சனி, 25 மார்ச், 2017

நீர்நிலைகள் சேது சென்னை ஊழல் நீர்மேலாண்மை

aathi tamil aathi1956@gmail.com

14/4/16
பெறுநர்: எனக்கு
Velu Mani
திமுகவின் தேர்தல் அறிக்கையில் நீர்நிலைகளை ஏற்ப்படுத்த 10000 கோடி
ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவகையில் இது நாம் தமிழர் கட்சியின் செயல் வரைவு திட்டத்தின் திருட்டு.
ஆனால் அறிவித்துள்ள தொகைதான் உச்சம்.
அரசாங்க பணம் பத்தாயிரம் கோடிக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன்..
ஏற்கனவே சேது சமுத்திர திட்டத்திற்கு கடலில் கொட்டிய 2500 கோடி என்ன ஆனது
என்று தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்கட்டும்.
கடந்த 50 ஆண்டுகளில் இந்த தீய திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்
மண்ணிலிருந்து அழிக்கப்பட்ட நீர்நிலைகளின் எண்ணிக்கை பல ஆயிரங்களை
தொடும்.
கடந்த 30 ஆண்டுகளில் அரசாங்க வரைபடத்திலிருந்து இல்லாமல் செய்யப்பட்ட
நீர்நிலைகள் பல ஆயிரங்களாகும்.
இவையெல்லாம் இந்த திருட்டு திராவிட தீய ஆட்சியாளர்களின் காலத்திலேதான் நடைபெற்றது.
மக்கள் வேடிக்கை பார்த்தனர்.
தடுக்க வேண்டிய இந்த அரசாங்கங்கள் கண்ணை மூடிகொண்டது. காரணம்
நீர்நிலைகளை ஆக்கிரமித்ததே இந்த திராவிட ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள்தான்.
குறிப்பாக சென்னையில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் 600 க்கும் மேற்ப்பட்ட
ஏரி, குளங்கள், குட்டைகள், நீர்வழிப்பாதைகள் , ஆற்றங்கரைகள் அனைத்தும்
களவு போக செய்யப்பட்டது.
சென்னையில் இன்று உள்ள செம்பரபாக்கம், போரூர் உள்ளிட்ட ஏரிகள் அதன்
உண்மையான அளவில் பாதியேயாகும்.
அனைத்தும் அம்மக்களின் கண்முன்னாலேயே களவு போனது.
பொதுப்பணித்துறையில் நடைபெற்ற ஊழலின் ஆழத்தை தூற்வாரப்படாத ஏரிகளின்
சேற்று மேடுகள் நமக்கு சொல்லும்..
சென்னையில் ஏற்ப்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பேரழிவு ஏற்ப்பட்டதற்கு காரணமே
இந்த இரு திராவிட தீய ஆட்சியாளர்கள்தான்.
நீர்நிலைகளை பொதுமக்கள் ஆக்கிரமிக்கும் போது எங்கே ஓட்டு போய்விடுமே
என்று கண்டுகொள்ளாமல் விட்டு அம்மக்களை இன்று நடுத்தெருவில் நிற்க
வைத்தனர்.
நீர்நிலைகளை தன் கட்சிக்காரர்களே திருடும்போது கட்சியின் சுயநலன் கருதி
மீண்டும் மௌனித்திருந்தது..
இதையெல்லாம் விட பெரிய கொடுமை ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய அரசாங்கமே
பல இடங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசாங்க கட்டிடங்களை கட்டியது
என்பநுதான்
திருவள்ளூவர் கோட்டம் கட்டப்பட்டுள்ள இடம் ஏற்கனவே ஒரு குளமாக இருந்த இடம்.
சென்னை விமான நிலையம் அமைந்துள்ள இடம் ஒரு நீர்வடிகாலாக இருந்தது என்ற
உண்மையை உணர்த்தியது இரண்டு நாட்கள் விமானநிலையத்தை ஆக்கிரமித்து மூட
வைத்த தொலைத்ததை தேடிய வெள்ளத்தின் பயணம்.
இது மத்திய அரசின் உபயம்.
கோயம்பேடு பேருந்து நிலையமும் ஒரு நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதுதான்.
செய்தது பச்சை அயோக்கித்தனம்.
இந்த அயோக்கிதனத்தை செய்தது யார் என்று இரண்டு திராவிட கட்சிகளுக்கும்
உரிமைப்போர் வேற!
யார் ஆட்சியில் இது கட்டப்பட்டது என்று..
செய்த அநியாயத்திற்கு போட்டி போட்டுகொண்டு இரண்டு கல்வெட்டுகள் நான்தான்
செய்தேனென்று.
..
காலக்கொடுமை..!
Ayyappan Ziyan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக