ஞாயிறு, 19 மார்ச், 2017

ஜெ அட்டூழியம்

aathi tamil aathi1956@gmail.com

9/12/16
பெறுநர்: எனக்கு
வி மூ
# _போதும்_நிறுத்துங்கள் ...
கவர்னர் மாளிகையில் கைத்தடி ஊன்றி நடந்த, 80 வயது முதியவரான கவர்னர்
சென்னாரெட்டி, தன்னை மானபங்கம் படுத்தியதாக, தான் பெண் என்பதையும், தமிழ்
நாட்டின் முதல்வர் என்பதையும் மறந்து ஒரு பொய்புகாரை சொன்னவர் யார்??
ஐபிஎஸ் சந்திரலேகா என்ற பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிக்க வைத்ததும்
இல்லாமல் அதற்கு உதவிய மும்பை கூலிப்படையை சேர்ந்த சுர்லாவை காப்பற்ற
போராடியது எந்த பெண்மணி???
எம்ஜியரை மோர்ல விஷம் வைத்து கொன்றார் என்று அவரின் மனைவியான ஜானகி என்ற
பெண்ணின் மீது அபாண்ட பழிபோட்டவர் யார்??
எம்.ஜி.ஆரின் உதவியாளர் முத்து என்பவர் மீது கஞ்சா கேஸ் போட்டு
பழிவாங்கியவர் யார்??
சசிகலா கணவர் நடராஜனுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்ற காரணத்தினால்
செரினா என்ற பெண்ணின் மீது பொய் கஞ்சா வழக்கு போட்டு கைது செய்து
கொடுமைப்படுத்தி, கோர்ட்டுக்கும் ஜெயிலுக்கும் ஓட விட்டது எந்த
பெண்மணி???
உயர்நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் வீட்டுக்கு மின் இணைப்பையும் குடிநீர்
இணைப்பையும் நிறுத்தியது யார்??
வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் மற்றும் விஜயன் மீதான தாக்குதல், தேர்தல்
ஆணையர் டி.என். சேஷன் மீதான தாக்குதல், அமைச்சர் ப.சிதம்பரம் மீது
தாக்குதல்... இதெல்லாம் யாருடைய உத்தரவு???
நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மருமகன் மீது கஞ்சா வழக்கு போட்டது எந்த பெண்மணி??
ஆடிட்டரை செருப்பால் அடித்து துவைத்தது எந்த லேடி??
அப்பல்லோ மருத்துவமனை மூத்த மருத்துவர் கருணாநிதி என்பவரை, சிவந்தி
ஆதித்தனை பார்க்க வந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் காலணிக்கு மேல் மேலுரை
மாட்டி வார்டிற்குள் வரும்படி சொன்னதற்காக, பொய் வழக்கு போட்டு இரவோடு
இரவாக சிறைக்கு அனுபியவர் யார்??
தனக்கு எதிராக பேசினார்கள், எழுதினார்கள் என்று சொல்லி நூற்றுகணக்கான
அவதூறு வழக்குகளை போட்டது எந்த அயன் லேடி???
தருமபுரியில் மூன்று மாணவிகளை (பெண்களை) உயிருடன் கொளுத்திய குற்றவாளிகளை
காப்பற்ற சாட்சிகளை மிரட்டியது எந்த பெண்மணி???
தன்னுடைய வளர்ப்பு மகன் சுதாகர் மீதே வழக்குப் போட்டு, அவர் சம்பந்தம்
வைத்துக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு
மிகப்பெரிய மன அதிர்ச்சியை அளித்தவர் எந்த லேடி??
நடு இரவில் வீடு புகுந்து அரசு அலுவலர்களை அள்ளிச் சென்ற போது அவர்களுடைய
மனைவிகளின் குரல் இவருக்கு பெண்குரலாக தெரியவில்லையா??
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், ஆயிரகணக்கான சாலைப்பணியாளர்க
ளுக்கு மீண்டும் வேலை கொடுக்காமல், பலரை தற்கொலைக்கு தள்ளியது எந்த பெண்மணி??
"போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று ஈழத்தமிழர்கள்
படுகொலையைப் பற்றிச் சொன்னது யார்?
எழுவர் விடுதலைக்கு தீர்மானம் போட்டுவிட்டு அவர்களை பரோலில் விட மறுத்தது யார்?
சமச்சீர் கல்விக்கு முதலில் முட்டுக்கட்டை போட்டது யார்?
அண்ணா நூலகத்தை மூட முயற்சித்தது யார்?
ஒருஜாதிக்கு குருபூஜை நடத்த அனுமதி கொடுத்து பிற ஜாதிகளுக்கு 144 போட்டது யார்?
பிரச்சாரத்தின்போது வெயில் கொடுமையால் இறந்தவர்களைப் பற்றிப் பொய்யை
பரப்பியது யார்?
பார்வையற்றோர்கள
ை போலிசைவிட்டு சுடுகாடுவரை விரட்டி அடித்தது யார்?
.
.
.
நல்லதை பாராட்டுகிற / தவறுகளை விமர்சிக்கிற நியாயமான பார்வைகொண்ட
அறிவுள்ள மக்கள் பெருக வேண்டும்.
அனுதாபங்களை மட்டுமே மூலதனமாக்கி அரசியல் நடப்பது இங்கே மாற வேண்டும்.
இவ்வளவுதான் நம் நோக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக