ஞாயிறு, 19 மார்ச், 2017

சந்திரன் சூரியன் விண்மீன் மூன்று புத்தாண்டு நாட்காட்டி வானியல் தென்காசி

aathi tamil aathi1956@gmail.com

21/11/16
பெறுநர்: எனக்கு
கூர்ங்கோட்டவர்
குலாசிரமம் என்னும் புது நோய் (சந்திர குலம் vs சூர குலம்)
முன்னொரு குழுமம் இருந்தது. நிலவு சூரன் புவி மூன்றையும் அக்கால
தமிழரசர்கள் ஏதோ சிறு வண்டியை கட்டுப்படுத்துவ
துபோல் கட்டுப்படுத்தி வந்தார்கள் என்று கதையளந்தது. நாட்காட்டினா அது
பொங்கலில் தொடங்குனாதான் நாட்காட்டின்னு பொங்கிட்டு இருந்தது. நல்லவேளை
இவங்க சூரக்குடும்பத்த
ோடு நின்னாங்க.
இப்போ புதுசா இன்னொரு குழு வந்துருக்கு. சூர நாட்காட்டியை
பின்பற்றுனவன்லாம் வந்தேறிங்குற மாதிரியும் சந்திர நாட்காட்டியை
பின்பற்றுபவர்களே ஏதோ பழங்குடியினர் போலும் கதைவிட்டு வருகிறது. இந்த
புதுக்குழுவை பழைய குழுவோடு ஒப்பிடுகையில் ஒருபடி மேல போய்
சூரநாட்காட்டியை பின்பற்றுவோர்லாம் ஏதோ இலுமினாட்டிகளை பின்பற்றுவது போல்
கதை விட்டு வருகிறது.
இந்த வகை குலாசிரமம் பேசுபவர்கள் ஆரிய வர்ணாசிரமம், திராவிட தலித்திய
வகுப்பாசிரமம் (ஆதிக்க சாதி & தலித்து), கம்முனாட்டிய வர்க்காசிரமம் போல்
தமிழர்க்கு வினையாக வளர்ந்து வருவதால் இந்த மூன்று நாட்காட்டிகள் பற்றி
பதிவிடுவது மேலும் அவசியம். இந்த மூன்று நாட்காட்டிகள் பற்றி புரிந்து
கொள்வது மூலம் சந்திர சூரவம்ச அரசர்களை வைத்து போலி வரலாறு கொண்டு
விளையாடும் ஆதிக்கவெறி பிடித்த வணிக கும்பலின் கோரமுகத்தை அழகாக
அறியலாம்.
காலம்தரும் நாட்காட்டி பொறுத்தவரை ஒற்றை நாட்காட்டிலாம் தமிழர் போன்ற
பழமையான இனங்களுக்கு ஒத்துவராத ஒன்று. திணைக்கு ஒரு கடவுள் இருந்தது போல
மூன்று திணை நிலங்களுக்கும் மூன்று நாட்காட்டிகளை பின்பற்றுவதே பழங்குடி
வழிவந்த இனங்களுக்கு வழக்கம். நான் ஏற்கனவே என் பக்கத்தில் 1.5
ஆண்டுகளுக்கு முன்னர் மாயன்கள் மூன்று நாட்காட்டிகளை பின்பற்றி வந்ததை
பதிவு செய்திருந்தேன். (https://
www.facebook.com/tenkasisubramanian/posts/880368175390878 ) (பாலை
என்பது குறிஞ்சியும் முல்லையும் திரிந்ததே. குறிஞ்சி காலம்தரும்
நாட்காட்டிகள் தேவைப்படாத மிகப்பழமையான தோற்றுவாய் நிலம். அதனால் நெய்தல்
முல்லை மருதம் போன்றவற்றுக்கே நாட்காட்டிகள் இருந்தன)
நிலவு:
இவை முழுநிலவு மறைநிலவு மூலம் மட்டும் கணிக்கப்படும் காலம்தரும்
நாட்காட்டி. இது கடற்கரை வாழ் நெய்தல் நில மக்களால் தோற்றுவிக்கப்பட்டவை.
முழுநிலவு மறைநிலவு ஒட்டியே கடற்சீற்றம் அதிகமாக இருக்கும் நாள், மிதமாக
இருக்கும் நாள், கடல் ஓதம் (Tide) இருப்பதால் கடல் எப்போது கரை உள்ளே
வரும் எப்போது வெளியே போகும் என்பதை மட்டும் கணிப்பதின் தேவையில்
உருவாக்கப்பட்டது. இவை மிகப்பழைய காலம்தரும் நாட்காட்டிகள்.
விண்மீன்:
இவை முழுநிலவு எந்த விண்மீனில் வருகிறது என்பதை பொறுத்து அமைக்கப்பட்ட
காலம்தரும் நாட்காட்டி. இது காடுவாழ் முல்லை நில மக்களால்
தோற்றுவிக்கப்பட்டவை. பெரும்பொழுதை ஒட்டி ஆநிரைகளின் உணவு தேவையை கணிக்க
உருவாக்கப்பட்டது. நிலவு நாட்காட்டியின் வளர்ச்சி பெற்ற வடிவமிது.
சூரன்:
இவை சூரனின் தென்செலவு வடசெலவு ஒட்டி கணிக்கப்படும் காலம்தரும்
நாட்காட்டிகள். இவை மருதநில மக்களால் தோற்றுவிக்கப்பட்டவை. உழவை
பெரும்தொழிலாக கொண்ட இவர்களுக்கு சூரனை அதிகம் சார்ந்தவர்கள். இவை
தோற்றுவிக்கப்பட்டது மிகப்பிந்திய காலம்.
மேலுள்ள மூன்றை ஒட்டியே பெரும்பாலான வழிபாட்டு முறைகள்
தோற்றுவிக்கப்பட்டன. அவை பொறுத்து குலங்களும் அடையாளப்படுத்தப்பட்டன.
அதுவும் தமிழ்நாட்டை பொறுத்தவரை சந்திர சந்திரசூர சூர போன்ற குலங்கள்
எல்லாம் காப்பியக்காலத்தில் இருந்து தான் அடையாளப்படுத்தப
்பட்டது. இதில் சூரக்குலத்தை சேர்ந்தவர்களெல்லாம் வந்தேறிகள்,
பெருங்கோயில் கட்டியவர்கள், பிராமண அடிமைகள் என்றும் சந்திரகுலத்தை
சேர்ந்தவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்பதை போல பேச எந்த தேவையும் இல்லை.
அப்டி பேசுபவர்கள் தான் சார்ந்த வணிகக்குழுவுக்கு புதிதாக வரும்
வணிகக்குழுக்கள் போட்டியாக வந்துவிடக்கூடாத
ு என்ற வகையில் இந்த குலாசிரம சண்டை இழுக்கும் போக்கை தொடர்ந்து
கடைபிடித்து வருகின்றனர். இவர்களிடமிருந்த
ு கொஞ்சம் ஒதுங்கியே இருங்கள்.
கம்முனாட்டிகள் உலகையே முதலாளி நாடுகள் தொழிலாளி நாடுகள் என பிரித்து
மூன்று உலகப்போர்களை நடத்தியது போல் உலகில் உள்ள அரசர்களையெல்லாம் சந்திர
குலம் சூர குலம்னு பிரிச்சு வரலாற்று ஆய்வுகளை இருதரப்பாக மோதவிட்டு
தங்களுக்கு ஏற்றவாறு பரப்பிக்கொள்வார்கள். - @தென்காசி சுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக