வியாழன், 30 மார்ச், 2017

சோழர் சேரர் சோழ பாண்டியர் கூட்டு மூவேந்தர்

aathi tamil aathi1956@gmail.com

4/2/16
பெறுநர்: எனக்கு
சோழனின் கூட்டாளிகள்:
சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி கருவூரிடம் சென்றபோது சேரமான்
அந்துவஞ்சேரல் இரும்பொறை வேண்மாடத்தில் இருந்தான். சோழனை மதம் கொண்ட யானை
துரத்தியது. சேரன் காப்பாற்றினான்.
சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி,
சோழன் இராச்சூயம் வேட்ட பெர்நற்கிள்ளி – ஆகியோர் உடனிருந்தனர்
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், பாண்டியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி ஆகிய இருவரும் உறையூர் நாளவையில்
நண்பர்களாகக் காட்சியளித்தனர்.
சோழன் இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் தேர்வண் மலையனும் சேரனை
எதிர்க்க ஒன்றுபட்ட நண்பர்கள்
சங்ககாலச் சோழர்கள்:
சேர சோழ பாண்டியரை மூவேந்தர் என்கிறோம்.
வில், புலி, கயல் ஆகியவை முறையே இவர்களின் கொடிச்சின்னம்.
போந்தை, ஆர், வேம்பு ஆகியவை முறையே இவர்கள் சூடும் அடையாளப்பூ. இவற்றை
இவர்கள் தம் காவல்மரமாகவும் கொண்டிருந்தனர். (இந்த மரங்களை பனை, ஆத்தி,
வேம்பு என்னும் தெரிந்த பெயராலும் குறிப்பிட்டுவரு
கிறோம்)
புறநானூறு என்னும் நூலிலிருந்து இந்தப் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இவர்களது பெயருக்கு முன்னால் சோழன் என்னும் அடைமொழி உள்ளது.
தெளிவுக்காக இவர்களது பெயரிலுள்ள குடிப்பெயர் இறுதி அடைமொழியை முதன்மைப்படுத்த
ி வைத்துக்கொண்டு அகரவரிசைப் படுத்திக்கொள்கிறோம்.
சோழர் குடிப்பெயர்கள்:
கிள்ளி;
கிள்ளி – இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
கிள்ளி – நலங்கிள்ளி
கிள்ளி – நெடுங்கிள்ளி
கிள்ளி - பெருங்கோக்கிள்ளி - கோப்பெருஞ்சோழன்
கிள்ளி – போர்வைக்கோப்பெர
ுநற்கிள்ளி
கிள்ளி – முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி
கிள்ளி - வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி
செம்மியன்;
செம்பியன் - தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
சென்னி;
சென்னி – இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி
சேட்சென்னி ;
சென்னி – உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி
சென்னி – செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி
சென்னி – சேரமான் பாமுள்ளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
சென்னி – நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
வளவன்:
வளத்தான் - கரிகாற் பெருவளத்தான்
வளத்தான் – சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்
வளவன் – குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
வளவன் – குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
வளவன் – குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
பெயர்:
சிபி
நல்லுருத்திரன்
பிற பகுப்பு:
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
நலங்கிள்ளி
நல்லுருத்திரன்
சோழனின் கூட்டாளிகள்:
சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி கருவூரிடம் சென்றபோது சேரமான்
அந்துவஞ்சேரல் இரும்பொறை வேண்மாடத்தில் இருந்தான். சோழனை மதம் கொண்ட யானை
துரத்தியது. சேரன் காப்பாற்றினான்.
சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி,
சோழன் இராச்சூயம் வேட்ட பெர்நற்கிள்ளி – ஆகியோர் உடனிருந்தனர்
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், பாண்டியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி ஆகிய இருவரும் உறையூர் நாளவையில்
நண்பர்களாகக் காட்சியளித்தனர்.
சோழன் இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் தேர்வண் மலையனும் சேரனை
எதிர்க்க ஒன்றுபட்ட நண்பர்கள்
சோழனின் பகைவர்கள்:
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியோடு
பொருது, போர்களத்தில் உயிர் போகாது கிடந்தான் இருவரையும்
சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானொடு பொருது புறப்புண்
நாணி வடக்கிருந்தான்.
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானொடு திருப்போர்ப்புற
த்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற்கோட்டத்துச் சிறையில்
கிடந்து, தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, உண்ணான் சொல்லித்
துஞ்சிய பாட்டு
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச்சூயம் வேட்ட
பெருநற்கிள்ளியும் பொருதவழிச் சோழர்க்குத் துப்பாய்(பற்றுக
்கோடாய்) இருந்தவன் தேர்வண் மலையன்.
பிற சங்கப்பாடல்களில் சுட்டப்படும் சோழர்:
சிபி
தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
தொகுப்பு வரலாறு:
மூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர
சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் பத்துப்பாட்டையும்
தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் தொகுத்துப் பதிகம் பாடியவரும்
குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன.
அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில்
தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை
ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும். இவர்கள் 17 பேர்
கரிகாற் பெருவளத்தானின் தந்தை
தேர் உலா விரும்பி
சோழன் உருவப் பஃறேர் இளசேட்சென்னி என இவனது பெயர் விளக்கப்பட்டுள்ளது.
இவன் கரிகாற் பெருவளத்தானின் தந்தை. இவன் தேரில் பொலிவுறும் காட்சியைப்
பரணர் குறிப்பிட்டிள்ளார்.
பெருங்குன்றூர் கிழார் இவனை "வான்தோயு நீள்குடை வயமான் சென்னி" என்று
குறிப்பிட்டு அவனது கொடையைப் போற்றுகிறார்.
முதன்மைக் கட்டுரை: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி.
இளஞ்சேட் சென்னி (செருப்பாழி எறிந்தவன்):
சேரனின் செருப்பாழியை வென்றான்
இவன் சோழன், செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்னும் விளக்கப்பெயருடன்
குறிப்பிடப்படுகிறான்.செருப்பாழ
ி என்பது சேரமன்னனின் ஊர். இவன் இந்த ஊரைக் கைப்பற்றினான். புலவர்
ஊன்பொதி பசுங்குடையார் இந்த வெற்றியைப் போர்களத்திக்கே சென்று பாடி
போர்யானைகளைப் பரிசாகத் தரும்படி ஒருபாடலில் வேண்டுகிறார். மற்றொரு
பாடலில் இவன் தந்த அணிகலன்களை எந்த அணியை எங்கு அணிந்துகொள்வது எனத்
தெரியாமல் தம் உடலில் ஆங்காங்கே அணிந்துகொண்டதாகக் குறிப்பிடுகிறார்.
முதன்மைக் கட்டுரை: சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி
இளஞ்சேட் சென்னி (பாமுள்ளூர் எறிந்தவன்):
சேரனின் பாமுள்ளூரை வென்றான்
இவன் சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, சோழன்
நெய்தலங்ககானல் இளஞ்சேட்சென்னி என்னும் விளக்கப் பெயர்களுடன்
குறிப்பிடப்படுக
ிறான். பாடல் இவனை 'நெய்தலங்கானல் நெடியோன்' எனக் குறிப்பிடுகிறது.
பாமுள்ளூர் சேரமன்னனின் ஊர். இதனை இவன் கைப்பற்றினான். புலவர் ஊன்பொதி
பசுங்குடையார் இவனை இரண்டு பாடல்களில் போற்றியுள்ளார். ஒரு பாடலில்
பகைவர் பணிந்தால் தண்டிக்காதே என்று அவனை அறிவுறுத்துகிறார். மற்றொரு
பாடலில் பகைவரின் கோட்டையை வெல்வதற்கு முனபே அக் கோட்டையைத் தன்
பாணர்களுக்கு இவன் வழங்கிவிடுவான் என்கிறார்.
முதன்மைக் கட்டுரை: சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
கரிகாற் பெருவளத்தான:
உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன்
வெண்ணிப் போரில் பெருஞ்சேரலாதனையும், பாண்டியனையும், 11 வேளிரையும் வென்றான்.
வாகைப் பறந்தலைப் போரில் 9 மன்னரை வென்றான்
கழார் நீர்த் துறையில் ஆட்டனத்தி நீச்சல் நடனத்தைத் தன் சுற்றத்துடன்
கண்டுகளித்தான்
பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை நூல்களின் பாட்டுடைத் தலைவன், வள்ளல்
சோழன் கரிகாற் பெருவளத்தான் என்பது இவனது விளக்கப் பெயர். சோழன் கரிகால்
வளவன், கரிகாலன், கரிகால் என்னும் பெயர்களாலும் இவன்
குறிப்பிடப்படுகிறான. இவன் தந்தை 'சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி'.
மனைவி நாங்கூர் வேள் மகள். முதுமைக் கோலத்தில் தோன்றி அரசவையில் தீர்ப்பு
வழங்கினான் என்றும், கருவூரில் இருந்தபோது கழுமலத்துப் பட்டத்து யானை
இவனுக்கு மாலை போட்டு அரசன் எனக் காட்டியது என்றும், இளமைக் காலத்தில்
காலில் தீப் பட்டு உயிர் பிழைத்தான் என்றும், இரும்பிடர்த் தலையார் இவனது
தாய்மாமன் என்றும் பிற்காலப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களின் பாட்டுடைத் தலைவன்.
பட்டினப் பாலை நூலாகத் தன்னைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குப்
பதினூறாயிரம் பொன் பரிசாக வழங்கினான். வெண்ணிப் போரில்
பெருஞ்சேரலாதனையும், அவனுக்குத் துணைவந்த பாண்டியனையும் வென்றான்.வண்ணிப்
போரில் இரு பெரு வேந்தரும், பதினொரு வேளிரும் இவனைத் தாக்கித் தோற்றனர்.
அது கண்டு அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். வெண்ணியில் இவனை
எதிர்த்துப் போரிட்டபோது முதுபில் புறப்புண் பட்டது என்று நாணிச் சேரமான்
பெருஞ்சேரலாதன் போர்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்தான். கழார்
என்னும் ஊரிலிருந்ந காவிரியாற்றுத் துறையில் ஆட்டனத்தி, காவிரி ஆகியோர்
நீட்டல் நடனம் ஆடியதைத் தன் மகள் ஆதுமந்தியும் சுற்றமும் சூழ
வீற்றிருந்து கண்டுகளித்தான். வாகைப் பறந்தலைப் போரில் இவனை எதிர்த்த
ஒன்பது மன்னரும் ஒருநாள் நன்பகலுக்கு முன்னர் தோற்று, தம் கொற்றக்
குடைகளைப் போர்க்களத்திலேய
ே போட்டுவிட்டு ஓடிவிட்டனர். இவன் காவிரிப் பூம்பட்டினத்தில
ிருந்துகொண்டு அரசாட்சி செய்தான் என்றும், ஒருகாலத்தில் இமயமலை வரை
சென்று இடைப்பட்ட அரசர்களை வென்றான் என்றும் பிற்கால நூல்கள்
தெரிவிக்கின்றன.
முதன்மைக் கட்டுரை: கரிகால் சோழன்
கிள்ளி வளவன் (குராப்பள்ளித் துஞ்சியவன்):
பிட்டையை வென்று கொங்கு நாட்டைக் கைப்பற்றினான்
சேரனின் வஞ்சிமுற்றத்தை வென்று குடநாட்டைக் கைப்பற்றினான்.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் என்று கூறப்படும் இவன் முதலில்
பிட்டை என்பவனை அழித்துக் கொங்கு நாட்டில் வெற்றி கண்டான். குடபுலச்
சேரரின் தலைநகர் வஞ்சி நகருக்குக் கருவூர் வஞ்சி இரண்டாம் தலைநகராக
விளங்கி, அவர்களின் ஆட்சிக்கு முற்றம் போல விளங்கியதால் கருவூரை
வஞ்சிமுற்றம் என்றனர். இதன் வெற்றியால் குடநாட்டைத் தாக்கி அழித்தான்.
கோவூர் கிழார் என்னும் புலவர் இவனை போருக்களத்தில் கண்டு பாடி களிறுகளைப்
பரிசாகப் பெற்றார்.
முதன்மைக் கட்டுரை: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்.
கிள்ளி வளவன் (குளமுற்றத்துத் துஞ்சியவன்):
கருவூர் முற்றுகை . மலையமான் மக்களை யானைக்கு இட்டது. வள்ளல் சோழன்
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று விளக்கமாக வேறுபடுத்திக்
காட்டப்படும் இவன் 'பசும்பூட் கிள்ளிவளவன்' 'பெரும்பூண் வளவன்' எனப்
பாடல்களுக்குள் குறிப்பிடபுபடுக
ிறான். இச் சோழன் உறையூர் அரசன். இவனை 10 புலவர்கள் பாடியுள்ளனர்.
ஆலத்தூர் கிழார் ஆவூர் மூலங்கிழார் இடைக்காடனார் எருக்காட்டூர்த்
தாயங்கண்ணனார், கோவூர் கிழார் நல்லிறையனார் வெள்ளைக்குடி நாகனார் என்னும்
எழுவரும் இவனது போராற்றலையும், வள்ளல் தன்மையையும் போற்றிப்
பாடியுள்ளனர். மாறோக்கத்து நப்பசலையார் இவனது கொடைச் சிறப்பையும்,
இறப்பையும் பாடியுள்ளார். ஆடுதுறை மாசாத்தனார் ஐயூர் முடவனார் ஆகிய
இருவரும் இவன் இறந்தது கண்டு இரங்கிப் பாடியுள்ளனர். இவன் கருவூரை அடுத்த
ஆன்பொருநை ஆற்றுமணலில் தன் படையை நிறுத்தி, முரசு முழக்கிச் சேரனைப்
போருக்கு அழைத்தான். சேரன் கோட்டையை விட்டு வெளிவரவில்லை. இப்படிப்பட்ட
சேரனோடு போரிடுவதற்கு வளவன் நாணவேண்டும் என்று ஒரு புலவர் அறிவுரை
கூறினார். இவன் பாணர்க்குப் பொன்-தாமரை விருதும், தேரும் வழங்குவான்.
நினைத்த்தை முடிக்கும் ஆற்றல் மிக்கவன் என இவனைப் போற்றும் ஒரு புலவர்
இன்சொல் பேசி எளிமையாக வாழவேண்டும் என அறிவுறுத்துகிறார்.
புலவர்கள் இவனை எதிர்கோக்கும்போது இவன் பகைமன்னரின் மண்ணையே
எண்ணிக்கொண்டிருந்தானாம் இவன் மலையமான் மக்களை யானைக்காலால் மிதிக்கவைக்க
முயன்றபோது, அழும் குழந்தை யானையைக் கண்டு அழுகையை நிறுத்திக்கொண்டு
வேடிக்கை பார்த்த்தைச் சுட்டிக் காட்டி குழந்தையைக் கொல்வதை ஒரு புலவர்
தடுத்து நிறுத்தியிருக்க
ிறார்.
முதன்மைக் கட்டுரை: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
கோப்பெருஞ்சோழன்:
சேரனிடம் தோல்வி தன் மக்களை எதிர்த்துப் போர்
வடக்கிருந்து உயிர் துறந்தான் பிசிராந்தையார், பொத்தியார் - நட்பு
கோப்பெருஞ்சோழனின் தலைநகர் உறையூர். புலவனாகவும் விளங்கினான். சேர அரசன்
இளஞ்சேரல் இரும்பொறை இவனை வென்றான். தன் மக்கள் இருவர் மீது போருக்கு
எழுந்தான். புலவர் ஒருவர் அறிவுரையைக் கேட்டு மக்களிடம் நாட்டை
ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர் துறந்தான். கருவூர்ப்
பெருஞ்சதுக்கத்துப் பூதனார் , பிசிராந்தையார் , பொத்தியார் ஆகிய
புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவனுடன் வடக்கிருந்தவர் பலர்.பிசிராந்தை
யார் வருவார், அவர் வடக்கிருக்க இடம் ஒதுக்குக என்றான் தன்னுடன்
வடக்கிருக்கத் துணிந்த பொத்தியாரை மகன் பிறந்த பின் வருக என்றான்.
அவ்வாறே அவர் வந்தபோது அவருக்குத் தன் கல்லறையில் இடம் கொடுத்தான்.
கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு நட்பிற்கு இலக்கணம்.
முதன்மைக் கட்டுரை: கோப்பெருஞ்சோழன்
செங்கணான்:
திருப்போர்ப்புறம் - போர்
கணைக்கால் இரும்பொறையைச் சிறையில் இட்டவன்
சோழன் செங்கணான் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் நடந்த போரில் சேரமான்
கணைக்கால் இரும்பொறையை வென்றான். தோற்ற சேரனைக் குடவாயில் கோட்டத்துச்
சிறையில் அடைத்தான். சோழன் செங்கணானால் சிறையிலிடப்பட்டு, தாகத்துக்குக்
கேட்ட தண்ணீர் காலம் தாழ்ந்து பெற்றதால், அதனை உண்ணாமல் உயிர் துறந்தவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை.
முதன்மைக் கட்டுரை: சோழன் செங்கணான்
நலங்கிள்ளி சேட்சென்னி:
இலவந்திகைப்பள்ளித் துஞ்சியவன்
நலங்கிள்ளி மகன், நலங்கிள்ளின் தந்தை
சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி என்னும்
விளக்கப்பெயரைக் கொண்ட இவன் சிறந்த வீரன். கோனாட்டு எறிச்சலூர் மாடலன்
மதுரைக் குமரனார் என்னுப் புலவர் இவனை 'இயல்தேர்ச் சென்னி' என்று
குறிப்பிடுகிறார். இவனது பெயரிலுள்ள 'நலங்கிள்ளி' என்பதை இவனது தந்தையின்
பெயராகக் கொள்வது தமிழ் மரபு.
நலங்கிள்ளி (சோழன்):
ஆவூர், உறையூர் முற்றுகைகள்
பாண்டியனின் ஏழெழில் கதவத்தில் புலி பொறித்தல்
புகார் கப்பல் வாணிகம் சேட்சென்னி மகன்
சோழன் நலங்கிள்ளி ஒரு புலவனாகவும் விளங்கினான். சேட்சென்னி நலங்கிள்ளி
புட்பகை, தேர்வண் கிள்ளி என்னும் பெயர்கள் இவனுக்கு உண்டு. ஆலத்தூர்
கிழார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் கோவூர் கிழார் ஆகிய புலவர்கள்
இவனைப் பாடியுள்ளனர். உறையூர் இவனது தலைநகர் இவனது போராற்றலைக் கண்டு
வடபுலத்து அரசர்கள் நடுங்கினர் பாண்டிய நாட்டு ‘ஏழில்’ அரண்-கதவில் தன்
புலிக்கொடியைப் பொறித்தான். தன் தாயத்தாரோடு பகைமை பூண்டு நெடுங்கிள்ளி
ஆவூர்க் கோட்டைக்குள்ளும் உறையூர்க் கோட்டைக்குள்ளும்
அடைத்துக்கொண்டிருந்தபோது முற்றுகையிட்டுத் தாக்கினான். புலவர் உறையூர்
முதுகண்ணன் சாத்தனார் சொல்லை மதித்துப் போர்த்தொழிலைக் கைவிட்டு அறச்
செயல்களைச் செய்தான்.தாய் குழந்தைக்குப் பால் சுரப்பது போலப்
பாணர்களுக்குப் பரிசில் வழங்குவான். பெருங்கலம் என்னும் கப்பல்
செல்வ-வளம் சேர்க்கும் புகார்த் துறைக்கு அரசன்.வங்கக் கப்பல்களை
வேள்வித் தூணில் கட்டி நிறுத்தி வைக்கும் நாட்டை உடையவன்.
முதன்மைக் கட்டுரை: நலங்கிள்ளி
நெடுங்கிள்ளி:
காரியாற்றுத் துஞ்சியவன்
ஆவூர், உறையூர் கோட்டைப் போர்களில் பதுங்கி இருந்தான்
காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியின் பெயர் 'சோழன்' என்னும்
முன்னொட்டுடன் குறிப்பிடப்படவில்லை. இவன் நலங்கிள்ளி ஆவூரையும்,
உறையூரையும் முற்றுகையிட்டபோது கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளே
இருந்தான். இளந்தத்தன் என்னும் நலங்கிள்ளிடமிருந்து உறையூருக்குள்
நுழைந்தபோது ஒற்று வந்தான் என்று கொல்லத் துணிந்தான். புலவர் கோவூர்
கிழார் இளந்தத்தனின் வெள்ளை உள்ளத்தை விளக்கியபோது, உண்மையை உணர்ந்து
இளந்தத்தனை விடுவித்தான்.கோவூர் கிழார் 'போரிடு, அல்லது விட்டுக்கொடு'
எனக் கூறியதைக் இவன் நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடுத்த
ு விலகிவிட்டான் என்பதை நலங்கிள்ளியின் செல்வாக்கு உணர்த்துகிறது.
முதன்மைக் கட்டுரை: நெடுங்கிள்ளி
பெருந் திருமா வளவன்:
குராப்பள்ளித் துஞ்சியவன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியின்
நண்பன் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன் என இவன்
குறிப்பிடப்படுக
ிறான். ிருமாவளவன் என்னும் பெயர் கரிகாலனைக் குறிக்கும். இவன்
பெருந்திருமாவளவன். உறையூர் மருத்துவன் தாமோதரனார்
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கோனாட்டு எறிச்சலூர் மாடலன்
மதுரைக் குமரனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். பாண்டியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி இவனுடைய நண்பன்.
முதன்மைக் கட்டுரை: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
பெருநற் கிள்ளி (இராசசூயம் வேட்டவன்):
இராசசூயம் வேட்டவன் ாந்தரஞ்சேரலை வென்றான்
மூவேந்தர் நட்பு சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பது இவனைச்
சுட்டும் பெயர். உலோச்சனார் ஔவையார் , பாண்டரங்கனார் ஆகிய புலவர்கள்
இவனைப் பாடியுள்ளனர். இவன் போரில் வல்லவன். தேர்வண் மலையன் என்னும்
குறுநில மன்னனின் துணையுடன் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையோடு
போரிட்டு வென்றவன். சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த
உக்கிரப் பெருவழுதி ஆகிய இருபெரு வேந்தர்களின் நண்பன்.இவனது
இராசசூயத்தைப் புறநானூற்றுப் பாடல் "அவி உணவினோர் புறம் காப்ப
அறநெஞ்சத்தோன் வாழ" என்னும் தொடரால் குறிப்பிடுகிறது.
முதன்மைக் கட்டுரை: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
பெருநற் கிள்ளி (போர்வைக் கோ):
போர்வை தலைநகர், மற்போர் வெற்றி, தித்தன் மகன்
சோழன் பொர்வைக் கோப் பெருநற்கிள்ளி என இவன் சுட்டப்படுகிறான். போர்வை
என்னும் ஊரில் இருந்துகொண்டு நாடாண்டவன். சாத்தந்தையார் , பெருங்கோழி
நாய்கன் மகள் நக்கண்ணையார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவன்
உறையூர் அரசன் தித்தன் என்பவனின் மகன் எனக் கொள்ளப்படுகிறான் முக்காவல்
நாட்டு ஆமூர் மல்லனை மற்போரில் வென்று வீழ்த்தினான். தந்தை தித்தன்
இவனுக்கு ஆட்சி வழங்காதபோது புல்லரிசி உணவை மட்டுமே உண்டு
வாழ்ந்துவந்தான்.
முதன்மைக் கட்டுரை: சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி
பெருநற் கிள்ளி (முடித்தலைக் கோ):
கருவூரைத் தாக்கச் சென்றபோது சேரனால் காப்பாற்றப்பட்டான்
சோழன் முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி என்னும் பெயரால் இவன்
சுட்டப்படுகிறான். இவனைப் பாடிய புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
இவன் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையோடு பகைமை கொண்டிருந்தான். இவன்
கருவூரின்மீது படையெடுத்துச் சென்றபோது இவன் ஏறியிருந்த பட்டத்து யானை
மதம் பிடித்து ஓடியது. சேரனுடன் அவனது வேண்மாடத்திலிருந்து
பார்த்துக்கொண்டிருந்த புலவர் முடமோசியார் சோழன் துன்பமின்றி மீளவேண்டும்
என வாழ்த்தினார். சேரன் இரும்பொறை அவனைக் காப்பாற்றினான்.

9 கருத்துகள்:

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    சேர சோழ பாண்டிய வம்சங்கள்

    சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    பதிலளிநீக்கு
  2. வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    வில்லவர் மற்றும் பாண குலங்கள் இந்தியாவின் பூர்வீக அசுர திராவிட ஆட்சி வம்சங்கள்.


    வில்லவரும் பாணர்களும்

    வில்லவர் மற்றும் அவர்களின் வடக்கு உறவினர்களான பாணர் இந்தியா மற்றும் இலங்கையின் திராவிட ஆட்சியாளர் குலங்களாயிருந்தனர். வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய அசுர மன்னன் மகாபலியின் குலத்திலிருந்து வந்தவர்கள். வில்லவர் துணைக்குழுக்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்பவை. வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் ஆவர். வில்லவர், மலையர், வானவர், மீனவர் ஆகிய குலங்களின் இணைப்பே வில்லவ நாடாழ்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கியது. வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை முழுவதையும் ஆண்டனர்.


    வில்லவர்-பாண வம்சங்களின் பல்வேறு குலங்கள்

    1. தானவர்
    2. தைத்யர்
    3. பாணர்
    4. பில்
    5. மீனா
    6. வில்லவர்
    7. மீனவர்


    சேர சோழ பாண்டியன் பேரரசுகளின் வில்லவர்களின் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடாழ்வார், நாடார், நாடான், நாடான்மார், நாடாக்கமார், சான்றார், சான்றோர், சாணார், ஸாணார், புழுக்கை சாணார், சார்ன்னவர், சான்றகர், சாந்தகர், சாந்தார், சாண்டார், பெரும்பாணர், பணிக்கர், பணிக்கநாடார், திருப்பாப்பு, கவரா, இல்லம், கிரியம், கானா, மூத்த நாடார், மறவ நாடார், க்ஷத்திரிய நாடார், மாறன், மாறநாடார், மாறவர்மன், முக்கந்தர், மூப்பர், கிராமணி, நட்டாத்தி, கருக்குப்பட்டயத்தார், கொடிமரத்தார், கள்ள சான்றார், ஈழச்சான்றார், ஏனாதி, ஆசான், சிவந்தி, ஆதித்தன், ஆதிச்சன், பாண்டியகுல க்ஷத்திரியர், பாண்டிய தேவர், ரவிகுல க்ஷத்திரியர், நெலாமைக்காரர், தேவர், குலசேகரன், வில்லவர், வில்லார். வில்லவராயர், சோழர், வானவர், வன்னியர், மலையர், மலையமான், மலையான் சான்றார், மீனவன், சேரன், மாகோதை நாடாழ்வார், நாடாவர், நாட்டாவர், நாட்டார், மேனாட்டார், சோழர், செம்பியன், அத்தியர், சோனாட்டார், பாண்டியன், பனையன், பனைய மாறன், பனந்தாரகன், மானாட்டார், நெல்வேலி மாறன், சீவேலி, மாவேலி, கூவேலி போன்றவை


    ஈழவர்

    சண்ணார், பணிக்கர், இல்லத்து பிள்ளை, இல்லவர், தண்டான், யக்கர், இயக்கர், சேவகர்


    சிரியன் கிறிஸ்தவர்களின் வில்லார்வெட்டம் இராச்சியம்

    மாவேலி, பணிக்கர், பணிக்கர்வீட்டில், வில்லேடத்து, வில்லாடத்து, விச்சாற்றேல், அம்பாடன், பரியாடன், பைநாடத்து, பயிநாடத்து, படையாட்டில், படமாடன், படையாடன் பனையத்தற, புல்லன், கோலாட்டு, கோவாட்டுக்குடி, கோராட்டுக்குடி, கூவேலி, சேரதாயி, மூவாட்டு, மேனாச்சேரி, ஈழராத்து, மணவாளன், மாநாடன், மாந்நாட்டு, மழுவாஞ்சேரி, தண்டாப்பிள்ளி, வெளியத்து, பெருவஞ்சிக்குடி


    இலங்கை வில்லவர்

    வில்லவர், நாடார், சாண்டார், சாணார், சான்றார், கோட்டை சான்றார், யானைக்கார சான்றார், கயிற்று சான்றார், நம்பி, நளவர், கோட்டைவாசல் நளவர், பஞ்சமர், சேவகர், பண்டாரி


    யாழ்பாணம் ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்

    வில்லவராயர், கலிங்க வில்லவர், பணிக்கர், வன்னியர்


    கண்டி இராச்சியம்

    கலிங்க வில்லவன், தனஞ்சயா, பணிக்கனார், பணிக்கர்.


    கோட்டே இராச்சியம்

    வில்லவர், பணிக்கர்.


    கர்நாடகாவின் பாணப்பாண்டியன் ராஜ்ஜியங்கள்

    வில்லவர் = பாண, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவரு, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, சான்றா, ஸாந்தா, சாந்தாரா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பாண்ட், பண்ட், பண்டரு, பாண்ணாயா
    மலையர் = மலேயா மீனவர்=மச்சியரசா
    சாணார் = சாண்ணா
    சானார் = ஸாண்ணா, மாசாணா மாசாண்ணைய்யா
    பாண்டியன் = பாண்டியா
    பாண்டிய தேவர் = பாண்டிய தேவா
    உடையார்=வோடைய, ஒடைய, ஒடையரச


    ஆலுபா பாண்டியன் வம்சம்

    நாடாவா, பாண்டா, பண்டரு, பாண்டியா, ஆள்வா, ஆளுவா, தனஞ்சயா, குலசேகரா, குலசேகரதேவா, ஆலுபேந்திரா, பட்டியோதையா, பாண்டியராஜா பல்லாள், பாண்ணாயா, மலேயா, பில்லவா, பாணான், பாங்கேரா


    உச்சாங்கி பாண்டியன் ராஜ்யம்

    பாண்டியா


    இக்கேரி நாயக்கா

    நாயக்கா, பாணாஞ்சா, பலிஜா


    சான்றாரா பாண்டியன் வம்சம்

    பாண்டியா, பாணா, பில்லா, சான்றாரா, சாந்தா, , ஸான்றா, சாந்தாரா மற்றும் சான்டா, மச்சியரசா, சாண்ணா, ஸாண்ணா, மாசாணா, மாசாண்ணையா, வோடயா, ஒடேயா, பைரராசா, தேவா

    நூறும்பாடா பாண்டிய வம்சம்

    பாண்டியா, பில்லா, சாண்ணா, ஸாண்ணா, ஒடையரசதேவா, தேவா, தேவராசா


    கொங்கன் பாண்டிய இராச்சியம்

    பாண்டியா, நாடாவரா


    கோவா கடம்ப இராச்சியம்

    பாண்டியா, உப்பு நாடோர், தொற்கே நாடோர், பாண்டாரி, சாளுவா


    ஆனேகுண்டி-கிஷ்கிந்தாவின் விஜயநகர நாயக்கர்கள்

    நாயக்கா, நாயக்கர், தேவராயா, பலிஜா, பாணாஞ்சிகா, பாணாஞ்சா, வளஞ்சியர், அய்யாவோலு, ஐந்நூற்றுவர், அய்யர், அய்யம்கார், பாணர், வாணர், வானரர்.

    பதிலளிநீக்கு
  3. வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    ஆந்திராவின் பாண இராச்சியம்

    பாணா, மகாபலி வாணாதி ராயர், மகாவிலி வாணாதிராயர், வன்னியர் வாணாதிராஜா, வாணவ ராயர், வாண அடியார், ஸாண்ணா, பலிஜா, நாய்க்கர், மணவாளன், கண்ட கோபாலன், சோடா


    கோலார் பாண இராச்சியம்

    பாணா, வாணாதிராயர், வாணர், மகாபலி வாணாதிராயர், வன்னியர் முடியெடா மணவாளன், திருமாலிருஞ்சோலை வாணன், பொன்பரப்பினான்.


    கவுட்

    செட்டி பலிஜா


    கலிங்க பாணா ராஜ்யம்- ராமநாடு- ஆரியச்சக்கரவர்த்தி இராச்சியம்

    கங்கை பிள்ளை வாணாதிராயர், பிள்ளை குலசேகர வாணாதிராயர், வன்னியர், கலிங்க வில்லவன், தனஞ்சய, மாகோன், குலசேகர சிங்கை ஆரியன்


    மகாராஷ்டிரா

    பண்டாரி


    வட இந்திய பாணா-மீனா ராஜ்ஜியங்கள்

    வில்லவர் -மீனவர் பட்டம் மற்றும் பில்-மீனா பட்டங்கள்

    1. வில்லவர் = பில்
    2. மலையர்= மெர், மெஹ்ர், மெஹர், மேரோன், மேவார், மேவாசி, கோமலாடு
    3. வானவர்= பாண, வாண
    4. மீனவர்= மீனா
    5. நாடார், நாடாள்வார்= நாடாலா, நாட்டார்வால்
    6. சான்றார், சாந்தார்= சாந்தா
    7. சேர = செரோ


    ராஜஸ்தானின் மீனா வம்சம்

    சாந்தா மீனா, மீனா, பில்-மீனா, நாடாலா, நாட்டாலா, நாட்டார்வால், கோமலாடு


    பில் குலங்கள்

    பில், பில்-மீனா, பில் கராசியா, தோலி பில், துங்ரி பில், துங்ரி கராசியா, மேவாசி பில்,  ராவல் பில், தாட்வி பில், பாகாலியா, பில்லாளா, பாவ்ரா, வாசவா மற்றும் வாசவே.


    வட இந்தியாவின் பாண வணிகர்கள்

    பாணியாபாணியா, பணியா, வாணியா, வைஷ்ணவ் வாணியா, குப்தா


    ராஜபுத்திர குலங்கள்

    அக்னிவன்ஷி ராஜபுத்திரர்கள், சௌஹான்


    குண்டேஷ்வர் பாண்பூர் திக்காம்கர் பாண்டியர்கள், மத்திய பிரதேசம்

    பாண்டியா, பாண்டா, குந்தேஷ்வரின் பாண்டியர்கள், பக்வார் க்ஷத்திரியர், பக்வார் ராஜ்புத்திரர்கள்


    திர்கார்

    அக்னி, வன்னி, திர்பாண்டா, திர்போண்டா, திர்காலா, பாணவாடி, பாணி சாத், பாண்வாதி, காம்னாகர், காமாங்கர், காம்னாகர், ரன்சாஸ், திட்காட், திர்பண்டா, திர்கர், திர்மாலி, திர்வார், திட்கர், திரிதார்


    பாஞ்சால நாடு மற்றும் தமிழ்நாட்டின் பல்லவ பாணர்கள்

    வன்னியர், வன்னிய குல க்ஷத்திரியர், அக்னிகுல க்ஷத்திரியர், காடுவெட்டி, திகளர், வட பலிஜா, சவலக்காரர், சவளர், வன்னே காப்பு, பள்ளே காப்பு, நாய்க்கர், வன்னிய கவுண்டர்


    சோனிப்பூர் அஸ்ஸாமின் பாண இராச்சியம்

    அசுரா, பாணா, மகாபலி


    சிந்து நதிதீர நாகரிகத்தின் பாண குலங்களின் பட்டங்கள்

    மகாபலி, தானவர், தைத்தியர், அசுரர்


    ________________________________

    பதிலளிநீக்கு
  4. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கர்நாடகத்தை ஆண்ட சான்றாரா பாண்டியர்கள் வில்லவர் பரம்பரையைச் சேர்ந்த சான்றார்கள் என்ற நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். பாணவாசியில் இருந்து ஆண்ட கடம்ப பாணப்பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை சான்றாரா பாண்டியன் குலமாகும்.


    கடம்ப வம்சம்

    கடம்ப வம்ச மன்னர்கள் பாணப்பாண்டியன் வம்சம் என்றும் அழைக்கப்படும் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கடம்ப வம்சத்தினர் வடக்கு கர்நாடகத்தில் இருந்து பாணவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். பாணர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை ஆண்ட வில்லவரின் வட உறவினர்கள்ஆவர். இவ்வாறு சான்றாரா பாண்டிய வம்சத்தினர் வில்லவர் நாடாள்வார்-நாடார் குலங்களின் வடநாட்டு உறவினர்கள் ஆவர்.

    கடம்பர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைப் போலவே காட்டில் வசிப்பவர்கள். வானவர் தங்கள் கொடிகளில் மரச் சின்னங்களையும், பிற்காலத்தில் புலிச் சின்னங்களையும் பயன்படுத்தினார்கள். மரம் மற்றும் புலி இரண்டும் காட்டுடன் தொடர்புடையவை. அதேபோல் கடம்பர்கள் தங்கள் கொடிகளில் கடம்ப மரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கடம்ப தலைநகரம் வனவாசி அல்லது பாணவாசி என்று அழைக்கப்பட்டது. வில்லவர்களுடன் தொடர்புடைய கடம்பர்கள் மற்றும் பிற பாண வம்சத்தினர் வில்லவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.


    சேர வம்சத்தின்மேல் கடம்பர்களின் தாக்குதல்

    பண்டைய சேர வம்சம் பாணவாசியின் கடம்பர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கிபி 130 முதல் கிபி 188 வரை) தான் பாணவாசி கடம்பரை தோற்கடித்ததாகவும், கடம்பர்களின் அரச அடையாளமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தியதாகவும் கூறுகிறார்.


    கடம்ப குலங்கள்

    கடம்பர்களின் பாணப்பாண்டியன் வம்சத்தில் இரண்டு அரச குலங்கள் இருந்தன

    1. நூறும்பாடா பாண்டியர்
    2. சான்றாரா பாண்டியர்

    நூறும்பாடா பாண்டிய குலத்தினர் நூறும்பாடா பிரதேசத்தில் இருந்து ஆண்டனர். நூறும்பாடா என்பது நூறு நெல் வயல்களைக் குறிக்கும் அதாவது கிராமங்களை.

    சான்றாரா பாண்டியர்

    சான்றாரா பாண்டியன் குலத்தினர் சான்றாலிகே பிரதேசத்தில் இருந்து ஆட்சி செய்தனர். சான்றாலிகே என்றால் சான்றார் குலங்களின் வீடு என்று பொருள்.

    பாணர்கள் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். வில்லவர் குலங்களைப் போலவே பாணர்களுக்கும் அரச பட்டங்கள் இருந்தன. பாணா என்பது வில்லவரின் சமஸ்கிருத வடிவம்.


    வில்லவர் = பாணா, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, ஸாந்தா, சான்றா, சாந்தாரா ஸாந்தா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பான்ட்
    மலையர் = மலெயா
    மீனவர்=மச்சிஅரசா
    சாணார் = சாண்ணா, மாசாணா, மாசாணைய்யா
    சானார் = சான்னா
    பாண்டிய=பாண்டிய
    உடையார்=வொடெயா, ஒடெய


    சான்றாரா வம்சம்

    கிபி 682 இல் சாளுக்கிய மன்னன் வினயாதித்தியனால் நிறுவப்பட்ட கல்வெட்டுகளில் சான்றாரா குலத்தைப் பற்றிய முதல் குறிப்புகள் உள்ளன. சான்றாரா வம்சம் சான்டா, சாந்தா, சாந்தாரா, சாந்தா மற்றும் ஸாந்தா என்றும் அழைக்கப்பட்டது.


    ஜினதத்தா ராயா

    ஜினதத்தா ராயா அல்லது ஜின்தத் ராய், வட இந்தியாவில் மதுரா வைச் சேர்ந்த ஜைன இளவரசராக இருந்தவர், கி.பி 800 இல் சான்றாரா வம்சத்தை நிறுவியவர் எனக் கூறப்படுகிறது. வடக்கு மதுரா ஒரு பாணப்பாண்டியன் அரசாக இருந்திருக்கலாம்.

    இளவரசர் ஜினதத்தராயரை தனது தந்தை நடத்திய விதம் காரணம் மனம் நொந்து, பத்மாவதி தேவியின் சிலையை மட்டும் எடுத்துக்கொண்டு மதுராவை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

    கிபி 800 இல், கடம்ப வம்சத்தைச் சேர்ந்த சான்றாரா பாண்டியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். சான்றாராகளின் ஒரு குழு பாணவாசியில் உள்ள அரச வீட்டில் தங்க விரும்பியது. சான்றாரா பாண்டியரின் மற்றொரு குழு ஹோம்புஜாவிற்கு குடிபெயர்ந்தது, இது அவர்களின் புதிய தலைநகராக மாறியது.

    பதிலளிநீக்கு
  5. சான்றாரா பாண்டியன் வம்சம்

    ஜக தேவ சான்றாரா

    கிபி 1099 ஆம் ஆண்டு ஜக தேவ சான்றாரா பட்டி பொம்பூர்ச்சா புரா அதாவது ஹம்சாவில் இருந்து ஆட்சி செய்து வந்தார்.


    கலசாவின் சான்றாரா வம்சம்

    1100 இல் சான்றாரா  வம்சத்தைச் சேர்ந்த ஜகலாதேவி மற்றும் பாலராஜா மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தங்கள் தலைநகரான கலசாவில் இருந்து ஆட்சி செய்தனர்.


    ஹோம்புஜாவின் சான்றாரா வம்சம்

    கி.பி 1103 இல் சான்றாரா மன்னன் மல்ல சாந்தா தனது மனைவி வீர அப்பரசியின் நினைவாகவும், தனது குருவான வடிகரத்தா அஜிதசேன பண்டித தேவாவின் நினைவாகவும் ஹோம்புஜாவில் ஒரு கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.


    புஜபலி சாந்தா

    கிபி 1115 இல் சான்றாரா வம்சத்தைச் சேர்ந்த புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜைன கோயிலைக் கட்டினார். புஜபலி சாந்தாவின் சகோதரரான நன்னி சாந்தா, சமண மதத்தை உறுதியாக பின்பற்றுபவர் ஆவார்.


    சான்றாலிகே சாளுக்கிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது

    கிபி 1116 இல் அனைத்து கடம்ப பிரதேசங்களும் அதாவது பாணவாசி, ஹங்கல் மற்றும் ஹோம்புஜா சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட சான்றாலிகே 1000 பிரதேசம், மேற்கு சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலாவின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.


    சாளுக்கியருக்கும் சான்றாரா வம்சத்திற்கும் இடையிலான போர்

    கி.பி.1127ல் மேற்கு சாளுக்கிய மன்னர் தைலபாவுக்கும் சான்றாரா மன்னர் பெர்மாதிக்கும் இடையே போர் நடந்தது.

    பாணவாசி தண்டநாயகர் மாசாணைய்யா தனது மைத்துனர் காளிக நாயக்கரை அனுப்பினார், அவர் சான்றாரா மன்னரை தோற்கடித்தார், மேலும் சான்றாரா மன்னர் தனது ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

    1130 கிபி வரை சான்றாலிகே கடம்ப வம்சத்தின் கீழ் தொடர்ந்து இருந்தது.


    சாளுக்கிய இளவரசர் கடம்ப மன்னராக முடிசூட்டப்பட்டார்

    கி.பி 1131 இல் சாளுக்கிய மன்னன் தைலபாவின் மகன் மூன்றாம் மயூரவர்மா கடம்ப இராச்சியத்தின் அரசனாக்கப்பட்டார், அனைத்து முன்னாள் கடம்பப் பகுதிகளான ஹங்கல், பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 ஆகியவை அவரது ஆட்சியின் கீழ் வந்தன.

    மாசாணைய்யா

    அரசனாக்கப்பட்ட சிறுவனான மூன்றாம் மயூரவர்மாவை தண்டநாயகர், மாசாணைய்யா என்ற மாசாணா பாதுகாத்ததாக ஹங்கலில் உள்ள வீரகல் கூறுகிறது.


    சான்றாரா மன்னரின் கீழ் சான்றாலிகே

    1172 இல் நன்னியகங்காவைத் தொடர்ந்து ஹோம்புஜாவின் மன்னனாக வந்த வீரசாந்தா "ஜினதேவன சரண கமல்காலா பிரமா" என்று அழைக்கப்பட்டார்.


    ஹொசகுண்டாவின் சான்றாரா மன்னர்கள்

    1180க்குப் பிறகு பீரதேவராசா, பொம்மராசா  மற்றும் கம்மராசா  ஹொசகுண்டா கிளை சான்றாரா  வம்சத்தின் அரசர்களாக ஆனார்கள்.

    கி.பி. 1200 இல் ஹம்சாவுக்கு அருகிலுள்ள தீர்த்தஹள்ளி மண்டலம்  சான்றாலிகே சாவிரா என்று அழைக்கப்பட்டது, இது தீர்த்தஹள்ளி பகுதி சான்றாலிகே 1000 இன் கீழ் இருந்தது என்பதைக் குறிக்கிறது. சாவிரா என்றால் கன்னடத்தில் 1000 என்று பொருள்.


    சான்றாரா வம்சத்தின் பிளவு

    கி.பி 12 ஆம் நூற்றாண்டில் சான்றாரா வம்சம் இரண்டு கிளைகளாகப் பிரிந்தது. ஒரு கிளை ஷிமோகா மாவட்டத்தின் ஹொசகுண்டாவிலும், மற்றொரு கிளை மேற்கு தொடர்ச்சி மலையில், சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள கலசாவிலும் நிறுத்தப்பட்டன.


    ஹோம்புஜாவிலிருந்து இடம்பெயர்தல்

    படிப்படியாக இந்த சான்றாரா வம்சத்தின் கிளைகள் அதாவது ஹொசகுண்டா மற்றும் கலசா கிளைகள் அல்லது கலசா கிளை மட்டுமே, தங்கள் தலைநகரங்களை கர்காலாவில் இருந்து வடகிழக்கே 14 கிமீ தொலைவில் இருந்த கெரவாஷேவிற்கும் பின்னர் கர்காலாவுக்கும் மாற்றியது, இவை இரண்டும் பழைய தென் கனரா மாவட்டத்தில் இருந்தன. எனவே அவர்கள் ஆட்சி செய்த பிரதேசம் கலசா-கர்கலா இராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது.


    ஹொசகுண்டா சான்றாரா வம்சம் இந்து மதத்திற்கு மாறியது

    கி.பி 1200 இல் ஹொசகுண்டா சான்றாரா வம்சத்தின் அரசர்கள், முன்பு திகம்பர ஜைனர்களாக இருந்தவர்கள் ஆனால் பின்னர் அவர்கள் சைவ இந்து மதத்தைத் தழுவினர்.

    பதிலளிநீக்கு
  6. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கலசா-கர்கலா  ராஜ்யம்

    கிபி 1200 இல் சான்றாரா பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை ஹோம்புஜா-ஹம்சாவிலிருந்து தெற்கே நகர்ந்து இரண்டு தலைநகரங்களை நிறுவியது.

    ஒரு தலைநகரம் கரையோர சமவெளியில் உள்ள கர்கலா மற்றும் மற்றொரு தலைநகரம் கலசா மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தது. எனவே சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட பிரதேசம் கலசா-கர்கலா ராஜ்யம் என்றும் அறியப்பட்டது.

    பைரராசா பட்டம்

    கி.பி. 1200க்குப் பிறகு சான்றாரா மன்னர்கள் பைரராசா என்றும் அழைக்கப்பட்டனர், அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலேநாடு பகுதியையும் கர்நாடகாவின்  கடலோர மாவட்டங்களையும் ஆட்சி செய்தனர்.

    சிருங்கேரி, கொப்பா, பலேஹொன்னூர், சிக்கமகளூரில் உள்ள முடிகெரே மற்றும் கர்காலா தாலுகாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பரந்த பகுதியில் கலசா-கர்கலா ராஜ்யம் விரிவடைந்தது. மங்களூருக்குக் கிழக்கே கலசா-கர்கலா இராச்சியம் அமைந்திருந்தது. கர்கலா பாண்டிய நகரி என்றும் அழைக்கப்பட்டது.


    விஜயநகரத்தின் கீழ் சான்றாலிகே

    கி.பி 1336க்குப் பிறகு ஹோம்புஜா-ஹோசகுண்டாவின் சான்றாரா வம்சம் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக மாறியது. ஆனால் கலசா-கர்கலா சான்றாரா பாண்டிய அரசு சுதந்திரமாக இருந்தது.


    கர்கலா சான்றாரா பாண்டியர்கள்

    சான்றாரா மன்னன் வீர பைரராசா கி.பி.1390 ​​முதல் கி.பி.1420 வரை கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.


    சான்றாரா வீர பாண்டிய தேவா மன்னரால் பாகுபலி சிலை நிறுவப்பட்டது

    கி.பி 1432 இல், தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்ற ஒரு அறிஞரான சான்றாரா வீர பாண்டிய தேவர் பாண்டிய நகரி என்று அழைக்கப்படும் கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.
    கர்கலா சான்றாரா வம்சத்தின் தலைநகராக இருந்தது.
    சான்றாரா வீர பாண்டியர் சிருங்கேரி மடத்துடன் நல்லுறவைப் பேணி வந்தார். சான்றாரா வீர பாண்டிய தேவரின் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை கி.பி 1432 இல் கர்கலாவில் 42 அடி உயர பாகுபலியின் ஒற்றைக்கல் சிலை நிறுவப்பட்டதுதான். சான்றாரா மன்னன் வீர பாண்டியனுக்கு பைரராசா என்ற பட்டமும் இருந்தது.


    வீர பாண்டியா IV

    கி.பி 1455 இல் சான்றாரா வீர பாண்டியனுக்குப் பிறகு அவனது சகோதரனின் மகன் நான்காம் வீர பாண்டியா அரியணை ஏறினார், அவர் கி.பி 1455 முதல் 1475 வரை ஆட்சி செய்தார். கி.பி 1457 இல் ஹிரியங்கடியில் உள்ள நேமிநாத பாசதிக்கு முன்னால் 57 அடி அழகாக செதுக்கப்பட்ட மானஸ்தம்பத்தை சான்றாரா மன்னர் நான்காம் வீர பாண்டியர் கட்டினார். மானஸ்தம்பம் முடிந்ததும், அவருக்கு "அபிநவ பாண்டியர்" என்ற பட்டம் கிடைத்தது.


    இம்மடி பைரராசா வொடேயா சான்றாரா

    கர்கலாவில் உள்ள சதுர்முக ஜெயின் பாசதி கி.பி.1586 ஆம் ஆண்டில் சான்றாரா வம்சத்தின் இம்மடி வொடேயா (பைரவா II)வின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது.16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட சதுர்முக சமண பாசதியில் ஜைன துறவிகளான அரநாத், மல்லிநாத் மற்றும் முனிசுவரத்நாத் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

    கி.பி 1586 இல் ஒரு சிறிய பாறை மலையின் மேல் சதுர்முக பாசதி கட்டப்பட்டது. இந்த பாசதி கர்பகிருஹத்திற்கு செல்லும் நான்கு பகுதிகளிலிருந்தும் ஒரே மாதிரியான நான்கு நுழைவாயில்களைக் கொண்டிருந்தது, எனவே இது சதுர்முக பாசதி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

    இம்மடி பைரவ வொடேயா, கொப்பா என்ற இடத்தில் "சாதன சைத்தியாலயம்" கட்டுவதற்கும் முக்கியப் பங்காற்றியவர்.

    வோடெயா பட்டம் என்பது வில்லவர்களின் வானவர் துணைக்குழுவின் உடையார் பட்டத்தை ஒத்ததாகும்.

    பதிலளிநீக்கு
  7. சான்றாரா பாண்டியன் வம்சம்

    சான்றாரா பாண்டியன் வம்சத்தின் முடிவு

    கி.பி 1763 .யில் கேலடி நாயக்கர்கள் மற்றும் ஹைதர் அலியின் படையெடுப்புகளுக்குப் பிறகு சான்றாரா பாண்டியன் வம்சம் மறைந்தது.


    கேலடி நாயக்கர்கள்

    கி.பி 1499 இல் ஹோம்புஜாவின் சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட பகுதியில் அதாவது ஹொசகுண்டாவுக்கு அருகிலுள்ள கேலடியை தங்கள் தலைநகரைக் கொண்டு தங்கள் ராஜ்யத்தை நிறுவினர். கேலடி நாயக்கர்களும் சான்றாரா பாண்டியன் வம்சத்தைப் போலவே பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலிஜா நாயக்கர்களின் பாணாஜிகா துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள்.

    கலசா-கர்காலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகள் கி.பி 1700 களில் கேலடி நாயக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.


    ஹைதர் அலியின் படையெடுப்பு

    கி.பி 1763 இல் ஹைதர் அலி கேடி நாயக்கர்களை தோற்கடித்து கேலடி நாயக்க ராஜ்யத்தை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலி 1763 கி.பி இல் கர்கலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் மீது படையெடுத்து அதை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு சான்றாரா பாண்டிய வம்சம் முற்றிலும் மறைந்து விட்டது.


    முடிவுரை:

    சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் நாடாள்வார், நாடார் அல்லது சாணார் என்றும் அழைக்கப்படும் சான்றார்களால் ஆளப்பட்டன. சான்றார் ஆட்சியாளர்கள் பண்டைய வில்லவர்-மீனவர் வம்சத்திலிருந்து வந்தவர்கள்.

    கிபி 1311 இல் துருக்கிய சுல்தானகத்தின் படையெடுப்புகளையும் கிபி 1377 இல் கிஷ்கிந்தா-அனேகுண்டியின் பலிஜா நாயக்கர்களின் படையெடுப்பையும் தொடர்ந்து சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் முடிவுக்கு வந்தன.

    இதேபோல் 1700களில் பலிஜா நாயக்கர்களான கேலடி நாயக்கர்களின் படையெடுப்பு மற்றும் கி.பி 1763 இல் ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு கர்நாடகாவின் சான்றாரா பாண்டிய ராஜ்யம் முடிவுக்கு வந்தது..

    பதிலளிநீக்கு
  8. மீனா வம்சம்

    நாடார்களின் வடநாட்டு உறவினர்களான மீனா மன்னர்களின் கதை.

    மீனா குலம் அவர்களின் பெயரை மீன் என்ற திராவிட தமிழ் வார்த்தையிலிருந்து பெற்றிருக்கலாம். மீனா குலங்கள் பண்டைய வட இந்திய திராவிட ஆட்சியாளர் குலங்களின் ஒரு பகுதியாகும்.

    ராஜஸ்தானின் மீனா குலத்தினர் நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். மீனாக்கள் பயன்படுத்தும் மீனா பட்டம் என்பது வில்லவர்-நாடார் குலங்கள் பயன்படுத்தும் மீனவர் பட்டத்தின் மாறுபாடு ஆகும். மீனாக்கள் பயன்படுத்தும் பில்-மீனா பட்டம் நாடார்களின் வில்லவர்-மீனவர் பட்டத்திற்கு சமம்.

    நாடார் அதாவது வில்லவர் பண்டைய காலத்தில் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்று மூன்று துணைக்குழுக்களைக் கொண்டிருந்தனர். வில்லவரின் கடலில் மீன்பிடிக்கும் உறவினர்கள் மீனவர் ஆவர்.

    மீனா என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கியமாக வசிக்கும் ஒரு சாதி. மீனா சாதி இந்தியாவின் பழமையான சாதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வேதங்கள் மற்றும் புராணங்களின்படி மீனா சாதியினர் மத்ஸ்ய சின்னம் அல்லது மீனா சின்னத்தை அடையாளமாக கொண்டிருந்தனர். மீனா சமாஜம் மத்ஸ்ய ஜெயந்தியாகக் கொண்டாடும் அதே வேளையில், ராஜஸ்தான் முழுவதும் கங்கௌர் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மீனா சாதியின் அடையாளம்  மீன். சமஸ்கிருதத்தில் மீன் மத்ஸ்யா என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில்  மீனா சாதியின் அரசர்களின் கேடயத்திலும் கொடிகளிலும் மீனின் அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தது.

    மீனா குலம் என்பது ராஜஸ்தானில் எண்ணிக்கையில் மிகப் பெரிய பழங்குடியாகும். அவர்கள் ஒரு காலத்தில் முன்னாள் ராஜ்ஜியங்களான ஜெய்ப்பூர் மற்றும் ஆள்வார் ஆகியவற்றை ஆட்சி செய்தனர் மற்றும் அடிப்படையில் ஒரு விவசாய சமூகமாக இருந்தனர்

    சாந்தா மீனா

    பண்டைய காலங்களில் அதாவது 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி முக்கியமாக சௌஹான்களின் குலங்களால் ஆளப்பட்டது. ஜமீன்தார் மீனாவின் குலமான சாந்தா, சௌஹான்களின் கிளைகளில் ஒன்று. சாந்தாக்கள் இப்போது ஜெய்ப்பூரின் ஒரு பகுதியான கோகன்வ்வை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் மற்றும் மீனா இராச்சியத்தின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தனர். சாந்தா என்பது சான்றாரின் மாறுபாடு. சாந்தா மீனா என்றால் சான்றார் மீனவர் என்று பொருள்.


    கிபி 1036 வரை மீனா குலங்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக இருந்தனர். பழங்காலத்திலிருந்தே மீனா குலத்தார் ராஜஸ்தானையும் கங்கை நதிப்பகுதியையும் ஆண்டனர்.


    சிந்து சமவெளி நாகரிகம்

    சிந்து சமவெளியின் பிற திராவிட பாணா, வில்லவர், தானவ மற்றும் தைத்திய குலங்களுடன் சிந்து சமவெளியின் பழமையான குடியிருப்பாளர்களில் மீனா குலமும் இருக்கலாம்.

    குஜராத்தின் மேற்கு கத்தியவாரின் ஜெத்வா வம்சத்தின் சின்னம் இன்னும் மீன் வடிவில் உள்ளது. ஜெத்வா மக்கள் மெர் (மஹர், ராவத்) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜெத்வா மெரோன் குலத்தின் ஒரு வம்சக் கிளை. மெரோன் குலத்தினர் மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மெர்-மேரு அல்லது மலையில் வசிப்பவர்கள் என்பது வில்லவர்களின் மலையர் துணைக்குழுவுடன் ஒத்திருக்கிறது.

    மகாபாரதம்

    மகாபாரதத்தில் பாண்டவரும் திரௌபதியும் விராட மன்னனின் அரண்மனையில் ஒரு வருடம் மறைந்திருந்து வாழ்ந்தனர். மத்ஸ்ய ராஜ்ஜியத்தை ஆண்ட மீனா மன்னன் விராட மன்னன். மத்ஸ்யா என்பது மீனா குலத்தின் சமஸ்கிருத வடிவம்.


    பில்மீனாக்கள்

    மீனா ஆட்சியாளர்கள் நவீன ஜெய்ப்பூருக்கு அருகில் ஆமர் கோட்டையை கட்டினார்கள்.
    வில்லவர் மீனவர்கள் வட இந்தியாவில் பாணா-பில் மீனா என்று அழைக்கப்படுகிறார்கள். பில்மீனாக்கள் இடைக்காலத்தில் ராஜஸ்தானை ஆண்டனர். மீனா அரசர்களின் அரச பட்டம் சாண்ட மீனா அல்லது சாந்தா மீனா அதாவது சான்றார் மீனவர்.

    ஆமர்

    மீனா வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. ஜோதா மீனா ஆட்சியாளர்களின் நினைவாக ஜோத்வாரா என்று பெயரிடப்பட்டது. ஜெய்ப்பூர் ஆட்சியாளர்களின் குடையாக இருந்தவர்கள் கெட்டா மீனா. அமீர் மீனா ராஜா அலன்சி என்பவரால் நிறுவப்பட்டது. கிபி 967 இல் ஆமர் குடியேற்றப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன.


    ஜகா இனத்தவரின் பதிவுகள்

    சாந்தா குலத்துக்காக ராஜஸ்தானின் ஜகா இனத்தவர் பராமரித்த பதிவுகளின்படி, சாந்தா வம்சம் மற்றும் ராஜ்ஜியங்கள் பற்றிய கடந்தகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஜகாஸின் கூற்றுப்படி, சாந்தா மீனாக்கள் அக்னிவன்ஷிகள் மற்றும் சௌஹான்களின் துணை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  9. ____________________________________________


    நாடார் மற்றும் மீனா குலங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பிரிந்த சகோதரர்கள்

    https://indianmeena.blogspot.com/2020/09/

    ______________________________________


    ஆமர் கோட்டை

    https://m.facebook.com/IndiaLostFound/photos/amer-was-originally-a-meena-kingdom-town-by-the-name-of-khagong-ruled-by-the-cha/1483561208493832/


    ஆமர் கோட்டை

    https://en.m.wikipedia.org/wiki/Amber_Fort

    ________________________________________

    மீனா குலங்கள்

    http://meenawiki.com/index.php?title=Meenas&setlang=hi

    ___________________________________________


    மீனா குலங்கள் ராஜபுத்திரர்களுக்கு சமம் ஆனால் அதே மாநிலத்தில் உள்ள பழங்குடியினரும் ஆவர்.


    https://parliamentofindia.nic.in/ls/lsdeb/ls10/ses5/3027119201.htm

    _______________________________________

    பதிலளிநீக்கு