்ய வந்த கார்பரேட்
அமைப்போ என சந்தேகம் எழத்தான் செய்கிறது. அதனடிப்படையில்தான் இந்த
கேள்விகள்?
1) நொய்யல் ஆற்றின் ஆதாரப்பகுயில் வனத்திலிருந்து 2 கி.மீ. சுற்றளவில்
மத்துவராயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மினரால் வாட்டர் நிறுவனங்களால்
ஏற்படும் நிலத்தடி நீர் பாதிப்புகளுக்கு தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?
நண்டாங்கரை தடுப்பனைக்கு 200 மீட்டர் தொலைவில் கூட ஒரு குடி நீர்
நிறுவனம் உள்ளது. தொண்டாமுத்தூர் மாதம்பட்டி சாலையில் நொய்யலாற்றின்
அருகிலேயே அமைந்துள்ளது ஒரு மினரல் வாட்டர் நிறுவனம் அமைந்துள்ளது.
2) நொய்யலாற்றின் பிரதான நீர் ஆதார பகுதிகளாக விளங்கும் மேற்கு
தெடர்சிமலை அடிவார கிராமங்களில் எந்த ஒரு அனுமதியுமில்லாமல்
லட்சக்கனக்கான சதுரடி இடங்கள் கான்கிரீட் காடுகளாக மாற்றப்பட்டுள்ளன.
காருண்யா போன்ற கல்வி நிறுவனங்கள் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ள
ன. இவற்றை பற்றி எப்போதவது கேள்வி எழுப்பியதுன்டா?
3) வெள்ளலூர் குளத்திற்கு தண்ணீர் வரவில்லை அதன் மீதான ஆக்கிரமிப்பு பற்றி ஏதாவது?
4) நொய்யலாற்றின் இரண்டாவது முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக விளங்கும்
தடாகம் பகுதி சங்கனூர் பள்ளத்தின் நீராதரப்பகுதியில் கடந்த இருபது
ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் மண் கொள்ளை பற்றி ஏதாவது கருத்தை
உதிர்த்ததுண்டா?
5) கோவையில் அமைந்துள்ள குளங்களில், லட்சக்கணக்கான லிட்டர் ஒவ்வொரு
நாளும் கழிவு நீரை நேரடியாக விடும் கோவை மாநகராட்சியை இதர ஊராட்சிகளை
பற்றி விமர்சித்ததுன்டா?
6) உக்கடம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக மேம்பாலம் கட்ட முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்ட நிலையில், குளத்தின் கரையின் மேல்சாலை அமைக்க உதவியது
யாரை காப்பாற்ற குளத்தின் கீழ் அமைந்துள்ள தொழிலதிபரின் இடங்களை
காப்பாற்றவா?
7) வாலாங்குளத்தில் ஆக்கிரமிப்பு என்பது குடிசைவீடுகள் மட்டும்தானா
அங்கிருக்கும் கான்கிரிட் கட்டிடங்கள் பற்றிய விசயங்கள் என்னவாயிற்று?
8) ஆலாந்துரை பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில்பதியில் முண்டந்துரை
அனைக்கட்டின் கரையில் கட்டப்பட்டுள்ள தாமரா ரிசார்ட் பற்றி தங்கள்
கருத்தென்ன? கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏன் அதற்கான அனுமதியை மறுத்தார்?
இந்த பிரச்சனைகளைப்பற்றி உரக்க குரல் கொடுக்கா விட்டாலும் கொஞ்சமாக
நீங்கள் முனுமுனுத்திருந்தால் கூட, பாதி பிரச்னை மக்களை
சேர்ந்தடைந்திருக்கும்.
அகற்றப்பட வேண்டியது குப்பைகள் மட்டும்தான?
நன்றாக நீர் ஓடுகின்ற ஒரு ஆற்றில் குப்பைகள் கொட்ட யாருக்கும் மனம் வராது
கடந்த பல ஆண்டுகளாகவே நொய்யலாற்றின் சராசரி நீரோட்டத்தின் அளவு குறைந்து
கொண்டே வருகிறது அது ஏன் என ஆராயுங்கள் அதற்கான விழிப்புணர்வுகளை
மக்களிடம் ஏற்படுத்துங்கள் இல்லையெனில் நொய்யலில் கடைசியாக ஓடி
கொண்டிருக்கும் "சிறுதுளி" நீரும் மிஞ்சாது. (இப்போதெல்லாம் NGO
க்களையும் அரசியல் கட்சிகளையும் ஒன்றாகவே பார்க்க தோன்றுகிறது)
நன்றி - சிவா..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக