புதன், 22 மார்ச், 2017

மகாராஷ்ட்ரா தமிழ் சமணம் மடம் கொல்ஹாப்பூர்

aathi tamil aathi1956@gmail.com

4/5/16
பெறுநர்: எனக்கு
புகழேந்தி முருகு
சமண சமயத்தைச் சார்ந்த தமிழின இளைஞன் அவன். பொறியியல் பயின்றவன்.
பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்த மதுக்கடை மூடும் போராட்டத்தின் போது
ஆர்வத்துடன் அதை வரவேற்றான்.
ஆரணி பயணியர் விடுதியில் அப்போது தங்கிய இசக்கி படையாச்சியைச் சந்தித்து
வாழ்த்து தெரிவித்தான். இசக்கி அவர்கள் சமணத்தைக் குறித்து விரிவாகப் பேச
அவரோடு எளிதில் கலந்து விட்டான் அந்த இளைஞன்.
அவனுக்குச் சமணத்தில் இருக்கும் பேரார்வம் கண்டு, அச்சமூகத்தைச் சார்ந்த
பெரியோர்கள் அவ்விளைஞனை மகாராஷ்டிராவில் உள்ள "கொல்லாபுரம்" (kolhapur)
சமண மடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மகாராஷ்டிராவில் அம்மடம் இருப்பினும் நிர்வாகத் தலைமையில் ஆண்டாண்டு
காலமாய்த் தமிழரே உள்ளனர். இப்போதும் வந்தவாசி வட்டத்தைச் சேர்ந்த தமிழரே
அப்பணியில் உள்ளார்.
அவருக்குப் பிறகு இளைஞனை அப்பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்பதே
அழைத்துச் சென்றவர்கள் திட்டம்.
ஆனால் ஏராளமான சொத்துக்களைப் பராமரித்துக் காப்பதைத் தவிர சுதந்திரமாகப்
பொதுப்பணி ஏதும் செய்யவியலாது என்பதை உய்த்துணர முடிந்த இளைஞனுக்கு
அந்தத் திட்டம் கசந்தது.
'தம்பி, உன்னிடம் ஒரு பைசா கூட இப்ப இல்லை. நீ இங்கேதான் இருந்தாகணும்!'
என்று அழைத்துச் சென்றவர்கள் அன்புக் கட்டளை இட்டனர்.
அவனோ, 'நான் நடந்தே ஆரணிக்குப் போய் விடுவேன்!' என்று அவர்களை அலற
வைத்தான். பிறகு அன்புத்தொல்லை தந்தவர் பின் வாங்கினர்.
மகாவீரரை மட்டுமின்றி மாவீரன் பிரபாகரனையும் நெஞ்சில் சுமக்கும் தம்பி அவன்!
இந்தக் கலவை எப்படி இருக்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக