ஞாயிறு, 19 மார்ச், 2017

வாதிரியார் சாதி ரோமாபுரி துணி கடல்வணிகம் பருத்தி ஆடை கப்பல்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 9
பெறுநர்: எனக்கு
Suresh Pandiyan
பருத்தியால் நெய்த பாய்மரத்துணியைப் பயன்படுத்திப் பாய்மரக்கப்பல்களைக்
கடலில் முதன்முதலில் செலுத்தியவர்கள் தமிழர்களேயாவர்!.
பருத்தியால் நெய்த பாய்மரத்துணியை நெய்து உலகுக்குத் தந்தவர்கள்
'மாதறியார்' அல்லது 'வாதிரியார்' எனும் தமிழ் நெசவுகுடியினராவர்.அவர்கள்
தென்பாண்டி நாட்டில் இன்றும் உள்ளனர்.
இத்தமிழர்கள் நெய்த பாய்மரத்துணியை வாங்கிச் செல்ல நடுத்தரைக் கடல்
நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்தனர். அதை அவர்கள் பல்லா என்றனர்.
பருத்தியால் நெய்த பாய்மரத்துணியைப் பண்டை உரோமர்கள் தமிழகத்திலிருந்து
பெருமளவில் வாங்கிச் சென்றனர்.அம்முரட்டுப் பாய்மரத்துணியை அவர்கள்
'பல்லா' என்னும் ஆடையாக அணிந்தனர். தமிழகத்தில் நெய்த அப்பாய்மரத்துணியை
அணிவதை அவர்கள் பெருமையாகக் கருதினர்.
உரோம நாட்டுப் பெண்டிர் அணிந்த மரபுவழி ஆடையும் கூடப் பல்லா எனப்பட்டது.
தோளின் மீதும் உடம்பின் மீதும் வேண்டுமென்றால் தலையின் மேலும் பெண்டிர்
போர்த்திக் கொண்ட ஒற்றைத் துணியே அந்தப் 'பல்லா'.
நீலம்,பச்சை,மஞ்சள் நிறங்களில் அஃது இருந்தது; இன்றைய பெண்கள் அணியும்
சால்வையைப் போன்றது அது. துணியூசிகளால்(Brooches) பல்லாவைப் பிணைத்தனர்.
பல்லாவை அணியும் வழக்கத்தை உரோமானியர்கள் கிரேக்கர்களிடமி
ருந்தே கற்றுக்கொண்டனர். செவ்வக வடிவிலிருந்த 'பல்லா'வுக்கு மாறாகப்
பருத்தித் துணி அரைவட்ட வடிவிலிருந்ததால், அதைத் தோகா(Toga) என்றனர்.
மணமாகாத கன்னிப்பெண்கள் தோகாவை அணிந்தனர்.
'தோகை' என்பது தூய தமிழ்ச்சொல்.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி தோகை, தோக்கை என்னும்
சொற்களுக்குத் தருகிற பொருளை அடியில் காண்க:
தோகை,
தோக்கை-Cloth for wear, garment; ஆடை.
Front end of a cloth, முன்றனை.
"பொன்னந் தோகையு மணியரிச் சிலம்பும்"
"அடலெடுத்த வேற்கணார் தோக்கை பற்றி"
-- தமிழரின் தொன்மை நூலிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக