ஞாயிறு, 19 மார்ச், 2017

முருகன் பலிகொடுத்தல் இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 10
பெறுநர்: எனக்கு
"முருகயர்ந்து வந்த முதுவாய் வேல
சினவ லோம்புமதி வினவுவ துடையேன்
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு
சிறுமறி கொன்றிவ னறுநுத னீவி
வணங்கினை கொடுத்தி யாயி னணங்கிய
விண்டோய் மாமலைச் சிலம்பன்
ஒண்டா ரகலமு முண்ணுமோ பலியே"

விளக்கம் :
அறிவு சார்ந்த வேலனே ....! ஒரு ஆட்டுக்குட்டியை வெட்டி அந்த குருதியை
சோற்றுடன் பிசைந்து அதில் ஒரு துளி குருதியைத் தொட்டு என் தலைவியின்
அழகிய நெற்றியில் தடவியும் முருகனுக்காக பலிகொடுத்து வணங்கும் அறிவு
சான்ற வேலனே...! கேள். முருகன் இந்நோயைத் தீர்ப்பான் என்று நீ கொடுக்கும்
பலிகளையெல்லாம் அழகிய மாலைகளை அணிந்த இந்த மலைநாட்டுத் தலைவனின் அகன்ற
மார்பும் கூட ஏற்றுக்கொள்ளுமோ...?

அகத்திணையில் வேம்பாற்றூர் கண்ணன்கூத்தன் எனும் புலவரால் பாடப்பட்ட
இப்பாடல் தோழி ஒருத்தி தலைவியின் முருக வழிபாட்டை நக்கல் செய்வதைப்
போன்று எழுதப்பட்டிருக்கும். முன்னோரின் நினைவலைகளே இங்கு "முருகன்"
என்றும், இரத்தம் கலந்த சோற்றை உண்டு சாமியாடி குறி சொல்பவனே இங்கு வேலன்
எனவும் கொள்க.

குறிஞ்சி நில வேட்டுவர்களின் மீத்தொன்மையான இம்முருகவழிபாடு திருச்சி
மாவட்டத்தில் குழுமாயி, குழுந்தலாயி கோயில் திருவிழாவாக இன்றைக்கும்
உயிர்ப்புடன் கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுமைக்கும் கருப்பு வழிபாடு,
முனி வழிபாடு, சந்தனக்கூடு போன்ற வெவ்வேறு பெயர்களில் மருவி பரவலாகக்
கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்னும் குறுகிய காலத்திற்குள் உண்மையான முருக வழிபாட்டை மீட்டே ஆக
வேண்டும். அதற்கு இடையூறு செய்யும் (அ) திசைதிருப்பும்
எக்கருத்தியலாயினும் அவற்றை அடித்து நொறுக்குவதையே இனி முழுநேர வேலையாக
செய்யப்போகிறேன்.
----------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக